ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் இராணுவம், பொலிஸாரால் அதிரடியாகச் சுற்றிவளைப்பு July 5, 2020 யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் சற்று முன்னர் 50 க்கும் அதிகமான இராணுவம், பொலிஸாரால் சற்று முன்னர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இதன்போது நேரில் வந்திருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன. கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு அங்கு நிகழ்வுகள் ஏதாவது நடைபெறலாம் என்பதாலேயே இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது. http://thinakkural.lk/article/51889
-
- 2 replies
- 1.1k views
-
-
அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிஸாரால் தடை! கிளிநொச்சி – அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராஜ மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை. 13ம் நூற்றாண்டில் பொலநறுவை இராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில்…
-
- 0 replies
- 593 views
-
-
வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தல் – காரணம் என்ன? வவுனியா – இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்று (05) இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் உள்ள இடங்களிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். வெடி குண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான போதிலும், வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகே பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிற…
-
- 0 replies
- 420 views
-
-
புலம்பெயர் தமிழர்களே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணம் – கருணாவின் மனைவி Jul 05, 20200 புலம்பெயர்ந்துள்ள சிலர், பணம் உழைப்பதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் போராளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய விடயங்களை அரசாங்கம் உணர வேண்டும். மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/புலம்பெயர்-…
-
- 0 replies
- 340 views
-
-
ராஜபக்ச குடும்பம் ஆறு மாதம் நல்லா களவு செய்திருக்கும் – அசாத்சாலி இந்நாட்லுள்ள மக்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரைக்கும் மக்களுக்கு ஆதரவாக எதுவித உதவிகளும் நடக்கவில்லை. ஆனால் ராஜபக்ஷ குடும்பம் ஆறு மாதம் நல்லா களவுகள் செய்தனர் என முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஷாத் சாலி குற்றம் சுமத்தினார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (04) ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். மேலும், “இந்த நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்குவதாக கோட்டாபய அரசாங்கம் அறிவித்தது. மாதா மாதம் உங்கள் வீட்டுக்கு ஐயாயிரம், பத்தாயிரம்…
-
- 3 replies
- 488 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித் மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இதன்படி சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார். https://newuthayan.com/யாழில்-தேர்தல்-பிரச்சாரத/
-
- 8 replies
- 856 views
-
-
முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது. அண்மைக்காலமாக சுமந்திரம் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/politics/…
-
- 30 replies
- 2.8k views
-
-
ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக உதயன் நாளிதழ் வழங்கினார்..? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ. சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது. கூட்டத்துக்கு முன்னதாக அங்கு வந்திருந்தவர்களுக்கு வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை இலவசமாக வழங்கி வைத்தார். "சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம்" என்று பிரதான தலைப்பிட்ட செய்தி உதயனில் இன்…
-
- 5 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
மக்கள் மன்ற நிகழ்வில் மஸ்தானுடன் முறுகல் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆரம்பத்தில் நெறியாள்கை செய்த வி.எஸ்.சிவகரன் சிவில் பிரதிநிதிகளாக கலந்துகொண்டுள்ள சின்மயா மிசன் சுவாமி தவத்திரு வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவன் வி.சாரங்கன், சமூக ஆர்வலர் செ.சுதாகரன் ஆகியோரும் வேட்பாளர்களாக கலந்துகொண்ட காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ப.உதயராசா, சிவ.கஜேந்…
-
- 0 replies
- 503 views
-
-
வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது.! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலும், அதிகாரப்பகிர்வு குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. வடக்குக்கு ஒரு சட்டமும், தெற்குக்கு மற்றுமொரு சட்டமும் இருக்கமுடியாது. நாட்டில் ஒரு சட்டமே இருக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” ரணச…
-
- 0 replies
- 590 views
-
-
கார் கதவுடன் மோதியவர் படுகாயம்; நல்லூரில் சம்பவம்! யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியில் இன்று (04 காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மறைந்த எம்பி மகேஸ்வரனின் சகோதரர் பரமேஸ்வரினின் காரில் இருந்தவர் சாரதி பக்க கதவினை திறந்து கொண்டு இறங்க முற்பட்டுள்ளார். இதன்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கார் கதவுடன் மோதி விழுந்துள்ளார். விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்ப…
-
- 0 replies
- 464 views
-
-
உங்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எனக்கு இருக்கின்றது.! - சசிகலா ரவிராஜ் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் எனக்கு அளிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் உள்ள தமிழரசுக் கட்சியின் சகல உறுப்பினர்களும் பங்கேற்ற தொகுதிக்கான மூலக்கிளை கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, சசிகலா ரவிராஜ் தனது உரையில் பெண் வேட்பாளர் என்ற ரீதியிலும் தென்மராட்சியின் பிரதிநிதி என்ற வகையிலும் மக்கள் தம் விருப்பு வாக்குகளில் ஒன்றை அவசியம் தனக்கு அளிக்கும்படி வலியுறுத்துவதாகவும், அவ்வாறு க…
-
- 4 replies
- 737 views
-
-
நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி கேள்வியினை எழுப்பியிருந்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஈழத்தில் போரால் கடுமையாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கப்பால் வடக்கு கிழக்கில் நுண் நிதிக் கடன் பி…
-
- 40 replies
- 3.6k views
- 1 follower
-
-
சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார். July 3, 2020 0 19 சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகாண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்ச…
-
- 2 replies
- 573 views
- 1 follower
-
-
தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும் – வேலுகுமார் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். நேற்று (03) கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது. ஆனால், கடந்த 6 மாதங்…
-
- 0 replies
- 349 views
-
-
மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி! மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாணன்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (02) இரவு வயல் பிரதேசங்களை நோக்கிவந்த யானைகளை துரத்த முற்பட்டபோது இடம்பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான (58-வயது) முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான (51-வயளு; சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். https://newuthayan.com/மின்சாரம்-தாக்கி-விவசாயி/
-
- 0 replies
- 414 views
-
-
தேர்தலுக்குப்பின் யாழ்.பல்கலை துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வார்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெற இருப்பதாக தெரியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின்…
-
- 2 replies
- 721 views
-
-
தீர்மானம் எடுக்கும் துறைக்குள் பெண்கள் வர வேண்டும் – மஹாலட்சுமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள் என்று மன்னார் மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள மாதர் ஒன்றியத்தின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “தற்போது இலங்கையில் ஜனநாயக அரசியல் என்று சொல்லப்படுகின்ற அரசியலில் பல்வேறு குறைபாடுகள் தாங்கிக் கொண்டு செல்வதை நாங்கள் அறிவோம். அரசியலில் ஈடுபடும் பெண்களை குறித்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விமர்சனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆணுக்கு நிகராக பெண்கள் பல துறைகள…
-
- 0 replies
- 318 views
-
-
நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். “1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள். …
-
- 16 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், https://www.ibctamil.com/srilanka/80/146274
-
- 10 replies
- 1.6k views
-
-
(செ.தேன்மொழி) இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்படுத்திய அவமானம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோகணேசன் வலியுறுத்தினார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஐ.டி.எம். நேசன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் சௌபாக்கியத்துக்கான அரசாங்கம் என்பதை விட குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பான குழப்பம் , கருணா அம்மான் குழப்பம் , நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்திய குழப்பம…
-
- 1 reply
- 685 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எம் சி . சி. ஒப்பந்தம் அழகானதாக இருந்தாலும் அதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் பொதுச் சட்டத்திற்கும் முரணானது. ஆகவே எவ்வித நிபந்தனைகளுமின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே எம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு குழுவினரது இறுதி பரிந்துரையாகும். ஒப்பந்தத்தின் முன் தயார் நிலைக்கு 2017, 2018ம் ஆண்டுகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுவதற்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதே தவிர நிதி கிடைக்கப் பெற்றது என்று அறிக்கையில் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அமெரிக்க தூதுவராலயம் நிதி வழங்கவில்லை, என்றும் கடந்த அரசாங்கம் நிதி பெறவில்லை என்று குறிப்பிடும் நிலையில் ஒப்பந்த…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தங்களை புலிநீக்கம் செய்தார்கள். அதன் விளைவாகத் தான் கஜேந்திரகுமார், பத்மினி போன்றவர்கள் வெளியேற வேண்டி வந்தது. அதற்குப் பிறகு அவர்கள் தங்களை தேசிய நீக்கம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை போலவும் தாங்கள் ஆயுதப் போராட்டத்தோடு முழுதளவு உடன்படவில்லை போலவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஆயுதப் போராட்டத்தின் பின்னடியாக வந்த …
-
- 2 replies
- 531 views
-