Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுணதீவு பொலிஸாரின் கொலையின் மர்மம் துலக்கப்பட்டது ; சீயோன் தேவாலய தாக்குதல் விசாரணையின் போதே அம்பலம் (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் மர்மம் துலக்கப்பட்டதாக சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க தெரிவித்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரிவோல்வர்க…

    • 1 reply
    • 597 views
  2. அரச திணைக்கள ஊழல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்! மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (20) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், ‘மன்னார் மாவட்டத்தில் சில அரச திணைக்கள அதிகாரிகள், பகிரங்கமாக இலஞ்சம் பெறுகின்றார்கள். குறிப்பாக புவிச்சரிதவியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிஸார் மற்றும் வேறு சில திணைக்கள அதிகாரிகளும் இதில் அடங்குகின்றனர். மேலும் மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பல்வேறு விதமான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. மணல் அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் ஒவ்வொரு மாதமும் இலஞ்சம் பெறுகின்றனர்.…

  3. முல்லைத்தீவில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்…! முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இராணுவத்தினரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு – மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், சாலை உள்ளிட்ட கிராமங்கள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக மாத்தளன் சந்தியில் இணைகின்ற இரணைப்பாலை வீதி, பொக்கணை வீதி, மாந்தளன், மற்றும் சாலை ஆகிய கிராமங்களுக்கான வீதி ஆகிய மூன்று வீதிகளிலும் இராணுவத்தால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இரட்டை வாய்க்காலி…

  4. 71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுர்வு இராணுவத்தைச் சேர்ந்த 71 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இராணுவத்தின் கேணல் பதவியில் இருந்த 41 அதிகாரிகள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோன்று, லெப்டினன் கேணல் பதவியில் இருந்த 30 பேர், கேணல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் 15ம் திகதி முதல் குறித்த பதவியுயர்வு அமுலுக்கு வந்துள்ளது. https://newuthayan.com/71-இராணுவ-அதிகாரிகளுக்கு/

  5. தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா! இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர…

  6. 9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை; ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து June 19, 2020 “9 மாகாணங்களும் பெளத்த – சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பெளத்த மதத்த…

    • 5 replies
    • 718 views
  7. தேர்தலை தமிழ் மக்கள் தமது கருவியாக பயன்படுத்த வேண்டும் – உருத்திரகுமாரன் இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘தேர்தல் தொடர்பாக கொள்கை முடிவுகளே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளாக எடுத்து வருகின்றது. அந்தவகையில் எம்மைப் பொறுத்தவரை தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. மேல…

    • 1 reply
    • 421 views
  8. நாவாந்துறையில் 520 கிலோ இறைச்சி மீட்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (20) காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்பட…

  9. தாக்குதலுக்கு சென்ற ஏழுபேர் கைது! யாழ்ப்பாணம் – நல்லூரில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் ஒருவரைத் தாக்குவதற்காக 7 பேர் கொண்ட குழு இளைஞரது வீடு தேடி மோட்டார் சைக்கிள்களில் நேற்று பிற்பகல் சென்றது. இதனை அறிந்த இளைஞனின் மூத்த சகோதரன், குறித்த குழுவை விரட்டிச் சென்ற போது, மோட்டார் சைக்கிள் ஒன்று நிலை குலைந்து வீதியில் விபத்துக்கு உள்ளாகியதால் இரண்டு பேர் சிக்கினர். குறித்த இளைஞர்கள் இருவரையும் தாக்கிய பின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைத்தனர். இளைஞர்கள் இருவரிடம் முன்னெடுக…

  10. 115,000 கோடியை கடனுக்காக வழங்குவதால் ரூபாவின் பெறுமதி குறையும் ஆபத்து மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உறங்குவதாக நாட்டின் உயர்மட்ட வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக குற்றசாட்டிய தினத்தன்றே இலங்கை மத்திய வங்கியினால் 115,000 கோடியை விடுவிக்கும் முடிவானது ரூபாவின் மதிப்பிழப்பு உள்ளிட்ட பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வணிக வங்கிகளால் மத்திய வங்கியில் கட்டாயம் வைப்புச் செய்ய வேண்டிய நிதியின் அளவை நான்கு வீதத்தில் இருந்து இரண்டு வீதமாக சட்டரீதியான இருப்பு விகிதத்தை (SRR) குறைப்பதன் மூலம் கடன் வழங்க வசதியாக 115 பில்லியன் ரூபாவை விடு…

  11. வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது. இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர். https://newuthayan.com/வரணி-சிட்டிவேரம்-கண்ணகி/

  12. யாழ்.ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. June 19, 2020 யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. டில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஊடக மன்றத்திற்கான இலட்சினையை மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து நாடாவை வெட்டி அங்குரார்பணம் செய்து வைத்தனர். நிகழ்விலே சர்வமதத்தலைவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கணேசலிங்கம், யாழ் பல்கலைக்கழக கிறிஸ்தவ துறை விரிவுரையாளர் அருட்தந்தை இ.இரவிச்சந்திரன் அடிகளார் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழ்பேசும் மக்களின் நோக்கு நிலையில் இருந்து எதிர்வரும்…

  13. மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று (17) முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச செயலாளருடன் ஏற்படுத்திக்கொண்ட உரையாடலின் அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் உரிய தீர்வை தருவதாக தெரிவித்திருந்தால், அன்…

  14. “சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர், அவருக்கு ஆளுமை இல்லை, பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்” என்றெல்லாம் பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவராவார். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கூறியுள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக கருணா அம்மான் தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “எதிரியாக இருந்தாலும், துரோகியாக இருந்தாலும் விமர்சனம் எப்போதும் ஆரோக்கியமாக நாகரீகமாக இருக்கவேண்டும். ஆனால் கருணாவின் விமர்சனம் வேடிக்கையாகவ…

  15. நாளை கொடியேற்றம் காண்கிறாள் நயினை நாகபூஷணி வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை ( 20) நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை (04) தீர்த்தோற்சவமும் இடம்பெறும். தற்போது நாட்டிலும், உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள கொரோனாத் தொற்று நோய் காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலை காரணமாக நயினாதீவைச் சேர்ந்த 30 அடியவர்கள் மாத்திரமே மஹோற்சவ தினங்களில் கலந்து கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். …

  16. பலம்மிக்க ஐதேகவின் பிளவு கவலையே – தயாசிறி குமுறல் பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவுபட்டது கவலை அளிக்கிறது. ஏதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (19) ஹட்டனில் திறந்து வைக்கப்பட்ட போது இதனை தெரிவித்தார். மேலும், ‘நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுனவால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்காரணமாகவே தனித்து போட்டியிடுகின்றோம். ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படுதோல்வியடையும் என்பது உறுதி. பலம்ம…

  17. கூட்டமைப்பில் இருக்கும் சிலர் கட்சியை பலவீனப்படுத்துகின்றர்! – செல்வம் குற்றச்சாட்டு by : Vithushagan தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தா…

    • 1 reply
    • 456 views
  18. யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார். …

    • 8 replies
    • 1.3k views
  19. பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பாலித்த-தெவரப்பெரும-வைத்தியசாலையில்/175-251979 பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்…

    • 4 replies
    • 995 views
  20. ஸ்ரீலங்காவின் பூதாகர சக்தியாக வளர்ச்சியடைந்த கோட்டாபய! சூடு பிடிக்கும் அரசியல் களம் ஸ்ரீலங்காவின் பூதாகர இனவாத சக்தியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம் என ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா. கஜதீபன் தெரிவித்திருக்கிறார். ஐபிசி ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தொடர்பில் நமது ஊடகத்திற்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்ததாவது, https://www.ibctamil.com/srilanka/80/145469?ref=imp-news

  21. திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை! எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அறிறுத்தல்களைப்பின்பற்றி திரையரங்குகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திரையரங்குகளுக்கு வருகைதருவோர் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாத…

  22. முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு by : Litharsan ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 மாதங்களாக இடம்பெற்ற முறையற்ற நிர்வாகமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கொவிட்-19 தொற்றும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை மத்திய…

    • 0 replies
    • 368 views
  23. ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை by : Yuganthini முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்ன…

    • 0 replies
    • 374 views
  24. இலங்கை அகழாய்வில் ஆதிமனிதர்களின் 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOSHAN WEDAGE இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடி…

  25. சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்…! கொரோனா தொற்றினால் தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகம் என்பதால் எடை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.