கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரே வயிற்றில் பிறந்தோம் ஒரே உடுப்பை போட்டோம் ஒரே கோப்பையில் சாப்பிட்டோம் ஒரே படுக்கையில் படுத்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ஒன்றாய் படித்தோம் எச்சில் கடி கடித்து ஏப்பம் விட்டு சாப்பிட்டோம் இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில் வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி வழி போக தொடங்கினோம் காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது தனி குடித்தனம் போனோம் அத்துடன் எல்லை சண்டையும் பக்கென்று வந்தது உன் மகளின் கலியாண கோலத்தை என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம் அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள் கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள் இன்று நீ யாரோ நான் யாரோ வீதியில் போகும் போது முகம் பாராத நாங்கள் கோட்டில் ப…
-
- 18 replies
- 2.8k views
-
-
அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? …
-
- 27 replies
- 3.7k views
-
-
நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள். எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே? சீர்தூக்கிப் பாருங்கள் சீரழிவாய்ப் போய்விட்ட சீதனம் செய்துவிட்ட சிறுமையினைப் பாரென்று சினந்திருக்கும் பெண்களுக்கு சந்தோச வாழ்க்கைக்கு சாபமாய்ப்…
-
- 29 replies
- 5.8k views
-
-
என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... புலர்ந்த பின் உன்னை கண்டு பசுமையை சுவாசித்து உயிர் வந்தது... வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க, விடியல் காற்று அறைந்தது... மேலும் வாழ ஓர் ஆசை, -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண-- நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ---- .. நீ எனக்கு மட்டும் சொந்தம் .... .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து செல்லமே! ... "உயிரே, அன்பே பொங்கிப் பாயும் நதியே, நீ கரைந்து-மோதி நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க வண்ண ஓவியமாய்,வந்து......... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா..... இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
-
- 1 reply
- 1.4k views
-
-
தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......
-
- 6 replies
- 3.8k views
-
-
எனது தேசம் -------------- நீல விசும்பின் ஓரத்தில் உறைந்திருக்கும் நீரினாலும் குளிர்விக்கமுடியா இரணங்கள் ஒற்றைக் குருவியின் ஓலமாய் மனது விம்மித் தணிகிறது நேற்றைகளைத் தீயில் கருக்கி நாளைகளின் தடத்தினை தொலைத்து விட்ட தேசம் இன்னுமொரு பொழுதில் பசி சுமந்து துயர் சுமந்து வாழ்வதற்கான முகாந்திரமின்றி வாழ்கின்றது என்றோ வரப்போகும் ஒளிக்கீற்றுக்காய் இன்றும் நாளையும் நாட்களை எண்ணியபடி... -எல்லாள மஹாராஜா-
-
- 13 replies
- 12.6k views
-
-
மறக்கலாமா நீ தமிழா உனக்கு இங்கிலீசு நன்றாகக் கதைக்கத் தெரிந்ந்து விட்டால் நீ என்ன வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..??? அல்லது திராவிடர் தோற்றம் தான் உன்னை விட்டுப் போய்விடுமா???? வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால் தம் மொழியில் ஹாய் சொல்லி சிரித்து விட்டு செல்கின்றனர் உனக்கு என்ன செருக்கா...??? தமிழனைக் கண்டு விட்டால் எதிரியைக் கண்டது போல் முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே..... தமிழனுடன் தமிழில் கதைக்க உனக்கு என்ன கேவலமா..???? நன்றி கெட்டவர்களே உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா???? வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது கதைக்காமல் போகின்றாய் நீயும் தமிழரைத் தாண்டிச் செல்லும் போது ஆங்கில…
-
- 12 replies
- 2.1k views
-
-
முழுமதி நிலவே வா வெண்மதிச் சரமே வா இயல் இசைக் கவியே வா சுந்தரத் தமிழே வா இனிமையின் குரலே நீ வா வானவில்லின் நிறமே வா தோகையின் அழகே வா தென்றலின் உணர்வே வா தென்மாங்கு பாடி நீயும் வா
-
- 8 replies
- 1.4k views
-
-
பகுத்தறிவு ------------------- கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் ! அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.! மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் ! பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் ! பசி பசியென்றழுதிருக்கமாட்டோம் ! பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் ! விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்! வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்! கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் ! காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் ! பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே.......... நிமிடத்துக்க…
-
- 8 replies
- 4.2k views
-
-
ரசிகா கவிதை ரசிக்க கூடியமாதிரி உள்ளது. இதைப்படித்ததும் கவிஞர் காசியானந்தனின் வரிகள் என் நினைவுக்கு வந்தன அன்னை தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா.. நீ என் அன்னை ...... அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் ஆ னா எழுதிய மண்ணல்லவா... தாயின் நினைவையும் தாய்நிலத்து நினைவையும் ஒன்றாகத் தந்நதமைக்கு நன்றிகள்
-
- 1 reply
- 784 views
-
-
கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி
-
- 6 replies
- 1.2k views
-
-
வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு பந்தம் பிடித்தவன் …
-
- 23 replies
- 2.6k views
-
-
கொக்கு பற பற............ ஊப்ஸ் ........... மக்கு நீ பற பற!! கூட்டில் - வாழும் ஜீவன் பெயர் கொண்டால். நீயும் குருவியா என்ன? பாம்புக்கும் ஒரு கூடு ....... புற்று என்ற பெயரிலிருக்குமே!! நாயுண்ணியாய்........... ஒட்டி கிட கிட.... வாழ நினைப்பவர் பக்கம் வராதே - வாலை............. ஆட்டிக்கொண்டே பிறர் பக்கம் திரி திரி! பெயரை பார் - பறவையாம்........... தங்காலையில் தமிழன் உறவை......... தங்கம் போல் நிறம் கொண்ட மலரை.. கட்டி தூக்கியபின்னும். கவலை எனக்கு இல்லையென்றே சொல்லி திரிகிறான்.. கருத்துதான் முக்கியம் .............. என்றே கிடக்கிறான்! சொந்த ஒளி இல்லாத - மதியே ............. என் வாழ்வென்று ................. இவன் ச…
-
- 12 replies
- 2.1k views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
கடவுளுக்கோர் கடிதம் எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் த…
-
- 34 replies
- 4.5k views
-
-
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம் .................................................. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்! போ.. போ....? நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
-
- 40 replies
- 8.6k views
-
-
நினைவுகள் சுமந்த வாழ்க்கை -------------------------- தென்னங் கீத்தின் ராகம் கேட்டு பன்னைப் பாயில் படுத்துக் கிடந்து முத்தத்து மணலில் கைகள் அளைந்து முழுவதும் முழுவதும் மூழ்கிக் கிடந்தோம் வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம் வண்டில் வகிரும் பாதை பார்த்து மாடுகள் இசைக்கும் சலங்கை கேட்டு ஓரமாய் ஒதுங்கும் ஒத்தைக் காகம் ஒவ்வொரு பொழுதும் பார்த்துக் கிடந்தோம் மாமரக் குயிலின் மதுரம் கேட்டு மணக்கும் மண்ணின் வாசம் நுகர்ந்து மனிதர் முகங்கள் பார்த்துச் சிரித்து மனதில் நிறைவை சுமந்து இருந்தோம் குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள் கோயில் கட்டித் தேர…
-
- 11 replies
- 5.1k views
-
-
உன்னை நினைத்து எழுதிப்பார்த்தேன்... வார்த்தை வரவில்லை இன்னும்- முயன்று பார்த்தேன்... முடிவாய் ஒரு வரி - அது என் தேவதை ! ஆம்..... அழகுக் கவிதை அது.... உன் பெயர்தானடி! .................................................
-
- 34 replies
- 5.2k views
-
-
தீபம் பத்தும் அறியாத பருவகாலவயது அது.. கார்மேகம் கண்ட மயிலாய் காதல்தீபம் ஏற்றினாள் அவள் கயல்விழிகளால் காலம் கடந்தபின்னும் பிரகாசமான ஒளியுடன் சுடர்விடுவது - என் இதயத்தில் மட்டும் அல்ல எங்கே.. நெஞ்சில் கைவைத்துக் கூறுங்கள் அந்தப் பருவகாலம் மயிலிறகாய் வருடிய நினைவுகளாக உங்கள் இதயத்தில் இல்லை என்று ??? நேசமுடன்.. -நித்தியா ஒலிவடிவில்..
-
- 4 replies
- 1.1k views
-
-
அந்த நாட்கள் அதிகாலைச் சூரியனும் அழகுநிலவும் அணைத்துக் கொண்ட நாட்கள் பசுமை தேடிய புற்களுக்கு பால் வடித்த கண்ணீர் மழையாகி உயிர் நனைத்த நாட்கள் வழி தொலைத்த பறவைகள் கூடிக்களிப்படைந்து வெறுமையான நாட்களுக்கு இதயப் பூக்களால் அர்ச்சனை புரிந்த நாட்கள் சிதறி உடைந்த கண்ணாடித் துண்டுகளிலே சிக்கிய விம்பங்கள் போலே அவன் வடித்த புன்னகைகளில் என் முகம் புதைந்துபோன நாட்கள் அவை சந்தித்தபோதேல்லாம் பேசமொழி மறந்து விழிமொழி பேசியதுண்டு அவ்வப்போது மெளனம் துணைக்கு வந்துபோனதுண்டு.. ஏழு ஜென்ம வாழ்க்கை அந்த நாட்களுடன் ஐக்கியமானதுண்டு.. திசைமாறும் பறவைகள்தான் எனினும் இதயத்தின் பரிபாசைகளில் இணைந்து…
-
- 1 reply
- 856 views
-
-
என்ன தான் என்னவோ....??? குரங்குகளின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளைப் போல் எம் மண்ணில் பூக்கப்பட்ட எம் இன இளஞ்சிட்டுக்கள் முதல் தள்ளாடும் முதியோர்கள் வரை இவ் விசர் பிடித்த சிங்கள மடையர்களின் அடாவடித் தனங்களால் நித்தம் நித்தம் தம்மைக் காப்பாற்று என்று மரணதேவதையிடம் இரங்கல் பிரார்த்தனை செய்து கொண்டும் அல்லல்பட்டும் அவஷ்த்தைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களே.... இதற்கு முற்றுப் புள்ளி என்ன தான் என்னவோ...????
-
- 1 reply
- 806 views
-
-
-
-
காற்று அலையில் நெருப்பான இரும்பு மனிதர்கள் தாய் மண் மீது மிகுந்த தாகம் கொண்ட தன் நலம் அற்றவர்கள் தமது சுக துக்கங்களை தமிழனுக்காக இழந்தவர்கள் தானைத்தலைவரின் சிந்தனையின் தலையாய உயிர் ஊற்றுக்கள் முகம் அறியாத உன்னத உயிர் சிற்பங்கள் தமிழனின் வாழ்வுக்காக தம் உயிரையே தந்த மாபெரும் முத்துக்கள் உரிய இலக்கினை உடைத்து எறியும் உயிர் ஆயுதங்கள் பகைவனின் மன பலத்தை உடைத்து எறியும் எரிமலைகள் தமிழனின் முதுகு எலும்பை நிமிரவைத்த சிற்பிகள் நாலடி மண் கூட தமக்காக வேண்டாத சுயநலம் அற்றவர்கள்
-
- 8 replies
- 1.4k views
-
-
உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…
-
- 21 replies
- 3.4k views
-