ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைப்பு அம்பாறை – கல்முனை மாநகரம் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என பல்லின சமூகத்தவர்களும் ஒன்றாய் வாழும் மாநகரமாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமூக ,கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டியெழுப்பும் உன்னத நோக்கத்தோடு மாநகரத்தின் கல்முனை பிரதான நகரில் ‘சமாதான விழிப்புணர்வு பதாகை’ திறந்து வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட சமாதானமும் சமூகப் பணிக்குமான அமைப்பின் அனுசரணையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று(07) மாலை கல்முனை மாநகரத்தில் நடைபெற்றது. இதில் கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு “இணைந்த கரங்கள் தோற்பதில்லை, எதிர்…
-
- 0 replies
- 370 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடை வீரர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து மு…
-
- 0 replies
- 406 views
-
-
நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்! பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனும் பங்கேற்றார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் குறித்த சந்த…
-
- 2 replies
- 505 views
-
-
சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கஜதீபன் தலைமையில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இளைஞர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன் போது சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கையில் , பொதுவான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லை. மாறாக சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். சுமந்திரனால் மேலும் 16 அரசியல் கைதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் நீங்கள் எதிர்கட்சியாக இருந்து செய்தது என்ன? தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஏ…
-
- 1 reply
- 660 views
-
-
யாழ் பல்கலையில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு! இராணுவக் கெடுபிடி, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05) தமிழீழ கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. https://newuthayan.com/blacktigers/ கரும்புலிகள் நாளான இன்று வட,கிழக்கில் இராணுவத்தினர் கெடுபிடி கரும்புலிகள் நாளான இன்று(05) அதனை யாரும் நினைவேந்தக் கூடாது என்பதற்காக இராணுவத்தாலும், படையினராலும் விசாரணைகளும் கைதுகளும் மேற்க…
-
- 1 reply
- 502 views
-
-
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று மாலை முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப் படைத்தளத்தினை சேர்ந்த இரண்டு விமானப்படையினர் சூரிபுரம் பகுதியில் பாதுகாப்பு கடமைகள் நிமிர்த்தம் கிராமத்திற்குள் சென்ற போது அங்கு கூடி நின்ற இளைஞனர்களுக்கும் விமானப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இளைஞர்கள் சிலர் இரண்டு விமானப்படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதன் போது காயமடைந்த 35 அகவையுடைய விமானபடை வீரர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து மு…
-
- 0 replies
- 596 views
-
-
நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில்…! கருணா இராணுவத்தை கொன்றதும், உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால் நாம் அரசியல் செய்வது சர்வதேச சதியென கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளுமே இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச சதிகள் நாட்டிற்கு எதிராக இடம்பெறுவதாக கூறி நாட்டினை சர்வதேசத்திற்கு விற்கும் நடவடிக்கையை ராஜபக்ஷக்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். …
-
- 1 reply
- 371 views
-
-
இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை.! இலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தவறான முறையில் பணம் சேகரித்த நபர்கள், போதை வர்த்தகர்கள் மற்றும் திடீரென பணக்காரர்களாகிய வர்த்தகர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து இரகசிய விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் திடீரென சொத்துக்கள் சேகரித்த நபர்கள் தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள், ஆயுத வர்த்தகர்கள், பயங்கரவாத செயல்கள், சைபர் மோசடியாளர்கள், இலஞ்சம் பெறுபவர்கள், உட்பட மோசடியான முறையில் பணம் சேகரித்த நபர்கள் தொடர்பில் பொலி…
-
- 2 replies
- 465 views
-
-
மஹிந்தவுடன் இணையும்படி புலிகளே என்னிடம் சொன்னார்கள்: கனகர் புதுக்குண்டு.! முள்ளிவாய்க்கால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில், ‘இனி போராட்டம் சரிவராது, இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கான உதவியையும் அபிவிருத்திகளையும் செய்யுங்கள்’ என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனால்தான், நான் அரசாங்கத்துடன் இணைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ச.கனகரத்தினம். அந்த ஒரு சொல், தனது அடி நெஞ்சில் இப்பொழுது வரை ஆழமாக இருக்கின்றதெனவும் கூறினார். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், நேற்று (06) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…
-
- 1 reply
- 772 views
-
-
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்டமுடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம்- கஜேந்திரகுமார் by : Litharsan 13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறுகையில், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து தரப்புக்களும் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கை…
-
- 2 replies
- 451 views
-
-
அறிமுகமாகின்றது “MyBus-SL” அலைபேசி செயலி பயணிகள் பஸ் போக்குவரத்து தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அலைபேசி செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (07) அறிமுகப்படுத்தினார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த செயலி வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. MYBUS-SL எனும் பெயரில் குறித்த செயலி அறிமுகப்படுத்ததப்பட்டுள்ளதுடன், பயண தூரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். அத்துடன், GPS தொழில்நுட்பத்தினூடாக பஸ் பயணிக்கும் பகுதியை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் MYBUS.SL செயலி மூலம் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவி…
-
- 1 reply
- 382 views
-
-
பா.நிரோஸ் தனது ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயன்படுத்தி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 277 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளார். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, தமிழ்மிரர் பத்திரிகை, இலங்கை விமானப்படைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களிலேயே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு அதி முக்கிய பிரமுகருக்கான ஹெலிக்கொப்டர்களே, இலங்கை விமானப் படையால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக ஹெலிகொப்டர்களை 535 தடவைகளும், B-412 ரக ஹெலிகொப்டர்களை 22 தடவைகளும் மைத்திரி பயன்படுத்தியுள்ளார். …
-
- 1 reply
- 506 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்! by : Vithushagan நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றனரா? என்றும் அங்கஜன் இராமநாதன் சவால் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர…
-
- 2 replies
- 718 views
-
-
நன்றி.. யாழ் இந்து பழைய மாணவர் முகநூல். பாடசாலையின் கற்கைகள் பகுதியளவு மாணவர்களுடன் உரிய சுகாதார நடைமுறைகளுடன் 6.7.2020 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 796 views
-
-
யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள் by : Litharsan சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அவதூறுகளை எதிர்கொண்டுள்ள யஸ்மின் சூக்காவிற்கு ஆதரவாக 50இற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புக்களும் 150 முக்கிய நபர்களும் கையெழுத்திட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதலாம் திக…
-
- 3 replies
- 461 views
-
-
முன்பள்ளி ஆசிரியர்களின் வருமானம் மேம்படுத்தப்படும்’ சொர்ணகுமார் சொரூபன் யாழ். மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த வருமானம் மேம்படுத்தப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 3,800 முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாண சபையின் 6 ஆயிரம் ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவுடன் மட்டும் பணிபுரிந்து வருகின்றனரெனத் தெர…
-
- 0 replies
- 316 views
-
-
அன்று சஜித் பக்கம் இன்று கருணாவின் பின்னால் – கட்சி மாறிய முன்னாள் எம்பி தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா எனும் வி.முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் எம்பி குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார். இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. கருணாவுடன் இணைந்தமை தொடர்பாக குணசேகரம் சங்கர் கருத்துத் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அம்மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன். நானும் கடந்த காலங்களில் ஒரு போராளியாக இருந்தவன். எமது மக்கள் படும் இன்னல்களை அறிவேன். நான் எம்பியாக இருந்தகாலத்தில் என்ன செய்தேன் என்பதை எமது மக்கள் அறிவார்கள். இன்றைய சமகால சூழல…
-
- 0 replies
- 224 views
-
-
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர் எனும் இரு எண்ணிக்கைகளில் குறைவான எண்ணிக்கை எதுவோ, அவ்வெண்ணிக்கையிலானோர் நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், திருமண நிகழ்வில் கலந்துகொள்வோர், சமூக இடைவெளியைப் பேணுவதோடு, மண்டபங்கள் குறித்து ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் நாட்டில் பரவியதையடுத்து, மக்கள் கூடும் வகை…
-
- 5 replies
- 706 views
-
-
இனவாதத்தை ஆயுதமாக கொண்டு பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றவில்லை. என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சுபீட்சமாக மற்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியுள்ளார் . போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸார் தொடர்பான பல தகவல்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம…
-
- 0 replies
- 488 views
-
-
(ஆர்.யசி) ராஜபக் ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்க முடியாது. அவர்கள் எதிர்க்கட்சி அரசியலை மாத்திரமே விரும்புகின்றனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றங்களை முன்னெடுப்போம் எனவும அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள், மற்றும் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், …
-
- 0 replies
- 230 views
-
-
அரசின் தமிழர்சார் கொள்கைகளை ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டும் – உதயகுமார் by : Vithushagan தற்போதைய அரசியல் கள நிலவரங்களையும் தமிழர்சார் அரசின் கொள்கைகளையும் ஒவ்வொரு தமிழரும் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அது தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 408 views
-
-
கொவிட் -19 நிதியத்தின் நிதிக் கையிருப்பு அதிகரிப்பு! இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,448 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெலிசறை சுவாச நோய்களுக்கான வைத்தியசாலையினால் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபா நிதி நேற்றைய தினம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அயகம பிரதேச செயலகத்தினால் சுமார் 35 ஆயிரம் ரூபாவும், பேருவலை நகர சபையினால் ஒரு லட்சத்து 31 ஆம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனிப்பட்ட ரீதியிலும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதியின…
-
- 3 replies
- 767 views
-
-
உதிரியாக பிரிந்து நின்றால் பிரநிதித்துவ பலம் சிதையும் உதிரியாக பிரிந்து நின்றால் பிரதிநிதித்துவ பலம் சிதையும் என வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வலிகாமம் கிழக்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2013 ஆம் ஆண்டின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நான்கு கட்சிகள் கூட்டமைப்பாக பெரும் வெற்றி கண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆனால் மாகாண சபையின் ஆட்சி காலம் முடியும்போது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி முழுமையாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. மேலும் நீதியரசர் விக்னேஸ்வரன், அனந்தி …
-
- 3 replies
- 510 views
- 1 follower
-
-
இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா? – சம்பிக்க by : Dhackshala இஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா? என்பது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் இல்லாத விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் த…
-
- 0 replies
- 330 views
-
-
அம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020 அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு த…
-
- 2 replies
- 475 views
-