Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடு…

  2. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு August 6, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது. இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது …

    • 11 replies
    • 1.1k views
  3. தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை பதிவு- ஜனாதிபதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டிவிற்றர் பக்கத்தில் அவர் இவ்வாறு நன்றிதெரிவித்து பதிவிட்டுள்ளார். அத்துடன், இன்றைய தேர்தலில் கிட்டத்தட்ட 71வீதமானோர் வாக்களித்துள்ளமைக்கு மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/தெற்காசியாவின்-முதலாவது/

    • 2 replies
    • 582 views
  4. தேர்தலில் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – பிரதமர் மஹிந்த பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் சுகாதார வழிகாட்டு…

  5. யாழில் வாக்குப்பெட்டிகள்... வாக்குகள், எண்ணும் நிலையத்திற்கு விமானத்தின் ஊடாக எடுத்துச் செல்லப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வழமை போன்று வாக்குகள் எண்ணும் பணிகள் நாளை நடைபெறும். மேலும் வாக்கெண்ணும் நிலையத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து விமானத்தின் மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கே வாக்கெண்ணும் பணி…

  6. முதல் தேர்தல் முடிவு நாளை பி.ப 2.30 மணிக்கு 020 பாராளுமன்றத் தேர்தலின் முதல் முடிவினை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசியப்பிரிய தெரிவித்தார். https://www.virakesari.lk/article/87406

  7. சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு -எஸ்.நிதர்ஷன் யாழ். தேர்தல் மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி தொகுதியில், கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன் சாவகச்சேரி, இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றுள்ளார். அங்கு அவர் ஏற்கெனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக, அங்கிருந்த அதிகாரிகள் தெரிவி…

    • 0 replies
    • 455 views
  8. மட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்! 2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பில் இருவர் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவர் வாக்களிக்கும் நிலையமாக கருதப்படும் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலைக்கு இன்று (புதன்கிழமை) காலை வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன. மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் குறித்த வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் கொண்டுசெல்லப்பட்டன. இரண்டு வாக்காளர்களாக உள்ள தொழு நோயாளர்கள் வாக்களிப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்ற…

    • 0 replies
    • 414 views
  9. வாக்குப் பெட்டிகளுக்கு ஆயுதப் படைகளின் பாதுகாப்பு! தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அத்துடன் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குப் பெட்டிக்கும் ஆயுதமேந்திய அதிகாரியின் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அந்தவகையில் 3067 ஆயுதம் தாங்கிய நடமாடும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப் பெட்டிகள் கொண்…

  10. மஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த மூன்று வாக்குசாவடிகளுக்கும் பிரதமரும் ஸ்ரீலனாக பொதுஜன பெரமுனாவின் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆதரவாளர்களுடன் நுழைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக பொதுத் தேர்தல்கள் வாக்குப்பதிவின் போது மஹிந்த ராஜபக்ஷ 100 வாக்காளர்களுடன் மூன்று வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்ததாகக் கூற…

    • 0 replies
    • 563 views
  11. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர், தனது படம் பொறிக்கப்பட்ட இலவச பியர் ரின் விநியோகித்ததாக முறையிடப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசங்களில் நேற்று இரவு பரவலாக பியர் ரின் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஹைஏஸ் வாகனம் ஒன்றில் வந்த கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மீசாலை, அல்லாரை, புத்தூர் சந்தியடி பகுதிகளில் இளைஞர்களிற்கு பியர் வழங்கினர். இளைஞர்கள் கூட்டமாக நிற்கும் இடங்கள், விளையாட ஒன்றுகூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி இலவச பியர் வழங்கினர். அந்த பியர் ரின்களில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு பொதுமக்கள் தொலைபேசியில் முறையிட்டனர்…

  12. வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் நின்று எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை அவர்கள் வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பில் தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்களிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கண்காணிப்பாளர்களும் பொலிசாரும் அவர்களை மடக்கிப்பிடித்தனர். தற்போது அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள். https://www.pagetamil.com/138169/

  13. மன்னாரில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு பணிகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும். மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆய…

  14. திருகோணமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு 2020 பாராளுமன்றத் தேர்தல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் இன்று காலை 07.00 மணி முதல் இடம் பெற்று வருகிறது. வாக்களிப்பானது சுகாதார நடை முறைகளை பின்பற்றியவாறு வாக்களிப்பு இடம் பெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தம்பலகாமம் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/87361

  15. யாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது. காலையிலேயே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர் யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. https://www.virakesari.lk/article/87360

  16. மட்டக்களப்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் 9 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைககள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு அமைதியான முறையில் ஆரம்பமாகின. இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்…

  17. காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம் இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி சார்பாக 39 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 11 மீறல்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தலா 04 தேர்தல் மீறல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இ…

  18. வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் தங்கள் வாக்குச் சீட்டுகளை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த …

  19. குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்ற நிலையில் வன்முற…

  20. கடலட்டை பிடிக்க தடை கோரிய மனு நிராகரிப்பு! நீதிமன்ற உத்தரவை மீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் பருத்தித்துறை நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் செய்வதற்கு எதிராக கடந்த வருடம் தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில் இவ்ருடம் மீண்டும் கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து மீண்டும் கடந்த மாதம் 19ம் திகதி நீதிமன்றில் மீள் தடை உத்தரவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த விண்ணப்பம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்பினரது சமர்ப்பணங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இது…

  21. தமிழ் தேசிய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் தமிழ் தேசிய கோட்பாடுகளை சொல்லிலும் செயலிலும் வரித்துக் கொள்வது மட்டும் அல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை இனம் கண்டு வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைத் தேர்தலில் மக்களின் சனநாயக வாக்கு வலிமை என்பது இன்றியமையாதது. தமிழீழ மக்கள் அனைவரும் தமது வாக்குகளைத் தவறாமல் எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை சொல்லிலும் செயலிலும் வலியுறுத்தி, அதற்காக பரிகார நீதி வேண்டி உளசுத்தியுடன் தொடர்ச்சியாக அகத்த…

  22. யாழ். மாவட்ட இராணுத் தளபதி இடமாற்றம்; கிழக்குத் தளபதி யாழ்ப்பாணம் வருகின்றார் August 4, 2020 யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொண்டர் படையணியின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்ட புதிய தளபதியாக தற்போதைய கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளார். பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது http://thinakkural.lk/article/59979

  23. நாடுமுழுவதும் உள்ள மதுபான சாலைகளுக்கு பூட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினமும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் விற்பனை நிலைய அனுமதி பத்திரமும் இரத்து செய்யப்படும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்தோடு, இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1913 இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பாதுகாப்பினை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வன்…

    • 0 replies
    • 417 views
  24. பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) மாலை ஒன்று கூடியது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக ச…

    • 0 replies
    • 389 views
  25. தாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு வெற்றி பெற்றால் ஓகஸ்ட் 7 அல்லது 8 திகதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே புதிய பிரதமர் பதவியேற்பார் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் வெற்றிபெற்றதும் முதலில் பிரதமர் பதவியேற்பார் என்றும் பின்னர், அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால் தேசிய அரசாங்கத்தினை அமைக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்த நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத்…

    • 0 replies
    • 433 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.