Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அலெக்ஸ்சான்டாராக மாறினார் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான சிங்கப்பூரில் தலைமறைவாக உள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்ஸ்சான்டனர் என்று மாற்றியுள்ளதாக இன்ரர்போல் (சர்வதேச பொலிஸ்) தெரிவித்துள்ளது. இதனை நிரந்தர மேல் நீதிமன்றில் இன்று (16) சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். https://newuthayan.com/அலெக்ஸ்சான்டாராக-மாறினா/

  2. விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் – ஆனந்த சங்கரி எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.அதைவிடுத்து சி . வி. விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் க…

    • 2 replies
    • 461 views
  3. மாமனிதர் கௌரவத்தை நீக்கியதில் உடன்பாடில்லை June 15, 2020 இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை. நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கிலுள்ள 87ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட…

    • 1 reply
    • 594 views
  4. பெற்றோரின் கவனயீனம்; சிறுவனின் உயிர் பறிபோனது! யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக வீட்டு மேடையில் விழுந்துள்ளான். சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த சிறுவன் நேற்றைய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர், அத்துடன்…

  5. ஜூலை முதல் ஆரம்ப பாடசாலைகளும் திறப்பு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றியே ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. https://newuthayan.com/ஜூலை-முதல்-ஆரம்ப-பாடசால/

  6. பொலிஸ் நிலையத்துக்குள் கான்ஸ்டபிள் தற்கொலை! புத்தளம் – மாதம்பை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். https://newuthayan.com/பொலிஸ்-நிலையத்துக்குள்-க/

    • 1 reply
    • 512 views
  7. தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி… இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு…

    • 3 replies
    • 700 views
  8. தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத…

    • 1 reply
    • 346 views
  9. பொலிஸார் தாக்கிய சம்பவம்: ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம் முல்லைத்தீவு - முள்ளிவாய்கால் பகுதியைச் சேர்ந்த மூவர் மீது முல்லைத்தீவு பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (15) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. மே 6ஆம் திகதி இரவு வேளையில், முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய பகுதிகளுக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், நபரொருவருடைய பெயரைக் கேட்டு, அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டுவந்து உடனடியாக ஒப்படைக்குமாறும் தெரிவித்து, 3 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் சார்பில் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட…

  10. ஐ.தே.கவினாயாலேயே சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியும்’ ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே, நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், நாட்டின் பிற இனத்தவர்களைப் பாதுகாக்கவும், தமது கட்சியாலேயே முடியுமென்றார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தேர்தல் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைகளைத் திறப்பதற்காக, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை, ஐ.தே.க எதிர்க்காது என்றும் சஹ்ரான் குழுவினரால் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும்,…

    • 2 replies
    • 467 views
  11. தலைமையைத் தீரமானிப்பதற்கு இ.தொ.கா புது வியூகம்? அழகன் கனகராஜ் நாடாளுமன்றத் தேர்தலில், ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளருக்கே, காங்கிரஸின் தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. ஆகையால், வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் தருவாயில் இன்றேல், மௌன காலத்தில் அறிவிக்கப்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், நடைபெறவுள்ள ந…

  12. எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…

    • 8 replies
    • 1.4k views
  13. உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் தவறின் பேராபத்து - வடக்கு ஆளுநருக்கு பறந்த கடிதம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று (2020.06.15) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய மீனவர்கள் வடக்கின் கடல் எல்லைப் பரப்பிற்குள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பின்வரும் விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக மீன்பிடியை மட்டும் தமது வாழ்வாதாரம…

  14. ஸ்ரீலங்கா மீது நம்பிக்கையில்லை! நிதி வழங்குவதை நிறுத்திய சர்வதேச நிறுவனம் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை இல்லாமல் போயுள்ளதால், அரச திட்டங்களுக்காக நிதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஜெய்கா என்ற ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்புகளுக்கான முகவர் அமைப்பு, நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கடன் நிலைமைகள் மற்றும் பொதுவாக அரசாங்கம் கையாளும் நிதி கொள்கை சம்பந்தமாக எவ்வித நம்பிக்கையும் இல்லை என அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் ஜெய்கா நிறுவனம், ஸ்ரீலங்காவின் பழமையான மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்காளி அமைப்பாகும். இந்த நிறுவனம் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக கடன் மற்றும் நிதியுதவிகளை வழங்…

  15. ஊரடங்குச் சட்டம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் போது, வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோயாளர்கள் பயணிப்பதைத் தடுப்பதற்கு சுகாதார அமைச்சுக்கு அதிகாரமுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு அது போதுமானதல்ல. வழமைக்கு மாறான சுகாதார அவசர நிலையின்போது, பொதுமக்களின் சுகாதாரத்தையும் ப…

  16. கோட்டாபயவின் செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வு -சிவில் சமுக பிரதிநிதிகள் அறிக்கை கோட்டாய ராஜபக்ச உருவாக்கியுள்ள செயலணிகள் நாட்டை இராணுவ மயப்படுத்துவதற்கான நகர்வாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்காவின் சிவில் சமூகபிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலணிகள் தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 59 சிவில் சமூக பிரதிநிதிகளும் 15 அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஏற்கனவே உள்ள தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றை புறக்கணித்து இந்த செயலணிகள் பரந்துபட்ட தெளிவற்ற ஆணைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள…

  17. Miau Miau: இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினை.காவல் துறை ஆயிதம் வைத்து இருப்பதா. இல்லை யா. இதுவா. தமிழ் மக்களின் பிரச்சினை .அது என்ன வடகிழக்கு. வேறு நாடு. தெற்கு மேற்கு. வேறு நாடு. அது உண்மை தமிழ் ஈழம். வடகிழக்கு. ஆனால். ஆயிதத்தை வைத்து. தமிழ் மக்களின். உரிமைகளை. சிங்களவன் செய்யும் அரசியலுக்கு. தமிழ் மக்கள் மிகவும் அவதானமா இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஆயிதம் இல்லாத. அரசியல் தீர்வு. வடகிழக்கு எந்த ஒரு காலத்திலும் ஆயிதம் தரித்த ராணுவம் பொலிஸ் நிர்வாகம் இரு க்க. கூடாது. இதை யார் சிபாரிசு செய்தார். ஒரு சிங்கள எம் பி. தமிழ் பேச தெரியும் என்பது வேறு. கோட்டாபாயாவிற்கு இவர் ஆலோசனை.தமிழ் மக்களை இவர்கள் எப்படி நினைத்து இப்படி இவர்கள். பேசுகின்றன. தமிழ…

  18. பொலிஸ் வேடமிட்டு கொள்ளையிட்ட அதிபயங்கர கொள்ளையர்கள் சிக்கினர் பொலிஸ் சீருடை அணிந்து கொண்டு தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று கூறி பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்றை நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொங்கொடமுள்ள பகுதியில் வீடொன்றுக்கு காரொன்றில் பொலிஸ் சீருடையில் சென்ற நால்வர் தங்களை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் என்று தம்மை அடையாளப்படுத்தி கொரோனா நோய்த் தொற்று சந்தேக நபர்களை குறித்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பாக க…

  19. ஜனாதிபதியின் இரு முக்கிய அறிவிப்பு! கைத்தறி மற்றும் பற்றிக் ஆடைகளை இறுக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இன்று (15) இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஊரடங்கு உத்தரவின் போது பொலிஸார் கைப்பற்றிய அனைத்து வாகனங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/ஜனாதிபதியின்-இரு-முக்கிய/

  20. ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப்பை சிஐடி கைப்பற்றியது தனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வருகைதந்த சிஐடியினர் ஆணைப்பத்திரம் இன்றி தனது லப்டொப்பை கைப்பற்ற முயன்ற நிலையில், கடந்த 9ம் திகதி ஆணைப்பத்திரத்துடன் வந்த சிஐடியினர் தனது லப்டொப்பை கைப்பற்றி சென்றனர் என்று சன்டே ஒப்சேவர் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார். 2019 நவம்பரில் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் பல மாதங்களாக தரிஷா பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களிடம் தனது மின்னணு சாதனங்கள் குறித்து குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக தரிஷா கூறினார். மேலும், …

  21. சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். நேற்ற அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணா போன்ற கண்டகண்டவர்களிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றார். இந்த நிலையில் இன்று கருணா செய்தியாளர்களை சந்தித்போது, சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்…

    • 2 replies
    • 594 views
  22. (எம்.ஆர்.எம்.வஸீம்) சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒருசிலரின் பொறுப்பற்ற இந்த செயலால் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். கொரோனா தொற்று எச்சரிக்கை பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வராதநிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று தாக்கம் குறைவட…

  23. ஆவா குழு தலைவரின், பிறந்த நாளுக்கு... கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்கள் கைது ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/ஆவா-குழு-தலைவரின்-பிறந்த/

    • 2 replies
    • 1.3k views
  24. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் அண்மையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக சேவையாற்றியிருந்த ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கபட்டார். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்று இருவேறு வகையில் கருத்துக்கள் முன…

  25. (எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றின் பின்னர் நாட்டிலுள்ள பிரஜைகள் மாத்திரமின்றி அரசாங்கமும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கையின் காரணமாக ஜப்பான் வழங்கவிருந்த கடன் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றுக்கு பின்னர் நாட்டில் அனைத்து பிரஜைகளும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அனைவருக்கும் வருமானம் அற்றுப் போயுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொழில் அற்றுப்போயுள்ளது. தேவை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.