கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…
-
- 4 replies
- 1.4k views
-
-
வாடா....வா... பெரியவரா பெரியவரா பெரகரா - நீங்க பெரிய அடி வேண்ட வேணும் பெரகரா.... ஓடி வந்து ஆட்சியில ஏற வாங்க ஓலமது கண்டு நீங்க ஓடணுங்க.......... எம் தமிழில் பாதியரை கொன்றவரே ஏறி குந்தி ஆட்சியிலே ஓட வாங்க.... நாட்டை விட்டு வேறு நாடு ஓடினாயோ....?? உன் உடலை நரியும் களுகும் கொத்த வேணும் ஓடி..வாடா.......... பண்டை கால புலி என்றா நீ நினைத்தாய்....??? அட உனக்கு பாடை கட்ட வேணுமின்று ஓடி வா.... அடுக்கடுக்காய் நெஞ்சுக்குள்ளே அடுக்கி வைத்தோம்- உன்னால் அழிந்தவரின் சோகங்களை தேக்கி வைத்தோம்..... இறக்கி வைக்க முடியாமால் தவித்து நின்றோம் இப்போ உன்னை இறக்க வைத்து நாங்களதை தணித்து வைப்போ…
-
- 0 replies
- 789 views
-
-
நரபலி காட்சி வந்து நீ பார்.... இங்கே வந்து பாரு உலகே இங்கே வந்து பாரு அந்த கயவர் செய்யும் கோரமதை இங்கே வந்து பாரு.... துண்டு துண்டாய் உடலறுந்து கிடைக்கும் நிலை பாரு அந்த குண்டுகளை ஏவியவன் செய்யும் கோரம் காணு..... முண்டமதாய் மூச்சிழந்து கிடக்கும் நிலை காணு எங்கள் முந்தையர்கள் விட்ட தவறால் வந்த நிலை காணு..... என்ன செய்தார் என்றிவரை ஏனழித்தான் கேளு.... உயிர் குடிக்கும் இன வெறியன் மகிந்தன் செயலை காணு.... உணவாக தமிழர் உடலை உண்ணும் நிலை காணு.... மனிதம் உள்ளாய் நீ என்றால் வந்து நீயு பாரு உனக்கு - உள்ளம் இருந்தால் வந்து பார்த்து உலகே தீர்ப்பு கூறு.... நம்ம மக்கள் …
-
- 0 replies
- 973 views
-
-
தேம்பியழுகிறது தேசம்...! ஐயகோ....! எம் ஜீவனழுகிறதே மீள ஓர் முறை.... என்ன கொடுமையிது... நோயுன்டதே - எம் பேறறிவை....! ஏன் இந்த துயர் மீண்டும் _ எம் நெஞ்சேற விம்மிப் புடைக்கிறோம்..? தூண் சரிந்ததோ..? மீண்டும் எம் நூலகம் எரிந்ததோ...? தலைவனை தம்பியென்றழைத்து தத்துவம் சொன்னவரே எரிமலையில் குடிகொன்ட எம்மினிய அறிவூற்றே......! கரைந்து போனதே - மதிக் கடலொன்றிங்கே....! பகையோடு பேச இனியேதுமில்லை என்றெண்ணிப்போனீரோ...? உம் பணி முடிந்ததென்று உரைத்தவர் யார்....? இடை நடுவில் வழி தேடியன்றோ நிற்கின்றோம்....! தேசத்தின் குரலே......! தேம்பி அழும் எமை தேற்றி அறிவுரைக்க வருவீரோ...?…
-
- 6 replies
- 2.6k views
-
-
வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …
-
- 5 replies
- 1.7k views
-
-
உன் மூளையை சலவை செய்..... வெள்ளை வேட்டியை கட்டிய வெறியன் ஆட்சியில் இருப்பது அது இன்று முறையோ....??? சிங்கள காடையன் சிகரத்தில் குந்தியான் தமிழரை காப்பதாய் சொல்வது முறையோ....??? பாதையை அடைத்தவன் பட்டினி போட்டவன் படையை ஏவி மிச்சத்தை அழிப்பவன்.... ஆட்சியில் குந்தியது அது இன்று முறையோ....??? இது சுதந்திர நாட்டிற்கு சுபிற்சத்தை தருமோ....??? விடுதலை கொடுப்பதாய் வீராப்பாய் சொல்பவன் ஏன் - தமிழரை சிறையில் அடைத்தவன் வதைகள் புரிகிறான்....??? புலியென கூறியே தமிழரை பிடித்தவன் சிறையில் ஏனவன் தினமும் அடைக்கிறான்....??? ஊடகமீதிலே ஏறியே குந்தியான் உள்ளம் விட்டென உண்மையா உரைக்கி…
-
- 3 replies
- 1.4k views
-
-
பாரதிதாசன் சிந்திய பாடல் ஆலய உரிமை கண்ணிகள். எவ்வுயிரும் பரன் சந்ததி யாமென் றிசைந்திடும் சாத்திரங்கள் - எனில் அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம் அழகிய நேத்திரங்கள்? திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று சேர்த்திடலாகும் அன்றோ? - எனில் அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில் அத்தனை பேரும் ஒன்றே? ஏக பரம்பொருள் என்பதை நோக்க எல்லாரும்உடன் பிறப்பே - ஒரு பாகத்தார் தீண்டப்படாதவர் என்பதி லேஉள்ளதோ சிறப்பே? "தேகம்சுமை நமைச் சேர்ந்ததில்லை" என்று செப்பிடும் தேசத்திலே - பெரும் போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம், மதி போயிற்று நீசத்திலே. என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி தன்னை விலக்கிடுமோ இதை யோசிப்பீர் சமூக…
-
- 0 replies
- 990 views
-
-
பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை -கவிஞர் காசி ஆனந்தன்
-
- 5 replies
- 3.4k views
-
-
ஒன்பது தசாப்தங்கள் -கடந்து.. செத்தொழிந்து... மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்... ஏன் அந்த - உற்சாக கிழவன்... உன் மனசில் - துருத்திகொண்டே கிடக்கிறான்?? வெளிப்படையாய் -பேசினாலென்ன... அந்த வெள்ளி - தாடி .. நாத்திகனுக்கு-....... ஆத்திகனாய் - இருப்பவர் தரும்... அதரவு - அதிகம் ..!!! எல்லாம்..... அவர் கருத்து...... அதிலொரு சிறு குழப்பம்... பட்டு சேலையை சாமிக்கு உடுத்தி....... அழகு பார்த்து.... பக்கத்து உறவுகள் ... ஊத்தை - துணியுடன் கிடப்பதை ரசிப்பதில் உனக்கென்ன பெருமை?? அவர் - வார்த்தையில் சொல்லுறேன் -கேளேன்... நீ வெங்காயம்!!
-
- 6 replies
- 1.6k views
-
-
நண்பர்களே - கவிதை ஒன்று அன்புக்கு என்றும் பஞ்சமில்லை!! வாருங்கள் - என்னிடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறையவே கிடைக்கும்!! ஆனால் ஒன்று அதற்கான தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும் - என்னிடம் பணமாக!!! அன்புக்கும் விலை பேசும் சில மனிதர்கள்!!! என் செய்வது??? என்னுடைய ஆற்றாமை இது. உங்கள் கருத்து எதுவாயினும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
எலிகள் அஞ்சி ஓடுகின்றன பிள்ளையார் ஏறி உட்கார்ந்து விடுவார் என்பதால்.
-
- 1 reply
- 1.1k views
-
-
என்னவளாம் இன்னவள் அன்பின் சிகரமாம், அறிவின் ஒளிமயமாம், அழிகின் சிலைவடிவாம், என்னவளாம் இன்னவளின் செவ்விதழின் சிரிப்பொலியாம், பிரம்ம தேவன் படைப்பின் விசித்திரமாம், கலைத்தாயாம் கலைமகளையும் கவர்ந்த அந்த புன்னகையாள் கவியருளும் கவிமொழியும் அவள் நாவில் நற்றுணையானது.. நான் எதிர்பார்த்த அத்தனையும் அவளிடத்தில் இருக்கையிலே என்னவளாம் என்னவளை, என்னிடத்தில் சேர்ப்பதற்கு தூது சொல்லச் சென்றவளும் துணைவனிடம் சென்று விட்டாள். என்னவளாம் இன்னவளை என்னிடத்தில் சேர்ப்பதற்கு என்மனதில் துணிவில்லை, அவள் நாவின் வல்லமையால் என் நாவும் மௌனித்தது.. மௌனத்தின் மௌனத்தால் காத்திருக்கும் வேளையிலே காலங்கள் கரைந்தோடி கறுப்பினிலே நரை தட்டினாலும் காத்திருப்பேன் காத…
-
- 11 replies
- 1.9k views
-
-
சிறையிருக்கும் சிந்தனைகள்.. சிறு வயது - எம் சிந்தனைகள் சிறையிலிருந்த காலம்... தாயின் சொல்லே - என் தாரக மந்திரம்... தந்தையின் சிந்தனைகள் என் செயல் வடிவாகும்... ஆசிரியறின் அறிவியல் என் தீர்மாணங்களாயின...... பிரம்புகளும் முறைப்புக்களும் - என் சிந்ததனைக்கு சிறையாயிருந்தன..... எனினும் .... அடங்கும் வரை தானே அடக்குமுறை .... அணையிருக்கும் நீர் உயர்ந்ந்து உரத்து சொல்வதில்லையா..? திறவுங்கள் -அன்றேல் திறக்கப்படும் என்று.....! அது போன்றே -என் சிந்தனையும் சிறகெடுத்தது புதுத் திசை நோக்கி......! கற்பெனில் கண்ணகி - இது கற்காலக் கருத்து.... கோவில் எடுத்து குடமுழுக்காடி... கற்ப…
-
- 8 replies
- 1.6k views
-
-
அன்பான உறவுகளுக்கு அன்பு வணக்கம்!!! எனக்கு கவி என்றால் கொள்ளை ஆசை ஆனால் கவி வரையதெரியாது அதேநேரத்தில் மிகவும் ரசித்து வாசிக்கும் ஒரு கவி வாசகி! அவ்வாறு வாசிக்கும் கவிதைகளை இங்கே பதியவுள்ளேன்!!!! நீங்களும் வாசித்து கவி பற்றிய உங்கள் கருத்தை தந்தருள வேண்டுகிறேன்!!!!!! விடுதலையின் படிக்கல்லில் கருவறையில் மங்லென்று கலங்குகிற நெஞ்சு கண்ணீர் சொரிந்து விம்முகிறது பிஞ்சு மழலை! புரிந்து உணர்ந்து காலம் கடந்தாயிற்று ஞானம் தான் இன்னும் பிறக்கவில்லை! வியவருட ப் பொழுதும் விடிந்தாயிற்று வெந்து நொந்தவர் வேலெடுத்தோம் வினையறுக்க! வேள்வித் தீயின் அா்ப்பனிப்புகளுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டியவனே அமைதியாய் அமர்ந்திருப்பதன் அர்த்தம் என்ன? ம…
-
- 1 reply
- 842 views
-
-
லண்டனுக்கு படையெடுப்பு வருகின்றார் அயல்நாட்டிலிருந்து நம்மவரும் மற்றோரும் படையெடுக்கின்றனர் லண்டனை நோக்கியே பெருகிவரும் எம்மவர் வியாபார ஸ்தாபனங்கள் மூலைக்கு ஒன்றாய் புதிதாய் முளைத்தபடியே வேலையில்லாத் தட்டுபாடும் இங்கே மணித்தியாலத்துக்கு மூன்று பவுண் என்றே வெற்றிடம் நிரப்பிடக் கூட்டம் இங்கே வருகின்றார்கள் லண்டனை நோக்கியே நாடிவந்து நயமாய் பொய் கூறி பெறப்போகும் அரச உதவிபணகுறைப்புக்கள் கள்ளகாட்டின் விளைவால் புதிய இலக்கம் பதியும் முறையும் புழக்கத்தில் விதித்திட்ட புது சட்டதிட்டங்கள் இறுக்கமாகிப்போன நிலைகள் பாடுபட்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் பறி போய்விட்ட நிலையிலும் பதிக்கின்றார்கள் பாதங்களை லண்டனில் …
-
- 2 replies
- 1.5k views
-
-
-
விட்டில் பூச்சியே.... உனக்குத்தெரியமா? நீ நேசிப்பது நெருப்பின் ஒளியை எரிந்து போவாய் என அறியாமல் என் காதலும் அப்படித்தான் கடசியில் எரிந்து போவது ஆண்கள்தான் உன்னைப்போல ;)
-
- 2 replies
- 1.5k views
-
-
கண்கெட்ட கடவுளுக்கு ஓர் கடிதம் காப்புத் தெய்வமே கண்ண பரமாத்மாவே - எம் இனத்தின் கோர அழிவின்போது - எங்கே நீ ஒளிந்து பொண்டாய் . . . . . நவீன ஆயுதங்கள் எத்தனை தோன்றினாலும் - உன் அழிப்புச் சக்கரத்தின் முன் ஈடாகுமா?... இருந்தும் எங்கள் இனத்தின் அநியாய அழிப்பின் போது - உன் அழிப்புச் சக்கரத்தை எங்கே தொலைத்தாய்?...... திரௌபதியின் மானங்காத்த கண்ணனே தமிழ் ஈழத்து சகோதரிகளின் - மாணம் மோசமான முறையில் மாணபங்கப் படுத்தப்பட்டபோது - நீ எங்கே ஓடிப்போனாய்?... அல்லது உன் கையுள் இருந்த சேலைகளின் இருப்பு முடிந்து விட்டதா?.... இல்லை நீயும் துவேஷக்காரனோ?.... அரச குலத்துக்கொன்றென்றால் - முன்னிற்க்கும் நீ தமிழ் ஈழத்தில் அநீதிகளை பாரா முகமாய…
-
- 4 replies
- 1.8k views
-
-
யுத்த தேச நியாங்கள். குண்டுகள் வெடித்து வெடித்தே நிலம் சிதறிக்கிடந்தது... குருதி ஆறு வழிந்து ஓடி குளம் குட்டைகளில் நிறைந்து உறைந்த தடம் தெரிந்தது.... சாவுகள் சாதாரணமாயிற்று.. பிணங்களை புதைக்க துளிகூட இடமில்லை என்றாயிற்று.... அவலக்குரல்கள் - மிக அருகே - காற்றில் தேய்ந்து தேய்ந்து மறைந்த வ்ண்ணமிருந்தது.. நாய்கள் இறுதியிலிடும் ஈன ஊளைக்குரல் கூட ஓய்ந்து போயிருந்தது..... தூரத்தில் சிலர் கும்மாளமிட்டு கூச்சலிடுவது தெரிந்தது... ஒரு பக்கத்தில் சமாதானம் சமாதானம்.. என்ற போதனை குரல்.. ஒலித்துக்கொண்டேயிருந்தது.... அடி வாங்கி வாங்கி அழிந்து - நசிந்து கிடந்ததவர் மட்டும் அமைதி பற்ற…
-
- 5 replies
- 1.2k views
-
-
பசியும் கற்பும் பசிக் கொடுமையால் விலைமகளாக மாறிய பரிதாபத்துக்குரிய ஏழைப் பெண்ணைப் பார்த்து கற்பிழந்த காரிகை எனக் காறித் துப்பினாள் மூன்று வேளையும் தின்று கொழுக்கும் பணக்கார வீட்டுப் பத்தினிப் பெண்.
-
- 7 replies
- 2.2k views
-
-
கிழக்கு வெளிப்பது எதற்காக? இரவின் யாத்திரை உரைப்பதற்கா? - பனிக் கதவின் கண்கள் திறப்பதற்கா? - ஒரு கனவின் மையல் முடிப்பதற்கா? - பல விழிகள் ஒளியைப் பெறுவதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உடுக்கள் ஓய்வு எடுப்பதற்கா? உதயன் கரங்கள் விரிப்பதற்கா? துடுப்பு ஊர்தி ஓய்வதற்கா? துறைகள் மௌனம் கலைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? பாடும் பறவைகள் இசைப்பதற்கா? பாரும் அதனை இரசிப்பதற்கா? வாடும் உயிர்கள் புசிப்பதற்கா? - பல வர்ணம் உலகை வசைப்பதற்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? உரிமை நிறைந்த போருக்கா? - கலி உக்கிரம் தணிக்கும் பேருக்கா? வறுமை அகற்றும் தீர்வுக்கா? - நீல வண்ணம் தீட்டும் வானுக்கா? கிழக்கு வெளிப்பது எதற்காக? கலைஞர…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆதவன் தேரிலே அரியணை ஏறியே அகிலம் ஒளிரவே அக்கினி சுரந்தனன் பகலவன் செங்கதிர் பங்கயம் தீண்டவே பனிபட்ட இதழது பகலாய் முகிழ்ந்தது களிறின் பிளிறல் சங்காக முழங்கிட செவிகள் இரண்டும் சாமரரை வீசவே துதிக்கையால் துதித்தது தூயவன் ஞாயிறை இளம் குளிர் காற்று இதயத்தை நனைக்க இன்பம் பொங்கிட இனிமையாய் புலர்ந்தது காக்கையின் கரைதலும் குயிலின் பாடலும் மஞ்ஞையின் அகவலும் காதில் ஒலித்திட கரைந்தது இருள் மலர்ந்தது பகல்
-
- 6 replies
- 2.9k views
-
-
புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்! - வித்தகக் கவிஞர் ப. விஜய் இந்தியா வித்தியாசமான நாடு! உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பிச்சைக் காரர்களாக்கும்! வெளிநாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! அமெரிக்கா விவரமான நாடு! வெளிநாட்டு தொழிலாளர்களை பிச்சைக் காரர்களாக்கும்! உள்நாட்டு முதலாளிகளைப் பணக்காரர்கள் ஆக்கும்! இலங்கை விபரீதமான நாடு! சவப்பெட்டிகளை தயாரித்து சமாதானம் பேசும்! சமாதானம் பேசிக் கொண்டே ஏவுகணை வீசும்! புத்தனின் போதிமரத்தில் - இன்று செஞ்சோலை சிறுமிகளின் உடல்கள் தொங்குகின்றன செஞ்சோலை வளாகத்தின் மேல் குண்டு வீசிப் பறந்தது விமானம் அல்ல சிங்கள ராணுவத்தின் மானம்! ஒரு ராணுவம் எதிரி ராணுவத்தை…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php
-
- 16 replies
- 2.2k views
-
-
வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே
-
- 16 replies
- 4.1k views
-