Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது? – சி.வி. கேள்வி by : Dhackshala தேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் இருந்து பணத்தைக் கோருவது தவறான செயற்பாடல்ல என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மக்களிடம் சென்று அவர்களுக்காக பணம் கோருவதில் என்ன தவறு உள்ளது? பின்வாசல் வழியாக யாரிடமோ பணத்தைப் பெற்று அவர்களுக்கு கட…

  2. அறக்கொட்டிகளை கட்டுப்படுத்துவது குறித்து கருத்தரங்கு மட்டக்களப்பு – வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கபிலநிற தாவர தத்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு காவத்தமுனை மஸ்ஜுதுல் நிஹ்மா பள்ளிவாயலில் இன்று (23) இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்கள விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பள்ளிமடு மற்றும் அடம்படிவட்டுவான கண்டத்திலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன்போது நெற்செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கபில நிற தாவர தத்திகள் (அறக்கொட்டி) கட்டுப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான களை நாசினிகள் தெளிக்க வேண்டும் என்பது தொடர்பிலு…

  3. போதை வெறியர்கள் போல் உளறுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் – ஸ்ரீநேசன் நிதானம், நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு அறியப்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூலின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். மேலும், ‘இலங்கை மக்களாட்சி முறையுள்ள ஜனநாயக நாடாகும். இந்த மக்களாட்சி முறை சகல இன மக்களுக்கும் பொதுமையானதாகவும், முற்ப…

  4. கோத்தாபய தீர்வு தர மாட்டார்; ஆனாலும் நாம் பேசுவோம் – சித்தார்த்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் தமிழ் மக்களின் அரசியல் தீா்வு குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றுவாா் என நான் நினைக்கவில்லை. அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் பேசாமலும் இருக்க முடியாது. இருக்கமாட்டோம்” இவ்வாறு நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும், புளொட் தலைவருமான த.சித்தாா்த்தன் தெரிவித்தார். மேலும், ‘நாங்கள் சா்வதேச மட்டத்திலும் உள்ளூரிலும் பேச வேண்டும். அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுத…

    • 5 replies
    • 697 views
  5. வல்லிபுர ஆழ்வாருக்கு செல்ல கட்டுப்பாடுகள் இறுக்கம் June 22, 2020 வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை. சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்களே வழிபாடுகளில் ஈடுபட முடியும். அந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கூடுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தது. …

  6. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை இப்படி அவர்களுக்கு முன்னால் கிழிக்கின்றார்

  7. In இலங்கை June 20, 2020 1:56 pm GMT 0 Comments 1304 by : Litharsan மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப் பரவல் இன்று காலை (சனிக்கிழமை) ஏற்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனி…

  8. குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு சென்ற நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று (21) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். …

  9. கல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்! கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளி வந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடினார்கள். இன்றையதினம் (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து கொதிப்பாக நீர் காணப்படுவதாகவும் ஆவியாகி வெளியேறுவதாகவும் தகவல் ஒன்று பரவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் மின்சார சபை ஊழியர்கள் சென்று பார்வையிட்டனர். பின்னர் இறுதியாக மின்சார கம்பி ஒன்று கிணற்றில் காணப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட மின்சார…

  10. நேற்றைய தினம் மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட்டத்திற்கு செல்லவிருந்த உறுப்பினர்களை முதலில் கட்சி அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த சயந்தன், சசிகலா ரவிராஜை சுயமாக இயங்க விடமால் தடுப்பதற்கேதுவான அணுகுமுறைகளை கையாள்வதற்கு திட்டங்களை வகுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்பு அங்கிருந்து மாமனிதர் இல்லத்திற்கு கூட்டத்திற்காக புறப்பட்டு சென்றனர். இதில் ஒரு சிலர் சயந்தனின் திட்டத்திற்கு உடன்பட்டனர். குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு தென்மராட்சிப் பகுதியில் ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜ் பிரச்சாரத்தில் …

    • 0 replies
    • 681 views
  11. போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது." இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது "போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். போர்க்காலத்தில் கருணா அம்மான் கி…

  12. நாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர், https://www.ibctamil.com/srilanka/80/145710?ref=imp-news

    • 1 reply
    • 582 views
  13. கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ் by : Dhackshala நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சியில் இருக்கின்ற ஒரு சில …

    • 2 replies
    • 649 views
  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்ட வகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே சண்முகராஜா அரவிந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ரவிராஜ் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட காலத்தில் இருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலில் ஈடுபடுவதை அவருடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பம் விரும்பவில்லை. அவருடைய அரசிய…

    • 0 replies
    • 601 views
  15. பாடசாலை மாணவர்களுக்கு... எதிர்வரும், ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு தீர்மானம் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அதன் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார். மேலும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் ப…

    • 1 reply
    • 356 views
  16. கூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஆதரவு தொடர்பிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ‘தேசியத்திற்காகப் போராடிய நாங்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் 2001 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைவர…

    • 3 replies
    • 574 views
  17. நயினாதீவு கட்டுப்பாடு; சிங்களவர்களிற்கு ஒரு நீதி? தமிழர்களுக்கு ஒரு நீதி? நயினாதீவிற்கு செல்வதற்கு நடைமுறைப்படுத்தப்படும் அனுமதி பத்திரம் நடைமுறைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நேற்று (22) இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா நிலவரம் காரணமாக, ஆலய திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் இருந்து நயினாதீவிற்கு செல்ல வேண்டுமென்றால் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும். பொலிஸ் அனுமதியில்லாதவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆலயத்தில் மக்களை கட்டுப்…

    • 1 reply
    • 423 views
  18. வீட்டுக்கான அடிக்கல் நாட்டல் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, ஜே-27 கிராம சேவகர் பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவால் இதற்கான அடிக்கல் நேற்று (22) நாட்டப்பட்டது. https://newuthayan.com/வீட்டுக்கான-அடிக்கல்-நாட/

  19. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள்…

    • 0 replies
    • 278 views
  20. 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்…

    • 0 replies
    • 555 views
  21. இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார் தொழிலதிபர்களுடன் நேற…

    • 0 replies
    • 469 views
  22. வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 1990 காலப்பகுதியில் இடம்பெயர்ந்து இந்தியா உட்பட வேறுபகுதிகளிற்கு சென்ற மக்கள் மீண்டும் வந்து காடுகளாக கிடக்கும் தமது காணிகளையும், தமது பெற்றோர்கள் வசித்த காணிகளை பிள்ளைகளும் துப்புரவாக்கி தற்காலிகமாக கொட்டில்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகள் தமக்குரியது என்று வனவள திணைக்களத்தால் நீண்டகாலமாக கூறப்படுவதுடன் மக்கள் மீள், குடியேறு…

  23. தமிழர் கிராமங்களை நெருக்கும் சிங்கள குடியேற்றங்கள்…! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தமிழர் கிராமங்களை அண்மித்து சிங்கள குடியேற்றங்கள் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக தமிழர்களின் பூர்வீக தோட்டச்செய்கை நிலமான, தொட்டகண்டல் குளம் பகுதியில் உள்ள 825 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. தற்போது குறித்த காணிகளில் பாரிய பங்களா ஒன்று சிங்கள மக்களால் நிறுவப்பட்டுள்ளதுடன், பாரிய அளவில் தோட்டச் செய்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு – கொக்குத்…

  24. தேர்தலுக்கு பின்னர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ப.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொல்பொருள் மூலம் கிழக்கில் பௌத்த விகாரைகளை அரசாங்கம் அமைக்கப்போவதாக கூறி சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று பெரும்பாலான மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.