கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....
-
- 4 replies
- 1.1k views
-
-
உள்ளாடையும் கிழிந்து அந்தரங்கம் காட்டுகிறாள் கோயில் பிச்சைக்காரி.. அவளையும் தாண்டிச்செல்கிறார்கள் சாமிக்கு பட்டுச் சேலை சாத்த... http://www.ilankathir.com/?p=2593
-
- 18 replies
- 1.8k views
-
-
உயிர் போகும் தருணம் நெருங்குகையிலும் உன் வரவுக்காய் காத்திருக்கிறேன். நீ மட்டும் வரவில்லை இறுதிவரை.... கழுகுகள் தான் வட்டமிடுகின்றன - என் பிணம் தின்னும் பேராசையில்.....
-
- 34 replies
- 2.1k views
-
-
சட்டெனத் தூறிய மழைத்துளியில், முற்றாக நனைந்து போனேன்...! சாயம் போனவன் போலாகி... - காயமாகி, அம்மணமாய் அழுது நின்றேன்! வழமையாய்... நான் பேசினால், பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...! ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய், எங்கேயோ தொலைந்து போனேன் ..! என் தாயின் முகம் மலர... மாற்று நாமம் சூடிக்கொண்டேன்! பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால், உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்! நெருப்பாய் இரு... எரிக்காதே! கனலாய் இரு ...கருக்காதே! கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில், அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் ! என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்! என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...
-
- 2 replies
- 1.2k views
-
-
உன்னைக் காட்டிலும் ரோஜா செடி பரவாயில்லை , நீ என்னை மறந்த போதிலும் எனக்காக தினம் தினம் மலர்தூவிக்கொண்டிருக்கிறது அந்த அன்பு ரோஜாச்செடி...
-
- 0 replies
- 668 views
-
-
நான்கு விழிகள் காணும் வலி காதல்.... நான்கு விழிகள் காணும் வழி வாழ்க்கை...
-
- 0 replies
- 449 views
-
-
மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695
-
- 2 replies
- 1.6k views
-
-
நான் நடந்த திசைகளின் பாதைகளில்... துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே, என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!! தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்! கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு... கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்... உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!! சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது, என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்! கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்! என் உடலினை... என் கால்களே சுமந்தாலும், மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்... கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!! …
-
- 15 replies
- 7.4k views
-
-
அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம், தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்! அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட, உண்மையான புரிதலென்று புரிந்தது! என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு... இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!! என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா? வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! எத்தனை நாளைக்கு நானிருப்பேன்... எனக்கே தெரியாது! ஆனால் உன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள், எல்லாமே இங்குதான் சீவிப்பார்கள்... சிந்தியுங்கள்! "தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!! உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட…
-
- 14 replies
- 1.5k views
-
-
இக்கவிதையை எழுதியவன் ஏற்கனவே காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... என்றொரு கதை மூலம் யாழுக்கு அறிமுகமான வசந்தன். அவனது இன்னொரு பதிவு இது யாழ் வாசகர்களுக்காக தருகிறேன். காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்... கதையைப் படிக்க இவ்விணைப்பில் அழுத்துங்கள் கனவுகள் வளர்ப்போம்.... வசந்தன் இப்பொழுதெல்லாம் பெயர் தெரியாத தெருக்களில் அகதியாய் மண்வாசனையைத் தேடும்போது தான் உயிர் கனக்கிறது. மரணத்தின் திசைநோக்கி – அன்று நடந்தவர்களுடன் நானும் கூட நடந்தேன்..... அது மிக மிக அருகில் என்னை வரவேற்றுக் காத்திருந்தது. ஆயினும் எல்லாவற்றிலிருந்தும் நொடிப்பொளுதில் தப்பியதாக ஒரு உணர்வு. பனியில் நனைந்து உடைகள் கனப்பதுபோல மனதும் ஈரமா…
-
- 3 replies
- 692 views
-
-
ஒரு நொடி அவள் சிரித்துப் பேசினால் நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது. ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நூறுநாள் என் ஆயுள் குறைகிறது...
-
- 13 replies
- 1.6k views
-
-
-
தீ... கவிதை - இளங்கவி உனக்கு தமிழனில் என்ன பகை சொல்.... பலகாலமாய் எங்களை ஓட ஓட விரட்டுகிறாயே...... சிங்களனைப் போல உனக்கும் எங்கள் இரத்தம் தான் பிடிக்குமா... அன்றி அவனுக்கு நீ அடிமையா..... தொட்டந் தொட்டமாய் கட்டங் கட்டமாய் எங்களைக் காவுகொண்டும் அடங்கலையா உன் பசி...... கருஞ்சாம்பல் புகையாகி காவியம் படைத்தவர் உன்னை வென்றவர்..... அவர் கதையை உன்னில் அட க்க எனக்கு விருப்பில்லை...... காரணம் அவர்கள் உனக்கு அஞ்சாதவர்..... ஆனால் நீ எரித்த அப்பாவி உயிர்களுக்கு நீ தானே பொறுப்பு..... முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி நீ எரித்த எம் மூச்சுக்களுக்கு நீ தானே பொறுப்பு.... அழக்கூட நேரமின்றி அந்த இடத்…
-
- 5 replies
- 2.6k views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 585 views
-
-
வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்!! அதன் வசந்தத்தை அனுபவிக்காத வரை!! அன்பைக் கண்டு பயந்தேன்!! அது என் இதயத்தில் இருள் போன்ற கருமையை நீக்கி, நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!! வெறுப்பைக் கண்டு பயந்தேன்!! அது அறியாமை என்று அறியும் வரை!! ஏளனங்களைக் கண்டு பயந்தேன்!! எனக்குள் சிரிக்கத் தெரியாதவரை!! தனிமையைக் கண்டு பயந்தேன்! நான் தனியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!! தோல்விகளை கண்டு பயந்தேன்!! தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று உணரும் வரை!! வெற்றிகளை கண்டு பயந்தேன்!! வெற்றியே வாழ்க்கையின் சந்தோஷம் என்று அறியும் வரை!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்தேன்!! அவர்களுக்கும் என்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
-
நீ ரசிக்கின்ற றோஜா பூ சில நாட்களே வாசம் வீசும் நானே என் இதய தோட்டத்தில் நீ சுவாசிக்கும் வரை வாசம் வீசும் பூவாக இருப்பேன்...
-
- 4 replies
- 1.7k views
-
-
தாயாகி.... தந்தையாகி...! இந்த ரோஜாப்பூ மலர்ந்ததைக்கண்டு சிரித்த முதல் தோட்டக்காரன் நீ! பெண்ணாய் நானும் பிறந்திடவே முகம் சுழித்த பேதையர்க்கு மத்தியிலே பூரிப்புடன் எனைத் தூக்கி முதன்முதலில் கொஞ்சியதும் நீதான்! அம்மாவின் அங்கலாய்ப்பும் இதுவேதான்...! பல்லு முளைத்து சிரிக்கையிலே தலையில் பயறு கொட்டி வாழ்த்தியதும் நீயே தான்! தத்தித் தாவி உருண்டு விழுந்து நடக்க முயலுகையில்... முன்னாடி வந்து நின்று என் விரல் பிடித்து நடை பழக்கியதும்நீ தான்! உன் தோளே என் அரியணையாய்..... எனை அதில் சுமந்துகொண்டு உலகை சுற்றிக் காட்டியதும் நீ... பயத்தோடு என் விரல்கள் உன் தலை மு…
-
- 2 replies
- 1.3k views
-
-
புதிய பதவிகள் எனக்கான வாழ்க்கைப் பயணத்தில் - ஓர் துணையாய் உனைத் தேர்ந்தெடுத்தாயிற்று! என் குடும்பமும் உன் உறவுகளும் புடைசூழ இணைந்தாயிற்று புதுப் பந்தத்தில்! ஆனால்... எனக்கான போராட்டங்களை இனி நான் தனியனாய் ..... பெண்ணாய் ..... - குடும்பத் தலைவியாய்..... மனைவியாய்...... மருமகளாய்.... உற்ற தாயாய்.... நானே நானாய் சந்தித்துக்கொள்ள வேண்டும்! சகித்துக்கொள்ள வேண்டும்!! எத்தனை கதா பாத்திரங்களை என்னுள் திணித்தாயிற்று?! இத்தனை காலமும் எனை வளர்த்து தம் செல்ல மகளாய் கொஞ்சிக் குலாவிய அம்மாவும் அப்பாவும் அந்நியமாய்.... இத்தனை பாரங்களையும் எனை தனியே சுமக்க வைத்து தம் பொறுப்பு முடிந்ததென்…
-
- 9 replies
- 1.2k views
-
-
மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட காலையில் கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...
-
- 7 replies
- 1.3k views
-
-
எனது மண் முற்றத்து பலாக்கனிகள் முகம்மலர்ந்து வரவேற்க செம்பாட்டான் மாங்கனிகள் அசைந் தசைந்து தலையாட்ட தோடை எலுமிச்சை கிணற்றடியில் சுற்றிநிற்க தொங்கும் துலாவிற்கு முள்முருங்கை தோள்கொடுக்க வாழைகள் கூடி நின்று வம்சத்தை நினைவு சொல்ல வாசலில் தென்னைமரம் வாவென்று எனை அழைக்க மந்திகள் கூட்டமாக மாமரத்தில் விளையாட கொம்புத் தேனீக்கள் கூட்டமாய் அதைக் கலைக்க கொய்யாவும் மாதுளையும் குலுங்கிக் கூத்தாட உழுந்தும் பயறும் வயலெங்கும் படர்ந்து நிற்க நெல்மூடை வாசலிலே விருந்தினரை வரவேற்க மாலைக் கதிரொளிகள் மரத்தோப்பினில் ஊடுருவ கொத்திப் புரட்டிய கோடரி மண்வெட்டி கொல்லைப் புறத்தங்கே. தோள்சாய்த்து ஓய்வெடுக்க நானும் அமைதியாய் என் குடிலில் த…
-
- 2 replies
- 609 views
-
-
,வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்? அன்னையே தாயே அழியா புகழ் கொண்ட அற்புதமே! ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில் ஈட்டி கொண்டு எழுத வைத்த ஈகைத்தாயே. வீரத்தின் விளை நிலமே விண்ணையும் விஞ்சிய வீரனை விடுதலைக்கு ஈன்றெடுத்த வேங்கைத்தாயே, பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை பார் போற்ற பிறப்பெடுத்து பாலூட்டி வளர்த்த பார்வதியே! பொக்கிஷமே புண்ணியமே காலத்தால் அழியாத காவலனாம் சூரியனை பெற்றெடுத்த கண்ணகியே,, சொர்ணத்தாயே,,, நீரையும் நெருப்பையும் நிழலாக்கி நிமிர்ந்து நின்ற நாயகியே, சோலை விருட்சம் அம்மா-நீ சொந்தம் நாங்கள் துயரம் கண்டாயோ-எம் நெஞ்சு கனக்க நிலையகன்று சென்றனையோ, காற்றானாய் உன் கண்மணிகள் கண்ணில் நீரை இறைத்து நி…
-
- 15 replies
- 1.1k views
-
-
என் காதலுக்கு உயிரோட்டம் தந்தவளே ஒற்றை வார்த்தைச் சொல்லில் கட்டிப் போட்ட வித்தகியே... இந்த நாளில் உன் வாய் திறந்து நீ உரைத்த தித்திக்கும் செந்தமிழே இன்னும் என் செவியில் உன் நினைவுகளை மீட்டும் தாரகை மந்திரமாய்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் என் சிறந்த தோழியாய் நீ.... நீ என் இனிப்புப் பெட்டகம் அன்பான வார்த்தைகளின் சொந்தக்காரி கண்களில் வைரக்கல் பதித்த காதல் ஓவியம் நீ உன் செவ்விதழ் என்ற காதல் ரோஜாவால் என் இதயத்தில் பூச்செண்டு முடித்து வைத்தாய். உன் மென் விரல்கள் என்னைத் தொடும் போதெல்லாம் என் இதயம் மெ…
-
- 1 reply
- 705 views
-