ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார். மஹிந்த பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், செல்லும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பரதமர-மஹநத-அடதத-வரம-இநதய-பயணம/175-244863
-
- 13 replies
- 1.2k views
-
-
அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்…. February 8, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படு…
-
- 4 replies
- 906 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு காலை கூடுகிறது – மாலை கூட்டணி கட்சிகள் சந்திப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை ஞாயிறுக்கிழமை கைச்சாத்தாக இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. நாளை செய்துகொள்ளப்படவிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் கூட்டணி தொடர்பான விளக்கங்களை மத்திய குழு உறுப்பினர்களுடன் விக்னேஸ்வரன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இதேவேளை, இன்று சனிக்கிழமை மாலை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் கட்சிகளின் தலைவர்களும் முக்கிய உறுப்பினர்களும் நாளைய நிகழ்வுக்கான இறுதி ஏற்பாடுகளை செய்வதற்…
-
- 1 reply
- 460 views
-
-
மகா பிழையை மறைக்க அரசாங்கம் பூச்சாண்டி காட்டும் செயல்- பிரதமர் செயலக அறிக்கை குறித்து தமிழரசுக் கட்சி by : Litharsan தமிழில் தேசிய கீதத்திற்குப் பதிலாக ஜனாதிபதியின் உரை தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுக் காட்டுவது பூச்சாண்டி காட்டும் செயலாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ் உரைப் பெயர்ப்பு எவ்விதத்திலும் ஈடாகாது. அவ்வாறு காட்ட முயல்வது, செய்யப்பட்ட ஒரு மகா பிழையை மறைப்பதற்குக் காட்டப்படுகின்ற பூச்சாண்டியே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் தேசிய கீதம் பாடுவதை விட ஜனாதிபதியின் உரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்…
-
- 3 replies
- 664 views
-
-
செய்த தவறுக்கு வருந்துகிறேன்: தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிட விரும்பம் – சாணக்கியன் by : Litharsan தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரைநீக்க விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “அமரர்.கணேசலிங்கம் ஐயா நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 742 views
-
-
மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி ந.சரவணபவ அன்பே சிவம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகாசபையின் “அன்பே சிவம்” விருது வழங்கலும் சஞ்சிகை வெளியீடும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.அகில இலங்கை சைவ மகாசபையின் அன்பே சிவம் விருது மகப்பேற்று மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி நமசிவாயம் சரவணபவ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அன்பே சிவம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து சிறப்பித்தார்.அத்துடன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான தொழில்நுட்ப பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா , கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஓய்வுநிலை விரிவுரையாளர் சி.…
-
- 0 replies
- 372 views
-
-
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்த்திற்கும் “ஆப்பு” தயாராகிறது? February 8, 2020 தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலபிட்டிய பகுதயில் நடைப்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், தொல்லியல் பாதுகாப்பு செயற்பாடுகளை உயர் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும், அதனால் அவற்றின் மீது முழுமையாக அதிகாரத்தை செலுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். இந்நிலையில் வடக்கு கிழ…
-
- 0 replies
- 352 views
-
-
வவுனியாவில் தொடரும் சோதனை நடவடிக்கை: மக்கள் அசௌகரியம் வவுனியாவில் இரண்டு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அண்மைய நாட்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே, இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதூர் மற்றும் ஓமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனையின்போது பேருந்துகளில் இருந்து வரும் பயணிகள் பகல், இரவு நேரங்களிலும் கீழே இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன் பின்னர் புதூர் பிரதேசத்தில் சில மீற்றர் தூரம் நடந்து சென்றே மீண்டு…
-
- 0 replies
- 239 views
-
-
சஜித் பிரேமதாச பதவிக்கு வந்திருந்தால் இதை விட மோசமாக இருந்திருப்பர் - வரதராஜப்பெருமாள்
-
- 0 replies
- 376 views
-
-
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கைக்கு முழு அளவில் அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும். அதே போன்று உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கான அனைத்து அமெரிக்க திட்டங்களிலும் தொடர்ந்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமை பேணப்படும் என அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெனிக் தெரிவித்தார். இலங்கை - அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட கால இலக்குகளை அடைய பொது திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலர் ஜோனோதன் ஹெ…
-
- 3 replies
- 511 views
-
-
இறால் பண்ணைகள் அமைப்பதற்கு எதிராக கடற்றொழில் விவசாய அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு! (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இறால் பண்ணைகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதால் அதற்கு எதிராக கடற்றொழில் மற்றும் விவசாய அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாண குடாக்கடற்பரப்பில் யாழ்ப்பாணம் மற்றும் வெளியிடங்களைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு இறால் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது. குறித்த விடையங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அதையும் தாண்டி பண்னைகள் அமைப்பதற்கு நடவட…
-
- 1 reply
- 802 views
-
-
வைத்தியர் ஷாபியின் வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி கமெரா காட்சிகளை அழித்தவர் யார்? by : Yuganthini சட்டவிரோத கருத்தடை மற்றும் முறையற்ற விதத்தில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே அழிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். மொஹமட் ஷாபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி…
-
- 1 reply
- 410 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடிவதை இடம்பெறு கின்றமை மற்றும் தொலைப்பேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு இன்று கூடி மிக முக்கியமான 3 தீர்மானங்களை எடுத்துள்ளது. மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகஸ்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ்அப் தகவல்கள், அலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளை பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு (S…
-
- 1 reply
- 357 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணியில் 50 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (7) காலை 11 மணியளவில் நடைபெற்றது. முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தலைமையில் நடைபெற்ற குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிரதம வருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை கலந்துகொண்டார். மேலும் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார், கறிற்றாஸ் செடே தேசிய நிலையத்தின் இயக்குநர் அருட்தந்தை மகேந்திர குணதிலக்க, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதைய இயக்குநர் அருட்தந்தை எஸ…
-
- 0 replies
- 379 views
-
-
பிரதமரின் கூற்று பொய்: மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழர்களின் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு- ரவிகரன் by : Litharsan மகாவலி ‘எல்’ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களுடைய பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தரவுகளைக் கொண்டு சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி ‘எல்’ வலயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக முல்லைத்தீவு கள்ளப்பாட்டுப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் மகாவலி ‘எல்’ காணிகள் சம்பந்தமான கேள்விக்கு, பி…
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்தம் குறித்து பேசும் போது சிங்களவர்கள் பௌத்த சமயம் அவர்களுடையது என நினைப்பதே பிரதான பிரச்சினையாகும். புத்தர் சிங்களவர் அல்ல எனக் கூறினால் மாரடைப்பு ஏற்படக் கூடியவர்கள் இருக்கின்றனர். விஜயன் சிங்களவர் அல்ல எனக் கூறினால், எங்களுடன் சண்டைக்கு வருபவர்களும் இருக்கின்றனர். பௌத்தத்தை சிங்களவர்களின் சொத்தாக மாற்றிக்கொள்ளாமல், பௌத்தம் என்பது வடக்கு, தெற்கு கிழக்கு, மேற்கு என அனைவருக்கும் சொந்தமான உலக தர்மம், வா…
-
- 0 replies
- 361 views
-
-
யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க தீர்மானம்? யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசாங்க அதிபர் வேதநாயகன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்தநிலையில் அவரை அரச திணைக்களம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அங்கு அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவை…
-
- 1 reply
- 419 views
-
-
தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல – வாசுதேவ நாணயக்கார! தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா – தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் வகையில் இனவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. எவரும் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் வகையில் செயற்பட்டால் அதுதொடர்பான தகவல்களை …
-
- 2 replies
- 474 views
-
-
கூட்டமைப்பின் வெற்றி அரசாங்கத்திற்கு சிம்ம சொற்பணமாக இருக்கும் – சரவணபவன்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி அரசாங்கத்திற்கு சிம்ம சொற்பணமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 22 ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்க அதிபர்களை மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும், தேர்தலினை இலக்காக கொண்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது க…
-
- 1 reply
- 314 views
-
-
367 பில்லியன் ரூபாயை பெற்றுக்கொடுக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த அரசாங்கம் ஒப்பந்தக்காரர்கள், விநியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு மீள செலுத்த வேண்டிய 367 பில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நிதியை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பந்துல குணவர்தன, “நாட்டில் கடந்த அரசாங்கத்தைப்போன்று வேறெந்தவொருஅரசாங்கமும் பாரிய மோசடி மற்றும் வீண் செலவுகளை மேற்கொள்ளவில்லை. நிதி ம…
-
- 0 replies
- 391 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அவர், 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் உயர்மட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும் என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். புதுடெல்லி தவிர்ந்து வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக உறவுகளை அ…
-
- 0 replies
- 261 views
-
-
முல்லைத்தீவு நிலக்கடலைச் செய்கையாளர் பிரச்சினை .
-
- 0 replies
- 291 views
-
-
ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே “ஆர்ப்பாட்ட இடம்” அமைக்கப்பட்டுள்ளது! by : Jeyachandran Vithushan கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகே, “ஆர்ப்பாட்ட இடம்” என புதிதாக அடையாளமிடப்பட்ட பலகை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட புதிய இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்று அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தவகையில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு வருபவர்கள் வாகனங்களை தரித்து நிறுத்தும் வாகன தரிப்பிடத்தில் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் காலி முகத்திடலில் பிரதான வீதியைத் தடுத்து ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு…
-
- 5 replies
- 981 views
-
-
பெரும் நிதி நெருக்கடியில் திணறும் ஸ்ரீலங்கா அரசு! எச்சரிக்கை மணி அடித்தார் மங்கள அரசாங்கம் தற்போது பெருமளவில் நிதி நெருக்கடியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவுடன், அரசாங்கமானது பெரும்பாலான வரிகளை குறைத்தது. இதனால் நாடு பெரும் பொருளாதார சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அது மாத்திரமல்லாது அரசாங்கம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தற்போதுள்ள சூழலில் வரிக் குறைப்பானது பொருத்தமற்ற செயலாகவே அமைந்திருக்கிறது. நிதிப்…
-
- 3 replies
- 748 views
-
-
-என்.ராஜ் “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்” என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது, கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் அதிகரித்தே கானப்படுகின்றது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதென்றார். “இவற்றின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் 578 பேர் தற்கொலைக்கு முயன்று அனுமதிக்கப்பட்டபோதும் அதில் 110பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்று 59 பேர் உயிரிக்க ஏனையோர் காப்பற்றப்பட்டனர். இதேபோன்று 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு…
-
- 1 reply
- 575 views
-