வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
உலகளவில் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் ஐஸ்வர்யாராய்க்கும் இடம் 2/6/2008 9:49:15 PM வீரகேசரி இணையம் - உலக அளவில் எல்லோராலும் அதிகமாக விரும்பப்படும் 99 பெண்களின் பெயர்ப்பட்டியலில் முன்னாள் உலக அழகியும் இந்திய நடிகையுமான ஐஸ்வர்யாராய் 27 அவது இடத்தைப் பிடித்துள்ளார். உலக அளவில் அதிகம் விரும்பப்படும் பெண்கள் 99 பேர் பற்றிய ஆஸ்க்மென் டொட்காம் என்ற இணையத்தளம் கருத்து கணிப்பு நடத்தியது. அனைத்து நாடுகளில் உள்ளவர்களும் இதில் பங்கேற்று வாக்களித்தனர். இசை விளையாட்டு பொழுதுபோக்கு பேஷன் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் என்ற அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டது. திறமை சிரிப்பு புத்திகூர்மை உள்ளிட்ட பல்வேறு குணாதிசயங்களின் படி அழகான பெண…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேவயானிக்கு பெண்குழந்தை: பிரிந்திருந்த பெற்றோர் கூடினர்! காதல் கோட்டை கமலியாக திரையுலகில் நுழைந்து, கோலங்கள் அபிநயாவாக தாய்மார்களின் நெஞ்சங்களில் குடிபுகுந்தவர் தேவயானி. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இனியா என்ற குழந்தைக்கு தாயான தேவயானி, மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் இக்குழந்தை பிறந்தது. மனைவியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார் ராஜகுமாரன். குழந்தை பிறந்த மகிழ்ச்சியைவிட, அதிக மகிழ்ச்சி என்னவென்றால், திருமணம் ஆன நாளில் இருந்து தேவயானியை பிரிந்திருந்த அவரது பெற்றோர்கள் ஜெயதேவும், லட்சுமியும் தேவயானியை…
-
- 7 replies
- 2.5k views
-
-
கலையை ஒரு நதியென உருவகித்துக் கொண்டால் மேற்பரப்பில் நீந்துகின்ற கலைஞர்களும் உள்ளனர். அதேவேளை அடியாழத்தில் சுழித்தோடும் கலைஞர்களும் உள்ளனர். இந்த ஆழச் சுழித்தோடும் கலைஞர்களின் வரிசையில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஏனெனில் மனிதாபிமானம், உண்மை, நீதி என்பவற்றில் எப்போதுமே நான் பற்றுறுதி கொண்டுள்ளேன்". - இயக்குனர் பிரசன்ன விதானகே. இலங்கையில் போர் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. அரச படைகளுக்கும், புலிகளுக்கும் நடக்கும் மோதலல் சராசரி மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிர்கதியாக்கப்படுள்ளனர். அதிகார மையங்களின் ர9த்தமோகத்தின் முதல் பலி அப்பாவிகளின் வாழ்க்கை என்பது இலங்கையில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. மகிந்த ராஜப…
-
- 0 replies
- 889 views
-
-
பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்த தன் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. மதுரையில் சாதாரண நாடகக் கம்பெனி நடத்தும் ஆசாமி அழகப்பன் (வடிவேலு). தியாகு, மனோபாலா, அல்வா வாசு ஆகியோர் அவரது நண்பர்கள். சுமித்ரா அவருடைய தாயார். ஒரு நாள் தேவலோக சுந்தரிகளான ஊர்வசி, ரம்பை, திலோத்தமை ஆகியோர் பூமிக்கு வருகிறார்கள். சேர்ந்து வந்த மூவரில் இருவர் மட்டும் குறித்த நேரத்தில் இந்திரனுக்கு அட்டன்டென்ஸ் கொடுத்துவிட, ரம்பை மட்டும் பூலோக அழகில் மயங்கி தாமதமாகச் செல்கிறாள். கோபமான இந்திரன் சாபத்தால் ரம்பையை பூமியிலேயே கற்சிலை ஆக்கிவிடுகிறான். ஒரு நாள் அந்த சிலைக்கு மாலை போடுகிறான் அழகப்பன். அவனுடைய ஜாதகத்தில் இரட்டைப் பெண்டாட்டி என்று தோஷம் இருக…
-
- 0 replies
- 1.4k views
-
-
ந(ர)கர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றி லிங்குசாமியின் பங்குக்கு எடுத்திருக்கும் படம். கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் நாயகன் பாணியிலான தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகன் விக்ரம். பிரகாஷ்ராஜின் ஆட்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விக்ரமின் புஜபலமும் புத்திசாலித்தனமும் முந்திக்கொண்டு முடிக்கிறது. என்ன வேணும் உனக்கு? நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷூக்கு பயப்படாத விக்ரம், அடியாளில் ஒருவராய் சேர்த்துக்கொள்ளப்பட ஆரம்பமாகிறது உயிர் வேட்டை. போலீஸ் தூரத்தலில் ஒரு வீட்டின் ஓட்டை பிய்த்துக்கொண்டு குதிக்கும் விக்ரம், த்ரிஷாவின் மீது விழுந்து புரள, இதுவரை பார்த்திராத ஹீரோயின் சந்திப்பையும் …
-
- 9 replies
- 2.8k views
-
-
காதல் கடிதம் - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்- நோர்வேயில் 02.02.2008 Soria Moria Kino, Oslo, Norway 02.02.2008 KL.21.00 உலகெங்கிலும் வாழுகின்ற எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடல் முதல் உயிர் வரை வலிகள் சுமந்த வண்ணமே வாழ்ந்து வருகின்றோம்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் உங்களுக்கு இணையத்தின் வாயிலாக என் இதயத்தின் பொங்கல் வாழ்த்துகள். காதல் கடிதம் இறுவட்டின் மூலம் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான ஓர் தமிழனின் உள்ளத்தில் இருந்து எழுகின்ற குரல். எங்கள் கலைகளின் வளர்ச்சி தொடர்பாகவும், எங்களுடைய காதல் கடிதம் திரைப்படம் சார்பாகவும் உங்களோடு மனம் விட்டுப் பேசவே இந்த ம…
-
- 7 replies
- 2k views
-
-
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர். ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார். ஆனால் ஏற்கனவே படையப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம். விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேலும் புதிய படங்கள்கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது. கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது. மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…
-
- 0 replies
- 805 views
-
-
ஷாருக்கான் நடித்து சூப்பர்ஹிட் படமாக பேசப்பட்ட `ஓம் சாந்தி ஓம்' படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வற்கு பலத்த போட்டி இருக்கிறது. தமிழில் ரீ-மேக் பண்ணுகிற ஐடியாவில் மாதவன், ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ரைட்சுக்காக அவர் கேட்ட தொகையில் மாதவன் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை. ஆனாலும் படத்தை வாங்கி தமிழில் எடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் மாதவன். காரணம் சமீபத்தில் அவர் நடித்த நேரடிப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது ரீ-மேக் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மாதவன் தீர்மானித்திருப்பதுதானாம்.
-
- 0 replies
- 887 views
-
-
மேலும் புதிய படங்கள்செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா. குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர். முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர். இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார். கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும…
-
- 4 replies
- 2.1k views
-
-
நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்கள…
-
- 7 replies
- 5.7k views
-
-
தலை எழுத்து இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா? **** வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெ…
-
- 0 replies
- 1k views
-
-
அவரும் அப்படித்தானா ? தமிழ் திரைப்பட இயக்குனர் அண்மையில் வெளியிட்ட எவனோ ஒருவன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல். படத்தின் பெயர் தெரியவில்லை. நேற்று தற்செயலாக நோர்வேஜிய தொலைக்காட்சியை பார்த்தபோது அதில் ஒரு திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். மிகவும் பழைய படம். அதைப்பார்க்கும்போது என்னால் நம்பமுடியவில்லi. மிகவும் பிடித்த ஒரு இயக்குனர் இப்படியா? கதைகளில் காட்சிகளில் மாற்றமில்லாமல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. ஏன்தான் இந்த நிலையோ தெரியவில்லை.
-
- 1 reply
- 937 views
-
-
திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…
-
- 4 replies
- 1.9k views
-
-
தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…
-
- 1 reply
- 1.1k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபா குகைக்குச் செல்கிறாராம். ரஜினிகாந்த் அதிக விருப்பத்துடன் செல்லக் கூடிய இடம் இமயமலை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக இமயமலைக்குச் சென்று விடுவார் ரஜினி. அங்குள்ள பாபா குகையில் உள்ள பாபா கோவிலில் வழிபடுவதை பெரும் நிம்மதியான விஷயமாக ரஜினி கருதுகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாபா கோவிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு அவர் பாபா குகையில்தான் தங்கியிருப்பாராம். பிப்ரவரி முதல் வாரத்தில்தான் அவர் சென்னைக்குத் திரும்பவுள்ளார். வந்தவுடன் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த்தின் செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், புதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…
-
- 0 replies
- 4k views
-
-
ஹாலிவுட் நடிகர் மரணம் Wednesday, 23 January, 2008 11:04 AM . நியூயார்க், ஜன. 23: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்தவர் ஹீத் லெட்ஜர். தனது 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கியவர். 16 வயதில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். தனது 19வது வயதில் "டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ' என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், "புரோக்பேக் மவுண்டெய்ன்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். கடைசியாக "தி டார்க் நைட்' என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்தி…
-
- 0 replies
- 950 views
-
-
சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம். சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம். இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது. சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வல்லவனுக்குப் பிறகு வரும்…
-
- 0 replies
- 817 views
-
-
மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தா…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …
-
- 6 replies
- 2.5k views
-
-
சத்யராஜ், மாதவன், த்ரிஷா ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒன்று சேர்த்தது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ்! டூயட் மூவிசுடன், மோசர் பேர், மிர்ச்சி மூவிஸ் இணைந்து தயாரிக்கும் 'வெள்ளித்திரை' ஓர் இளம் இயக்குனரை பற்றியது. இதில் பிரபல நடிகர்கள் நடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. நடிகை த்ரிஷாவிடம் ப்ருதிவிராஜ் கதை கூறுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியில் த்ரிஷா நடிகை த்ரிஷாவாகவே நடித்துள்ளார். அதேபோல் சத்யராஜ், மாதவன், கார்த்தி ஆகியோர் ஒரு காட்சியில் நடிகர்களாகவே படத்தில் தோன்றுகின்றனர். இந்தக்காட்சி சமீபத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இதனை ஷூட் செய்த இயக்குனர் விஜி, மலையாள 'உயனாறு தாரம்' படத்தை அப்படியே ரீ-மேக் செ…
-
- 0 replies
- 953 views
-