ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம் தேர்தல் நடத்தப்படும் தினம் மற்றும் அதற்கான நடவடிக்கை என்பன தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அதற்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் தினம் மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஐந்து நீதியரசர்கள் கொண்ட ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் சம்பந்தமான சமர்பணங்கள் கடந்த 10 அமர்வுகளில் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், பொதுத்தேர்தலு…
-
- 0 replies
- 399 views
-
-
நிறுத்தப்பட்ட வட்டியை அறவிடும் முயற்சியில் வணிக வங்கிகள்..! கொரோனா நிவாரணமாக கடனுக்கான வட்டி அறவிடுவதை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி மீண்டும் வட்டியை அறவிட அனுமதி வழங்குமாறு வணிக வங்கிகள், இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடனுக்காக வட்டியில் ஒரு பகுதியையாவது அறவிட இடமளிக்குமாறு வங்கியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கடன்களுக்கான வட்டி அறவிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட காரணத்தினால், வங்கிகளின் வட்டி வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக வணிக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வட்டியை மீண்டும் அறவிடுவது குறி்த்து வணிக வங்கிகள், மத்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி …
-
- 1 reply
- 339 views
-
-
உறவுகளின் கண்ணீர் போராட்டம்1200 ஆவது நாளை எட்டியது! by : Yuganthini வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (திங்கட்கிழமை) 1200 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் போராட்டமொன்று, வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 12.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, சமூக இடைவெளிகளை பேணி இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 5 replies
- 935 views
-
-
கட்சியிலிருந்து பிரிந்துசென்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பலர் பலவிதமான சூழ்ச்சிகளை செய்து சுதந்திர கட்சியை அழிப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். கட்சியிலிருந்து பிரிந்துசென்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு கட்சியில் இணைவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும…
-
- 0 replies
- 381 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு கிராம அலுவலர் மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மந்துவில் கிராம அலுவலகராக பணியாற்றும் பு.கஜகோகுலன் எனும் கிராம அலுவலர் மக்களின் காணிப்பிரச்சனை ஒன்று தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்காக சென்று காணியினை பார்வையிட்டுவிட்டு திரும்பியபோது பிரச்சனைக்குரிய காணி உரிமையாளர் கிராம அலுவலகரை மறித்து கெட்டவார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார் . இச்சம்பவம் தொடர்பில் கிராம சேவகர் ஊடாக உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய்பட்டதுடன் ,பிரதேச செயலாளர்,மற…
-
- 0 replies
- 477 views
-
-
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை (08) முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை வழமைப் ப…
-
- 2 replies
- 408 views
-
-
பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையில் மாற்றம் பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமும் அறிவித்துள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவத்துள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்து ஏனைய பொருட்கள் அனைத்தினதும் இறக்குமதியில் கட்டுபாடுகள் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வெதுப்பகங்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வெதுப்பக உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கலப்பும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 577 views
-
-
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை! by : Krushnamoorthy Dushanthini நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான நடைமுறையில் கூட்டத்தொடரை நடத்த முடியாது என்பதால் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். மைய மண்டபத்தில் சுமார் 800 பேர் அமர இடவசதியுள்ளது. ஆகவே சமூக இடைவெளியை பின்பற்றி மைய மண்டபத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆல…
-
- 1 reply
- 372 views
-
-
In இலங்கை June 2, 2020 10:50 am GMT 0 Comments 1135 by : Yuganthini முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன தம்மிடம் கப்பம் கோரியதாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார். அதன்பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ரவீந்திர விஜேகுணரட்ன என்னிடம் மறைமுகமாக கப்பம் கோரினார். அத்துடன் இரண்டு பேரை ஆயுதங்களுடன் அனுப்பி என்னை கொலை செய்யவும் முயற்சித்திருந்தார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்ப…
-
- 0 replies
- 311 views
-
-
p>மூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்றையதினம் (01.06.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரவழைப்பதற்காக, சட்ட மா அதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், அரசாங்கத்தின் தலைவன் என்ற ரீதியில், மூன்று நாள்களில் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டது. மஹேந்திரனை, மத்திய வங…
-
- 3 replies
- 612 views
-
-
இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியா- தமிழ்நாடு, கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று அதிகாலை, 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர். வருகை தந்த இருவரையும், 33 வயதுடைய நபரின் தந்தையார் ஊடாக மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு …
-
- 0 replies
- 478 views
-
-
உயர் நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி – பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை by : Jeyachandran Vithushan தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாளை ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொதுத் தேர்தலுக்கான 17 மில்லியன் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று நடைபெறும் என்றும் அரச அச்சு திணைக்களம் அறிவித்துள்ளது. ஜூன் 20…
-
- 0 replies
- 311 views
-
-
இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் 55 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நேற்றைய தினம் தனது பதவியினை இராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/83215
-
- 0 replies
- 504 views
-
-
இ.தொ.கா தலைவராக மீண்டும் முத்து? மறைந்த ஆறுமுகன் தொண்டமான் வகித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மீண்டும் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரான முத்துசிவலிங்கம் நியமிக்கப்படலாம் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து முத்துசிவலிங்கம், செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், மாரிமுத்து ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் தலைவராக முத்துசிவலிங்கம் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்திற்குள் இது தொடர்பாக இ.தொ.கா இறுதி தீர்மானங்களை எடுக்கவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-கா-தலைவராக-மீண்டும்-ம/
-
- 0 replies
- 800 views
-
-
இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு June 2, 2020 உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது. இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை எழுந்திருப்பதுடன், இதை குறுகியகால, இடைக்கால, நீண்டகால கண்ணோட்டங்களுடன் ச…
-
- 0 replies
- 276 views
-
-
தனியார்துறை ஊழியர்களிடமிருந்து 15000 முறைப்பாடுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களில் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 15,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியமை, மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை, மாதாந்த கொடுப்பனவில் ஒரு பகுதி மட்டும் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கி…
-
- 0 replies
- 374 views
-
-
யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-பிரபல-பாடசாலை-ஒன்றி/
-
- 0 replies
- 523 views
-
-
நாட்டில் விளைகின்ற பயிரை இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது- சமல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்காதென வேளாண்மை துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் அம்பலாந்தோட்டை- தெலவில்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே இத்தகையதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் விவசாயத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தற்போதைய அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டில்-விளைகின்ற-…
-
- 0 replies
- 248 views
-
-
சட்டரீதியான சிக்கல் இல்லையாயின் தேர்தலை நடத்துவதவற்கான மற்றொரு திகதியை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய தேர்தலை நடத்த தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தரதலககன-வற-தகத-அறவககபபடம/175-251199 இறுதி தீர்மானம் நாளை பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்த உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது. இதற்கமைய நாளை பி.ப 3.00 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுமென, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மனுக்க…
-
- 1 reply
- 423 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் அரசியலுக்கு திரும்பியிருந்தால் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ள விடங்கள் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்ப…
-
- 1 reply
- 501 views
-
-
-க. அகரன் வவுனியாவில், சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம், இன்றுடன் (01) 1200 நாள்களை எட்டியது. இதையொட்டி, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, இன்று (01) பிற்பகல் 12.15 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சமூக இடைவெளிகளை பேணி, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தா…
-
- 1 reply
- 423 views
-
-
திரிபோஷா கிடைக்குமா? கிடைக்காதா? திரிபோஷா உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள திரிபோஷாவை உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை ஜா-எல திரிபோஷா தொழிற்சாலையின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார். எனினும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு திரிபோஷா விநியோகம் முறையாக நடைபெறுவதில்லை என அரச குடும்ப நல சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சில சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கடந்த பெப்பிரவரி மாதத்தின் பின்னர் திரிபோஷா இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் திரிபோஷாவிற்கு விநியோகத்திற்கு காணப்பட்ட கேள்வி அறிவிப்பு தொடர்பில் காணப்பட்ட பிரச்சினை காரணமாக திரிபோ…
-
- 0 replies
- 488 views
-
-
வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் கட்டையால் தாக்கினர் – மாற்றுத்திறனாளி முறைப்பாடு! மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதா…
-
- 0 replies
- 298 views
-
-
(ஆர்.யசி) அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்தார். பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொண்டதாக பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான செயற்பட்டு வருகின்ற பொது சுகாதாரத்…
-
- 2 replies
- 457 views
-
-
In இலங்கை May 31, 2020 9:53 am GMT 0 Comments 1432 by : Dhackshala குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளன. கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆராய்வதற்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.ஆ.று. வீரகோன் குருநாகல் – மாவத்தகம பகுதிக்கு சென்றுள்ளார். கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்ப…
-
- 3 replies
- 738 views
-