வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது. அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்! சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக உள்நாட்டுச் சண்டை நடக்கிறது. 1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல் Juvenal Ha…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிம்கிடுக் பெயர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் இயக்கிய படம். இடம் கொரியா. ஒரு வயோதிப பௌத்த துறவி, அவரிடம் ஒரு சிறுவன் குருகுல வாசம். ஆளில்லாத ஒரு காட்டுப்பகுதியில், ஆற்றின் நடுவில் மிதக்கும் வீடு. கதை நான்கு பருவங்களை சுற்றி நடக்கிறது. வசந்த காலம். சிறுவனுக்கு மகாயான தத்துவம், மூலிகை மருத்துவம் என பல விஷயங்களை போதிக்கிறார். சிறுவன் பிராணிகளை துன்புறுத்துகிறான். தவளை காலில் கல்லு கட்டுகிறான். மீன் செட்டையை சுற்றி நூலால் இறுக்கி கட்டுகிறான். பாம்பை கொடுமைப்படுத்துகிறான். தூர நின்று அவதானித்த துறவி, அன்றிரவு சிறுவன் நித்திரையில் இருக்கும் போது பாறாங்கல்லை அவன் காலில் கட்டிவிடுகிறார். காலையில் எழுந்த சிறுவன் அழுகிறான். அவனை அப்படியே போய், அந்த பிராணிகளை காப்பாற்றி…
-
- 3 replies
- 968 views
-
-
"வை திஸ் கொலவெறி" என்ற பாடல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற திரைப்படம் 3. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் திரைப்படம் . நியுயோர்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 833 views
-
-
இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்! இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை…
-
- 0 replies
- 705 views
-
-
இசைப்புயல் "ரகுமான் ஜென்டில்மன்" படத்தின் "சிக்கு புக்கு ரயிலே" பாடலுக்குப் பிறகு தனது மெட்டுப் போட்டுக் கொடுக்கும் விதத்தை மாற்றிக்கொண்டாராம்.. ஏன்..... வீடியோ செய்தியைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 1.1k views
-
-
மெளனகுரு, வழக்கு எண் வரிசையில் தமிழ்ச் சினிமாவுக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும் படம் இது. காதலை அனுபவித்தவர்கள் அதன் சந்தோஷமான பக்கங்களை மட்டுமே நினைவு கூர்வார்கள். அதே சமயம் அக்காதலுக்குப் பின்புலத்தில் நடந்த எதிர்ப்புகளையும், அதன் வீச்சுக்களையும் காதலுக்குச் சம்பந்தப்படாதவர்களே பல காலம் மனதில் வைத்திருப்பார்கள். அப்படியொரு இழப்பினைச் சந்தித்த முதியவர் சிந்தும் கண்ணீர்க் கதைதான் இது..! ஏதோ தூத்துக்குடி வட்டாரத்தையே சலித்து, துவைத்து தனது கேமிராவில் படமாக்கிய ஒரே காரணத்தினாலோ என்னவோ இப்படம் யதார்த்தவாத படமாகவோ, சிறந்த படமாகவோ எண்ணப்படவில்லை. இயக்கம்.. துளியும் யாரையும் நடிக்கவிடாமல் செய்து இயல்பாக இருப்பது போல நிறுத்தி வைத்து நம்மை கவர வைத்திருக்கிறாரே இயக்குநர்..! …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
காலம் காலமாக மனிதனை மனிதன் அடக்கி ஆளும் மரபும், குனிந்தே பழகிய மனிதனும் திடீரென்று ஒருநாள் முதுகெலும்பின் பயனறிந்து நிமிர்ந்து நிற்பதும் நடந்து கொண்டேதானிருக்கிறது. தற்போது சைனாவின் ஒரு பகுதியாக இருக்கும் தைவான் 1930களில் ஜப்பானின் அதிகாரப் பிடியில் இருந்த போது நடந்த “Wushe Incident” என்றழைக்கப்படும் பழங்குடியின மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் அப்பட்ட பதிப்பே "Warriors of the Rainbow: Seediq Bale" என்னும் இந்தத் திரைப்படம். தைவானின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், சென்ற ஆண்டின் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இறுதி வரை பங்கேற்று ஈரானின் 'A Seperation' படத்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. படத்தின…
-
- 0 replies
- 685 views
-
-
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 5வது ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷாருக்கான் மதுபோதையில் சண்டையிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் செல்வற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளமைக்கு ஹிந்தி சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 908 views
-
-
The old dreams were good dreams; they didn't work out, but glad I had them. #Robert from The Bridges of Madison County ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். “என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை” என்று தொடங்கும் அந்தக…
-
- 2 replies
- 879 views
-
-
ஆனந்த விகடனிலிருந்து 'காட்டூனிஸ்ட்' மற்றும் 'ஹாய் மதன்' புகழ் மதன் நீக்கப்படுள்ளதாகவும் இனிமேல் இந்தப் பகுதிகள் ஆனந்த விகடனில் இடம்பெறாது என்றும் ஆனந்த விகடன் அறிவித்துள்ளது. http://youtu.be/XBCTkIyNxu8
-
- 4 replies
- 1.6k views
-
-
’காதல் part -2?????? வழக்கு எண் 18/9 சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம். தினமும் தினசரிகளில் பார்க்கும் செய்திதான் படத்தின் கதை. செய்தியாய் பாதிக்காத அக்கதை படமாய் விரியும் போது பகீரென்கிறது. முகத்தில் ஆசிட் ஊத்தப்பட்டு ரணகளமாய் ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் வேலைக்கார பெண்ணிடமிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதே ஏரியாவில் ப்ளாட்பாரக்கடையில் வேலைப் பார்க்கும் வேலுவின் மீது அப்பெண்ணின் அம்மா சந்தேகப்பட, அவனைக் கூட்டி வந்து விசாரணை செய்கிறார்கள். இது ஒரு எபிசோட். இன்னொரு எபிசோட் அந்த பெண் வேலைப் பார்க்கும் வீட்டில் உள்ள பெ…
-
- 4 replies
- 2.6k views
-
-
நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார் Video News
-
- 0 replies
- 1.1k views
-
-
பதின்ம வயதுக்குப் பிறகு நிறைய படங்கள் பார்த்தாயிற்று. நிறைய என்றால் நிறைய…. அதில் பல படங்களைப் பார்த்ததும் இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று தோன்றும். நான் அனுபவித்ததை அப்படியே யாரிடமாவது சொல்லிவிட மாட்டோமாவென, இங்கே பதிவுகளில் கொட்டியிருக்கிறேன். முடிந்தவரை எனக்கு புரிந்த விஷயத்தை, என் அனுபவங்களை கூடுமானவரை எழுத்தில் கடத்தியுமிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். சில படங்கள் பசுமையாய் நினைவில் நின்றுகொண்டிருக்கும் (Children of Heaven மாதிரி), சில படங்கள் பெரிய அதிர்ச்சியை மனதில் விதைத்திருக்கும், அந்த அதிர்வுகள் குறைய பல வருடங்கள் பிடிக்கும் (Life is Beautiful மாதிரி), சில படங்கள் நெகிழ்ந்து அழ வைத்து தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன ( Pursuit of Happyness, Cast Awa…
-
- 1 reply
- 1.6k views
-
-
இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்கிறார் என்றாலே அந்தப் படம் குறித்து தனி மரியாதை வந்துவிடும். பாடல்கள் குறித்தும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது எழுபதுகளில் தொடங்கி தொன்னூறுகளின் இறுவரை தொடர்ந்தது. இடையில் சில வருடங்கள் ராஜா தமிழ்ப் படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்போது அவர் மகன் யுவன் ஷங்கர் ராஜா அந்தக் குறையைத் தீர்த்தார். இப்போது மீண்டும் முழு வீச்சில் களமிறங்கிவிட்டார் இசைஞானி. கவுதம் மேனனுடன் இணைந்து அவர் பணியாற்றும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை குறித்துதான் இன்றைக்கு இன்டஸ்ட்ரியில் பெரிய அளவு பேச்சு. இந்தப் படத்தின் இசைக்கு சோனி உள்ளிட்ட ஆடியோ கம்பெனிகள் இதுவரை இல்லாத அளவு ரூ 2 கோடிக்கு மேல் விலைபேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்…
-
- 0 replies
- 708 views
-
-
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம். தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர். அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர். ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார். அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்ட…
-
- 0 replies
- 693 views
-
-
எப்பொழுதுமே எங்குமே போர் என்ற ஒரு விஷயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?! யாருமே அநாதையாக ஆகமாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள். அதுமட்டுமா... உலகமே பச்சைபசேலென்று பசுமையாக இருக்கும். அதை குறிப்பதுதான் பன்னிரெண்டு வயது பீட்டர் என்ற சிறுவனின் பச்சை நிறத்திலான தலைமுடி. கதை ஒரு நீதிமன்றத்தில் இருந்து துவங்குகிறது. அங்கே அனாதை சிறுவன் பீட்டர் மொட்டை தலையுடன் பேசாமல் அமர்ந்து இருக்கிறான். அவன் யார்? அவனுடைய பெற்றோர்கள் யார்? என்று காவலர்கள் எத்தனை முறை விசாரித்தும் பீட்டர் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறான். கடைசியில் வேறொரு அதிகாரியிடம் தன்னுடைய கதையை கூறுகிறான். அது இரண்டாம் உலகப்போர் நடக்கும் காலகட்டம். தன் பெற்றோருடன் ஏதோ ஒரு பிறந்தநாளையும் கிறிஸ்துமஸ் …
-
- 0 replies
- 613 views
-
-
முதல் வார வெளியீட்டு சாதனை இருநூறு மில்லியன் ,இதற்கு முதல் கரி பொட்டர் இருந்து வந்தது.
-
- 0 replies
- 596 views
-
-
அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்படம்.. அமெரிக்க ராணவ நீதிமன்றத்தை தளமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1992 ல் வெளியானது. நேரமிருப்பவர்கள்/ ஆர்வம் உள்ளவர்களுக்காக இங்கே இணைகிறேன்.. In this military courtroom drama based on the play by Aaron Sorkin, Navy lawyer Lt. Daniel Kaffee (Tom Cruise) is assigned to defend two Marines, Pfc. Louden Downey (James Marshall) and Lance Cpl. Harold Dawson (Wolfgang Bodison), who are accused of the murder of fellow leatherneck Pfc. William Santiago (Michael de Lorenzo) at the U.S. Navy base at Guantanamo Bay, Cuba. Kaffee generally plea bargains for his clients rather than bring them to trial, which is probably why he was assi…
-
- 3 replies
- 1.6k views
-
-
கஹானி என்ற ஹிந்திப்படத்தின் போஸ்டரைப் பார்த்ததோடு சரி, இதுவும் பத்தோடு பதினொறாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் படம் வெளிவந்து ஒரு சில நாட்களுக்குள் பாரபட்சமில்லாமல் இந்தப் படம் குறித்த நேர்மையான விமர்சனங்கள் வந்த போது சிட்னியை விட்டே கஹானி போய்விட்டது. சரி ஆங்கில சப் டைட்டிலோடு வரும் தரமான பிரதிக்காகக் காத்திருப்போம் என்று நினைத்தபோது கடந்த வாரம் கிட்டிய கஹானி தான் இரண்டாவது காட்சி. ஒருமுறை நடிகர் மம்முட்டி விழா மேடை ஒன்றில் "ஹிந்திப்படங்கள் மட்டும் தான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, வேற்று மொழிகளும் சினிமா படைக்கின்றன அவற்றையும் உலகம் கண்டுகொள்ளவேண்டும்" என்ற ரீதியிலான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அவரின் ஆதங்கம் நியாயமானது என்றாலும் இப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
The way back ஆங்கில சினிமா சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட. Janusz (Jim Sturgess) சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள். மறுபு…
-
- 0 replies
- 592 views
-
-
" ரெட் டஸ்ட்" ட்ராய் எழுதி டாம் ஹூப்பர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ரஷ்ய படம்....சவுத் ஆப்பிரிக்காவில் 1986 ஆம் ஆண்டு ஹென்ரிக்ஸ் என்ற காவல் துறை அதிகாரியின் கீழ் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை நடத்த ட்ராக் என்ற குழு 2000 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா வருகிறது...காவல் துறையின் கொடுமைகளுக்குள்ளான அலெக்ஸ் பாண்டோ ( சிவேடேல் ) சார்பில் வாதாடுவதற்காக நியூ யார்க்கில் இருந்து வருகிறார் லாயர் சரா ( ஹிலாரி ஸ்வன்க் )... 1986 ஆம் ஆண்டு அலெக்ஸ் உடன் சேர்த்து விசாரிக்கப்பட்ட ஸ்டீவ் என்ன ஆனான் என்ற உண்மையை அறிவதற்காக அமைக்கப்பட்ட இந்த குழு ஹென்ரிக்ஸ் , அலெக்ஸ் இருவரையும் விசாரித்து கடைசியில் உண்மையை கண்டுபிடிப்பதே கதை... இன வெறியால் கருப்பு இன மனிதர்களை விசாரண…
-
- 0 replies
- 564 views
-
-
உலகில் எந்த நாட்டிலேனும் தெரு நாய்க்கு சிலை உள்ளதா?மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பரா என்னும் மாகானத்தில் டாம்பியர் என்னும் பாலைவனச் சிற்றூரில் , மேலே சொன்ன ரெட் டாக் என்னும் தெரு நாய்க்கு வெங்கலச்சிலையும், கல்வெட்டும், இணையத்தில் அதன் வரலாற்றை சொல்லும் வலைத்தளமும் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த ரெட் டாக்கிடம் என்ன தான் சிறப்பு?1970களில் வாழ்ந்த இந்த ரெட் டாக் தன்நம்பிக்கை மிகுதியாய் கொண்ட ஒரு தெருநாய்.அதற்கு எஜமானர்கள் என யாரும் கிடையாது,நிறைய நண்பர்கள் உண்டு, முழு உலகமே அதன் எல்லை. நம்மிடையே வாழும் தெருநாய்களில் காணமுடியாத வினோத குணமாக , அடிக்கடி ஊர்விட்டு ஊர் செல்லவும் ,எல்லா வகை வாகனங்களிலும் ஏறி பயணம் செய்யவும் மிகுந்த ஆசைகொண்ட நாய் இது.சாலையில் நடு…
-
- 0 replies
- 553 views
-
-
விரைவில் எனக்கு திருமணம்: ஸ்ரேயா நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகின்றேன், பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்கின்றனர் என நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். திருமணம் குறித்து ஸ்ரேயா அளித்த பேட்டியில், எல்லாம் அந்தந்த வயதில் நடக்க வேண்டும். பெற்றோருக்கும் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே நான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும். சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்த…
-
- 6 replies
- 977 views
-
-
2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள் திரையிடப்பட்டன. சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின் இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்குநர் கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே), மாளவி சிவகணேஷ…
-
- 1 reply
- 1k views
-