கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அல்லி மலரோடு நான் தினம் என் கனவில் வருவாள் புஷ்பாஞ்சலி அழகில் அவள் முகமோ மலர்ந்திட்ட முல்லை மையிட்ட கண்களாலேயே கொள்ளையிட்டாள் கள்ளி கன்னத்தில் கருமையாய் வைத்திருப்பாள் புள்ளி என் மனதிலும் வைத்தாளே ஒரு புள்ளி அவள் பெயரோ லவ் ல் தொடங்கும் லல்லி தருவாள் தரிசனம் தவறாமல் வருவாள் பள்ளி கூடவே ஒட்டிக் கொண்டு வருவான் அவளின் மல்லி அவள் வீட்டிலும் மம்மி கூட எனக்கு பெரும் வில்லி தினமும் வாய்க்கு ருசியாய் வயிறார உண்பாள் உள்ளி மறவாமல் தண்ணீருடன் விழுங்கிடுவாள் வில்லை வங்கியிலே வைத்திருக்கிறேன் நிறைய சல்லி பரிசாய் நானும் தந்திடுவேன் தங்கச் சங்கிலி அவள் நினைப்புடனே அடித்துடுவேன் மில்லி போதையில் உளறிடுவேனே லில்லி லில்லி விளையாட்டிலே…
-
- 22 replies
- 3.2k views
-
-
வான் வெளியில் வண்ண நிலா பொட்டு வைத்த வட்ட நிலா சேயைத்தாலாட்டும் தங்கத்தாய் அவளா கார் இருளில் விண் தாரகையா கண் சிமிட்டும் பெண் காரிகையா காதலன் விழிகளில் காதல் பைங்கிளியா வான வில்லின் வர்ண ஜாலங்களா கண்களில் அவள் காமா பாணங்களா மேகத்தில் தீட்டிய மேனகைதான் அவளா பொறுமையில் அவள் பெண் பெட்டகமா உயிர் கொடுத்த உன்னத சித்திரமா சுமைதாங்கும்-அந்த தூண்கள் அவள்தானா கவிதைகளில் அவள் காதல்க் கற்பனையா இனிக்கின்ற தமிழ் தேன் சுவை உச்சமமா பேசும் மொழிகளின் தாயும் அவள்தானா அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது
-
- 25 replies
- 3.5k views
-
-
செத்தவீட்டில் சிரிப்பாய்...... கல்யாண நாளில் நீ அழுவாய்........ வயிறு கிழியும் வரை ... கத்து கத்து ... தவளையே..... வரம்புகள் எதுவென்றே ... தெரியா உமக்கு............. நெடுக்கால போக .. எப்படித்தான் முடியுமோ? எரிகிறவீட்டுக்கு.... தீயணைக்க வழியும் சொல்லாய்...... தேம்பி அழுகிறவருக்கு .. ஆறுதலும் சொல்லாய்... மிருக உலகே....உலகே......... உறவுகள் உடல் கருகும் வாசம் வேண்டியா புலம்பல்? வேணுமா....... வேணுமா........... வேணுமென்றால்... இந்த இந்த உதவாகரைகளையும் உச்சிமுகர்ந்து தத்தெடு!!
-
- 3 replies
- 1.1k views
-
-
பத்தாடை போட்டும் பனி மறைக்கும் காரியத்தில் இத்தாலும் அடியேன் ஒருபொழுதும் வென்றதில்லை. செத்தாலும் தாயே உனதுமடி மண்ணில்தான் இக்கவியும் புதையவேண்டும் இதுவேயென் யாசகம். கண்ணுக்குள் நூறு வண்ணங்கள் கண்டபின்பும் எண்ணத்தில் இதுவரையில் உனதுமுகம் மறையவில்லை. - என் கண்ணொப்ப உன் முகத்தை காட்டிவிடு; இல்லையென்றால் சுண்ணப்பண் பாடியுந்தன் சுடுகாட்டு மடியிலிடு. பூபாளம் பாடியிங்கே புதுப்பொலிவு கொண்டாலும் நாமாள நமக்கென்றோர் நாடொன்று வேண்டும் காண். பேயாளவா எங்கள் தேசத்தை விட்டு வந்தோம். - நாளையெந்தன் சேய் வாழ வேண்டுமம்மா வேங்கையினம் ஆளும் மண்ணில். தாயே! உன்மானத்தை காக்கின்ற வீரர்கள் கால்படும் மண் மீது காலூன்றும் நிலை வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
''தீர்வொன்றை தந்திடுங்கள்....'' நாலும் நடக்குது மனித கொலை- இந்த இலங்கையில்; இன்றதுக்கென்ன விலை...??? செய்து குண்டுகள் வைத்து கொலை- அதை செய்மதியல் பார்க்குது அதந்த பகை.... உலகதில் இன்றது மனித நிலை ஊனமாய் ஆனதால் இந்த நிலை முண்டமாய் விழுகுது மனித தலை- அதை முந்தியே உண்ணுது கழுகு தலை.... நாளும் இலங்கையில் நாளும் யுத்தம்- அழியுது உயிர்கள் அதனால் நித்தம் பகையென போடுறார் யாரோ சத்தம் பழியென ஆகுது உயிர்கள் நித்தம்... தேசமே நனையுது குருதியிலே நீதி சபைகள் ஏனோ உறக்கத்திலே..? விடுதலை கொடுத்திட எழுந்திடுங்கள் விடியலை கொடுத்தே உறங்கிடுங்கள்... ஈழத் தமிழினம் தவிக்கிறதே இன்னலில் இன்றது துடிக்கிறதே கண்ணீர் ஆறாய் பாய்கிறதே கவலையில் தேகம…
-
- 9 replies
- 1.5k views
-
-
-
-
-
கவிபேரரசின் ""வைகறை மேகங்கள்"" கவிதை தொகுப்புக்கள்-"(தொடராய் வருகிறது....படியுங்கள்) ஒளிப்புக்கள்.... பூந்துகில் உடுத்த புதுமதி யழகி நீந்தியே திரியும் நீலப் பட்டில் வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித் தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்... சற்றேதெறித்த சரச்சிரிப்பாக உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள் திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்... சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள் நித்தில வீதியில் நிலவுக் கன்னி அறுத்துப் போட்ட ஆரச் சிதறல் வறுமை வானம் வடித்த கண்ணீர்... உறைந்து தங்கிய ஒளியின் துளிகள் விரந்து முறிந்த மின்னல் துண்டுகள் இன்ப இரவில் இருட்டின் விழிகள் விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்... …
-
- 54 replies
- 15.4k views
-
-
மாசி 22ம் எங்கட மண்ணும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று என்ர அம்மா அடிக்கடி சொல்லுறவ தையும் கடந்தது! மண்ணாய் போன மாசி 22 கடக்கப் போகுது! ஏ ஒன்பது திறக்குமா? ஏ பதினைந்து திறக்குமா? குடைக்குள் நெருப்பாக குழந்தை குமரி முதல் கிழடு கெட்டைகள் வரை கனவிலே தீப்பந்தம் எரியுது! ஆறுமாதங்கள் கடந்தும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அடிக்கடி தொன்கணக்காய்... கப்பலில் வருகிறது! அரிசி மாவு சீனி பருப்பு உள்ளி தேயிலை முட்டை எள்ளு உச்சவிலைப் பட்டியலை பார்க்க உயிர்க்குலை நடுங்குது! கொழும்பு வியாபாரியளுக்கு கொழுக்கட்டை தின்னுற கொழுத்த மகிழ்ச்சி பாhருங்கோ! நாலு கோடிக்க கிடந்ததுகள் பத்துக் கோடிக்கணக்காய்; சுருட்டிக் கொண்டு போக …
-
- 7 replies
- 1.4k views
-
-
நெருப்பாய் - உழைத்தவரெல்லாம்......... விடை பெறுங்கள்! ஈரலித்துப்போன விறகுகள்... இனி பேசட்டும்!! தவிர்க்க முடியாதென்றறிந்தும்... வாசலை படிகள் பழிக்கும்...! எடுத்து அடிவைக்க முடியாவிடினும்... ஏளனம் செய்யும் .............! கோலமிருக்குமிடத்தில்... கொத்து கொத்தாய் - பிணம்! நரகவேதனை ... இதுவென்றறிந்தும்.... நமக்கென்ன குறையென்று நாக்கை பல்லால் வழித்தபடி பேசும்...! பூமியின் துன்பம் புரியுமா? கலீலியோவையே - தின்று ... தொலைத்த கூட்டம்.... திருந்துமா?-கனவு!
-
- 4 replies
- 1.1k views
-
-
கனடாவில் மொன்றியலில் வசிக்கும் கே.செல்வகுமார் இயற்றிய இந்த 2 பாடல்களை கேட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள். http://www.esnips.com/doc/e2dffaf4-f393-4d...ngam-(Srilanka) http://www.esnips.com/doc/93efb0c8-d1f3-4d...---Krishnarajah உயிரான காதல் என்ற பாட்டில் வரும் " நீ ஓம் என்று சொன்னால் நான் ஒழுங்காக படிப்பேன்" நாங்கள் ஊரில் யாருக்கோ சொன்ன ஞாபகம் வருகிறது அல்லவா ? ஒழுங்கை, புளிய மரம், பங்குக்கிணறு ஞாபகமா? பாடிய நிலுக்ஷி ஜெயவீரசிங்கம் எங்கள் பாடகி. இனிமையான குரல் வளமுள்ளவர்!
-
- 10 replies
- 2k views
-
-
சர்வதேசமே கண் திறவாயோ ? தரணியிலே தலைநிமிர துடிக்கின்ற இனம்! இனிமையான மொழியோடு இரக்கமுள்ள மனம்! வந்தாரை வரவேற்க வாசலில் காத்திருந்து அன்பைப் பரிமாற ஆசையுள்ள சனம் பச்சைக் கிளிகள் பசுமையான வயல்கள் பண்பாடும் குயில்கள் பணியாத பனைமரங்கள் கலை கலாச்சாரம் கனிவான பண்பாடு தளராத துணிவுதான் தமிழரின் அடையாளம் உங்களோடு இணைகிற நாடுகள் உருகிட உலகத்தின் செவிகளில் எங்களின் பூபாளம் உரிமைக்குரல் ஒலிக்க வீதியிலே ஊர்வலம் முட்களை விழுங்கி சிறகடிக்கும் பறவைகள் சாவிலும் வாழ்வோம் நிகழ்வே உணர்த்தும் நாங்கள் விடுதலை சுமந்த எரிமலைகள் மூன்று தசாப்த்தங்கள் மூச்சுவிடாத போராட்டம் எங்கள் குஞ்சுகள் குருதியில் கரைகிறது …
-
- 5 replies
- 1.2k views
-
-
தென் செய்தியில் தமிழாலயன் அவர்களால் எழுதிய கவிதை வெல்கின்றான் எல்லாளன்! விடிகிறது தமிழீழம்! தூய தமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம் போயழவோர் நாடுமிலை தோழி! - அவர் போக்கிலியாய்த் தானலைவார் தோழி! நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே ஞாயமிலை நாணமிலை தோழி! - செந் நாய்களுமோ நரிகளுமோ தோழி வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும் வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர் வருவதற்குள் சாவுவரும் தோழி தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும் செவிடர்களோ ஊருலகம் தோழி யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள் யார்யார்க்கும் உறவலவோ தோழி! - இவர் யாதும் ஊர் என்றதற்கோ தோழி போர்மூட்டும் புத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
22ம் திகதி வருதாமோ? இறக்கை முளைக்கிறதா? தங்க ரதத்தில் தாய் நிலத்தை வைத்தா இழுத்தோம்? சொல்லி வைத்தவர் யாரோ விடிந்தால் சொர்க்கபுரியென்றே உன்மனசை சீரழித்தே போன அந்த செம்மல்தான் யாரோ? சிங்க தேசத்துக்கு உன் வாயாலே உணவளிக்கிறாய் கவனம்... இரத்தவாடை உன் நாவில்.... இதை உனக்கு சொல்லாமல் விட்டது யாரோ? வெட்டவெளியை ஒரு துளி மழை நனைத்தால்... பொட்டல்காடெல்லாம்... புஸ்பனவனமாகுமென்றே சொல்லி வைத்தது யாரோ? அமைதியில் நாட்டமில்ல.. போர் அவர் பிறவிக்குணம்... ஆவிபிரிப்பதே அவர் தொழில்.. அடுக்கடுக்காய் புலிக்கு அவப்பெயராம்....! இந்த நாளில் போரென்றே கொள்வாயா? இருந்த கூட்டுக்கு நீயே இடியாய் ஆவாயா? சொல்லி வைத்தது யாரடா... …
-
- 1 reply
- 900 views
-
-
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டினில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற "விடுதலை" என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான "ஆண்டாள்" கண்முன்னே …
-
- 7 replies
- 1.3k views
-
-
காதலர் தினமும் காதலர் மனமும் அன்புள்ள காதலன் கி.பி 270 ல் ல் த கா....! தொடக்கி வைத்தான்! அன்புள்ள காதலிக்கு அன்பு நிறைத்து அனுப்பி வைத்தான் காதல் கடிதம்! அன்று தொடங்கி இன்று வரை தினம் தினம் எழுதிக் கொணடே இருக்கின்றான் மனிதன்! அறிவுக் கண்ணால் அவள் பார்த்தாள் அன்புக் கண்ணில் அவன் வீழ்ந்தான்! வலன்டைன் வாழ்க !! ஐPலியா வாழ்க வாழ்க!! காதல் வழிந்து கசியக் கசிய... கண்கள் அழகு பெண்கள் அழகு இரு விழிகள் இதயத்தில் எழுதும் இனிய வரிகள் காதல்! இதயத் தோட்டத்தில் இளமை ஊஞ்சலாடும் புதுமை வலிகள் காதல்! காலை முதல் மாலை வரை கவிதை தின்றால் காதல் வளரும் காதல் வளர்ந்தால் கவிதை இனிக்கும் உன்ன…
-
- 5 replies
- 1.3k views
-
-
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான் அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான் அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான் அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா -------------------------------------------------------------------------------- கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான் துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது -------------------------------------------------------------------------------- ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார் கோவிலுக்கு போனால் நீ …
-
- 7 replies
- 1.9k views
-
-
நம்மை மறந்த நமது நட்சத்திரங்கள் ! காவிரியில் தண்ணீர் வரவில்லை கால் நடையில் சென்றீர்கள் உங்களின் கடமையுணர்வு தெரிந்தது! கார்கில் வீரர் காயம் ஆறவில்லை கைகள் கோர்த்து நின்றீர்;கள் உங்களின் கண்ணியம் புரிந்தது! ஈழத்திலே போர் இன்னும் ஓயவில்லை குஞ்சுகளின் தலையில் குண்டுமழை உங்களின் கட்டுப்பாடுதான் தெரிகிறது! மக்கள் திலகம் எம்.ஐp.ஆர் போல்;; நடிகர் திலகம் சிவாஐpயும்-எங்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தார்! உலகம் முழுதும் திரைவானிலே உங்கள் திரைபடம் ஓடவேண்டுமா அங்கே ஈழத்தமிழன் ஓடிவருவான்! உரிமைக்காக குரல் எழுப்பி உலகம் முழுதும் அலையும்-ஈழத் தமிழனுக்காய் நீங்கள் ஓடிவரவில்லை! தலைமுடி கோதும் படையப்பா தர்மத்தின் தலைவனாய் ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஒரு நிலவாய்!! இரு கரங்கள் நடுவே குலுங்கிய வளையலிடை ஒரு இடி ஜனனம் கொள்ளுமென்று எவர் கண்டார்? அடுக்களையில்...... அக்கினி சீண்டலின் மடியில்...... இதுதான் வாழ்க்கை என்று கிடந்தவள் எரிமலையாய் வெடிப்பாள் என்று எவர் கண்டார்?! பசு என்றே பாடினர் புலவர்.. காளைக்கும் சேர்த்தே ஒரு கனவுலகம் காண செத்தேதான் போவாளென்றே எவர் நினைத்தார்? நங்கை என்றார்.. நாணல் என்றார் மெல்ல நட.. அல்லி இடை ... மிடுக்காய் நடந்தால்... அது முறியுமென்றே இனிப்பாய் சொல்வார்... அவர்க்காய் புனை கதை !! போகட்டும் விடடி..! சூரியன் தான் ஆணா ...? ஆனாலும்தான் என்ன ? சொல்லடி கிளியே அவர்க்கு...... பூமியி…
-
- 9 replies
- 1.8k views
-
-
நேற்று என் தோழனும் தோழியும் கடத்தப்பட்ட பின்.. காதலர்களாய் மடிந்தனர் இன்று அவர்களுக்காக காதலர் தினம் வேற்று நாட்டில் அவனும் விம்மிய படி அவளும் விதி செய்த சதியால் பிரிந்திருக்க இன்று இவர்களுக்காக காதலர் தினம் கூற்றுகள் தவறியதால் காதல் கும்மாளம் போட்டவரும் குறுகிய காலத்தில் பிரிந்தனர்... இன்று அவர்களுக்காக காதலர் தினம் நாற்றுக்களுக்கு நடுவே நல்லதாய் காதல் செய்தவர் நேற்றிந்த சிங்களன் போட்டகுண்டில் நொடியினில் மடிந்து போயினர் இன்று இவர்களுக்காய் காதலர் தினம் ஏற்று தலைவன் ஆணை அணி வகுத்தார் புலியாய் வாட்டும் பகை கொன்று வந்தார் மீட்டும் காதலது நெஞ்சில் கொண்டார் கொள்கையால் கதலரானார் -இவர் கொள்கைக்காய் மாண்டார்... …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாட்டுப் புதினம் - 1 நாலாண்டு(5) சமாதானம் நாவறண்டு நாசமாய் கிடக்குது- அரச அதிபர் அறைகூவல் விடுகிறார்- இது போர் அல்ல மக்காள் போர் அல்ல போர் என்று சொல்லாமலே தமிழ் மக்களை கொல்லுவம் சமாதானக் கதவுகளை இன்னும் திறந்து வைத்திருக்கிறதா சொல்லுவம் தமிழ் மக்களைக் கொல்வதால் எங்கட இலங்கையை பாதுகாக்கலாம் சிங்கள ராணுவத்தைக் இழப்பதால் அவங்கட புலிகளை வெல்லலாம் செஞ்சோலையில போய் குண்டுகளை கொட்டுவம் உலகத்துக் அங்க புலிகள் முகாம் எண்டு சொல்லுவம் திட்டம் தீட்டி படுகொலை செய்யவம் கண்ணை மூடிக்கொண்டு-அதை நியாயப் படுத்த நீங்க இருக்கீங்க தானே ரம்புக்வெல கண்காணிப்பு குழுவுக்கு மெல்ல காதில பூவை சுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில சொல்லுவம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
பணக்காரன்....... நீ! இருப்பதை இழிப்பதில்! ஏழை நீ...... விரல்களை கருக்கியபின் புல்லாங்குழல் வாசிப்பதில்! ஆமையும் ஓடிச்சாம்....... முயலும் ஓடிச்சாம்........... அது வென்றதோ.... இல்லை - இது வென்றதோ....... நீ வெல்லமாட்டாய் - நம்பு! வெற்றிக்கும் தோல்விக்கும் எல்லைகளிருக்குமாம்.... உனக்கு? இடுப்பிலிருந்த துணி அவிழ்த்து... கண்ணைக்கட்டினால்....... இருட்டாகிடுமா பூமி? அம்மணமாய் ஆனாய் போ!
-
- 8 replies
- 1.3k views
-
-
''துப்பாக்கி தூக்கிடு....'' ' ஜயொரு ஆண்டுகள் ஜம்பம் அடித்தவர் அந்தோ பாரது அச்சத்தில் ஓடுறார்.... கட்டிய கோவணம் களட்டியே ஓடுறார் பாதையை திறந்திட பறந்தடித்தோடுறார்... வருமது புலியென வாடியே இருக்கிறார் அலரி மாளிகை அரக்கர்கள் கலங்கிறார்... இத்தனை காலமும் இகழ்ந்தே உரைத்தவர் இன்றேன் வந்திங்கு இரங்கலுரை நடத்துறார்....? ''கடலிலும் தரையிலும் இடியென அதிருமே இதுவரை காத்த பொறுமையை உணர்த்துமே...'' இழந்தது புலி பலமென்று இகழ்ந்தே உரைத்தவர் அழுதிடும் பகை அடைக்கிட அகிலமே திரளுமே... குருதியில் தேசம் எங்கினும் நனையுமே இந்த இறுதி யுத்தத்தில் ஈழம் மலருமே.... அழுதது போதும் அழுகையை நிறுத்திடு உன் கையினில் இப்…
-
- 29 replies
- 2.6k views
-
-
ஒத்தையா பிறந்தவனே பாசமா வளந்தவனே கத்ததை கண்டறிஞ்சு பேர்வாங்கி நடப்பாயா சொத்தையா போனபிள்ளை ஊரிலே பல இருக்கு மந்தையா வளத்தாரே அவர் பெத்தவரா செத்தவரா பதினெட்டு ஆயாச்சு பயிற்சிக்கும் அழைச்சாச்சு மினக்கெட்டு போயிப்போ ஒருவருசம் கழிஞ்சாச்சு தாய்நாடு காப்பதற்கு உன்போல மைந்தர்கள்-அதைத் தொட்டவனின் தலையெடுப்பர் அவரெல்லோ வீரர்கள். அமைதிப் படையாக ஈராக்கு சென்றுவர ஆசையாய் கேட்டாய்நீ பயந்துநான் போனேனே அமெரிக்கன் தனக்காக பலத்தோட ஆக்கிவைச்ச அரசியல் பலிக்களந்தான் பிறர்ஆவி போக்கிவைக்க அவனுக்கு ஒயில் வேணும் கால்மிதிச்சா நிலம்வேணும் சிவனுக்கும் மேலாலை புஸ்சுக்கு பவர்வேணும் கணக்குக்கு சொல்லிவைக்க வானளவு பணம் இருக்கு பிணக்கொன்றை தீர்ப்பதற்கு பிணக்குவியல் த…
-
- 4 replies
- 1.2k views
-