வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி! நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தது.இதுகுறித்து அவரது செய்தியாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், " அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.சமீபத்தில்கூட இதே போல், நடிகை கே.ஆர்.விஜயா உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சற்றுமுன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த கவுண்டமணி, " உடல் நலம் ஆரோக்கியமாக இர…
-
- 0 replies
- 498 views
-
-
திரை விமர்சனம்: கடுகு உரிய தருணம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் வாமனனின் கதைதான் ‘கடுகு’. புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவரு வதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிற ருக்கு நன்மைகள் செய்து வருகிறார். பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொ…
-
- 0 replies
- 255 views
-
-
http://eelavetham.com/movie-film-Avater+Tamil+good+quality-111994.html
-
- 0 replies
- 711 views
-
-
தமிழ் சினிமா கதைச் சுருக்கம் சு.தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவில் முதன்முறையாக சலனப்படம் ஒன்று மதராஸ் விக்டோரியா பப்ளிக் ஹாலில் காட்டப்பட்ட போது இது ஒரு அசுர சக்தியின் பிறப்பு என்று யாரும் அறிந்திருக்கவில்லை. சீக்கிரமே நகரின் சில இடங்களில் சாலையோரக் காட்சிகளாக படங்கள் காட்டப்பட்டன.. மெக்னீஷிய விளக்கு ஒளியில் - நகருக்கு மின்சாரம் இன்னும் வரவில்லை - கையால் சுழற்றப்பட்ட புரொஜக்டர் மூலம் ஐந்தாறு நிமிடங்கள் மட்டுமே ஓடிய துண்டுப்படங்கள், காட்சித்துணுக்குகள் போல, நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்பட்டன. இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாக வளரும் என்ற எதிர்பார்ப்பு அன்று இல்லையென்றாலும் முதல் சில ஆண்டுகளில் திரைப்படக்காட்சிகள் ஒரு அதிசயம் போல மக்களால் எதிர்கொள்ளப்பட்டன. படங்க…
-
- 0 replies
- 3.7k views
-
-
"மண்டேலா படம் எடுக்கப் போன ஊர் மாரி செல்வராஜின் ஊர் என்று பின்னர் தான் தெரிந்தது" - மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2022, 08:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினுக்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தே…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்! கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான். இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடைசியாக தேதி அறிவித்து விட்டார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஆடம்பரம் ஐஸ் - அபிஷேக் திருமணத்தில் இருக்காதாம். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்குகூட அழைப்பில்லையாம்! இந்தியாவில் இப்படியொரு திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் விதமாக ஐஸ் - அபிஷேக் திருமணத்தை நடத்த விரும்பினார் அமிதாப்பச்சன். உதய்ப்பூர் அரண்மனையும் இதற்கு ஏற்பாடானது. திடீரென்று அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மிக எளிமையாக திருமணத்தை நடத்துகிறார்கள். சொல்ல மறந்து விட்டோமே.... திருமண தேதி ஏப்ரல் 20! திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பு. ஷாருக்கான் உள்ளிட்ட எந்த பாலிவுட் ஸ்டார்களுக்க…
-
- 0 replies
- 634 views
-
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மேலுமொரு தமிழ்படம் திரையிடப்படுகிறது. பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்த படம் 'மொழி'. காது கேட்காத வாய் பேச முடியாத இளம் பெண்ணின் உலகை, அவளது தன்னம்பிக்கையை, சுய கெளரவத்தை இப்படத்தில் ரசிக்கும்படி வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ராதாமோகன். மெல்லிய நகைச்சுவை இழையோட ஒரு சீரியஸ படத்தை தரமுடியும என்பதற்கு இன்று உதாரணமாக விளங்குகிறது 'மொழி'. இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. கேன்ஸ் படவிழாவுக்கு ஏற்கனவே 'வெயில்' தேர்வாகியுள்ளது. 19-ம் தேதி திரையிடப்படும் 'வெயில்' திரைக்காட்சியில் பங்கேற்க அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கரும் இயக்குனர் வசந்தபாலனும் கேன்ஸ் செல்கின்றனர். இம்மாதம் 22-ம் தேதி கேன்ஸ் படவிழாவில் 'ம…
-
- 0 replies
- 976 views
-
-
”எனக்கு எல்லாமே நல்ல‘மாரி’ நடக்குது !” தியேட்டர் வட்டாரங்களில் 'மாரி’ ஜுரம் எகிறிக்கொண்டிருக்கும்போது, அந்த கெட்டப் கலைத்து, இயக்குநர் பிரபு சாலமன் படத்துக்காக வேற மாரி இருந்தார் தனுஷ். ''ஆக்ச்சுவலா 'மாரி’க்காக வேற கெட்டப்தான் ஐடியா. ஆனா, அதுக்குத் தேவைப்பட்ட தாடி, மீசையோடு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராக முடியலை. அதான் இருக்கிறதுல என்ன பண்ணலாம்னு யோசிச்சு இந்த கெட்டப் பிடிச்சோம். நாங்க எதிர்பார்த்ததைவிட சூப்பர் ஸ்பெஷலா அமைஞ்சிருச்சு. ஒரு புராஜெக்ட் நல்லா வரணும்னா, எல்லாமும் நல்லா அமையணும்னு சொல்வாங்க. அப்படி 'மாரி’க்கு எல்லாமே அமைஞ்சிருக்கு'' - நெஞ்சில் கைவைத்துச் சொல்கிறார் தனுஷ். அவரிடம் ஒரு தடதட பேட்டி... '' 'எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்ததாச் சொல்றாங்க சார்…
-
- 0 replies
- 807 views
-
-
ஆறாது சினம் - திரை விமர்சனம் குடும்பத்தை இழந்த வேதனையால் குடிநோயாளியாக மாறிவிட்டவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி). ஒரு தொடர் கொலை வழக்கைப் புலனாய்வு செய்யும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் மாவட்ட காவல்துறை அதிகாரி ராதாரவி. அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி ஒரு குடிகாரரிடம் ஏன் அந்த வழக்கை ஒப்படைத்தார்? கொலைகாரனை அருள்நிதி எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்தக் கொலை வழக்கு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா, இல்லையா என்பதுதான் ஆறாது சினம் படத்தின் கதை. அதிரடியான என்கவுன்ட்டர் காட்சியுடன் தொடங்கிறது படம். ஒரு ரவுடிக் கும்பலைத் தனது குழுவுடன் வேட்டையாடுகிறார் அருள்நிதி. காட்சிப்படுத்தலில் எந்தப் புத…
-
- 0 replies
- 404 views
-
-
அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன – சிறந்த படமாக ‘1917’ தேர்வு அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 77-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்சில் நடந்தது. இதில் சிறந்த திரைப்படமாக, முதலாவது உலகப்போரை விவரிக்கும் ‘1917’ என்ற ஹாலிவுட் படம் தேர்வானது. இந்த படத்தின் இயக்க…
-
- 0 replies
- 802 views
-
-
அடுத்த மாதத்திலிருந்து ரோபோ படத்தில் ரஜினியுடன் நடிப்பதாக கூறினார் ஐஸ்வர்யா ராய். சிவாஜி வெற்றிக்கு பிறகு ரஜினி&ஷங்கர் இணையும் படம் ரோபோ. இதில் ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது. குசேலன் படத்தில் நடிப்பதாக ரஜினி முடிவு செய்ததால் ரோபோ படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது குசேலன் திரைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் நேற்றுமுன் தினம் திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்த ரஜினி, இன்னும் 5 நாட்களில் ரோபோ படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறேன் என்றார். அவர் நடிக்கும் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது. இதுபற்றி ஐஸ்வர்யா கூறியதாவது: ‘ரோபோ’ படம் பற்றிய விவரத்தை ட…
-
- 0 replies
- 857 views
-
-
நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …
-
- 0 replies
- 356 views
-
-
ஜெயலலிதா அறிமுகமான படம் "வெண்ணிற ஆடை'. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதில் மூர்த்தியும், நிர்மலாவும் "வெண்ணிற ஆடை'யைத் தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொண்டனர். "காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து வெற்றி கண்ட ஸ்ரீதர், அடுத்த படத்தை முற்றிலும் மாறுபட்ட படமாகத் தரவிரும்பினார். . பி.ஆர்.பந்துலுவின் "சின்னத கொம்பே', கன்னடப்படத்தின் ரஷ்களைப் பார்த்த ஸ்ரீதர், அதில் நடித்த சின்னப் பெண் யார் என்று கேட்டார். அவர் நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா என்று கூறினார்கள். தான் எடுக்கவிருக்கும் "வெண்ணிற ஆடை'யின் நாயகி என அவரை முடிவு செய்துகொண்டு, சந்தியாவுக்குத் தகவல் தந்தார். அவரும் தன் மகளைக் கூட்டிக் கொண்டு "சித்…
-
- 0 replies
- 671 views
-
-
2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்! 2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... மியா ஜார்ஜ் தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர…
-
- 0 replies
- 776 views
-
-
-
திரை விமர்சனம்: வைகை எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மதுரைக் குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸின் ஏ.சி. வகுப் புப் பெட்டியில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொல் லப்படுகிறார்கள். இன்னொரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது. கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரயில்வே புலன் விசாரணை அதி காரியான ஆர்.கே.விடம் ஒப் படைக்கப்படுகிறது. கொலைகள் நடந்த பெட்டியில் பயணம் செய்த தீவிரவாதியைக் (ஆர்.கே. செல்வ மணி) கைதுசெய்து விசாரணை யைத் தொடங்கும் ஆர்.கே.வால் தனது குழுவின் உதவியுடன் குற்ற வாளியை நெருங்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. கொலை செய்யப்பட்ட பெண்களின் குடும்பப் பின்னணி, அவர்களைச் சுற்றி நிகழும் …
-
- 0 replies
- 425 views
-
-
நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகின்றது… நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூரை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இதற்காக . ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனிகபூரிடமும் அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் இந்த ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்-நடிகைகள் ஸ்ரீதேவி பற்றி பாராட்டி பேசும் கருத்துகளும் அவரது படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில…
-
- 0 replies
- 795 views
-
-
காதலர் மெஹதியை திருமணம் செய்து மும்பையில் செட்டிலான லைலா அம்மாவாகியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பேன் என்று ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக கூறியவர் லைலா. கொஞ்சநாள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் நடிப்பேன், அதுவும் கதாநாயகியாக மட்டும் என்றார். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. லைலாவை யாரும் கல்யாணத்திற்குப் பின் கதாநாயகியாக கற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கர்ப்பமான லைலாவுக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்து அம்மாவாக பிரமோஷன் ஆனதால் இன்னும் சில மாதங்களுக்கு வெள்ளித்திரை பக்கம் லைலாவை எதிர்பார்க்க வேண்டாம். சிரிப்பழகியின் ரசிகர்களுக்கு இது கவலை தரும் விஷயம்தான்
-
- 0 replies
- 820 views
-
-
கேரளாவின் காசர்கோடுக்கு வந்த கன்னட நடிகையை துரத்தியடித்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அந்த நடிகை ஜெயமாலா! அய்யப்பனை தொட்டேன் என்று கூறி ஆண்டவனையே ஆடம் டீஸிங் செய்த அதே ஜெயமாலா! சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் இளம் பெண்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகளும் வயதான பெண்களுமே அனுமதிக்கப்படுவர். மகளிர் மறைவுப் பிரதேசமான அய்யப்பன் சன்னிதியில், அய்யப்பன் சிலையை தொட்டு வணங்கியதாக பேட்டியளித்தார் ஜெயமாலா. இந்த சின்ன வெடி கேரள அரசியலில் யானை வெடியாக வெடித்தது. ஜெயமாலாவை கைது செய்ய போராட்டம் நடந்தது. தீட்டுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயமாலா சொன்ன அய்யப்பன் டச்சிங் வெறும் அல்வா என்பது விரைவில் வெட்ட வெளிச்சமானது. ஆனாலும், கேரள போலீஸ் ஏனோ அவர்மீது நடவடிக்கை எடுக்கவில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்திய…
-
- 0 replies
- 427 views
-
-
இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா. திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா. இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா. இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவி…
-
- 0 replies
- 951 views
-
-
கமலின் மருதநாயகம்தான் மர்மயோகி படக் கதை எனக் கூறப்படுகிறது.ஆங்கிலேயர்களு
-
- 0 replies
- 665 views
-
-
[size=2] சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய பவர் ஸ்டார் கைது என்ற பரபரப்பு செய்தி காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது.[/size] [size=2] சூப்பர் ஸ்டார் நிகராக தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இதுவரை நடித்த படம் நான்கு. ஆனால் இதுவரை வெளியானது 2 படங்கள் தான். ஆனால் தன்னை மிகப்பெரிய திரைஉலக ஜாம்பவான் போல் காட்டி கொள்வதில் வல்லவர். ஏதோ ஒன்றை எதிர்மறையாக செய்தவது விளம்பரம் தேடுபவர். அதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலம். [/size] [size=2] அரசியல் கட்சி ஒன்றினை பின்புலமாக கொண்டவர். தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். இப்படி இருக்க ஒருவரிடம் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…
-
- 0 replies
- 879 views
-
-
கமலுக்காக எப்பவோ சுஜாதா எழுதிய கதை.இப்போது ரஜினியுடன் ஷங்கருக்கு ராசியான எட்டாம் தேதி முதல் இயங்கத்தொடங்கிவிட்டான்'எந்திரன்.' இனி, இன்னும் இரண்டு வருடங்களுக்குஎகிறிக்கொண்டே இருக்கும் ரஜினி டெம்போ. ரஜினி -ஷங்கர் இருவருக்குமே எந்திரன், 'ட்ரீம் புராஜெக்ட்.' படத்தின் திரைக்கதை - வசனங்களை பக்காவாக எழுதிவிட்டார் சுஜாதா. இப்போது அந்தக்கதையில் சின்னச் சின்ன டெக்னிக்கல் அப்டேட்களுக்காக மட்டுமே 250 பேர் பம்பரமாகச் சுற்றிச்சுழல்கிறார்களாம். 'சுஜாதா சார் ஒருவருக்குப் பதிலா 250 பேர் தேவைப்படுறாங்க பாருங்க... சுஜாதா சார் வாஸ் ரியல்லிகிரேட்!' என ஆதங்கப்பட்டு இருக்கிறார் ஷங்கர். 2010 கோடை விடுமுறைக்கு ரிலீஸ் என்பது குறைந்தபட்சச் செயல்திட்டம். ஆனால், ரிலீஸ் தேதிக்கு நெருக்கடி கொ…
-
- 0 replies
- 812 views
-