ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு! Published By: Digital Desk 1 16 Mar, 2026 | 10:00 AM சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர். இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில…
-
- 0 replies
- 77 views
- 1 follower
-
-
எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை Published By: Vishnu 16 Mar, 2026 | 04:49 AM இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து…
-
- 1 reply
- 110 views
- 1 follower
-
-
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர் Published By: Vishnu 15 Mar, 2026 | 10:33 PM பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வ…
-
- 0 replies
- 84 views
- 1 follower
-
-
மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது உர விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக QR குறியீடு (QR Code) நடைமுறையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார். உரங்களை விநியோகிக்கும்போது இத்தகைய QR முறைமையைப் பின்பற்றுவது அவசியமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், சில தனியார் நிறுவனங்களும் கறுப்புச் சந்தை வியாபாரிகளும் ஏற்கனவே இற…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு ; பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - இந்தியா டுடே மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 02:50 PM இலங்கை கடற்பரப்புக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா டுடே கான்க்ளேவ் 2026' (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், இலங்கையின் காலி மற்றும் கொ…
-
- 1 reply
- 164 views
- 1 follower
-
-
வளமான நாடு - அழகான வாழ்க்கை திட்டத்தில் காரைநகர் பாதை புனரமைப்பு ஞாயிறு, 15 மார்ச் 2026 09:38 AM வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், காரைநகர் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியி…
-
- 0 replies
- 115 views
-
-
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் ஞாயிறு, 15 மார்ச் 2026 09:46 AM வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நான் யாழ். மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் இந்த வீதியைப் புனரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அன்றைய சூழலில் அதனை நிறைவேற்ற ம…
-
- 1 reply
- 114 views
- 1 follower
-
-
அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை? மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் …
-
- 0 replies
- 91 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு adminMarch 14, 2026 written by admin March 14, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்த மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பத்மநாதன் கதிர்காமநாதன், மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உ…
-
- 0 replies
- 106 views
-
-
புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி 15 Mar, 2026 | 09:51 AM வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார். விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை 12 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார், வவுனியா மாவட்ட…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 07:40 AM • ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும் • புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையி…
-
- 0 replies
- 75 views
- 1 follower
-
-
போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம் Mar 15, 2026 - 07:44 AM போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு நீடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு Mar 15, 2026 - 01:48 AM மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக…
-
- 5 replies
- 274 views
- 1 follower
-
-
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு இலங்கைக்கு 14 Mar, 2026 | 05:26 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு, இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது. இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள…
-
- 1 reply
- 126 views
- 1 follower
-
-
இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 ‘Phra Phuttha Metta’ புத்தர் சிலைகள் அன்பளிப்பு! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 03:43 PM இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர், நேற்று 13ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர். இதன்போது, 108 புத்தர் சிலைகளை இலங்கைக்கு வழங்கும் புண்ணியக் கருத்திட்டத்தின் அடுத்தகட்ட…
-
-
- 2 replies
- 224 views
- 1 follower
-
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை Mar 14, 2026 - 02:25 PM பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும்…
-
- 2 replies
- 155 views
- 1 follower
-
-
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்! மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ. பி அழககோன் தெரிவித்தார். நேற்று மாலை குறித்த மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளது . சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப் பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது. கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில்…
-
-
- 3 replies
- 226 views
- 1 follower
-
-
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 11:21 AM வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா' முகாமில் நடைபெற்றது. வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், எல்லை தாண்…
-
- 1 reply
- 140 views
- 1 follower
-
-
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026–2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 11:04 AM நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். 'போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம்' குறித்த விளக்கமளிக்கும் கூட்டம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரின் பங்கேற்புடன் நேற்று வெள்ளிக்கிழம…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
https://www.facebook.com/share/v/1CYYjew61t/?mibextid=wwXIfr
-
-
- 1 reply
- 114 views
-
-
‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை! கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் ‘அரச சுபநேரக் குழுவை’ கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை. இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது. இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்…
-
-
- 3 replies
- 150 views
-
-
திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து Published By: Vishnu 13 Mar, 2026 | 08:16 PM மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார். வவுனியா மாவட்டசெயலகத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான வ…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும் - பிரதமர் 13 Mar, 2026 | 05:29 PM மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (13) கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வு 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' (Languages Unite: …
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் - உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் 13 Mar, 2026 | 04:21 PM இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார அபி…
-
- 0 replies
- 92 views
- 1 follower
-
-
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் Published By: Vishnu 13 Mar, 2026 | 07:16 PM புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/240904
-
-
- 3 replies
- 318 views
- 1 follower
-