கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கிறுக்கு கிழவி! சென்ற ஆண்டு வந்த ஆண்டுடன்........ அஞ்சலோட்டம் புரிந்தது........ கூடி ஓடின காலம்....... பார்த்துப்பார்த்து எனை வளர்த்தவள்....... இப்போ படமாய் என்னெதிரே! முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்.. இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்....... அம்மா அடியிலிருந்து என்னை ..... காத்த காவலரண்! அடி வயிற்றில் சுமக்காவிடிலும்... பிரசவிக்காமாலே ...... பிரசவ வேதனை கொண்ட கடவுள் அவள்! தடக்கி தடக்கி நான் நடந்த நாளில் இன்னுமொரு தாயானவள்...... தடியூன்றி அவள் நடந்த நாளில் ...... என் சேயானவள்......... சொல்லாமல் ஓடிட்டாள் சுயநலகாரி! அழுக்கு படிந்த தாவணி ..... முடிச்சு அவிழ்ப்பாள்- ரகசியமாய் தெருவோரம் - மணி சத்தம் கே…
-
- 16 replies
- 3k views
-
-
-
- 15 replies
- 5.4k views
-
-
இன்னுமா போர் அபாயம்? இலங்கைத் தமிழன்! இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்... நண்பனாக அல்ல, நாடோடியாக! ஒவ்வொரு நாளும் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்... தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக! கச்சத் தீவருகே, கல்லெறி தூரத்திலே, தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! தனுஷ்கோடி கடற்பகுதியிலே, தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! இத்தனைக்குப் பிறகும், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, "இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக, ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன... வேதனையாக இருக்கிறது... போர் மூண்டு எத்தனையோ காலங்கள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
புலத்து இளைஞர்களே புலம்பெயர் மண் இளைஞர்களே ! சற்று செவிமடுப்பீர் சொந்த மண்ணை ஏன் பிரிந்தோம்? சொந்த மண்ணில் என்ன நடக்கிறது? உம் இதயத்தை நீங்கள் கேட்பதுண்டா? சொந்த மண்ணில் எம் உறவுகள் அழியும் செய்தி உம் காதில் விழுவதுண்டா? இங்கே குழு மோதலால் எம் இனத்தை நீங்கள் அழிப்பது உள்ளம் உறுத்தவில்லயா? ஒர் உயிரைப் பறிக்கும் உரிமையை உமக்கு கொடுத்தவர் யார்? ஒர் உயிரை ஒர் நொடியில் பறித்து விடுகிறீர் எம் தமிழ்த்தாயின் கதறல் உம் காதில் விழவில்லையா? சுற்றி இருக்கும் உறவுகளின் வேதனை உமக்கு வேடிக்கையா? பழிக்குப் பழி தீர்ப்பதில்த் தான் உம் வீரம் உணர்கிறீரா? இக்கோர உள்ளம் எப்படிப் பெற்றீர்? புலம் பெயர்ந்த மண்ணில் நடைபெறும் வன்முறைகளைக்…
-
- 14 replies
- 2.3k views
-
-
உன் கற்பனை -----------;;;;;? அறிவான புூவே ...நீ அன்புபடைத்த குணமே உனக்கு உன் பேச்சி; ஓர் இiசையே பல சோகங்கள் மனசில் கொண்டு வெளியில் நல்ல மனிதன் போல் நடமாட? உன் மனசி;ல் குடி கொண்டிருக்கும் ஓர் இளம் காற்று--? அந்த காற்றை தேடித் தேடி பாக்கிறாய் காணவில்;லை ? கனவில் வரும் கற்பனைகள் வளர--- கண்களில் நீர்கசிய கல்லான இதையத்தை கனிய வைத்து காற்ரேயே நினைத்த படி கலங்கி நிக்கின்றாய் நீ------? காற்றின் இசையை கேட்டு அழவில்லாத கற்பனைகளை வளர்த்து தல்லாடும்உன் நெஞ்சம் ஏமாத்துவாளா என்று ஓர் பயம் அவளின் இசைகளைஉன் மனதில் அளவில்லாமல் வளர்த்துக்கொண்டாய் --நீ அந்த காற்றின் இசைகளைக் கேட்டு வீனான கற்பனைகளைவளர்த்த நீ அவளை மறக்கவும் முடிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
யார் அவள்? என் சித்தம் பேதலிக்க வைத்து தன்னைக் காதலிக்க வைத்தாள். ஒவ்வோர் வினாடியும் எனக்குள் உயிர் மூச்சாய் இறங்கி ஓதும் நூல்களில் நர்த்தனம் ஆடினாள். கைகளில் எழுதுகோல் விளையாட கன்னலாய் வீழ்ந்து காவியம் இயற்றினாள். மனப்பைகளில் நிறைந்து வழிந்து - என்னை பாவலர் வரிசையில் 'பா" வரைய வைத்தாள். வாசிக்க வாசிக்க இனிமையானாள். - நான் புூசிக்கப் புூசிக்கப் புதுமையானாள். நேசிக்க வைத்து - என்னை யாசிக்க வைத்தாள். யாசிக்கும் வேளையிலும் - என் நாசியில் மூச்சானாள். - அவளைப் பேசிப் பேசி நான் பித்தாகும் வேளையிலும் ஆசையோடு வந்தென்னை அணைத்துத்தான் மகிழ்விப்பாள். யார் அவள்? அவள்தான் என்னுயிர்த் தமிழாள்!
-
- 14 replies
- 2.9k views
-
-
என்னதான் பெரிதாய் .. ஒப்புக்கு ஜனநாயகம் பேசு........ என்னமோ பெரிதாய் ஊரோடு ...... சண்டைக்கு வா.! என்னதான் பெரிதா... ஏதும் வேசம் போட்டாலும்....... தென்னை ஓலையில் வளர்த்திய...... உன் தங்கை உடல் பார்த்து அழுவாய்.....அழுதே ஆவாய்..! கன்னமது சுட்டு கொண்டு ஓடி ........ உன் கரங்களில் பட்டு தெறிக்கும்....... கண்ணீரில்....... எழுத்துக்கள் வாசி........! குளிர் காய நினைத்து...... வீட்டை எரித்தாய்....... குப்பி விளக்கை அணைத்துக்கொண்டு...... கூரைமீது படுத்தாய்..! பற்றி எரிகிறது பார் - இப்போ....... நீ சுமந்த பாவம் ........ உன்னை கொல்லும்......! நாம் நேசிக்கும் பூமி....... நாமிருக்கும் வரை- என்றும் உன்னை வெல்லும்! 8)
-
- 9 replies
- 1.8k views
-
-
இன்னும் ஈரமாய் இதயத்தில்....! பூவரசம் இலையில் பீப்பி ஊதி.. லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி.. வாழைநாரில் தாலி கட்டி.. மண்சோறில் விருந்துவைத்து... ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...! தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து... பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி... ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து... உரத்து உரத்து பாடினது நினைச்சாலே.. இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...! மாங்காய் சம்பல் போட்டதும்.. நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்.. பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து... குஞ்சு பொரித்திட்டுதா என்றே... நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து... இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..! தீ பெட்டியில் தொலைபேசி பேசி ம…
-
- 37 replies
- 5.4k views
-
-
புன்னகைத்து பாருங்கள் நட்புகள் கிடைக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும் நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும் உண்மையாய் உறுதியோடு உழைத்து பாருங்கள் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்... {படித்ததில் பிடித்தது}
-
- 1 reply
- 850 views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
நீயும்..! நானும்...! நிலாவொளியில் நீல கடலின் நீள் கரையில் நினைவுகள் மறந்து நீயும் நானும் பாலை வனத்தில் பற்றியெரியும் வெய்யிலில் வெற்றுக் கால்களுடன் நீயும் நானும் மாலை நேரத்து மஞ்சள் வானத்து மறையும் சூரிய அழகில் நீயும் நானும் எரிமலை வாசலில் எகிறி பாயும் எரிகுழம்பில் எமை மறந்து நீயும் நானும் வாச மலர் தோட்டத்தின் வண்ண மலர்களிடையே பாச பிணைப்பில் நீயும் நானும் இருபகை நாடுகளின் இடைவிடா யுத்தத்தின் இடை நடுவே நீயும் நானும் இந்த உலகத்தின் அத்தனை முரண்களிலும் இரு முரண்களான நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காத்திருப்போம் ஒன்று சேர..!
-
- 56 replies
- 6.8k views
-
-
காதலுக்குள்ளும் மனிதத்திற்குள்ளும் கரைந்துவிட்ட நேசம் பணத்திற்குள்ளும் பகட்டுக்குள்ளும் பனித்துளியாகி விட்ட பாசங்கள் உறவுகளை தேடி உரைத்திட மொழியின்றி படித்திட வரியின்றி கண்களில் கண்ணீர் கனவுகளும் கற்பனைகளும் காணமல் போய்விட்டது சோகமும் வேதனையும் கண்ணுக்குள் வந்து விட்டது தேற்றுவார் அன்றி தேடுவார் அன்றி இருக்கும் காலமும் வந்துவிட்டது தேடவேண்டும் உணர்வுகளை சல்லடை போட்டு அவர்களிடம் வழியும் கண்ணீரை துடைத்திட மனமின்றி வழி மேல் விழி வைத்து காத்திருந்த உறவுகள் நீலக்கண்ணீர் வடித்து நிஐம் என நிருபிப்பார்கள் வென்றிட வழியின்றி வெற்றியின் பாதையில் அநியாயங்கள் ஆனந்தமாய் அரவணைத்து ஆறுதல் சொல்பவர்கள் போல் ஆயிரம் முறை ஆப்பு வைக்க …
-
- 25 replies
- 4.1k views
-
-
என் நண்பா என் நண்பா என்ன பயம் உனக்கு அவளுடன் பழகிய நாற்களை நினைத்துப்பாரு அவளோ தன் காதலை தயங்காமல் உன்னிடம் சொல்லி விட்டாளா------- நீயோஅவளுக்கு உன் காதலை சொல்ல மறுக்கிறாய் உன் நினைவுகள் வீனான கற்பனை தான் அந்த கற்பனை நிரந்தரம்இல்லை நண்பா? நீயோ உன் கண்களை முடியபின் பலவிதமான கற்பனைகள் உன் மனதில் மகிழ்ச்சியை தருகின்றது ஆனால்நீயோ உன் கண்களை விழித்த பின் பலவிதமான ஏக்கத்தையும் பயத்தையும் சிந்தனைகளையும் தருகின்றது? உன்சொல்லாத காதல் நீயோ தொலை தூரம் அவளோ நெடுந்துரம் உன் காதலை அவளுக்கு சொல்லிய பின் அவள் உன்னை ஏமாத்தி விடுவாளோ என்று ஏக்கம் உனக்கு ? ஒவ்வொரு நாளும் அவளுக்கு என்னசொல்வது என்று உன்மனது துடித்துக் கொண்டே இருக்…
-
- 10 replies
- 1.9k views
-
-
சபதம் |||| ||||| சிங்கள விகாரையில் எரிந்தன விளக்குகள் தமிழர் வீடுகளில் அணைந்தன உயிர்கள் சமாதானம் உயிர்க்கும் என்றனர் மக்கள் எதிரியின் கரங்களில் கந்தகக் குழாய்கள் வேள்விக்குக் கிடைத்தோ பச்சிளம் பிஞ்சுகள் சயனத்தில் கருக்கினர் சிங்கள வெறியர்கள் குருதியில் எம்விதி எழுதத்திரண்டனர் தமிழர் ஈழமே தீர்வென பூண்டனர் சபதம்.
-
- 6 replies
- 2k views
-
-
அரசாங்கம் கொலை செய்தால் ........ சட்டம் ஒழுங்காம்......... உன் அப்பன் கைபிடித்து -நீ நடந்த ஒழுங்கையில் ... உன்னை சுட்டு யாரும் விழுத்தினால் .... துணிந்து .... உன் முகத்தில் ...... தீ மூட்டினால் ......... உன் அக்கா தங்கை கூட அது பற்றி பேசகூடாதாம்-பேசினால் சொல்கிறார்......... அது-யுத்த நிறுத்த மீறலாம்! புத்தூரில் - குடும்பத்தோடு உன்னை யாரும் எரித்தாலும் தவறில்லையாம்...! புத்த விகாரை பக்கம் வழி தவறி ஒரு தமிழன் -நீ போனாலும் அது பயங்கரவாதமாம்! தப்பி வந்தவரெல்லாம் ........ பிழைத்தோம் என்று - நினைத்தால் செத்துபோகவிடுவோம்...... நாம் தவழ்ந்த நிலத்தை! எத்தனை சந்ததி - இப்பிடி கிடந்தாலும்....... இருப்பது போ…
-
- 7 replies
- 1.4k views
-
-
என்னைபத்து மாதங்கள்கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே என்னை பாராட்டி சீராட்டி வழர்த்தாயே என்னை இரவில்பலகதைகள் சொல்லிஉறங்கவைப்பாயே நான் தூக்கம் விட்டு எழும்பும் வேளையில் என் அருகில் இருந்து அன்புடன் என் தலையை வாரி முத்தம் கொடுப்பாயே ---- நான் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தர் நீஅனைத்தையும் வேண்டித் தருவாயே பல ருசியான சமயல்களை செய்து ஊட்டிவிடுவாயே எனக்கு பாடங்கள் சொல்லித்தருவாயே உன் இடுபப்பில் சுமந்து கொண்டு பாட்டுப்பாடி என்னை மகிழ வைப்பாயே நீ எனக்குசின்ன வயதில் செய்த நினைவுகள் இப்போழுது நினைத்துப்பாக்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கின்ற இருந்தாலும் நீ என் பக்கத்தில் இல்லை என்றதும் கொஞ்சம் வருத்தம் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
முருங்கை ஏறும் வேதாளம் முத்துப் பல்லக்கில் ஏறிடுமா? காலப் புரவி காற்றாக கண்களை விட்டு நகர்கிறது. யுத்த நிறுத்த அமுலாக்கம் பித்தம் நிறைத்து நகைக்கிறது. முருங்கை ஏறும் வேதாளம் முத்துப்பல்லக்கில் ஏறிடுமா? எத்தனை சபைகள் சென்றாலும் புத்தக ஞானம் வென்றிடுமா? நடுவர் என்பவர் நலன்விரும்பி நட்பாய் நிற்போம் தலைவணங்கி அடிமை என்பது பொருளல்ல - எம் தேசியம் வெல்லும் திறன் சொல்ல. உலக வேதங்கள் எமக்குதவா.. ஊமையாக்கி எமை வாட்டும். உரிமை எவரும் தருவதில்லை. உன்னிப்பாக எண்ணிப்பார்! மெய்யதை வருத்திப் புண்பட்டோம். மேனியில் எத்தனை காயங்கள். பொய்யதுவாகிப் போய்விடுமோ? புூமிப்பந்தே கண்திறவாய்! வேளைகள் வந்தும் வெறுமையுற்றோம். வீரம் நிறைந்தும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
படத்தினைபெரிதாகப்பார்க்க இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? …
-
- 1 reply
- 2.2k views
-
-
நீ தூரக்கிழக்கு, நான் வடமேற்கு இடையில் கடல், வானம் அலை, மழை தீவுகள் , திட்டைகள் எல்லைகள், சட்டங்கள் கடவுசீட்டுகள், காவல்கள் இவை தாண்டியும் வந்துதான் - போகின்றன சில பறவைகள், ஒரு பறவையின் பலம் கூட எனக்கில்லாமல் போகுமா போனாலும்தான் என் வாழ்வு முழுமை பெறுமா
-
- 14 replies
- 2.3k views
-
-
படைத்தவன் வாயடைத்துச் சென்றான். படைத்தவன் புூமி வந்தான் மனிதர்களைப் பார்த்து ஒரு வரம் தருகிறேன்.. கேளுங்கள் என்றான்.... ஆனால் ஒரு நிபந்தனை என்றான் உங்கள் அனைவரின் எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள் நான் மட்டும் நல்லா இருக்க வேணும் படைத்தவன் வாயடைத்துச் சென்றான்.
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 17 replies
- 3.4k views
-
-
-
- 16 replies
- 2.9k views
-
-
சிரி இனி நீ! ஒன்றல்ல..... இரண்டல்ல..... ஓராயிரமும் அல்ல.... இருபது ஆயிரங்களை நெருங்கும் வீரர்கள் இழப்பு! அத்தனையும் மொத்தமாய் வெறும் அறிக்கையில் எச்சரிக்கை - என்றாகுமோ..... தவித்தது நீயும் -நானும் தான்! தவறு தவறு! பெரும் நெருப்பின் முகம் எங்கள் பிதா மகன் பிரபா! அவர்-எப்போ என்ன நினைப்பார் என்று யாரறிவார்! அலை மூசி வீசினால் கரையில் நிற்கவே பயப்பிடுவான் - தமிழன் ஆழ்கடலில் போர் செய்யும் வீரம் கூட - எப்பிடி ஒரு தமிழிச்சி பெற்றாள்? தலைவா-எல்லாம் உன்னால்! அமைதி என்று பேசி நின்று அடிப்பவனுக்கு ஆயுதம் கையில் தந்து -அடிமையாய் கிடப்பவனில் பிழை பிடிக்கும் உலகம் ! திரும்பும் திசை எங்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
தாய் மீது கொண்ட அன்பினால் தமிழ் வார்த்தைகள் என்னைக் கண்டு ஒழிந்திட துளியாய்க் கிடைத்த ஓர் துளியாம் தமிழ் எடுத்து கவிப்படையலுடன் கவியஞ்சலி செலுத்த வந்திருப்பது கோயிலும் சுனையும் கூடவே பனையும் தென்னையும் கடலோரக்காற்றிற்கு கவிதை பாடி நிற்கும் மேலல்வை பதி வாழ் வள்ளிப்பிள்ளை பெற்றெடுத்த பிள்ளை, உயிர் கொடுத்த தந்தையே உன் பணி ஓர் நாளில் உருக்கொடுத்த அன்னையே நீ என்னைக் கருவறையில் அமைதியாகத் து}ங்க வைத்து விளையும் காலம் வரும் வரை வரும் துன்பம் என்னும் வெய்யிலைத் தாங்கி உன் அன்பு என்னும் குடைக்குள் என்னைத் தாங்கி நிற்பாய் இயற்கையில் காலங்கள் மாறி மாறி வரலாம் இலத்திரனியல் நு}ற்றாண்டுகள் பல வந்தாலும் அணுவளவு கூட அன்னையே உன் அன்பு சிதைவதில்லை வ…
-
- 18 replies
- 2.8k views
-
-
கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? காதல் வந்தும் சொல்லாமல்........ அந்தப்பெண் தனியாக அமர்ந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் காரணமான விழிகளை அணைத்து, பாதங்கள் மட்டும் ஒருவராக .. நடந்துகொண்டு இருக்கிறாள்......... ஈர நினைவில்....... வானை நோக்கி........!! விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-