வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
எம்.ஜி.ஆரின் அரசியல் மாற்றத்தின் போது வெளியான திரைப்படம் மீண்டும் ரிலீஸ் அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தற்போது புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீசாக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது. இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின்…
-
- 0 replies
- 697 views
-
-
பேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்.. நா.முத்துக்குமார்! #NaMuthukumar தன் வசீகரமான மொழியினால் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஆனந்த யாழை மீட்டி வந்த கன்னிகாபுரத்துக் கவிதைக்காரன் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. “கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு” என தன் வரிகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாலும் நா.முத்துக்குமாரை இழந்த துயரத்தை எளிதில் கடந்து போக இயலவில்லை. ஒரு கலைஞனுக்கு கிடைக்கக் கூடிய மிகப்பெரிய அங்கீகாரம், காலங்கடந்தும் அவனுடைய படைப்புகள் பேசப்பட வேண்டும். அந்த வகையில் முத்துக்குமார் ரசிகர்களால் இன்னும் பல ஆண்டுகள் பேசப்பட்டுக் கொண்டே இருப்பார். காரணம், அவருடைய வரிகள். அவர் எழுதிய பாடல…
-
- 0 replies
- 891 views
-
-
அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீனா உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு. கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது. அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம். இந்த நிலையில்,…
-
- 0 replies
- 494 views
-
-
"ஆத்தாடி... எத்தனை படம்? 2018-ல் வெளியாகவிருக்கும் பார்ட்-டூ படங்களின் பட்டியல்" #Part2TamilMovies 'ஸ்பைடர் மேன்', 'ஹாரி பாட்டர்' போன்ற படங்களைத்தான் முதல் பாகம், இரண்டாம் பாகம் எனக் கதைகளைப் பிரித்து ஒரு தொடர்ச்சியாக எடுத்து வந்தனர். தற்போது, கோலிவுட்டிலும் இரண்டாம் பாகப் படங்கள் அதிகரித்துள்ளன என்றே சொல்லலாம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுப்பது இன்றைய டிரெண்ட். 2017-ம் ஆண்டில் 'பாகுபலி-2', 'வேலையில்லா பட்டதாரி-2', 'சென்னையில் ஒருநாள்-2', 'திருட்டுப்பயலே-2' என நான்கு படங்கள் வெளியான நிலையில், அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் இரண்டாம் பாகப் படங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. 2018-ல் வெளியாகவி…
-
- 0 replies
- 250 views
-
-
அடுத்த மாதம் 18-ந் தேதி ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணம். ஸ்ரீகாந்தை தமிழ்நாட்டுக்கே தெரியும். வந்தனா? அவரை ஸ்ரீகாந்துக்கு மட்டுமே தெரியும். அதாவது ஸ்ரீகாந்த், வந்தனா குடும்பங்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். பெரியோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்று முதலில் கூறிய ஸ்ரீகாந்த் என்ன நினைத்தாரோ திடீரென்று நானும் வந்தனாவும் காதலர்கள் என்றார். இது என்ன திடீர் குழப்பம்? ஸ்ரீகாந்தும், த்ரிஷாவும், அபர்ணாவும் அப்புறம் வந்தனாவும் நல்ல நண்பர்கள். படம் வெற்றி பெற்றால் நான்கு பேரும் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்தான் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணத்தை அவர்கள் பெற்றோர்கள் தீர்மானித்தனர். அதுவரை நட்பாக பழகியவர்கள், பெற்றோரின் முடிவு தெரிந்து காதலர்களாயினர். இது நடந்தது எட்டு மாதங…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் இன்னும் சின்ன பொண்ணு தான்: தமன்னா நான் இன்னும் சின்ன பெண் தான் என்று வேலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா தெரிவி்த்தார். நேற்று வேலூரில் நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார் நடிகை தமன்னா. தமன்னா வருவதை அறிந்த ரசிகர்கள் கடைக்கு முன் குவிந்துவிட்டனர். கடையை திறந்து வைத்துவிட்டு வெளியே வந்த தமன்னாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்டம் அதிகமாகவதை உணர்ந்த கடை ஊழியர்கள் மற்றும் போலீசார் தமன்னாவை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது லேசான தடியடியும் நடத்தப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமன்னா கூறுகையில், நான் வேலூருக்கு வந்துள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அள…
-
- 0 replies
- 970 views
-
-
'கரிகாலன்' என்ற தலைப்பில் சினிமா படம் எடுக்கத் தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விக்ரமுக்கு, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நோட்டீசு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் போரூரை சேர்ந்த ராஜசேகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 'பிரியமுடன் பிரிவோம்' என்ற ஆவண படம், டி.வி. தொடர்கள் ஆகியவற்றுக்கு இசையமைத்துள்ளேன். நாட்டிலேயே முதல் அணையை சோழ சக்கரவர்த்தி கரிகாலன் கட்டியுள்ளார். அவரது வரலாற்றை படித்து, அவர் மீது மிகுந்த பற்று கொண்டேன். ஆனால் வரலாற்று புத்தகத்தில் கரிகாலனை பற்றி விரிவான தகவல் இல்லை. இதையடுத்து கரிகாலன் வரலாற்றின் சாராம்சத்தை வைத்து கதை ஒன்றை எழுதினேன். இந்த கதைக்கு கரிகாலன் என்ற தலைப்பை வை…
-
- 0 replies
- 973 views
-
-
கணவனை இழந்த பெண் ஒருபுறம், கணவனை காப்பாற்றப் போராடும் ஒரு பெண் என இருபெண்களின் கதை ‘’பெருமழைக்காலம்’’ திரைப்படம்… துக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ அழுவதை விட நெகிழ்ச்சியில் அழுவது எப்போதாவது தான் வாய்க்கிறது.. அப்படி நெகிழும் தருணங்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையமுறை நடக்கிறது.. கோழிக்கோட்டில் வசிக்கும் இஸ்லாமியப் பெண் ரஸியா(மீரா ஜாஸ்மின்). திருமணமானவுடன் சவுதிக்கு சென்ற கணவனுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கிறார். கணவன் அக்பர் (திலீப்) விரைவில் வீடு திரும்ப இருப்பதால், அதுகுறித்தே தன் உப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் அவள். துருதுருவென சுற்றித்திரியும் ரஸியாவைத் தேடி துயரச்செய்தி ஒன்று வருகிறது. சவுதியில் வசிக்கும் அக்பர் பாலக்காட்டை …
-
- 0 replies
- 887 views
-
-
[size=4]ஏழு மணிக்கு அலுவலகத்துக்கு ரெடியாகி ஹோலுக்குள் வந்தால், அம்மா சன் டிவியில் வணக்கம் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தார். ப்ளேன் டீ குடித்துக்கொண்டே அசுவாரசியமாக கவனித்தால் அட, பாரதி பாஸ்கரும் ராஜாவும் காஷுவலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். எள்ளலும் துள்ளளுமாக தமிழை பதினைந்து நிமிஷமாக … நேரம் போனதே தெரியவில்லை. காலை வேளையில் இப்படி நிகழ்ச்சி .. யார் சொன்னது தொலைகாட்சி நம்மை கெடுத்துக்கொண்டு இருக்கிறது என்று?[/size] [size=4]மபொசி பற்றி சொல்லும்போது ஏதோ ஈழத்து பிரச்னையை தான் கோடி காட்டுகிறார்களோ? என்று சந்தேகம் வந்தது. சேர் பொன் இராமநாதன் ஏமாற்றப்பட்டது போல மபொசி ஏமாற்றப்படவில்லை! அல்லது ஏமாறவில்லை! மபொசி பற்றி மேலும் தேடி வாசிக்கவேண்டும்.[/size] [size=4][/size]…
-
- 0 replies
- 658 views
-
-
[size=1]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இள…
-
- 0 replies
- 686 views
-
-
வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உல…
-
- 0 replies
- 496 views
-
-
சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த தெலுங்கு நடிகை சுவாதி சொந்தமாக புரொடக்ஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறாராம். தமிழில் சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுவாதி தெலுங்கில் பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு அதே சசிக்குமாரின் ‘போராளி’ உட்பட ஒன்றிரெண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்து விட்டு மீண்டும் அவரது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கே போய்விட்டார். ஆந்திராவில் சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளினியாக வாழ்க்கையை ஆரம்பித்த சுவாதி இப்போது சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையே புதிதாக படங்களை தயாரிக்க முடிவெடுத்திருக்கும் அவர் ஒரு புரொடக்ஷன் கம்பெனி …
-
- 0 replies
- 307 views
-
-
கண்ணா லட்டு திண்ண ஆசையா கதை பஞ்சாயத்து பாகம் 2 அந்த அஸிஸ்டென்ட் டைரக்டரை விடுங்க..இது ஆக்சுவலா ஒரு பழைய தமிழ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கதைன்னு தயாரிப்பாளர் இராம.நாரயணன் தரப்பிலிருந்து தகவல் வந்திருக்கிறது. ஏற்கனவே நேற்று மாலையில் கிளம்பிய டைரக்டர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இன்று போய் நாளை வா படத்தை தழுவி, இந்த காலகட்டத்திற்கேற்ப மாற்றி, மேலும் குறிப்பாய் பவர்ஸ்டாரை வைத்து கலாய்ப்பதையே பெரும் பகுதியாய் கொண்டு படத்தினை உருவாக்கியிருப்பதாகவும், இதற்கான முறைப்படி அனுமதியை பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திலிருந்து வாங்கியிருப்பதாகவும், படத்தின் டைட்டிலில் புஷ்பா கந்தசாமிக்கு(கவிதாலயா) தாங்க்ஸ் கார்டெல்லாம் போட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த அ…
-
- 0 replies
- 528 views
-
-
2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்! சென்சிட்டிவ் படங்கள் முதல் சென்டிமென்ட் படங்கள் வரை, திரைப்படங்களில் புதிய முயற்சிகளில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டார்கள் பெண் இயக்குநர்கள். 2016-ம் ஆண்டு, திரையரங்குகளை தங்கள் படைப்புகளால் அழகாக்கிய பெண் படைப்பாளிகளில் சிலர் இவர்கள்! அஷ்வினி ஐயர் 'அம்மா கணக்கு' சொன்னவர், அஷ்வினி ஐயர். அமலா பால் கதாபாத்திரத்தின் மூலம், சிங்கிள் பேரன்டின் அன்பையும், ஆதங்கத்தையும், போராட்டத்தையும் அழகாகச் செதுக்கியிருப்பார். தன் மகள் மீதான கனவுகள் சுமந்து, கலெக்டரிடம், 'நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க, எவ்வளவு பணம் செலவாகும் இந்தப் படிப்புக்கு?' எனக் கேட்பதில் இருந்து, இடைவேளையின்போது அறிவுரை வழங்குவது வரை, ப…
-
- 0 replies
- 479 views
-
-
உடுமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், முதல்வகுப்பு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு ஒன்றியங்களுக்கு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்து பட்டியல் வழங்க உத்தரவிட்டது. இதற்கான கருத்துரும் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டன. உடுமலையில், காமராஜ் நகர், கண்ணமநாயக்கனூர், பெரியவாளவாடி, எலையமுத்தூர், சிவசக்தி காலனி, சுண்டக்கம்பாளையம், சின்ன பூலாங்கிணர், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட ஒன்பது பள்ளிகளில…
-
- 0 replies
- 472 views
-
-
காட்டமாட்டார் ரெஜினா அதர்வாவுடன் நடித்த “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” திரைப்படத்தையடுத்து, சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற திைரப்படம், கடந்த 4ஆம் திகதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக அதிரடியாக கிளாமரை அவர் வெளிப்படுத்தி நடித்திருந்தார் ரெஜினா. ஆனால், அந்தத் திரைப்படம் தோல்வியடைந்து விட்டது. இந்தத் திரைப்படத்தில் ரெஜினாவின் கிளாமரும், அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதனால், கிளாமராக நடித்தால் தனது மார்க்கெட் எகிறி…
-
- 0 replies
- 419 views
-
-
அவதார் சிறந்த திரைப்படம் `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த 'அவதார்' சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை வென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான 67 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருது 'அவதார்' படத்துக்கு கிடைத்தது. மேலும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறந்த இயக்குனருக்கான `கோல்டன் குளோப்' விருதை பெற்றார். ஜெப் பிரிட்ஸஸ்க்கு `கிரேசி ஹார்ட்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. சிற…
-
- 0 replies
- 555 views
-
-
ஹெச்.ராஜா சார் கவுத்துறாதீங்க: 'இப்படை வெல்லும்' இயக்குநர் கிண்டல் ஹெச்.ராஜாவின் ட்வீட்டைத் தொடர்ந்து "சார் கவுத்துறாதீங்க" என்று 'இப்படை வெல்லும்' இயக்குநர் கவுரவ் நாராயணன் தெரிவித்திருக்கிறார் நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. 'இப்படை வெல்லும்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், "'மெர்சல்' படத்தின் முழு விளம்பரம் கொடுத்தத…
-
- 0 replies
- 319 views
-
-
நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை…
-
- 0 replies
- 583 views
- 1 follower
-
-
இந்திய பெண்ணை நேசிக்கும் பிரெட்லீயின் காதல் வெற்றி பெற்றதா? - 'அன் இந்தியன்' டிரெய்லர் ! பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சளார் பிரெட் லீ 'அன் இந்தியன்' என்ற படத்தில், இந்திய பெண்ணை காதலிக்கும் வேடத்தில் நடித்து கலக்கியிருக்கிறார். காதல், காமெடி என பிரெட்லீ பின்னி எடுத்திருக்கிறார். 'அன் இந்தியன்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா வம்சாவளி இயக்குநர் அனுபம் சர்மா இயக்கத்தில் இந்த படம் தயாராகியுள்ளது. வரும் அக்டேபர் 15ஆம் தேதி 'அன் இந்தியன்' படம் வெளியாகிறது. http://www.vikatan.com/news/article.php?aid=49409
-
- 0 replies
- 384 views
-
-
பெரும் எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்த தன் ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிவிட்டார் வைகைப் புயல் வடிவேலு. மதுரையில் சாதாரண நாடகக் கம்பெனி நடத்தும் ஆசாமி அழகப்பன் (வடிவேலு). தியாகு, மனோபாலா, அல்வா வாசு ஆகியோர் அவரது நண்பர்கள். சுமித்ரா அவருடைய தாயார். ஒரு நாள் தேவலோக சுந்தரிகளான ஊர்வசி, ரம்பை, திலோத்தமை ஆகியோர் பூமிக்கு வருகிறார்கள். சேர்ந்து வந்த மூவரில் இருவர் மட்டும் குறித்த நேரத்தில் இந்திரனுக்கு அட்டன்டென்ஸ் கொடுத்துவிட, ரம்பை மட்டும் பூலோக அழகில் மயங்கி தாமதமாகச் செல்கிறாள். கோபமான இந்திரன் சாபத்தால் ரம்பையை பூமியிலேயே கற்சிலை ஆக்கிவிடுகிறான். ஒரு நாள் அந்த சிலைக்கு மாலை போடுகிறான் அழகப்பன். அவனுடைய ஜாதகத்தில் இரட்டைப் பெண்டாட்டி என்று தோஷம் இருக…
-
- 0 replies
- 1.4k views
-
-
'குருவி'யை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள 'குருவி' படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது லண்டன் கருணாஸின் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதற்கு முன்பாக தனது கம்பெனிக்கு நடித்துக் கொடுக்கும்படி உதயநிதி கேட்டுக்கொண்டதால் லண்டன் கருணாஸூக்கு தந்த கால்ஷீட்டை உதயநிதிக்கு கொடுத்தார் விஜய். இப்போது 'குருவி' படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு காத்திருப்பதால் லண்டன் கருணாசுக்கு கால்ஷீட்டுக்களை ஒதுக்கியுள்ளார் விஜய். பிரபுதேவா இயக்கவுள்ள இப்படத்திற்கு 'சிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.'போக்கிரி', 'குருவி' படங்களில் நயன்தாராவுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு போனதால் இம்முறை நயன்தாராவுக்கு தனக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபல தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எந்த முன் அனுமதியும் பெறாமல் தங்கள் நிறுவன முத்திரை மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அகாடமி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது டிரேட் மார்க்கை தவறாக பயன்படுத்திவருவதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துளளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படத்துறையில் உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பெருமைக்குரிய ஆஸ்கர் விருதுகளை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் அகாடமி என்ற நிறுவனம் வழங்கிவருவது தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்த நிறுவனத்தின் டிரேட் மார்க் சின்னத்தை அனுமதியில்லாமல் ரவிச்சந்திரன் பயன்படுத்தி வந்தததாக எழு…
-
- 0 replies
- 778 views
-
-
5ம் தேதி ரஜினி இமயமலை பயணம் மேலும் புதிய படங்கள்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 5ம் தேதி இமயமலை செல்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்கியிருப்பார். வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடன் ரஜினி இமயமலைக்கு போய் விட்டு வருவார். இந் நிலையில் இப்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது. இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது. http://thatstamil.oneindia.in/movies/heroe...-on-june-5.html அங்கு நயன்தாரா, மம்தா மோகன்…
-
- 0 replies
- 781 views
-
-
எல்லோரும் புத்தாண்டை சரக்கு, கூத்து, கும்மாளம் என குஷியோடு கொண்டாடிக் கொண்டிருக்க, நம்ம ‘தல’ அஜித் மட்டும் மிகவும் பொறுப்பான தனது புதிய படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து கொளவதற்காக மும்பைக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அஜித் நடித்து வரும் 53-வது படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் டைரக்ட் செய்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, ராணா, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல்குல்கர்னி, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடித்து வருகிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப்படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்தப்படப்பிடிப்ப…
-
- 0 replies
- 671 views
-