Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்கள் ஆணையை புறந்தள்ளிவிட முடியாது – கெஹலிய by : Vithushagan அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை விரிவாக நீக்குவதற்காக மக்கள் வழங்கியுள்ள ஆணையை புறம் தள்ள அரசாங்கம் தயாரில்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். 19 ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்தி…

    • 2 replies
    • 438 views
  2. புதிதாக 6 தூதுவர்கள் - இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட 6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகரவின் பெயரும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகமவின் பெயரும் சீனாவிற்கான இலங்…

  3. ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் வெளியிட்ட தகவல் ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார். எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்த…

    • 7 replies
    • 1.6k views
  4. ஐ.நா சிறுவர் நிதியம் உருவாக்கும் சிறுவர் சினேக மாநகர் தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசேப்) ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன்,சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல்,மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன,மாநக…

  5. (ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார். எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவோ வேறு விதத்தில் பதிலொன்றை கூறினார். "வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் " என கடும் தொனியில் கூறினார். இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் எம்.பி, …

  6. இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – கனடா எம்.பி. தகவல் இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாகப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது. …

  7. தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி…

  8. கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையில் August 26, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை மீள விளக்கத்துக்காக எடுப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, வரும் செப்பெரம்பர் 7ஆம் திகதி அழைக்குமாறு தவணையிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், அன்றைய தினம் எதிரியை மன்றில் முற்படுத்துமாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங…

    • 5 replies
    • 1.1k views
  9. யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..! யாழ்.நாவற்குழி - விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது. விகாரைக்கு தேவையான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு கட்டிடம் அமைக்கப்பட்டதாக இன்று காலை இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/20324 டிஸ்கி :

    • 6 replies
    • 929 views
  10. புத்த பிக்குவுக்கு காணிமீது உள்ள உரிமை ஏன் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடாது? – விக்கினேஸ்வரன் மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என சிறீலங்கா பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கு மீதான விவாதம் மீது இன்று (9) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் உரையின் முழு வடிவம் வருமாறு: மாண்புமிகு சபாநாய…

    • 1 reply
    • 403 views
  11. நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு – முன்னாள் என்ஐடி பிரதானி! தான் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்காது நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (08) சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நீங்கள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கினீர்களா என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த…

  12. வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களே – தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களேயன்றி அங்குள்ள மக்கள் அல்ல என தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழன் ராகவாயது தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து அவர், தாயக இளையோர் சமூகத்தினால் தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தினையொட்டி நடைபெறவுள்ள நடைபவனிக்கு தலைமையேற்கின்றேன்.எமது இந்த நடைபயணமானது தாயகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தினை தாங்கி நிற…

  13. (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்புடனும் விமானப்படையும் இணைந்து சுமார் 100 மணித்தியால போராட்டத்தில் நியு டயமன் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சமாகும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விமானப்படை ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சங்கமன்கண்டி கரையிலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் பனாமா அரச்சிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை தளபதி எயா…

  14. யாழ்.மாவட்டத்தில் 3027 ஏக்கர் காணி முப்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில்..! இனியாவது பேசுவார்களா..? சுமார் 3027.85 ஏக்கர் தனியார் காணிகள் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக யாழ் மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 23850. 72 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு 16775.50 ஏக்கராகவும் , 2015ம் ஆண்டு 7075.22 ஏக்கராகவும் , 2019ம் ஆண்டு 4047 .37 ஏக்கராகவும் , குறைவடைந்துள்ளது. தற்போது அது 3027.85 ஏக்கராக காணப்படுகின்றது. இதன்படி தனியார் காணிகளில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 21.91 ஏக்கரும், வேலணை பிரதேச செ…

  15. கொக்குளாயில் தமிழர்கள் மீள் குடியேற மகாவலி அதிகாரசபை தடையாக உள்ளது September 8, 2020 இன்று (8-9-2020) நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முல்லைத்தீவு மாவடத்திலுள்ள கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய பகுதிகளில் 601 தமிழரகளுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் பயிரச் செய்கை நிலங்களில் தமிழர்கள் மீளவும் குடியமரவும், விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தொிவித்துள்ளார்.. மேற்படி நிலங்களில் ஆமையன் குளம், முந்திரிகைக்குளம், சாம்பன் குளம், மணற்கேணி, ஆகிய பகுதிகளில் உறுதியுடையதும் அனுமதிப்பத்திரமுடையதுமான 784 ஏக்கர் நிலம் அந்தப் பகுதியைச் சேராத …

  16. குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன் by : Jeyachandran Vithushan யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் …

  17. பொய்யான கதைகளைக்கூறி பிரேமலால் அனுதாபத்தைத் தேடுகிறார் – தலதா அத்துகோரல by : Dhackshala பொய்யான கதைகளைக்கூறி, அனுதாபத்தைத் தேடிக்கொள்ளவே நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர முற்படுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நேற்றைய அமர்வின்போது என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 2001 ஆம் ஆண்டு அவரது உறவினர் ஒருவரின் உயிரிழப்புக்கும் நான் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். இது உண்மையெனில் அவர…

  18. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் அதிரடி தீர்மானம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08) சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். …

  19. 20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்- மாவை 20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்…

    • 6 replies
    • 640 views
  20. பிரபாகரனை... மஹிந்த, சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம் கேள்வி 2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக்…

  21. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் பிரேமலால் ஜயசேகரவிற்கும் உள்ளது – சபாநாயகர் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்…

  22. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் இனிவரும் காலங்களில் வெகுஜனப்போராட்டங்களாகப் பற்றி எரியுமா ? சென்ற 30 /08/2020 அன்று தமிழீழமெங்கும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் இந்த இறுதிக்காலாண்டுக்கான பேசுபொருளாக எழுந்திருக்கின்றதை அனைவராலும் உணரமுடிகின்றது. அதுமட்டுமன்றி இப்போராட்டமானது தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் தன்னார்வத்துடன் முன்வந்து நடாத்தியிருந்தனர். இதில் வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர் தாயகப்பகுதியில் கட்சிபேதங்களின்றித் தமிழ் அரசியல் தரப்பினர் பங்குபற்றி இருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது…

  23. வடமகாண சபையைக் கைப்பற்ற பொது ஜன முன்னணி புதுவியூகம்; தமிழ்க் கட்சிகளின் நிலை என்ன? வடக்கு மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்ற பஸில் ராஜபக்ஷ தரப்பு புதுவியூகம் வகுத்துள்ளது. இதற்காக மிகப்பெரும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவும் கட்சி சாராத பிரபலம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவும் திட்டமிடப்படுகின்றது என பஸிலுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. அதேநேரம் தற்போது நாட்டை ஆளும் தரப்பு, அதற்கு சார்பான கட்சிகள் வழக்கத்திற்கு மாறாக அதிக வாக்குகளை பெற்றன. இந்த வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தியே வடக்கு மாகாண சபையைக் கைப்பற்ற பஸில் திட்டம் வகுத்துள்ளார். நடந…

  24. (ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்) தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது, எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு கொடுக்க மறுக்கின்றீர்கள், அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்வடாறு தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் நுண் கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தைக் காரணங்காட்டி வடக்கு, கிழக்க…

  25. அரச படைகளின் அட்டூழியங்களுக்குக் கிடைத்த பதில்தான் மனித குண்டுகள்; விக்கினேஸ்வரன் அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறுமுன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்தகுற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள்” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். “புலிகளை அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பயங்கரவாத இயக்கமாகவே தரப்படுத்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.