ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று முதல் தடை! நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று(புதன்கிழமை) முதல் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோள இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், இன்றைய தினத்திற்கு முன்னர் அவற்றை இறக்குமதி செய்யுமாறு விவசாயத் திணைக்களம் வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நிலக்கடலை-மற்றும்-சோள-இற/
-
- 0 replies
- 401 views
-
-
உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் – ஜனாதிபதி! அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதி…
-
- 0 replies
- 394 views
-
-
தமிழ் தலைமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.! வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கும் என தமிழ் தலைமைகள் கூறுவதை பற்றி கேள்வி பட்டுள்ளேன். அந்த முயற்சியை நிறுத்துங்கள். தீர்வு எங்களிடமே இருக்கின்றது. தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.‘தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என்ற சிந்தனையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் செயலை தமிழர் பிரதிநிதிகள் மாற்றிக்கொண்டு எம்மூடாகத் தீர்வைப் பெற முயலவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார். htt…
-
- 5 replies
- 3k views
- 1 follower
-
-
விதண்டாவாதம் பேசி தமிழ் மக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம்கொள்ள வைக்கக் கூடாது-சஜித் பிரேமதாச தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் விரும்புகின்ற அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்று நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். அரசியல் தீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதிலளிக்கும்போது தேசிய இனப் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்படாமையால்தான் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்து நாடு பெரும் அழிவுகளைச் சந்தித்தது.அந்த அழிவுகளை அபிவிருத்திகள் ஊடாகச் சீர்செய்யலாம். ஆனால், அன்று அரசி…
-
- 4 replies
- 688 views
- 1 follower
-
-
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (13) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது. இதனால் எவ்வித ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது! பிரஸெல்ஸ், ஜனவரி 13, 2020 ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து இந்த வருடமும் விடுதலைப் புலிகளின் பெயர் அகற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது. 2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபியின் தீர்மானம் 1373 / 2001 இன் பிரகாரம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அமைப்புக்களயும், தனி மனிதர்களையும் பட்டியலிட்டு அவர்கள் மீது பலவிதமான தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்து வருகிறது. 2006 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் அப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது, 21 அமைப்புகளினதும், 15 தனிமனிதர்களுடையதும…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய உயர்மட்ட அதிகாரியான ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு குறித்து வெளிப்படையாக எதனையும் கூறவில்லை. இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் அக்கறைக்குரிய விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நாவின் அமைப்புக்களில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். எனினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்றோவ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமது நாட்டினால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு இலங்கை வழங்கிவரும் ஆதரவிற்கு …
-
- 0 replies
- 516 views
-
-
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக இங்கிலாந்துடன் கலந்துரையாடல். " ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்…
-
- 1 reply
- 487 views
-
-
(எம்.மனோசித்ரா) 19 ஆம் திருத்தத்தை நீக்குவதன் மூலம் பிரதமருக்கு காணப்படும் அதிகாரத்தை தன்னகப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவதற்கான உள் நோக்கமும் இதுவே என எதிர்கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகின்றன. இதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் தற்போது அதிகார மோதலொன்று ஏற்பட்டுள்ளது. இதனை அவர்கள…
-
- 2 replies
- 491 views
-
-
கூட்டமைப்பின் தலைவருடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு! by : Jeyachandran Vithushan இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசினார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். http://athavannews.com/கூட்ட…
-
- 2 replies
- 599 views
-
-
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆற்றங்கரை கடலினை அடையும் பகுதியினை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளனர். இதன்போது 9 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- http://tamil.adaderana.lk/news.php?nid=124540
-
- 0 replies
- 340 views
-
-
அரசியல் தீர்விற்கு முன்னர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை பலப்படுத்த வேண்டும் – மஹிந்தானந்த! by : Benitlas அரசியல் தீர்விற்கு முன்னர் தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை பலப்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் ஆதவன் செய்திச் சேவை உள்ளிட்ட முக்கிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்கள் இன்று பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்…
-
- 0 replies
- 274 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 61 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தெளஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த…
-
- 0 replies
- 232 views
-
-
மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை தொடர்பாக சபாநாயகர் அறிவிப்பு விரைவில்! by : Jeyachandran Vithushan பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இதுகுறித்த அறிவிப்பினை சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறைசேரி பிணை முறி விநியோகம் தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை …
-
- 0 replies
- 372 views
-
-
வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை – யாழ் வணிகர் சங்கம் குற்றச்சாட்டு by : Jeyachandran Vithushan வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாநகர சபை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் ஜன குமார் கவலை வெளியிட்டுள்ளார் 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கு பின்னர் யாழ்ப்பான நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்பாக எந்த ஒரு விடயமும் தீர்க்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். …
-
- 0 replies
- 251 views
-
-
சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர் by : Dhackshala இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களின் பிரச்சினை தொடர்பா…
-
- 0 replies
- 346 views
-
-
பதவியை இராஜினாமா செய்வதாக வாசுதேவ அறிவிப்பு? by : Yuganthini மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. மேலும் தண்ணீர் பிரச்சினைக்கு கடந்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாட்டினை காட்டிலும் சிற…
-
- 4 replies
- 804 views
-
-
அமெரிக்க, ரஸ்ய, சீன உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கையில் தரையிறங்கினர்… January 14, 2020 ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றார்… ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் (Serjev Lavrov) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (14.01.20) காலைஇலங்கை சென்றடைந்தார். அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளும் நாட்டை சென்றடைந்துள்ளனர். இவர்கள் இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை சென்றடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர். அமெரிக்க, சீன உயர்மட்ட பிர…
-
- 0 replies
- 291 views
-
-
மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வைத்தியர் ஷாபி கோரிக்கை… January 14, 2020 கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ்.எஸ்.எம். ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவை குழுவிடம் கோரியிருந்தார். எவ்வாறாயினும் குறித்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை…
-
- 0 replies
- 478 views
-
-
பொங்கல் வியாபாரங்கள் வடக்கில் களைகட்டியது….. January 14, 2020 யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மன்னாரில் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயார்-பொருட்கள் கொள்வனவில் மக்கள். இந்துக்கள் நாளைய தினம் புதன் கிழமை (15) தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் இன்றைய தினம் ஆர்வம் காட்டி வருகின்றனர். -மன்னார் பஸார் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் இந்து மக்கள் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பண்டிகைகளுக்கான பொருட்கள…
-
- 0 replies
- 324 views
-
-
-
- 0 replies
- 484 views
-
-
(எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினைக் கொண்டு வந்து அதன் மூலம் மரணம் வரையில் அதிகாரத்தில் இருக்கலாம் என்ற தீர்மானத்தை எடுப்பதற்கே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பயன்படுத்தப்பட்டதேயன்றி மக்களின் சேவைகளுக்காக அல்ல. அதே போன்ற முயற்சியே தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பல்கலைகழக மாணவர்களுக்கு புலமை பரிசில் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த…
-
- 1 reply
- 534 views
-
-
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சமான இலங்கை, இனவாதமற்ற அரசியல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால், நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் மத கலாசார உரிமைகளை செயற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, விசேட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடும்போது, அத்துரலியே ரத்ன தேரரினால் முஸ்லிம் விவாக, விவாகரத்து தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை, ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணாக இருப்பதாகவே, நாம் கருதுகின்றோம். எனவே, இந்தப் பிரேரணையை ரத்ன தே…
-
- 1 reply
- 818 views
-
-
போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு இலங்கை உதவ வேண்டியேற்படும்- பொன்சேகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினால், சிலவேளை போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தளபாட ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். அமெரிக்கா- ஈரானுக்கிடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எவ்வாறு செயற்படுகிறார் என்பதை நாம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ர…
-
- 0 replies
- 497 views
-
-
இலங்கையை இராணுமயப்படுத்தும் நடவடிக்கையில் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் தலைமையிலான புதிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச அமைப்புகள் தன்னை விமர்சிப்பவர்களையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் இலக்குவைத்து இலங்கை அரசாங்கம் அச்சம் தரும் ஒடுக்குமுறையை முன்னெடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன. சர்வதேச நீதிமற்றும் உண்மைக்கான திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியனவே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. தேர்தலிற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றுள்ள 69 சம்பவங்களை பதிவு செய்துள்ள இந்த அமைப்புகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் சட்டத்தரணிகள் வழக்குதாக்கல் செய்தவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் அச்சுறு…
-
- 0 replies
- 322 views
-