Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் நிறைவடையும் கொரோனா காலம்: ஒரு வாரமாக தொற்றாளர்கள் இல்லை! கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் ஒருவரும் கொரோனா தொற்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பலருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கு கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அதேநேரம், கொரோனா சந்தேகத்தில் தற்போதும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர…

  2. இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி! by : Benitlas கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று(புதன்கிழமை) பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போதே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் 22 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றி…

  3. இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே மாதம் 10ஆம் திகதி வரை திறக்கப்படமாட்டாது என்றும் அந்த வகையில், 2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதியன்று, பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட்-19 பரவும் அபாயம் காரணமாக, அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே, பாடசாலையை 11ஆம் திகதி மீள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/இரண்டாம்-தவணைக்காக-11ஆம்-திகதி-பாடசாலைகள்-திறக்கும்/175-248411

    • 0 replies
    • 336 views
  4. தமிழர்கள் உடனடியாக தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொரோனா அச்சம் காரணமாக தொடரும் ஊரடங்கு சட்டத்தினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது தொழில்களை இழந்து பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக எமது அரசியல் இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கம் தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட…

  5. கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். உலக நாடுகளுடன் அதிக தொடர்புடைய நகரங்களும், நகர மக்களுமே தொற்றின் பிரதான இடம் பிடித்த மாவட்டங்களாக உள்ளன. இதே நேரம் இத்தகைய நெருக்கடியின் மத்தியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிடுகின்றதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கட்டுரையும் கொரோனா தொற்றின் மத்தியில் தேர்தலின் அவசியப்பாடு பற்றி உரையாட முயலுகிறது. முதலாவது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீண்டும் அவசரகால சட்டத்தின் விதியின் கீழ் கூட்டமுடியுமென அரசியலமைப்பு கூறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கை தொடர்பில் முன்னாள் எதிர்க்கட்…

  6. தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் பற்றியும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பற்றியும் விமர்சிப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு என்ன அருகதை உள்ளது? என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்; வாலிபர் முன்னணியின் தலைவரும், கோறளைப் பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான கி.சேயோன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் 2004ம் ஆண்டு வெருகல் போரில் பெண் போராளிகள் விடயத்தில் ஒழுக்க ரீதியான தவறினை இழைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் நேற்று (10) கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் பின்வருமாறு தனது கருத்தினையும் நேற்றைய தினமே வெளிப்படுத்…

  7. 1,000 ரூபாய் விவகாரம்: தவறு என்று ஒப்புக்கொண்டார் மனோ மலையக தொழிலாளிக்கு, யாரும் புதிதாக ஆயிரம் ரூபாய் தரத் தேவையில்லை என்றும் துண்டுவிழும் 240 ரூபாயைத் தான் தரவேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப்போது தொழிலாளிக்கு கிடைப்பது 760 ரூபாய் என்றும் 1,000 ரூபாயில் துண்டு விழும் தொகையான 240 ரூபாயில் முதலில் 140 ரூபாயையும் பின்னர் 100 ரூபாயையும் அடுத்ததாக 50 ரூபாயையும் தரவுதற்கு தாங்கள் முயன்றதாகவும் …

    • 1 reply
    • 455 views
  8. முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்என்ன?முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின்வெளிப்படுத்துகை.11-04-2020

    • 0 replies
    • 316 views
  9. சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது. இந்நிலையில், யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்…

    • 29 replies
    • 2.6k views
  10. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில் அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே, அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் …

    • 44 replies
    • 2.6k views
  11. 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் 20(5) ஆம் பிரிவின் கீழான கட்டளை விதி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரிசி வகைகளின் கிலோகிராம் ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா - ரூபாய் 90, கீரி சம்பா - ரூபாய் 125, சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 90, நாட்டரிசி - ரூபாய் 90, பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூபாய் 85. நேற்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலையில் அரிசியை விற்பனை செய்தல், அதற்காக முன்னிற்றல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் ஆகியன மேற்கொள்ளப்…

  12. (தி.சோபிதன்) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தினர் பசியினால் துன்பப்படுபவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாது பல்வேறுபட்ட மக்கள் உண்ண உணவின்றி துன்பப்படுகின்றதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அதிகமான ஆலயங்கள் காணப்படுகின்ற ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக பல ஆலயங்களில் இந்தமுறை மஹோற்சவம் நடை பெறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே, ஆலய நிர்வாகிகள் உணவின்றி துன்பப்படுகின்ற மக்களுக்கு அந்த ஆலய மகோற்சவத்திற்கென ஒதுக்கிய நிதியில் ஒரு பகு…

    • 3 replies
    • 417 views
  13. வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம்! வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் வாகனங்களில் பயணிப்போர் உட்பட …

  14. (ஆர்.யசி) இந்தியாவில் "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியர்கள் எந்த வழிகளிலும் இலங்கைக்கு நுழையாதிருக்க இலங்கையின் வடக்கு கடல் எல்லையை பலப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப்படை மூலமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கை கடற்படை தளபதி ரியால் அட்மிரல் பியல் டி சில்வா இது குறித்து கூறுகையில், "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலக நாடுகளை அதிகம் பாதித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் மோசமான நிலைமையை அடுத்து இலங்கையின் கடல் எல்லையை பலப்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் த…

    • 1 reply
    • 329 views
  15. காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா மையமாக மாற்றம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக சுகாதார திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன. காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரையை அண்டியவாறு அமையப் ப…

    • 2 replies
    • 488 views
  16. கொரோனா வைரஸ்: 20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது. இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இலங்கையின் பிரதான நகரமாக திகழ்கின்ற கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்வின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்ப…

  17. தற்போதைய சூழ்நிலையில் ஏன் இப்படியான அநியாயத்தை செய்கிறீர்கள் கடைக்காரர்களே!!! உங்களை கொரோனா இல்லை அதைவிட கொடிய வைரஸ் தாக்கும்!!!. 😥 கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..! அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

  18. சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இப்போது நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று தொற்று நோயியல் தலைவர், வைத்தியர் சுதத் சமவீர தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதே எமது கையில் உள்ள சவாலாகும். அத்தகைய நபர்களை கண்டறிய சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து செல்வது இரத்த மாதிரி சோனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நபர்களை கண்டறியும் ஒருமுறையானது, ‘அதிக ஆபத்துள்ள வலயங்களுக்கு சென்று மக்களிடையில் கொரோனா பரிசோதனை செய்வதாகும்.’ இதன்மூலம் வைரஸ் பரவல் உள்ளதா என்ற தீர்மானத்துக்கு வரமுடியும். …

  19. (நா.தனுஜா) பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்வதும் அவசியமாகும். தற்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்தாலும் கூட, பொருளாதாரத்தை மீட்கமுடியாத நிலையே ஏற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமளிக்கக்கூடியவாறான அறிவுறுத்தல்கள் மத்திய வங்கியினால் ஏனைய அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பினும் கூட, அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் கடன் வழங்கல், கடன்களை மீள வசூலித்தல் உள்ளிட்ட அனைத்தும் மத்திய வங்கியினால் வழங்கப்…

    • 2 replies
    • 343 views
  20. (ஆர்.யசி) "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும், மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டையும் நாடு சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் இந்தியா வசமுள்ள திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கத்தின் அனுமதியை கோருகின்றது இலங்கை அரசாங்கம். அத்தோடு தெரிவுசெய்ய அவசியமான மருந்து வகைகளையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவ…

    • 0 replies
    • 344 views
  21. (எம்.எப்.எம்.பஸீர்) அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இது குறித்து இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்ததாவது, 'தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் சிறிய வீழ்ச்சியை அவதா…

    • 0 replies
    • 386 views
  22. ’யாழ். பல்கலைக்கழகத்தின் 89 பேருக்கும் தொற்றில்லை’ Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 02:22 - 0 - 2 எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், இதுவரையில் 89 பேருக்கான கொரோனா தொற்று ஆய்வுகூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்று ஏற்பட்டில்லை என்று உறுதியாகியுள்ளதாக, பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியும் மருத்துவ நிபுணருமான எஸ்.ரவிராஜ் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று (09) காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறனார். இந்த ஊடகச் சந்திப்பில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி மருத்துவர் எஸ்.…

    • 0 replies
    • 612 views
  23. In இலங்கை April 10, 2020 9:56 am GMT 0 Comments 1506 by : Benitlas கொரோனா வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையே நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், நிபுணர்களின் கருத்துக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டறிந்து கொண்டார். கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக அரசாங்கம், பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை என்பவற்றினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளா…

    • 0 replies
    • 305 views
  24. கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதிகள், தச்சர்கள், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்கள், பூக்கடைக்காரர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரத்தில் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நாள் சம்பளம் பெறுவோர் தொடர்பான புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 19 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. http://at…

    • 0 replies
    • 275 views
  25. கொரோனா வைரஸினால் பாடசாலை மட்டங்களிலும், கல்வித்துறையிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சமாளிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி நியமனத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்துறையை நிர்ணயிக்கும் முக்கியமான தரப்பினர் இந்த செயலணியில் இல்லாமை, தமிழ்ப் பாடசாலைகளை பிரதிநித்துவம் செய்யும் எவரும் இதில் நியமிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் இந்த நியமனத்தில் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸினால் கடந்த மார்ச் மாத இடையில் ஸ்ரீலங்காவிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உட்பட மேலதிக வகுப்பு நிலையங்களும் மறு அறிவித…

    • 0 replies
    • 308 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.