வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
'வல்லவன்' சிம்புவின் காளை படம் முடிவுரும் தருவாயை நெருங்கியுள்ளது. வல்லவன் படத்தை முடித்த பின்னர் கொஞ்சம் கேப் விட்ட சிம்பு, அடுத்து காளை படத்தில் இறங்கினார். சிம்புவே நேரடியாக தனது ஜோடி மற்றும் பிற கலைஞர்களைத் தேர்வு செய்தார். சிம்புவுக்கு ஜோடியாக வேதிகாவும், ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நாயகியாக நிலாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். உயிர் படத்தில் கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி வேடத்தில் நடித்து அசத்திய சங்கீதாவும் படத்தில் இருக்கிறார். பழைய ஹீரோயின் சீமாவுக்கு படத்தில் வில்லி வேடம். கடந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அனைத்துக் கலைஞர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இப்போது படம் முடியும் நிலைக்கு …
-
- 0 replies
- 904 views
-
-
கிழக்கு அல்ஜீரியப் பகுதிகளில் ஆரெஸ் மலைப் பிரதேசத்தில் ஒரு விவசாயக் குடும்பம். அக்குடும்பத்தை திடீரென்று ஒரு துக்கம் தாக்குகிறது. அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டு இயல்பு வாழ்க்கைத் திரும்புகிறார்கள் என்பதை The Yellow House எனும் அல்ஜீரிய திரைப்படம் மிக அழகாக கூறியுள்ளது. உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயி மௌலாத் என்பவரின் மகன் அல்ஜீரிய ராணுவத்தில் பணியாற்றும்போது விபத்தில் இறந்துவிடுகிறான். விவசாயியும் தன் மகனின் சடலத்தை தேடிச் செல்கின்றார். அரசாங்க விதிமுறைகளுக்குட்பட்டு தன் மகனின் உடலை எடுத்துவருகிறார். உறவினர்கள் சூழ ஊருக்கு வெளியே உள்ள மலைப் பிரதேசத்தில் புதைக்கிறார். எல்லாச் சடங்குகளும் முறையாக நடந்து முடிகிறது. மகனின் இழப்பைத் தாங்கமுடியாமல் படுத்த ப…
-
- 0 replies
- 272 views
-
-
[size=4]சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.[/size] [size=4]சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.[/size] [size=4] [/size] [size=4] விஜய் பிறந்த நாள் படங்கள் [/size] [size=4]குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.[/size] [size=4]லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போ…
-
- 0 replies
- 2.9k views
-
-
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோ…
-
- 0 replies
- 157 views
-
-
இந்தி நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம் ; மும்பை மருத்துவமனையில் அனுமதி மும்பை: இந்தி திரை உலகின் பழம்பெரும் நடிகர் திலீப்குமார் மூச்சு திணறல் காரணமாக மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 93 வயதான திலீப்குமார் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவரது திரை சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது ( 2015 )ல் வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் பத்மபூஷன் விருது ( 1991 ) , தாதாசாகேப் பால்கே விருது ( 1994 ), பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது (1997 ), உள்ளிட்ட ஏராளமான விருதுக…
-
- 0 replies
- 481 views
-
-
2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind தற்போதைய தமிழ்த் திரையுலகில் விஜய் முதல் விக்ரம் பிரபு வரை திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலர் முன்னனி நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு என்ட்ரி கொடுத்த நடிகர்களின் வாரிசுகள் லிஸ்ட் இதோ... சித்து : பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் மகன். இந்த ஆண்டு வெளியான 'உயிரே உயிரே' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சித்தார்த் ( எ) சித்து. 'அலைபாயுதே' மாதவன், 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி முதல் படமே தாறுமாறா அமையனும்னா லவ் சப்ஜெக்ட் தான் சரியான ரூட்' என முடிவு செய்தவர்கள் அக்கட தேசத்தில் …
-
- 0 replies
- 379 views
-
-
திரை விமர்சனம்: காஸி நான்கு போர்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் போர் குறித்த படங்கள் மிகவும் குறைவு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ள ‘காஸி’ முக்கியத்துவம் பெறுகிறது. 1971-ம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய காலகட்டம். கிழக்கு பாகிஸ் தானில் நடக்கும் மக்கள் போராட்டத்தின் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான ஒடுக்குதலை நிகழ்த்துகிறது. எந்த நேரமும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல். இந்தச் சமயத்தில் இந்தியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் அதிரடித் தாக்குதல் நடத்தவிருக்கிறது என்னும் செய்தி கடலோரக் காவல் படைக்குக் கிடைக்கிறது. பாகிஸ்தானின் திட்டத்தைக் கண்டறிந்து அதை …
-
- 0 replies
- 299 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு; இசை: பிரேம்ஜி; ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி; இயக்கம்: ராதா மோகன். வெளியீடு: ஜீ 5 ஓடிடி. 'காற்றின் மொழி' படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் இது. ஏற்கனவே அவர் இயக்கிய 'பொம்மை' இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கடுத்த படமான 'மலேஷியா டு அம்னீஷியா'வை ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார்கள். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் ம…
-
- 0 replies
- 287 views
-
-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் உண்டு. எப்போது தனக்குத் தேவையோ அப்போது அவன் அந்த முகத்தைக் காட்டுவான். அப்படி வெளிப்பட்ட ஒருவனது இன்னொரு முகம் தான் 'மறுமுகம்' என்று படம்பற்றி அறிமுகம் தருகிறார் இயக்குநர் எஸ்.கமல். ''அன்போ, காதலோ, பாசமோ அடக்கி வைக்கப் படும் போது ஒரு கட்டத்தில் வெடித்து விடும் அபாயமுள்ளது. 'மறுமுகம்' நாயகன் பெற்றோரை இழந்தவன். கைநிறைய பணமுண்டு. ஆனால் மனம் நிறைய அன்பு கிடைக்காமல் ஏங்குகிறான். பாசத்துக்கு ஏங்கும் அவனுக்கு ஒரு காதல் வருகிறது. காதலி கிடைக்கிறாள். அவள்மேல் தீராத காதல். ஆனால் அவள் விலகிச் சென்று விடுவாளோ என எண்ணுகிறான். அளவற்ற காதல் வெடிக்கும் போது அச்சுறுத்தலாக- வன்முறையாக மாறுகிறது. அவன் மன நோயாளியோ என்று எண்ணவைக்கிறது. ஒன்றின் மீது அளவற்…
-
- 0 replies
- 305 views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நேற்று (நவ.22) முன்தினம் வெளியிட்டனர். டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
-
- 0 replies
- 761 views
-
-
சினிமா விமர்சனம்: Pacific Rim - Uprising இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் திரைப்படம் பசிபிக் ரிம்- அப்ரைசிங் நடிகர்கள் ஜான் பாயேகா, ஸ்காட் ஈஸ்ட்வுட், கெய்லி ஸ்பானி, பர்ன் கோர்மன், சார்லி டே கதை ஸ்டீவன் எஸ்.…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழனும் சினிமாவும் தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா? திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன். தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்ப…
-
- 0 replies
- 923 views
-
-
சின்னத்திரையில் கால் பதிக்கும் விஜய் ; அதிர்ச்சி தகவல்! மந்திரவாதியை வச்சு மத யானையை மடக்குன மாதிரி, அம்மாம் பெரிய ஸ்டாரான விஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்…. நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும். வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சி மூலம் துட்டு பார்த்த புத்திசாலிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும். இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்…
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்! தமிழக மக்களின் உணர்வுப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி ஒரு படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டேம்999 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை எடுத்திருப்பவர் ஒரு மலையாளி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகப் போகிறது. இந்தப் படத்தில் அணை உடைந்தால் என்னவாகும் என்பதை கிராபிக்ஸில் காட்டி மக்களைப் பீதிக்குள்ளாக்கியுள்ளனர். சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது …
-
- 0 replies
- 794 views
-
-
ஹாலிவுட் நடிகர் மரணம் Wednesday, 23 January, 2008 11:04 AM . நியூயார்க், ஜன. 23: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்தவர் ஹீத் லெட்ஜர். தனது 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கியவர். 16 வயதில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். தனது 19வது வயதில் "டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ' என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், "புரோக்பேக் மவுண்டெய்ன்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். கடைசியாக "தி டார்க் நைட்' என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்தி…
-
- 0 replies
- 946 views
-
-
டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்த் திரையில் கொடி கட்டிப் பறந்தவர் பி.பி.சிறிநிவாஸ். அவர் இன்றும் வாழ்கிறார். வயது 83. அவர் திரைக்குப் பாடிய ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலை விடுதலைப் புலிகள் தமது முதலாவது எழுச்சிப் பாடலாகப் பயன்படுத்தினார்கள். அப்புறம் இந்தப் பாடலை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுச் சொந்தமாக எழுச்சிப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை விடுதலைப் புலிகளின் சிறப்பான முத்திரையாக அமைகின்றன. பாடகர் சிறிநிவாசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வந்தாரை வரவேற்கும் சென்னைக்கு அவர் சிறு வயதில் வந்து விட்டார். தமிழ்ச் சினிமா கறுப்பு வெள்ளையாக இருந்த காலத்தில் பாடத் தொடங்கியவர் தான் சிறிநிவா…
-
- 0 replies
- 730 views
-
-
என் பார்வையில் தமிழ் சினிமா - வெங்கட் சாமிநாதன் தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டி யிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்…
-
- 0 replies
- 970 views
-
-
பவர் ஸ்டாருக்கு ஜோடியானார் - நடிகை நமீதா! டாக்டர் சீனிவாசனுக்கு திடீர் என்று நடிக்க ஆசை வந்து லத்திகா என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை ஓட வைக்க தானே ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினார். தனக்கு தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடினார். இந்த நிலையில் தான் சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அதன் மூலம் கிடைத்த அதிஷ்ட காத்து இன்னும் அடங்கவில்லை. கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல…
-
- 0 replies
- 402 views
-
-
திரை விமர்சனம்: மோ முன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும் (மைம் கோபி), ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அர…
-
- 0 replies
- 517 views
-
-
ஆங்கில பட ரசிகர்கள் முடிந்தால் போய் பார்க்கவும் .
-
- 0 replies
- 426 views
-
-
அண்மையில் வெளியாகிய 7ம் அறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இலங்கை தமிழர் பற்றிய பேச்சு ஒளிப்பேளை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 0 replies
- 1.9k views
-
-
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருவார். பன்முகத் திறமை கொண்ட இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவரிடம் ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேட்கும் போது, நடக்கும் போது நடக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இந்த…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம். பெரும் பொருட் செலவில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜாக்கி சானை வரவழைத்து ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தினர். இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கமல்ஹாசன் போட்டுள்ள பத்து வேடங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேடமும் ஒன்று. இதுதவிர 8 அடி உ…
-
- 0 replies
- 956 views
-
-
[size=5]ஈழத்தமிழ்ச் சினிமா என்ற ஒன்றே காலவோட்டத்தில் காணாமல் போய்விட்டதாக உணரப்படும் காலமிது.அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன, அவ்வாறான ஒருபடைப்பே''கலையும் நீயே காதலும் நீயே'' குறும்படம்.[/size] [size=5]இந்த குறும்படம் புலம்பெயர் வாழ் இளம் தம்பதியர் இடையேயான உணர்வுகள், புரிதல்கள், இலட்சியங்கள், சமூகம் தொடர்பான பார்வைகள் போன்றவற்றில் ஏற்படும் புரிந்துணர்வு பற்றிய படைப்பாகும், கதையின் நாயகனின் மனைவி மற்றும் கலை இலட்சியம் தொடர்பான பிரைச்சனை தொடர்பாக கதை நகர்கிறது. நாயகன் ஜே ஜே மற்றும் சிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.[/size] […
-
- 0 replies
- 635 views
-
-
தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. 1) தீம் மியூசிக் நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். 2) உலகம் ஒருவனுக்கா சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் தத்துவங்களை அள்ளி தரும் பாடலாக அமைந்துள்ளது. 3) வானம் பார்த்தேன் சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல் 4) வ…
-
- 0 replies
- 508 views
-