கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5]மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு....[/size]
-
- 7 replies
- 708 views
-
-
-
-
[size=3]பெயரற்ற யாத்ரீகன் நூலிலுள்ள சுவாரசியமான, சில ஜென் கவிதைகள்[/size] [size=3]1[/size] இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வசிக்க எண்ணியிருந்தேன். இருந்தும், இதோ என்னிடம் வருகிறது மரணம், வெறும் எண்பத்தைந்து வயதே நிரம்பிய குழந்தையிடம். [size=3]0[/size] [size=4]ஹனபுஸா இக்கீய் ஆண். ஜப்பான். ? – 1843[/size] [size=3]2[/size] எதிலும் நம்பிக்கையின்றி சும்மா அமர்ந்திருக்கிறேன், என் சுவாசத்தைக் கவனித்தவாறு. முப்பது வருடங்களுக்கு பிறகும் அது வெளியில் போகவும் உள்ளே வரவுமாக இருக்கிறது [size=3]0[/size] [size=4]ஆல்பர்ட் கோல்ஹோ ஆண். ஆமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டு[/size] [size=3]3[/size] எதிலும் முனைப்பின்றிச் சோ…
-
- 0 replies
- 6.8k views
-
-
[size=5]ஆசைப்படும் பட்டாம் பூச்சி கையில் இருக்கும் போதே ரசிக்கணும் -[/size][size=1] [size=5]அது பறந்த பின்பு வெறுமை மட்டும் உன் கையில் இருக்கும் ...[/size][/size] [size=1] [size=5] ...::: ராஜீவ் :::...[/size][/size]
-
- 3 replies
- 761 views
-
-
மார்பினிலே சாய்ந்திடலாம் மது மயக்கத்தை மிஞ்சிடலாம் பார்வையாலே பேசிடலாம் நாவினிக்கப் பரிமாறிடலாம் தேர் போலே ஜொலித்திடலாம் தெம்மாங்கும் பாடிடலாம் ஊர் போற்ற நடந்திடலாம் உற்றாரிடம் பேர் வாங்கிடலாம் பார் ஆளும் மன்னனுக்கும் பொறுப்பிலாத மனிதனுக்கும் மனதினிலே வாசம் கொள்ளும் மங்கையவள் மட்டுமே யார் கேட்பினும் பெருமையுடன் என்றென்றும் தயங்காமல் என்னவளென்றவன் சொல்லும் உண்மையான மனைவியாவாள்
-
- 3 replies
- 541 views
-
-
கண்ணால் நுழைந்து கருத்தினில் பதிந்து எண்ணத்தில் நிறைந்து உள்ளத்தில் உறைபவள்
-
- 5 replies
- 691 views
-
-
" இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …
-
- 15 replies
- 1.5k views
-
-
ஒரு சொல்.! புரோட்டாவும் நல்ல குருமாவும் முடித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்..! பல ரவுண்டுகளை மாத்தி மாற்றி அடித்தப் பிறகு என்ன தோன்றும் உங்களுக்கு.. அடப் போங்கையா..!.. உங்களின் பேச்சும் கருத்துக்களும் என்று இருக்கையில் எப்படி நினவு தப்பி வீட்டில் நிலை தடுமாறி குப்பற விழ முடிகிறது என்னால்..? வியப்பும் ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன.. மீள்சிறகு
-
- 0 replies
- 544 views
-
-
திபெத் மொழி பேசும் முத்துக்குமார் 43 வயது நிரம்பிய இந்தியாவில் கல்வி பயின்ற திபெத்திய கவிஞர் குத்ருப்...! சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வியாழக்கிழமை தீக்குளித்து இறந்து விட்டார் சுமார் 50 - க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் வியாழக்கிழமை இறந்தவர் கவிஞர் என்பது தான் மிகப் பெரும் துயரம்..! ஒரு படைப்பாளி..! திபெத்திய இலக்கியங்களை கற்று அறிந்தவர், அந்தோ பரிதாபம்..! என்றாலும் இந்தப் போட்டியிலும் எவரையும் விஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள்..! இந்த வளரும் திபெத்திய படைப்பாளிக்கு, கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல் இவை தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும்..! சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 683 views
-
-
[size=5]"வேணாம் மச்சான் வேணாம்...."[/size] கண்களில் தோன்றி இதயத்தில் ஊன்றி வாழ்வினில் முளைத்திடும் காதல்! தெருக்களைத் தாண்டி முகப் பருக்களை நோண்டி மகிழ்வினில் திளைத்திடும் காதல்! தனி நேரங்கள் வேண்டி தடைகளைத் தாண்டி இதயங்கள் சேர்த்திடும் காதல்! நினைக்கையில் இனித்திடும் பிரிகையில் கனத்திடும் உணர்வினைக் கொடுத்திடும் காதல்! இளவயதினில் வந்திடும் இனிமையைத் தந்திடும் இறுதியில் மறைந்திடும் காதல்! தனியாக அழுது நீ பனியாக உருகி நீ வலியாலே துவண்டு நீ வாழ்வினைத் தொலைப்பது முறையோ? போனால் போகட்டும் காதல்! அதற்காகத் தேவையா சாதல்!! வானம் போல வாழ்க்கை... வாழ்வதற்காய் விரிந்து கிடக்கு! சாதிக்க வேண்டியது பல இருக்கு! …
-
- 0 replies
- 693 views
-
-
-
மீளா துயரம்..! குட்ரப்... குத்ரப்... வாயில் நுழைய மறுக்கிறது என்ன பொருள் பாடுபொருள் என்ன மஞ்சள் நிறமே மஞ்சள் நிறத்திற்கு எதிராக, கறுப்பர்களுக்கு வினை புரியும் கருப்பர்கள் இனி என்ன செய்யப் போகின்றன வெள்ளைப் பேப்பரும் எழுது கோலும் வாழ்க்கை என்பது ஒரு கடமை அதை முடித்து விடு கருணையின் குறியீட்டில் பிழை ஏதும் நிகழ்ந்து விட்டதோ.. முத்துக்குமார் விஜய ராஜ் செங்கொடி வெப்ப சலனத்தின் இருள் எழட்டும் திபெத்திய பசும் புல்லும் சமண படுக்கைகளும் மலை முடுக்களில் சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 1.2k views
-
-
என்ற கனவு..! அதர்மம்..நீதி நியாயம் அநியாயம் ஞானம் அஞ்ஞானம்...! என்றாலும் அநியாயமும் அதர்மமும் கொஞ்சம் குறைவு..! என்ற அசிரீரி ஆழ்ந்த கனவில் மிதந்து பரவி கவிழ்ந்தது..! கூட்டம் கூட்டமாக வந்தார்கள் கணைகளை தொடுத்தார்கள்..! ஆச்சரியமும் வியப்பும் கூடு விட்டு கூடு பாயும் அதிசயம்..! ஓடத் தொடங்கியவனுக்கு எது நிரந்தர இடம்..? மீள்சிறகு
-
- 0 replies
- 547 views
-
-
கம்முனிகேசன் வெற்றி..! தந்தி ட்ரங்கால் தந்தி ஆபிஸ் டெலிபோன் போஸ்ட் கார்டு கடிதம் ஏர் மெயில் போஸ்ட் ஆபீஸ் செல்போன் சிம் கார்ட் நெட் வொர்க் டாப் அப் மெமரி கார்ட் சரியில்லை என்றாலும் சிம் கார்ட் சரியாக இருக்கிறது சார்ஜ் மட்டும் தான் குறைவாக உள்ளது ஒருவேளை பேட்டரி சரியில்லையோ செல்போன் ரிப்பேர் கடைகளில் குவியும் செல்போன் விரும்பிகள்..! இவ்வாறு எவ்வளவோ இருக்கிறது தமிழக மக்களுக்கு..? ஆனால் இரண்டு சிம் கார்டு போட்டு எப்படி பேசுவது என்ற கேள்விகளை புறந்தள்ளி நிரம்ப பின் தங்கி இருக்கிறோமோ என்ற அச்சம் வந்தவுடன் எப்பொழுது நாம் வீட்டுக்கு போய் ஒரு ஓவியமான நமது செல்போனை நோண்டுவது என்ற ஆர்வம்…
-
- 1 reply
- 584 views
-
-
[size=3] ஒரு அலாதியான அனுபவம்[/size] [size=3] பிம்பங்கள் அனைத்தும் மங்கலாக[/size][size=3] ஏதோ ஏதோ உருவ அசைபாடுகள்[/size][size=3] செவிப்பறைகளில் மட்டும்[/size][size=3] ஓயாத சப்தம்[/size] [size=3] கண்ணு கோளாறா[/size][size=3] காது கோளாறா[/size][size=3] ஆஸ்பத்ரிக்கு அழைத்து போக வேண்டும்[/size][size=3] அந்த வார்த்தைகள் மட்டும்[/size] [size=3] நீண்ட சப்தத்தின் இடையில்[/size][size=3] வெள்ளம் என பாய்ந்தது[/size][size=3] ஒரு பெரு மூச்சு[/size][size=3] தங்கு தடையில்லாமல் வருகிறது[/size] [size=3] கைகளையும் கால்களையும்[/size][size=3] ஒழுங்கு படுத்திக் கொண்டு[/size][size=3] இருப்போம் என்று இருக்கையில்[/size][size=3] படுக்கையின் விளிம்பில்[/siz…
-
- 1 reply
- 690 views
-
-
நாங்கள் நீங்கள் அவர்கள் இவர்கள் உறவினர்கள் மற்றவர்கள் போனவர்கள் வந்தவர்கள் அவர் இவர் நீ நான் ஏதாவது இருக்குமோ இந்த வார்த்தைகளில்..? சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 583 views
-
-
[size=3] செஞ்சோற்றுக் கடன் அல்ல..![/size] [size=3] பசி பஞ்சம்[/size][size=3] பிணி[/size][size=3] எங்கு இருக்கிறது..?[/size][size=3] எங்கும் எல்லாம் நிறைந்திருக்கிறது[/size] [size=3] அவரவர் ஊழ் வினையாகக் கூட இருக்கலாம்[/size][size=3] உன் குடும்பத்தினர்[/size][size=3] இல்லையேல் உன் முதாதையர்[/size][size=3] பழி பாவங்களில் பங்கெடுத்து இருக்கலாம்[/size] [size=3] இல்லையென்றால் நீ ஏன்[/size][size=3] கொடுந் துயரங்களை சுமக்க வேண்டும்[/size][size=3] சுகமான நித்திரையை புறந்தள்ள வேண்டும்[/size][size=3] தனிமை முழுதும் துக்க விசயங்களில்[/size] [size=3] நீண்டு கொண்டே போகின்றன[/size][size=3] விடை தெரியாத புதிர்களில்[/size][size=3] கிளி பேசும் மொழி …
-
- 0 replies
- 625 views
-
-
[size=4]இறைக்க இறைக்க கிணற்றில் மட்டுமல்ல கண்களிலும் நீர் வற்றிப்போயிற்று துயரப்பெருங்கடலில் அலைகளாய் உடல்களற்ற தலைகள் எழுந்தன உறைந்த குருதியை மாலையாக்கிய போலிச் சிங்கத்தின் பிடரி மயிர் சிலிர்த்தது எப்படி? நவீன உலகம் புலியை கொல்ல காட்டை எரித்தது அதனால் அனைத்தும் எரிந்தது போலிச் சிங்கத்தின் பிடரி மயிரும் சிலிர்த்தது [/size]
-
- 4 replies
- 740 views
-
-
[An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu'l'livaaykkaal bunker area.] ஐரோப்பாவில்.. ஒற்றைச் சிறுமியின் கடத்தல்... ஒரு தேசமே கண்ணீர் வடிக்கிறது..! இந்து சமுத்திரத்தில் ஒரு தேசமே கூட்டழிப்பு யார் கண்ணிலும் தண்ணீர் படாத துயரமங்கு..! மண்ணோடு மண்ணான மண்டை ஓடுகளும் விடுதலைக்காய் முழங்கித் தள்ளிய துப்பாக்கிகளும் பயங்கரவாதக் கூக்குரலில் அடிபட்டு.. கூடவே உக்கி உரமாகின்றன..! தூரத்தே இருந்து கூச்சலடித்த கூட்டமும் மனிதப் பிணங்களின் "ஸ்கோர்" எண்ணி செய்தி போட்ட ரொய்டர்களும் ஏ எவ் பிகளும் ஏ பிகளும் இன்னும் இன்னும் பிழைப்பை ஓட்டிய தீரர்களும் இன்று எதிரிக…
-
- 8 replies
- 1.7k views
-
-
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் …
-
- 3 replies
- 645 views
-
-
அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…
-
- 15 replies
- 1.2k views
-
-
[size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]
-
- 9 replies
- 1.1k views
-
-
புரியாத ஏக்கம்… என் கண்கள் அவனையே கூர்மையாக நோக்கின… வாட்ட சாட்டமான உடல் ஆடை அணியும் அழகாகத் தெரிந்தன. ஆனால்… அவனின் செயற்பாடு… அவன் போடும் சத்தம்… என்னைத் திடுக்கிட வைத்தது… இந்த வயதில்… இப்படியான தோற்றத்தில்… இப்படி ஒரு நிலையா! கடவுளே!!! ஊரில்… மருத்துவ வசதியிலாத இடத்தில்… பொருளாதர பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே… ஒரு சிலர்தான் இப்படியான நிலையில்… தனிமையிலே கதைப்பார்கள்… தனிமையிலே சிரிப்பார்கள்… தன்பாட்டிலேயே துள்ளிக் குதிப்பார்கள்.… ஆனால்… இங்கே …. எல்லா வசதிகளும் உள்ள மருத்துவ வசதி மிக்க நாட்டில்… அவர்களைப்போல்தான் இவர்களுமா?; ஒரு நேரத்தில் எத்தனை பேர்! சனத்தொகை வீதத்தில்… எ…
-
- 6 replies
- 1k views
-
-
கந்தகத்தூள் வாகனத்துடன் கலகலப்பாய் சென்றவரின் தூல உடம்பு சுக்கு நூறானது. விடுதலைத் தாகத்தால் வீறுகொண்டெழுந்து வெளியேறியது ஆன்மா காடு மேடெல்லாம் கடந்து களிப்புடன் மிதந்தது. எம்; மக்களைக் கொன்றவரை நான் கொன்றேன். என் இனம் விடுதலை பெறும் வரை நான் சாந்தியடையேன் என சபதம் எடுத்துச் சத்தியம் செய்தது. ராசபக்சாவின் இரத்தப் பிசாசுகள் முள்ளி வாய்க்காலை முற்றுக்கையிட்டு தமிழரின் இரத்தத்தால் தனக்குத் தானே அபிசேகம் செய்த வேளை பதபதைத்துத் தவித்து பற்பல ஆன்மாக்கள் கிழம்பின. எங்கள் தவிப்புப்போல், எங்களை அழித்தவன் தவிப்பான்; இதுதான் நியதி எனச் சாபம் போட்டு, துயிலும் இல்லத்தை சுற்றிய ஆன்மாக்களைக் கட்டித் தழுவி தங்கள் தவிப்பைக் கொ…
-
- 0 replies
- 594 views
-