ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
(நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி சுட்டி அறிக்கையானது இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரதியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொபேட் ஜக்காம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரிடமிருந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். மனித அபிவிருத்தி சுட்டியில் கடந்த ஆண்டு 76 ஆவது இடத்திலிருந்த…
-
- 1 reply
- 586 views
-
-
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான நீர் நிலைகளில் இறால் வளர்ப்பு மற்றும் நண்டுப் பண்ணை போன்றவற்றுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, கடலரிப்பு, துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளை பயன்படுத்துவதில் நிலவி வருகின்ற நடைமுறை ரீதியான சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்களை இதன்போது மன்னார் மாவட்ட மீன…
-
- 1 reply
- 948 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. -பிரசாந்தன் நவரத்தினம்.-
-
- 83 replies
- 9.5k views
- 1 follower
-
-
கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை-இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும் அது மாறாத அரசியல் நிலைப்பாட்டுடன் நீடிக்க வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்களிடையே ஒரு பொதுவான கருத்தாகும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமது வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ரெலோ மற்றும், புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் …
-
- 4 replies
- 503 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறியிருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18–80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால்…
-
- 6 replies
- 1.2k views
-
-
காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார். குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக…
-
- 5 replies
- 1.3k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி போராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி பெயரளவில் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இதே 1948-ம் ஆண்டுதான் இலங்கையும் வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நாளே தமிழர்களுக்கான மனித உரிமை மீறலின் குறியீட்டு நாள். 21ம் நூற்றாண்டின் மிகமோசமான இனவழிப்பு நடந்தேறிய இலங்கைத் …
-
- 0 replies
- 327 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பூநகரி - வாடியடி சந்தைக்கான கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்ற நாளிலிருந்து, “சிங்கள - பௌத்த மக்களின் வாக்குகளால் மட்டுமே, நான், இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன்” என்கிற மமதையில் கூறிக்கொண்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இதுவரை, வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரைக் கூட தெரிவுசெய்ய மனம் இல்லாதவர், தமிழர்களுக்க…
-
- 0 replies
- 464 views
-
-
கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தா…
-
- 23 replies
- 2.2k views
-
-
காங்கேசன்துறையில் பொலிஸ் சிற்றுண்டிச்சாலை திறப்பு காங்கேசன்துறையில் பொலிஸ் சிற்றுண்டிச்சாலை ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது. பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கு குறைந்த விலையில் சிற்றுண்டிகளை வழங்குவதற்காக குறித்த சிற்றுண்டிச் சாலை திறக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. சேனாதிரா தெரிவித்தார். இந்தச் சிற்றுண்டிச்சாலை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அண்மையாக உள்ள இடத்தில் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேயவர்த்தன, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்னவும் இணைந்து சிற்றுண்டிச்சாலையைத் திறந்து வைத்தனர். குறித்த சிற்றுண்டிச் சாலை…
-
- 1 reply
- 620 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் நியமிக்கப்படலாம் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதனால் யாழ். மாநகர மேயரின் பதவி காலியாகிவிடும். யாழ். மாநகர சபை பட்ஜெட் தோல்வியடைந்த நிலையில், அடுத்த வாசிப்புக்களிலும் தோல்வியடைந்தால் மேயராக ஆர்னோல்ட் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாது. புதிய முதல்வர் தெரிவு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் ஆர்னோல்ட் மேயர் பதவியில் தொடர்வது என்பது சந்தேகம்தான். இதனால், அவரை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கும் நோக்கில் அவரின் அரசியல் குரு சுமந்திரன் இந்த வேலைத் திட்டத்தை எடுத்த…
-
- 1 reply
- 694 views
-
-
இலங்கை சுகாதார துறையினருக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு! இலங்கை சுகாதார துறையினருக்கு உலக சுகாதார அமைப்பான WHO அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. WHO வின் தென்கிழக்காசியாவுக்கான பிராந்தியப் பணிப்பாளர் வைத்தியர் Poonam Khetrapal Singh இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார். எயிட்ஸ் நோய்க்குக் காரணமான HIV வைரஸ் ஆனது, தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எயிட்ஸ் மட்டுமன்றி, பிறப்பிலிருந்து ஏற்படும் பால்வினை நோயான சிஃபிலிஸ் இற்கான வாய்ப்பும், இலங்கையில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, இலங்கையில், தாயிடமிருந்து குழந்தைக்கு HIV வைரஸ் பரவுவது குறித்த எந்தச் சம்பவமும் …
-
- 0 replies
- 258 views
-
-
சிறீலங்கா ரெலிகொம் | தலைவராக சமால் ராஜபக்சவின் புதல்வர்? தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி விஸ்தரிப்பு சிறீலங்கா ரெலிகொம் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சிறீசேனாவின் தம்பி குமாரசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவரது இடத்தில் சமால் ராஜபக்சவின் புதல்வர் ஷமிந்திரா ராஜபக்சவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதிலாக, குமாரசிங்க சிறீசேனவுக்கு மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பம்: றோஹித, நாமல், மஹிந்த, ஷிராந்தி, யோஷித குமாரசிங்க சிறீசேனவுக்கு மேலதிகக் கொடுப்பனவுகளுடன், மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய்கள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததென்றும், புதிய ஜனாதிபதி அதை 2.5 லட்சத்துக்குக் கு…
-
- 0 replies
- 361 views
-
-
வடக்கிலுள்ள தமிழர்களின் மனங்களை நாம் வெல்ல வேண்டும் – றோஹித ராஜபக்ச டிசம்பர் 10, 2019 “வடக்கில் வாழும் பெரும்பான்மைத் தமிழர் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. அதற்கான முழுப்பொறுப்பும் எமது கட்சியயே சாரும்” என பிரதமர் ராஜபக்சவின் மகனான றோஹித ராஜபக்ச கூறியிருக்கிறார். வடக்கில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து அவர்களது மனங்களை வெல்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தவறிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார். “வடக்கில் உள்ள ஒருவரும் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. இது அவர்களது பிழையல்ல. எங்களுடைய தவறு. வடக்கிலுள்ள மக்களின் தேவைகளை அறிய எங்களால் முடியாமல் போய்விட்டது. அவர்களின் தேவைகளென்ன என்பதை நாம் முதலில் அ…
-
- 0 replies
- 192 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நால்வர், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். அரச பலனாய்வுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரி 56 ரக துப்பாக்கி, மகசின் 2, தோட்டாக்கள் 61, கைக்குண்டு 3, டெட்டனேட்டர் 3, 9 மி.மீ தோட்டாக்கள் 31 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான முன்னாள் ப…
-
- 0 replies
- 639 views
-
-
(ஆர்.யசி) ஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான "டி.டி.102 ஹருசாம் " மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டதுடன் கப்பலின் கட்டளை தளபதி ஓஹ்சிமா டேருஹிசா இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்புகளையும் முன்னெடுத்தார். இச் சந்திப்பின் போது இரு நாட்டு கடற்படை கூட்டு ரோந்து மற்றும் பயிற்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வருகை தந்துள்ள "டி.டி.102 ஹருசாம் " போர்க்கப்பலானது 151 மீட்டர் நீளமும், 4550 தொன் நிறையும் கொண்டதாக உள்ளதுடன் இக்கப்பலில் …
-
- 1 reply
- 560 views
-
-
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்…
-
- 0 replies
- 329 views
-
-
(ஆர்.யசி) இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் கடந்த 9 ஆம் திகதி உத்தியோக…
-
- 2 replies
- 787 views
-
-
மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை ஹட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். 10.12.2019 இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் சர்வதேச தேயிலை தினத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இந்த தேயிலை தினம் தேயிலை தொழிலாளர்களுடைய வாழ்க்கை வரல…
-
- 0 replies
- 270 views
-
-
தீவகப் பகுதியில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடல் வள உற்பத்திக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் தேவையானவர்களுக்கு கடனுதவித் திட்டங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தீவகப் பகுதியில் கடல் வள உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று(07.12.2019) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், முதற்கட்டமாக தீவகப் பகுதியில் இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, கடல் பாசி போன்ற திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுள்ளது. …
-
- 1 reply
- 439 views
-
-
ஐ.நா.பிரேரணையிலிருந்து அரசு விலகிவிடும்; சர்வதேச உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ் (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரகாரமான பொறுப்புக்கூறல் கடப்பாட்டிலிருந்து இலங்கை முழுமையாக விலகிக்கொள்ளும். எதிர்வரும் மார்ச் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாக இதுவாகவே காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய தேசிய கட்சியை 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்த சர்வதேச அமைப்புக்கள், மேற்குலக நாடுகளை த…
-
- 7 replies
- 1.8k views
-
-
பதவி விலகும் எண்ணத்திலேயே இப்போதும் இருக்கிறேன்..! விமர்சனங்களுக்கு சுமந்திரன் பதிலடி..! புதிய அரசியலமைப்பை உருவாக்காத நிலையில் பதவி விலகும் நிலையிலேயே இருக்கி றேன். ஆனால் அது என்னுடைய தீர்மானம். அதனை எவரும் என் மீது திணிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்ற தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாத ஒரு விசயம். வெளியிலே இருக்கிறவர்கள் விமர்சிப்பதும் கூட்டமைப்ப…
-
- 9 replies
- 1.7k views
-
-
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டபொன்றை மேற்கொண்டனர். வவுனியா வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1025 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் கொட்டும் மழையில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும…
-
- 1 reply
- 485 views
-
-
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான வலுவான ஆரம்பகட்ட ஆதாரங்கள் உள்ளதை போன்று கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்…
-
- 1 reply
- 583 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ரணில் விக்கிரமசிங்கவா..? பரிந்துரைக்கப்பட்டதாக ஐ.தே.க விளக்கம்.. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும். இந்த முன்மொழிவு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க தற்போது பரிசீலனை செய்து வருகின்றார். ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதே…
-
- 6 replies
- 1.1k views
-