கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கிடைக்குமா உன் நிஜங்கள் உதிராது என்றுமே மலர்ந்திருக்கும் அழகிய ரோஜாக்கள் போல் என்றுமேயான உன் நினைவுகள் மீண்டும் மீண்டும் நான் தான் உணர்கிறேன் உன் பிரசன்னத்தை என் உள்ளத்திலே இன்று நீ என்னிடம் இல்லாதிருப்பினும் உன் காதலில் எச்சசொச்சங்கள் என்னில்... என் உள்ளத்தைக் கொத்திக்காயப்படுத்தி கடித்து முறித்துச் சுவைத்து பார்த்த நீ பறந்து சென்றுவிட்டாய்... உன் எண்ணங்களின் நிழல்கள் தாங்கி நான் இன்று உன் நிஜத்தினை தேடிக்கொண்டிருக்கின்றேன் கிடைக்குமா எனக்கான உன் நிஜங்கள்....
-
- 5 replies
- 1.2k views
-
-
உன் பார்வை கல்லைக் கரைக்கும்-நான் கள்வன் இல்லையடி.... நீ காதல் முல்லையடி.... உன் விரல்கள் வீணை இசைக்கும்-நான் கலைஞன் இல்லையடி.... நீ அன்புக் கிள்ளையடி... ஊரும் பேரும் நாலும் சொல்வார்.. நீதானன்பே எந்தனுயிரே.. ஜென்மங்கள் தோறும் கைகள் இணைவோம்.. காதல் வந்து சேரும் வழி கண்களல்லவா... நம்போல் காதலர்கள் பேசும் மொழி மௌனமல்லவா... கனவுகள் நாளும் வந்து.. கவிதைகள் தருமே... கண்மனியுனை நினைக்க குளிருது மனமே.. இதழ்களில் தேன் குடிக்க இன்றேன் சொல் தாமதமே.. இரவுகள் தனித்திருக்க நிலா உலா போய் வருமே... மெத்தை மடி தந்தவளே மெல்லத்தூங்கவா....நீ நிம்மதியில் புன்னகைத்தால் காதில் பேசவா... கருவிழி பார்த்துத்தான்.. …
-
- 43 replies
- 6.1k views
-
-
வானை தொட்டு விடத் துடிக்கும் தென்னை மரங்கள் தென்னையுடன் போட்டியாக பனைமரங்கள் குச்சொழுங்கையை எட்டிப் பார்க்கும் வேப்ப மரங்கள் குச்சொழுங்கையின் இரு மருங்கும் கோலம் இடும் அறுகம் புற்கள் மெல்லத் தடவி வரும் இளம் தென்றலுக்கு நாணி அசைந்தாடும் கோரைப் புற்கள் மொத்ததில் பச்சை சேலை உடுத்த அழகு தேவதை எமது ஈழம் இன்று மெல்ல மெல்ல வனப்பு.. இழந்து சுடுகாடு ஆகிறது! துளசி
-
- 12 replies
- 2.1k views
-
-
அம்மா அம்மா நீதான் எந்தன் உயிரம்மா..... கருவை உயிராக்கி சுமையை இதமாக்கி வலியை சுகமாக்கி உதிரத்தைப் பாலாக்கி அன்பை உணர்வாக்கி மொழியைத் தமிழ்ழாக்கி என்னை உருவாக்கி உன்னை மெழுகாக்கி என்னை ஒளியாக்கிய என் அன்புத்தாயே_________________
-
- 18 replies
- 2.3k views
-
-
கண்ணீர் அஞ்சலி.....( எண்ணமதில் கற்பனைகள் எத்தனையோ தான் சுமந்து... பள்ளியறை மீதினிலே வெண் புறவாய் பறந்தவளை.... வானேறி வந்து ஏனோ மா பாவிகளை ஏன் வதைத்தீர்;....??? என் செய்தாள் என்றென்னி அவள் உடலை நீர் கிழித்தீர்....??? உணர்விழந்து உடல் நலிந்து உணர்வற்று கிடைக்கையிலே.... உயிர்காக்க வேண்டியவள் இடமாறி வருகையிலே... இரக்கம் இன்றி ஏன் வதை;து ஏனோ பகையே நீ கொன்றாய்....??? உயிர் குடிக்க அலைகின்ற இன வெறி மகிந்தாவே ஏனோ அவளை நீ கொன்றாய்....??? என் தீங்கு அவள் இழைத்தாள்....??? தீண்டாமை கிடந்தவளை திருகியே ஏன் கொன்றாய்....??? வலியோடு வடு இணைத்து துடி துடி…
-
- 5 replies
- 1.2k views
-
-
வணக்கம் இங்கு பலதரப்பட்ட கவிஞர்கள் இருக்கின்றீர்கள். அதாவது எழுச்சி கவிதைகள் எழுதுபவர்கள் அல்லது காதல் கவிதைகளில் கற்பனை சிறகை விரித்து பறப்பவர்கள் அல்லது இரண்டு கவிதைகளையும் காலத்துக்கு ஏற்ப எழுதுபவர்கள் என்று பலவகைப்படுத்தலாம். ஆனால் யாழ் வரும் வாசகர்கள் என்ன மாதிரி கவிதையை விருப்பி படிக்கின்றார்கள் என்பதை அறிய நீண்ட நாள் ஆசை. மற்றைய பக்கங்களை விட கவிதைப்பக்கங்கள் தான் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகின்றது. எல்லாவற்றிக்கும் வாக்குப்பதிவு வைக்கின்றார்கள். இதற்கு நான் வைக்கின்றேன் . உண்மையாக வாக்களியுங்கள்.
-
- 11 replies
- 2.2k views
-
-
காதலே நீ எனக்கு... காதலே எனக்கு நீ முதலாவது இறைவன்.. இரண்டாவது சுூரியன்... மூன்றாவது பால்... நான்காவது மூர்த்தி.. ஐந்தாவது முத்தி... ஆறாவது புலன்.. ஏழாவது தரிசனம்.. எட்டாவது கிழமை... ஒன்பதாவது நமஸ்காரம்.. பத்தாவது கிரகம்.. பதினோரவது அவதாரம்.. பதின்மூன்றாவது மாதம்.. பதினேழாவது பேறு.. இருபத்திஐந்தாhவது மணி.. அறுபத்தியோராம் நிமிடம்.. அறுபத்தியேழாம் கலை.. ஆயிரத்தோராங்காலத்துப்பயிர்..
-
- 13 replies
- 2.2k views
-
-
இது துக்கமான விடயமல்ல என்றாலும் அறிந்திடுங்கள்... செம்மனி சுடலை என்றால் பேய்களும் வெருண்டிடும்... பக்கதிலேயே ஒட்டிக்கொண்டு சித்துபாத்தி சுடலை வேறு... யாழ்வரவில் பங்கர் வெட்டி தூங்குவதெல்லாம் செம்மனிக்குள்ளதான்... பார்சலில சோறு வரும் சாப்பிடுவதும் செம்மனிக்குள்ளதான்... பாடசாலை விட்ட பிறகு விளையாடுவதும் செம்மனிக்குள்ளதான்... காணாமல் போன எனது நண்பன் சேரன் உறங்குவதும் செம்மனிக்குள்ளதான்... நான் இந்திய ஆமியிடம் வாங்கிய அடி அதுவும் இந்த செம்மனிக்குள்ளதான்... நண்பா நீ உறங்கும் சுடுகாடு இப்போ சுடுகாடு இல்லையடா... ஈழமே சுடுகாடாகி நாள் ரொம்ப ஆச்சுதுடா... விடுதலைக்கான தேதி இன்னமும் கிடைக்கவில்லை... வீண்கதை பேசும் கூட்டமு…
-
- 11 replies
- 1.9k views
-
-
பூப் பூவாய் பூப்பூவாய் பூத்துவிட்ட ஆசைகள் பூப்பூவாய் என் மனதிலும் பூத்தது வெள்ளையாய் சிரிக்கின்றதே மனது பூத்த பூவுக்குள் புகுந்ததோ நிறம் என்ற கருமைத்துளிகள் பூபடைத்தான் பூவைக்குள் பெண் பூவாய் பெண்ணை படைத்தான் பூவுக்குள்ளும் பனித்துளிகள் நித்தம் விழியினை மறைக்கும் உப்புநீராய் இதயத்துக்குள்ளும் சிந்துவதோ ரத்தத்துளிகள்
-
- 15 replies
- 2.3k views
-
-
மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?
-
- 35 replies
- 4.8k views
-
-
ஓரு கைய்தியின் கண்ணீர்.....!! ( களுத்துறை. வெலிக்கடை .புசா..அவலம்) சுற்றி வளைத்தொரு முற்றுகையிட்டு சுற்றி பிடித்தான்... பற்றியே பிடித்து தேகம் மீதிலே பறைகள் அடித்தான்... கை களை கூட்டியே விலங்கினை மாட்டியே கட்டியே இழுத்தான்... கோர சொற்களை கத்தியே உரைத்து எட்டியே உதைத்தான்... கொட்டியே கொட்டியே என்றென கத்தியே முட்டியை உடைத்தான்.... நாளங்கள் உடைத்து குருதிகள் பாயவே குலுங்கியே சிரித்தான்.... எரிதனல் போலவே வலியினில் துடிக்கையில் ஏறியே அடித்தான்... தளும்புகள் மீதிலே பெற்ரோலை ஊத்தியே அலறவே வைத்தான்.... நினைவுகள் இழந்து நிலத்தினில் வீழ்கையிலும் நிமிர்தி…
-
- 1 reply
- 960 views
-
-
நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்
-
- 1 reply
- 1k views
-
-
உனக்கெதற்கு கட்சி....???? ( ரவுகக்கீம் ) கதிரைகளை காத்து விட கழுதையாகி போவதுவோ....??? பண மூட்டைகளை வேண்டி பிட்டு பகை மூட்டைகளை சுமப்பதுவோ....??? பன்னிருவர் பலியெடுத்தான் பார்த்து நீயும்; நிற்பதுவோ....?? ஏறியவன் பகை உதைக்க இயலாமால் போனதுவோ...??? கை நீட்டி பணம் வேண்டி கை கட்டி நிற்பதுவோ....??? மக்களவர் மைந்தர் என்று மார் தட்டி உரைத்தவரே.... உன் இனத்தை அவன் அழிக்க பார்த்து இன்று நிற்பதுவோ....??? ஒன்றினைந்து அவன் உதைக்க உன்னால் இன்று முடியலயே.... ஓட்டு கேட்டு வீதியிலே ஓடி...ஓடி.... வந்தாயே.... ஓலத்தில் உன் மக்கள் அவர் ஓலத்தை துடைக்கலயே.... தனி தரப்பு …
-
- 1 reply
- 851 views
-
-
தமிழீழம் மலர்ந்து விடும்......!!! கோட்டை பகை கோட்டைக்குள்ளே கொடியேறும்..... புலி கொடியேற்றி ஆளும் ஒரு காலம் வரும்.... பலம் கொண்ட படையாகி பாய்ந்து வரும்.... பாரெல்லாம் மக்கள் ஆடி பாடும் காலம் வரும்.... பகை பிச்சை கேட்டு உலகெல்லாம் ஏறி ஓடும்.... பிணமாகி பகை உடல்கள் அங்கு விழும்... ஜந்தாண்டு முடிவிற்குள்ளே அவை நடக்கும்..... ஜந்தாயிரம் படைகள் அங்கு அழிநதொழியும்..;... அவலத்திலே தென்னிலங்கை மூழ்கியெழும்... ஆத்திரத்தில் அந்த மக்கள் பொங்கியெழும்... அதை ஆக்கிவித்த ஆட்சிகளை கலைத்தெறியும்... வேண்டமது யுத்தமென்று வேண்டியழும்.... தானக வந்துயதே தானே த…
-
- 11 replies
- 1.7k views
-
-
'மகிந்தா ஆட்சி கலைய போகுது....'' ஜயா மகிந்தா ஆட்சியது குலைய போகுது..... அந்தோ பார் அலையதுவும் ஏறப் போகுது.... அவலம் தந்த படைகள் எல்லாம் சிதறப் போகுது.... சீற்றம் கொண்ட புலியணிகள் சீறப் போகுது.... சிங்களவன் படை நிலைகள் உடையப் போகுது.... அவன் சிந்தனைகள் கூட அங்கு சிதறப் போகுது.... ஓலத்தில பகை அணிகள் ஓட போகுது.... ''அந்த திருமலையும் இன்றுடனே விடியப் போகுது.....'' எங்கள் மண்ணும் எங்கள் வசம் ஆகப் போகுது.... அந்த ஆட்டத்திலே மகிந்தா ஆட்சி கலைய போகுது.... - வன்னி மைந்தன் - :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 1 reply
- 933 views
-
-
உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
-
- 4 replies
- 1k views
-
-
மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...
-
- 4 replies
- 1.1k views
-
-
கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????
-
- 3 replies
- 1.3k views
-
-
தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....
-
- 11 replies
- 1.7k views
-
-
"சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க
-
- 28 replies
- 3.8k views
-
-
கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்
-
- 13 replies
- 1.7k views
-
-
அழியதா சுவடு.....( லெப்கேணல் நீலன் ) புலன்களை நீ திரட்டி எடுத்த புலனாய்வால்; புறமுதுகிட்டோடிய படைகள் ஏராளம்... ''சாவுக்கே சவாலிட்டு சாவுக்குல் சாவாய் வாழ்ந்தவன் நீ...'' வேகமாய் நீயெடுத்த வேவினால் போனது எத்தனை உயிர் சாவு... விலை உயர்ந்த வீர தளபதி உன்னை விலை போனதொன்று வீழ்த்தியதோ....??? சதிகள் புரிய முனைந்தவனின் சதிகள் தறிக்க நினைத்தாயே... தமிழர் சேனை காக்க முனைந்தாயே... இரக்கம் கெட்ட இரணியன் உன்னை இழிவாய் கொன்றானே.. நினைக்கையிலே ஜயோகோ நெஞ்சு வலிக்குதய்யா... சாதனைகள் படைத்திட்ட சரித்திர புதல்வனே நீ இன்னும் சாகமால் எமக்குள்.... - வன்னி மைந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு வல்லரசுகள் எதிராகும். நலமா?....... என்றும்மை நான் கேட்கப் போவதில்லை, நாடு விட்டுப் போனவர்கள்... அனைவரும் நலமென்று.. நானறிவேன் கண்ணாளா! - இதை கேடு கெட்ட பிழைப்பென்று பழித்தவரும் நீங்கள்தான்! கொண்ட கொள்கை மாறி - மனம் களிப்பவரும் நீங்கள்தான்! அன்று... இலட்சியங்கள் பேசி - எனை இலாவகமாகக் காதலித்து - இன்று அந்நிய புலத்தில்.... ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்? சாகச வீரனென்று - உம் சந்ததியே உமைச் சொல்லும்! ஆதலால்தானே - உம்மில் ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று சாகரம் கடந்து சென்று சா...தப்பும் கோழைத்தனம்!?....... நான்... ஆதி நாளில் பார்த்ததில்லை அது எப்படி வந்ததும்மில்? அன்பே! வாகை …
-
- 13 replies
- 3k views
-
-
ஒரு பெண்ணின் அழுகை...... மணம் முடிச்சு இன்னுடனே மாசம் மூணு ஆகி போச்சு.... ஆனாலும் மனசதிலே சங்கடமே சூழ்திருச்சு.... காலம் எல்லாம் கண்ணீரிலே வாழும்படி ஆகிருச்சு.... ஏறி வந்து ஆட்டம் போட்ட இன்பமெல்லாம் ஓடிருச்சு..... கட்டி வைச்ச கற்பனையும் கணப்பொழுதில் உடைஞ்சிருச்சு... நல்ல வாழ்வு தேடி நாம நாடு மாற முனைகயிலே... எவனோ வந்து என்னவனை எங்கோ கடத்தி போனாங்களே....??? என்ன ஏதோ தெரியவில்லை இன்னு வரை பதில் இல்லை.... காணவில்லை பட்டியலில் கணக்கு சேர்த்து போட்டாங்களே.... ஜயோ ராசா கண்ணு முன்னே அவலம் வந்து சூழ்ந்திருச்சே..... ஆண்டு பல வாழ வேண்டி ஆசை பட்ட …
-
- 6 replies
- 1.8k views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-