வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …
-
- 0 replies
- 1.1k views
-
-
தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் நீக்கமற போராட்டத்துடன் சூழலியல் சார்ந்த கனமான கருத்தை விதைக்கும் முயற்சிதான் 'ஓ2' படத்தின் ஒன்லைன். படம் வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நுரையீரல் பாதிப்பால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமல் தவிக்கும் தன் மகனை அழைத்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக கொச்சின் செல்லும் தாய் (நயன்தாரா). தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது அந்த ஆம்னி பேருந்து. வழியில் ஏற்படும் விபத்து…
-
- 0 replies
- 279 views
-
-
கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…
-
- 0 replies
- 705 views
-
-
பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல். தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம். அல்போன்ஸ் ஜோசப், …
-
- 0 replies
- 539 views
-
-
'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…
-
- 0 replies
- 1k views
-
-
பரத்பாலா இயக்கும் புதுப்படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக இப்படம் மூலம் இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.
-
- 0 replies
- 642 views
-
-
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் கால்ஷீட்டுக்கு முதலிடம் கொடுப்பது தமிழ் அல்லது தெலுங்குப் படங்களுக்குத்தான். ஆனால் தமிழில் அறிமுகமான பூஜா காந்திக்கு கன்னடப் படங்கள் மீதுதான் காதல். கொக்கி படத்தில் கரணின் காதலியாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இது சொந்தப் பெயர், தமிழில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தார். அந்தப் படம் கரணுக்கு கை கொடுத்த அளவுக்கு பூஜாவுக்கு அமையவில்லை. அப்போதுதான் கன்னடத்தில் முங்காரு மலே எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரே படத்தில் கன்னடத்தின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். இப்போது எண்ணுவதற்கு கை விரல்கள் போதாத அளவுக்கு கன்னடப் பட வாய்ப்புகள் குவிகின்றன அவருக்கு. இடையில் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டவே…
-
- 0 replies
- 933 views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.ஹெச் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் என பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிற வேலையில் தியேட்டர்களை புக் பண்ணிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம் படக்குழு. எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பல தியேட்டர்கள் திரையிட முன்வந்துள்ளன. கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் என பெருமளவிலான ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இன்றைய விளம்பரங்களில் கூட தியேட்டர்களின் பெயர்கள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென டிஜிபி அலுவலகம் வந்தார் கமல்ஹாசன். அங்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ட…
-
- 0 replies
- 334 views
-
-
விஷால் அணியிலிருந்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விஷால் தரப்பிலிருந்து போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி என அறிவிக்கப்பட்டதில் இருந்து விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், தயாரிப்பாளர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து விவாதம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டுள்ளதால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், சில நாட்களுக்கு …
-
- 0 replies
- 374 views
-
-
சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! [sunday, 2013-05-26 08:55:00] சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin� Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன. புலம்பெயர் தேசங்களில் கிடைக்கின்ற வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டும் ஈழத்தமிழ் இளங்கலைளுர்களின் முயற்சிகளில் ஒன்றாக இவைகள அமைந்துள்ளன. ஈழத்தமி…
-
- 0 replies
- 503 views
-
-
பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வெளியீடு? மின்னம்பலம்2022-01-08 ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்', படம், பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்த படங்கள் சங்கராந்தி விடுமுறை தினத்திற்காக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படமும் பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த மாதம் 13ஆம் தேதி…
-
- 0 replies
- 307 views
-
-
தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது. இது பெரியார் சொன்னதுபோல மலத்தில் அரிசி பொறுக்கும் முயற்சிதான். பத்து வருடங்களிற்கு ஒருமுறை அப்படி ஓர் அரிசி கிடைத்தும் விடுகிறது. அண்மையில் எனக…
-
- 0 replies
- 805 views
-
-
ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்? கடும் பசிகொண்ட கிழவனைப் போல, காலம் பலவற்றை உண்டு செரித்துவிடுகிறது. அவற்றில் அது அதிகமும் தின்றது கலைகளைத்தான். சினிமா துணி பேனர் வரையும் கலை அவற்றில் ஒன்று. சரியாக 17 வருடங்களுக்கு முன்புவரை திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் துணி பேனர்களில், அடர் வண்ண ஓவியங்களாகச் சிரித்தனர் நம் அபிமான நட்சத்திரங்கள். இந்தத் துணி பேனர்கள் காணாமல்போனதன் பின்னணியில், டிஜிட்டல் பிரிண்டிங் எனும் கள்வன் ஒளிந்திருக்கிறான். லாகவமாக நறுக்கப்பட்ட மர ஃபிளைவுட்களில் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வரையப்படும் கட்-அவுட்களில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் சூப்பர் ஸ்டார்களின் தயவில் …
-
- 0 replies
- 750 views
-
-
ஒரு ரிலாக்ஸ் மூடில் விஜயைச் சந்தித்தோம். ‘வேலாயுதம்’ படத்தில் வரும் அதிரடி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் இருந்தவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார். இனி விஜயின் மினி பேட்டி... ‘வேலாயுதம்’ மூலமாக மீண்டும் பரபர ஆக்ஷன்ல இறங்கிட்டீங்க போல.. “விஜய் ஃபார்முலான்னு சொல்வாங்களே அதில் மறுபடியும் நான் நடிக்கிற ஒரு சூப்பர் கமர்ஷியல் படம். ஹீரோ இருப்பார். வில்லன் இருக்கார். ஒண்ணுக்கு ரெண்டு ஹீரோயின்கள். ஆனால், இதுல வில்லனை ஹீரோ அடிச்சு துவம்சம் பண்ணணும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க. அதற்கான காரணம் புதுசு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘ஜெயம்’ ராஜான்னு நல்ல டீம். ராஜாவுக்கும் எனக்கும் நல்லா செட்டாகியிருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜா கூட சேர்ந்து படம் பண்ணணும்னு எல்லா ஹ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகை காயத்ரி ஜெயராமுக்கும், அவரது அந்தமான் காதலர் சமீத்துக்கும் வருகிற 13ம் தேதி அந்தமானில் கல்யாணம் நடைபெறுகிறது. ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே மாடலிங்கில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம். முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார். குறிப்பாக மஞ்சக் காட்டு மைனா பாட்டில் அவர் போட்ட ஆட்டமும், குலுங்கிய குலுக்கலும் காயத்ரிக்கு ரசிகர் வட்டத்தை சேர்த்து விட்டது. இந்தப் படத்தின் மூலம் பிரபு தேவாவின் காதல் வலையிலும் அவர் விழுந்ததாக கூறப்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் திடீரென பிரபு தேவா கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாகவும் பரபரப்பு எழுந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இளையராஜா - எஸ்.பி.பி. வி.ராம்ஜி Posted: 15 Mar, 2019 11:41 am அ+ அ- வி.ராம்ஜி ’இளையராஜா எப்போதுமே சம்திங் ஸ்பெஷல். அவர் மாதிரி இசையமைக்க ஆளே இல்லை. அவருக்கு எத்தனை முறை தேசிய விருதுகள் கொடுத்தாலும் தகும்’ என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இதில், ’ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்கிற ‘நினைவெல்லாம் நித்யா’ பாடலை சிறுவன் வெகு அழகாகப் பாடி அசத்தினான். அந்தப் பாடல் பாடி முடித்த போது, நெக்குருகி அழுதேவிட்டார் எஸ்.பி.பி. அப்போது எஸ்.பி.பி. பேசியதாவது:சில விஷயங்களை மனம் விட்ட…
-
- 0 replies
- 541 views
-
-
ஈழத்தில் தமிழ் திரைப்படம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது 'பனைமரக்காடு' முழுநீள தமிழ் திரைப்படம் .இப்படத்தை இயக்குனர் கேசவராஜ் இயக்கியிருக்கின்றார்.இத்திரைப்படத்தில் தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். முற்று முழுதாக யாழ்மண்ணில் படப்பிடிப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தில் ஜெகதீஸ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்சராவும் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. http://youtu.be/Gn76vl5Tayk பாடல்களை முகேஷ் மாணிக்கவிநாயகம் பாலாஜி ஆனந்த் இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அருமையான பாடலை உங்களுக்கு நாம் தருகின்றோம். இசையமைப்பாளர் விமல் ராஜாவின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது. புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின. இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘3’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொலை வெறி பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 6-ல் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர். http://123tamilcinema.com/2012031114403.html
-
- 0 replies
- 699 views
-
-
ஒரே படத்தில் ஜெயம் ரவி, ஜீவா! சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை) ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா.…
-
- 0 replies
- 830 views
-
-
பிரபலமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இருக்காது. அதிலும் ரஜினி படம் வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் அதிகமகவே கொண்டாடுவார்கள். தங்கள் விருப்பமான நடிகர்களை தெய்வமாகவும் அவர்களது படத்திற்கு அபிஷேகங்கள் செய்வதும் ரசிகர்களின் வாடிக்கையாகி விட்டது. இப்படி ரஜினி ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தது ரஜினிக்கு எதிராக திரும்பி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கன்னட தமிழ் கூட்டமைப்பின் தலைவர் மணிவண்ணன் பெங்களூர் மேயோ ஹால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், ரஜினி ரசிகர்கள் கட்-அவுட், பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்க…
-
- 0 replies
- 532 views
-
-
42 வயதில் மரணமடைந்த பாடிபில்டர்; சைவ உணவுகளை மட்டுமே எடுத்து உடற்கட்டமைப்பில் சாதித்தவர் பட மூலாதாரம், Varinder Ghuman/FB படக்குறிப்பு, வரிந்தர் குமன் அறுவைசிகிச்சைக்காக சென்றிருந்தார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார். அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள க…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
-
தமிழ் சினிமா 2016: 'தி இந்து' இணைய வாசகர்கள் தெரிவில் டாப் 5 படங்கள் 'தி இந்து' இணையதள வாசகர்களிடம் 2016-ன் சிறந்த படம் எது என்ற கேள்வியை முன்வைத்தோம். 'இந்து டாக்கீஸ்' குழுவின் திரை விமர்சனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்கள் பெற்று கவனம் ஈர்த்த 'அழகு குட்டி செல்லம்', 'கதகளி', 'இறுதிச்சுற்று', 'விசாரணை', 'வில் அம்பு', 'சேதுபதி', 'பிச்சைக்காரன்', 'காதலும் கடந்து போகும்', 'ஆறாது சினம்', 'தோழா', 'மனிதன்', ' 24', 'கபாலி', 'ஜோக்கர்','குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'காஷ்மோரா', 'இறைவி', 'உறியடி', 'அப்பா' ஆகிய 20 படங்களின் பட்டியலையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். வாசகர்களின் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகளுடன், அ…
-
- 0 replies
- 304 views
-