கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கூலிப்படையே ஓடி வா..... வாகரையை வசமாக்க வரிந்து கட்டுகிறாய் வா... வம்புக்கிழுக்கிறாய் வந்தடி வேண்டி போ... வெட்ட வெளியில வெட்டிய புதைகுழிகள் வெறுமையாய் கிடக்கிறது வா..வந்ததை நிரப்பு.... என்ன செய்வோம் நீ அடம்பிடிக்கிறாய் வந்தடி வேண்டி போ வா.... ஊடகங்கள் பாவம் உறங்கி கிடக்கிறது தட்டியெழுப்பி ஊளையிட விடு வா.... தென்னிலங்கை தெருக்கள் அமைதியாய் கிடக்கிறது காவு வண்டிகளை கத்த விடு வா.... பொதி செய்து உன் உடல்களை பொதியாக அனுப்ப வேண்டும் பொங்கியெழுந்து வா.... எம் ஆயுத கிடங்குகள் அரைவாசி வற்றிற்று அள்ளியெடுக்க வேணும் அய்யா விரைந்து வா.... ஓராண்டு ஆட்சியது ஓவென்று ஓடிருச்சு ஓலமது கொடுக்க …
-
- 5 replies
- 1.6k views
-
-
சின்ன பிள்ளைகளை சிறிலங்கா படை பிடிக்கலாமோ....??? ஏழிரண்டு வயசினிலே ஏ.கே.யை தூக்குகிறாய் யார் பெற்ற பிள்ளையோ காப்பரணில் நிக்கிறய்.... ஏறெடுத்து பார்கலயே ஏனோ உலகம் உனை காணலயோ...??? பிள்ளை பிடிகாறனிடம் பிள்ளை நீ சிக்கினாயோ...??? பாசமான உறவிழந்து பாதகர் படையினிலே பாவி நீ நிக்கிராயோ...??? சின்ன வயசுனக்கு என்ன ஏதறிவாய்...??? ஏனோ எல்லையிலே காவலுக்கு உனைவிட்டார்...?? காவு உனை கொடுக்க காவலுக்கு விட்டனரோ....??? மா பாவிகளை எண்ணையிலே மனசு கொதிக்குதய்யா... எம் வேங்கை எதிர்பதற்கு ஏய் பிள்ளாய் உனை எதற்கு....?? காவலுக்காய் உனை வந்து கட்டி வைத்தனரோ...??? அவர் தம்பி நீயென்று அறியாமால் விட்டனரோ....??? அறிந்தால் உனைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
உயிர்க்கூடு அதிர்கிறது உணர்வுகள் அழுகிறது இமை மடல் சிவக்கிறது கண்ணீர்ச்சுரப்பி வற்றி இரத்தம் கசிகிறது சாவுச்செய்திகளை கேட்டுக் கேட்டே காது என்புகள் அறுந்து போகிறது ஈழ மண்ணில் இரத்த ஆறு ஓடுகிறது சவக்குழிகள் நிறைகிறது நடுவீதியில் இறங்கி பதாகை சுமந்து உரத்து கத்தி ஒரு பயனுமில்லை நடு வீதியில் உச்சி வெயிலில் நின்று உரிமைக்காய் உரத்து கத்தியவரி;ன் உயிர் மூச்சு பட்ட பகலில் பறிக்கப்பட்டுள்ளது இலங்கைத்தீவு ஜனநாயக போர்வையுடன் கண் காதுகளை இறுக மூடிய சர்வதேசம் குருட்டு மனித உரிமை பேசுகிறது கதிர வெளியில் காட்டு மிராண்டிகள் தின்று குவித்த உறவுகளுக்காய் நீதி கேட்டவன் உயிரிழந்து கிடக…
-
- 3 replies
- 959 views
-
-
யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய
-
- 4 replies
- 1.2k views
-
-
எழுந்து வா..... எவர் வந்தால் எமெக்கென்ன எழுந்தோடி வா தமிழா எம் மண்ணை மீட்போம்.... அஞ்சாத தமிழினமே அஞ்சி நிற்பதுவோ....?? அறபோரில் நாம் வெல்ல அணிதிரளாயோ....??? அடிமை தான் வாழ்வென்று அடிமைக்குள் அடிமையாய் ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....??? அட தமிழா வெட்கமில்லையா எழுந்துவா.... மாற்றான் காலடியில் மறத்தழிழன் கிடப்பதுவோ...??? மானம் உண்டென்றால் மறத்தமிழா எழுந்து வா.... கூன் விழுந்தா வயதென்ன குமரா நீயென்ன யாராய் இருந்தாலென்ன நம் ஈழம் நாம் காண்போம் நம்பியே எழுந்து வா.... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 764 views
-
-
இதற்காகவா நீ பெற்றாய்.....???? பெண்ணவளை தெய்வமாக போற்றும் இந்த உலகினிலே... பெண்ணே உன்னை கேவலமாய் வந்தொருவன் இழிக்கின்றானே..... படுக்கையதை நீ விரித்து பத்து மாதம் சுமந்து பெற்றாய்.... அடி உன்னை வந்து இன்றவனே ஊனமதாய் இழிக்கின்றானே.... கண்ணயரா நீ அன்று கண்மணி போல் காத்தவனை பெற்றெடுத்த பெருந்தகையே.... உன்னையின்று இழிக்கின்றானே உன் மனசில் உதைகின்றானே.... இத்தனையும் கேட்டிடவா இன்றவனை நீ பெற்றாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 19 replies
- 2.8k views
-
-
மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…
-
- 5 replies
- 1.4k views
-
-
என்றும் என்னில் கலந்த உறவே எப்போதும் எனக்காய் வாழும் உயிரே என் தாய் போல் அன்பு காட்டிய நீயே என் தவிப்பு புரியாமல் மௌனமாக என் மனவாசல் கதவின் தாழ் திறந்த நீ காலங்கள் வரும் காத்திரு என்றாய் காலங்கள் ஓடுகின்றன உன் நினைவுகளுடன் காலமகளும் சிரிக்கிறாள் உன்வார்த்தைகள் காணாமல் போனதாக கடைவாய் சிரிப்புடன்
-
- 1 reply
- 943 views
-
-
கருவிசெய்வாய் விஞ்ஞானமே தலைதூக்கிப் பார்த்துநின்ற வெண்மேகக் கூட்டத்தைக் காலடியில் தவழவைக்க வானூர்தி கண்டுதந்த விஞ்ஞானமே அந்நியத்தில் வாழுகின்ற அன்பான உறவின்குரல் அடிக்கடியே கேட்பதற்காய் தொலைபேசி கண்டுதந்த விஞ்ஞானமே அடித்தடித்துத் துணிதுவைத்து அலுப்படைந்த காலம்போய் கணப்பொழுதில் சலவைசெய்ய கருவியினைக் கண்டுதந்த விஞ்ஞானமே ஆண்மகனோ பெண்மகளோ ஆரூடம் பார்க்காமல் அச்சொட்டாய் கண்டுவிட மருத்துவத்தில் விந்தைசெய்த விஞ்ஞானமே நாளாந்தக் காரியத்தை நலிவின்றிச் செய்யவைத்ததாய் நான்சொல்லும் தேவைகட்கும் நலமுடனே கருவிசெய்வாய் விஞஞானமே வஞ்சகத்தை மனத்திருத்தி வக்கிரத்தைப் புதைத்துவைத்து வார்த்தைகளில் போலிசெய்வார் வதைபடவே கருவிசெய்வா…
-
- 11 replies
- 1.8k views
-
-
என் பிள்ளையை காணலயே..... என் பிள்ளையை காணலயே எவனோ வந்து பிடிச்சானே யாருண்ணு தெரியலயே- அவன் யாருண்ணு சொல்லலையே.... கூட போனவங்க கூடி நின்றவங்க கூட்டத்தோடு காணலயே.... விளையாட போறெண்ணு வீதிக்கு போன புள்ள காணமால் வருவாண்ணு கனவா நான் கண்டேன்.... என்ன ஏதெண்ணு எனக்கேதும் தெரியலயே என் மனசு ஏக்கங்கள் இன்னும் குறையலயே.... ஏன் வந்து பிடிச்சானோ...?? என்ன செய்தானோ...?? எதுவும் அறியாத என் பிள்ளையை பிடிச்சானே.... கண்ணு போலவனை காத்து வந்தேனே கண்ணுhறு... பட்டதுவோ கடத்தி போனாங்களே... வெள்ளை வானென்று வெளியில சொன்னாங்க வேண்டாம் விளையாட்டென்று வேண்டி சொன்னேனே.... எதுவும் இல்லைண்ணு எழுந்தோடி போனானே வர…
-
- 1 reply
- 843 views
-
-
எங்கு போய் சொல்ல....??? கண்டம் விட்டு கண்டம் வந்து கண்டதெல்லாம் கற்றோமென்று வந்தொரு தமிழ் கூட்டம் வஞ்சனைகள் செய்கிறது...... நெஞ்சமதில் ஏறி வந்து நெஞ்சதிர குத்துறது... முந்தி வந்த மூத்தறிஞர் முத்தமிழை நாமறிவோம்... ஏடுகளில் ஏறிவந்த எம்தனையே நாடறியும்... பா...வதுவை பாடிநிற்கும் பாவலர் கூட்டமென்று... காகம் போல் வந்திங்கு கத்தியடித்து கரைகிறது...... பாரெங்கும் பா முழங்கி தங்க தகடுகளை தமதாக்கி வந்தோமென்று தம்பட்டமடிக்கின்றது.... கடனுக்கு மூளை வேண்டி கவிதைகள் புனைந்தாரென்று கதைகள் வேறு விடுகிறது..... பகட்டுக்காய் வந்தொரு... பாரட்டை சொல்லிவிட்டு கரியார் போல் வந்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பரிதாப மரணம்.... உண்ண உணவின்றி ஒரு சொட்டு நீர் இறங்கா ஒட்ட வயிரொட்டி ஓலமாய் இறந்தாயோ....??? குழுமி வந்து குளிர் கூட அடிக்கையிலே குறண்டி நடுங்கி - நீ குமுறி இறந்தாயோ....??? அக்கம் பக்கத்திலே ஆளுதவி யாருமின்றி ஜயா பாவி -நீ அநாதையாய் இறந்தாயோ...?? தூங்கியெழ கூட துண்டு நிலமின்றி ஊரார் கோடியினுள்ளே -நிதம் உறங்கியெழுந்தாயோ....?? சத்துணவின்றி சக்தி நீ இpழந்து சாவை நீ ஏற்றாயோ....??? கடமையாக நீ கதிரை பின்னி யே தினம் காலம் கழித்தாயே... வந்த யுத்தமதால் வருமானம் நீ இழந்து வறுமை உனையாழ வாடி இறந்தாயே.... ஒத்தாசைக்கு ஒருத்தரும் உனக்கில்லா அட..பாவி ஜயா நீ பரிதாபமாய் இறந்தாயே....!!! -வன்னி …
-
- 0 replies
- 728 views
-
-
எது சுகமோ? தொடர் - 2 அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா?
-
- 12 replies
- 2.3k views
-
-
நல்ல நாளு பாத்திருக்கு.... குத்தகைக்கு நாட்டை வைச்சு குண்டுகளை வேண்டி வந்து.... மிச்ச மீதி உள்ளோரையும் மிகையொலியால் அழித்திடவே மெல்ல மெல்ல துவங்கி விட்டார்.... நட்ட நடு நாசியென்ன பட்ட பகல் வேளையென்ன.... பறந்தடித்து ஓடி வந்து பாவிகளை அழித்து போறார்.... நல்ல நாளு பாத்திருக்கு நம்ம வீட்டு ஏவுகணை.... சங்கெடுத்து ஊதி உன்னை சங்கரங்கள் ஆடிடுவார்.... ஆணவத்தில் ஏறி நின்று நல்லா வந்து ஆடிப் போ.... உன்னை அடக்கம் செய்ய எம்மவரும் புதை குழியை வெட்டிவிட்டார்.....!!! வன்ன மைந்தன் -
-
- 0 replies
- 705 views
-
-
கண்டுணர்! அண்டமெங்கும் ஆண்டவெங்கள் தண்டமிழை நண்டெழுத்து ஆள உண்டுடுத்து வாழ்வதோ? கண்டமெங்கும் கண்டவெங்கள் வண்டமிழர் கூட்டம் கண்டவர்க்கும் காலமெலாம் தொண்டு செய்து சாவதோ? இதை கண்டுணர்ந்து தண்டெடுத்து குண்டெடுத்து ஈழமதை கொண்டு வந்தால் பண்டுலகர் போற்றுவர் - இல்லை விண்டவரும் தூற்றுவர்!
-
- 3 replies
- 1.2k views
-
-
இது எம் காலம்.. காலம் கனிந்தது.-கார்த்திகை மலர்ந்தது - மனங்கொள்வோம் எம் உயிர் உரையும் மாவீரர் மலர் குடில் கொள்ளும் காலம் மனதார பாவிசைப்போம் -அவர்தம் புகழ் இசை கொன்டு..... நெஞசுருகிப்போவோம் நேசங்களின் வழியுணர்ந்து....... தேசம் பல கண்ட தமிழரே நிஜ தேசிய தினம் - உமக்கிது.... நம் தேசம் தந்த வேந்தர் புகழ் தேசம் எங்கும் உரைப்போம்- வாரும் உயிரில் உணர்வோம் உயிரீந்த- எம் உறவை
-
- 1 reply
- 711 views
-
-
காகங்களே! மேகங்களே!... காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்
-
- 25 replies
- 4k views
-
-
உன்னை மனிதன் என்பதா.....??? தேசத்து மக்கள் தெருவில் நிக்கையிலே... தின்னையிலே உட்காந்து வேடிக்கை பார்த்தவரே.... வெட்டி பேச்சுரைத்து வெறும ;காலத்தை ஓட்டியவரே.... சுதந்திர தேசத்தை பகை சுடுகாடாய் ஆக்கையிலே.... எதுவும் அறியாதது போல் இங்கன்று இருந்தவரே.... இன்று வந்து என் உரைத்தாய்....??? பெண்ணவளை ஏன் இழித்தாய்....??? இன்னல்களை கண்டுயவள் இதயமது அழுகையிலே.... கவியாக்கி வந்துயவள் குமுறல்களை கொட்டுகிறாள்... அவள் ஆக்கமதை வந்துயிங்கு அவமானம் செய்கிறியே.... உன்னை எல்லாம் அறிஞன் என்று வந்து நீயும் உரைக்கலாமா...??? அட கவிஞன் என்று வேறு வந்து உன்னை நீயே …
-
- 3 replies
- 1.1k views
-
-
பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…
-
- 5 replies
- 1.4k views
-
-
முதன்முதலாய் அம்மாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை இணைக்கிறேன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாய்ப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தைவரி சொல்லலையே காத்தெல்லாம் அவன்பாட்டு காகிதத்தில் அவனெழுத்து ஊரெல்லாம் அவன்பேச்சு உன்கீர்த்தி எழுதலையே எழுதவோ படிக்கவோ இயலாத தாய்பற்றி எழுதியென்ன லாபமென்று எழுதாமல் விட்டேனோ பொன்னையாதேவன் பெற்ற பொன்னே குலமகளே என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே வயிரமுத்து பிறப்பான்னு வயிற்றில்நீ சுமந்ததில்லை வயிற்றில்நீ சுமந்தஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு கண்ணுகாது மூக்கோடை கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கிடக்கையிலை என்னென்ன நினைச்சிருப்ப கத்தி எடுப்பவனோ களவாடப் பிறந்தவனோ …
-
- 4 replies
- 2.5k views
-
-
ஈழம் என்னும் இன்பபுரி சாம்பலுக்குள் பூத்து வந்த சந்தனத்து மேனி - இவள் சங்கம் பல நாட்டி வைக்கும் சரித்திரத்து இராணி! வேங்கையரின் ஆகுதியில் விளங்கும் இளவேணி - தமிழ் வேதனைகள் தீர்த்து வைக்க விளைந்த இவள் ஞானி! தேங்கு வளம் சேர்த்து வைத்த தெள்ளமுதத் தேனீ - இவள் கஞ்சமலர் கொஞ்ச வரும் கதிரவனின் காணி! இன்னலுறும் இனங்களுக்கு இன்பந்தரும் கேணி - இவள் திண்மையுறும் விடுதலைக்கு வன்மை தரும் ஏணி! ஓங்கு புகழ் தாங்கி நிற்கும் தமிழினத்து ஆணி - இவள் ஒய்யாரப் பாட்டெழுதும் பாவலர்க்கு வாணி! முத்தெடுக்கும் கடல் நடுவே மிளிர்வது இவள் பாணி முத்தமிழும் செப்பிடவே முழக்கம் தரும் தீனி! மாங்கிளியும், மரகதமும் மண்டியிட்ட பூமி - …
-
- 8 replies
- 1.4k views
-
-
வாழ்க மா. . . வீரர் மெழுகுவர்த்தி கண்டால் எனக்கு என்றும் உங்கள் ஞாபகமே உயிரை உருக்கி விடிவைத் தருவீர் எண்ணக் கண்ணில் நீர் வருமே நூறு வருடம் வாழவேண்டும் ஆசையுண்டு எங்களுக்கு மூன்றே நிமிடம் வாழ்ந்தால்க் கூட அர்த்தம் வேண்டும் உங்களுக்கு முருக்கை முள்ளு காலில் ஏற உயிரும் எங்கோ போய் வருமே நாளை நாங்கள் போறோம் என்று எப்படி ஐயா சிரிக்கின்றீர் ஈழப்போரைக் கருவறைக்குள்ளே கதையாய் கரைத்துக் குடித்தனீரோ மடிந்த பின்பும் மறுபடி எழுந்து தமிழ்த்தாய் வயிற்றில் பிறக்கிறீரோ மில்லர் முதற்கொண்டு இன்னாள் வரையிலே எத்தனை எத்தனை கரும்புலிகள் எண்ணிப் பார்க்கிறேன் கண்களின் ஓரமாய் சிறிதாய்த் துளிர்க்குது நீர்த்துளிகள் எங்கள் உறவுகள் உங்களை நினைக்க உடம்பு மெல்லச்…
-
- 6 replies
- 962 views
-
-
நான் கொலைகாறன்... ஒட்டு கேட்டு நானும் அன்று ஓடி அங்கு வருகையிலே.... கூட்டுமாறு கொண்டுவந்து கூட்டி கூட்டி அடித்தவரே.... பழஞ்சோறு அள்ளி வந்து பரப்பி என்னில் எறிந்தவரே.... பாதணிகள் களட்டி வேறு பாவி மீது வீசினீரே.... ஆட்சியிலே ஏறும் வரை அடியேன் யான் பொறுமை காத்தேன்... இன்று பழஞ்சோற்றுக்கு வழியில்லை பட்டினியால் செத்துமடி.... கூட்டுமாறு கொண்டுவந்து பிணமதுவை கூட்டி அள்ளு.... தமிழன் தோலை உரித்து படைகள் பாதணியாய் பேட்டிடட்டும... ஊர்வலமா நடாத்தி வந்தாய் ஊரடங்கு போட்டுவிட்டேன்... சட்டமதா பேசி வந்தீர் சாக்கடையை திறந்து விட்டேன்.... குண்டுகளை வீசி உங்கள…
-
- 1 reply
- 843 views
-
-
முகமரியா தேசத்தில் நம் தேசம் - தொலைத்து தூர தேசசம் வந்தும் . . ஆறறிவை தொலைத்து - சிலர் நிர்வாணமாய் திரிகின்றார்கள்...... அகதி முத்திரையோடு அகங்காரமாய் ஆயுதங்களுடன் அதிகாரமாய் உறவாடும் கால் முளைத்த.. பிசாசுக்களாய்..... அரியாலை மன்னார் வல்வெட்டித்துரை - இன்னும் எத்தனையோ...எத்தனையோ.... தாய் மண்ணில்தான் ஊர் சண்டையென்றால்.. வற்த இடத்திலுமா - தங்கள் கசாப்புக்கடை .. தத்துவங்கள்....... தம்முடைய புதைக்குழியை தாமே வெட்டுமளவுக்கு இரத்த தாகம் கொண்டலையும்...காட்டேறிகளாய்.... உயிர்க்கும் பிழைப்புக்கும் இடம் தேடி வந்தவர்கள் வந்த இடத்தில் - பிழைப்போ உயிர் வதைப்பு.... உலக நாடுகளில் மரண தண்டனையை சட்ட யாப்புகளிலிருந்த…
-
- 5 replies
- 1.5k views
-
-
எப்போதோ நீ எழுதிய கடிதம் இப்போதுதான் எனக்குக் கிடைத்தது ஊர் எப்படி? உறவினர் எப்படி? உருக்கமுடன் கேட்டிருந்தாய் தோழனே நீயும் நானும் அப்போது பார்த்ததுபோல் இப்போது நம் கிராமம் இல்லை விமானத்தாக்குதல்களால் ஊரார் வீடெல்லாம் ஊனமாகிப்போய்விட்டது உன் வீடும் தப்பவில்லை எழில் மிக்க எமது கிராமம் எழிலுக்கு எழிலூட்டிய அம்மன் ஆலயம் கூட ஆக்கிரமிப்பாளரின் அராஜகத்தால் அடியோடு சாய்ந்து விட்டது தோழா வடை கடித்து தேனீர் அருந்தி வகைவகையாய் வம்புக்கதை வாய் வலிக்க கதைத்து சிரித்த வல்லிபுரத்தாரின் கடையும் பொல்லாத தக்குதலால் பொழிவிழந்து போய்விட்டது நீயும் நானும் பத்திரிகை படித்து நாட்டு நடப்பு எல்லாம் அலசி ஆராந்த் அந்த வாசிகசாலை இருந்த் இடம…
-
- 5 replies
- 1.2k views
-