ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
வாக்குச்சீட்டில் அடுத்தடுத்து கோத்தா, நாமலின் பெயர்கள் OCT 11, 2019by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில், கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் நாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன. சிறிலங்கா அதிபர் தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுங்கும், வேட்பாளர்களுக்கான சின்னங்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டில் வேட்பாளர்கள் எந்த ஒழுங்கில் இடம்பெறுவார்கள், அவர்களின் சின்னம் என்ன என்பதை விளக்கும் வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாக்குச் சீட்டில் முதலாவது இடத்தில் நாய் சின்னத்தில் போட்டியிடும் அபரக்கே புஞ்ஞானந்த தேரரின் பெயர் இட…
-
- 1 reply
- 495 views
-
-
சஜித் பக்கம் சாய்கிறது ஐக்கிய இடதுசாரி முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு அளிக்க முடிவு செய்த ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘திசைகாட்டி’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவளிக்கவும், இரண்டாவது விருப்பு வாக்கை, அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கவும், கோருவதென ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்திருந்தது. எனினும், கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும், என விடுத்த கோரிக்கைக்கு அமைய, தமது முடிவு குறித்து ஐக்கிய இடதுசாரி முன…
-
- 0 replies
- 367 views
-
-
நாட்டுக்கு சாதகமற்ற உடன்பாடுகள் ரத்து செய்யப்படும் – சஜித் OCT 12, 2019 | 11:46by கார்வண்ணன்in செய்திகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு சாதகமற்ற அனைத்துலக உடன்பாடுகள் ரத்து செய்யப்பட்டு சாதகமான ஒப்பந்தங்கள் மட்டுமே செயற்படுத்தப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று பல்கலைக்கழக கல்வியாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘வெளிநாட்டு வணிக உடன்பாடுகள் முக்கியம், பாதுகாப்பு உடன்பாடுகள் முக்கியம், அரசியல் உடன்பாடுகள் முக்கியம். எனினும், இந்த உடன்பாடுகளின் ஒப்பீட்டு நன்மைகளை எமது நாடு அனுபவிக்கவில்லை. ஒப்பீட்டு நன்மை இல்லாத இடங்களில், அத்தகைய உடன்பாடுகள் நாட்…
-
- 1 reply
- 389 views
-
-
வடக்கிலுள்ள தாய்மார்கள் தமது பிள்ளைகளை யுத்தத்துக்காகவே ஆளாக்குகிறார்கள் என்ற தவறான எண்ணம் தெற்கில் விதைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க எம்.பி, புலிகள் அமைப்பு போன்றதொரு கட்டமைக்கப்பட்ட இராணுவம் மீண்டும் உருவாகாதெனவும் தெரிவித்தார். தலவத்துகொடவில் இன்று (12) நடைபெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், தற்போது நாட்டிலிருக்கும் சட்டம் சாதாரண மக்கள் மீது மாத்திரமே பாய்வதாகவும், இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் சகலரும் சட்டத்தை மீறியே செயற்பாட்டுள்ளனர் எனவும் சாடினார். அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களிலிருந்து குற்றச்செயல்கள், மோசடிகள் தொடர்பான விடயங…
-
- 0 replies
- 351 views
-
-
“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும். சுமார் 160 விகாரைகள் மற்றும் கோவில்களின் தரவுகளை உள்ளடக்கியவாறு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் நான்காவது அத்தியாயத்தில் இராவணன் தொடர்பிலான வரலாற்று ஆராய்ச்சியை இலங்கையில் ஆரம்பித்தது தொடர்பில் குறிப…
-
- 0 replies
- 236 views
-
-
தமிழ் ஊடகவியலாளர் தி.சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபையில் கண்டனம் தெரிவித்துள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாக மூர்த்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த அமர்வில் சபையின் உப தவிசாளர் ஜெயகரன் குறித்த கண்டனத்தைச் சபைக்குக் கொண்டு வந்தார். அவர் அங்குத் தெரிவிக்கையில், தமிழ் பத்திரிக்கையான வீரகேசரி பத்திரிக்கையின் யாழ்ப்பாண அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் குறித்த செய்தியாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காலில் படுகாயம் அடைந்து ந…
-
- 0 replies
- 196 views
-
-
(நா.தனுஜா) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது அநுராதபுர தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், தான் ஆட்சிக்கு வந்தால் நியாயமின்றி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுவிப்பதாகக் கருத்தொன்றை முன்வைத்தார். யார் நியாயமின்றி சிறையில் இருக்கின்றார்கள்? கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவிகளைக் கடத்திவைத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளுக்குத் துணைபோன இராணுவத்தினரும், திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் 11 பேரைக் கொல்வதற்குத் துணைபோனவர்களும், குடிநீர் கேட்டுப்போராடிய மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களுமே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தம்பர அமில தேரர் சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 342 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்கும். அதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது என்று கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி. வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று பார்வையிட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்த தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுத்தரும் நடமாடும் சேவை மற்றும் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று நேற்று முன் தினம் (11.10.2019) இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இரணைதீவு பகுதியில் மக்கள் குடியேறிய காலப்பகுதியிலிருந்து அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவந்ததன் அடிப்படையில் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் மீள்குடியேற்றத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இரணைதீவு மக்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை ப…
-
- 0 replies
- 316 views
-
-
(ஆர்.யசி) இந்நாட்டினை ஆட்சி செய்யவேண்டும் என்றால், சிங்கள மக்களை ஆதரிப்பதை போலவே தமிழ், முஸ்லிம் மக்களையும் அரவணைத்து பயணிக்க வேண்டும். ஒரு இனத்துக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து ஏனைய இனங்களை நிராகரித்தால் நாடு தீப்பிடித்து எரியும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த நாட்டினை இராணுவ ஆட்சியில் கொண்டு செல்ல வேண்டுமா அல்லது மக்களால் ஆளக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ச…
-
- 0 replies
- 137 views
-
-
யாழ்ப்பாண மேல் நீதிமன்றால் 30 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இராணுவத்தினரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில் பெண் ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தி…
-
- 1 reply
- 535 views
-
-
யுத்தத்தை வெற்றி கொண்ட நாளே சிறந்த நாள் – தேசிய பாதுகாப்பே முதன்மையானது… October 12, 2019 நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலிச் சேவை ஒன்றுக்கு இது குறித்து வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மூன்று வேலை உணவு உண்டு நிம்மதியாக வாழ வேண்டும் எனவே விரும்புகிறார்கள் என்றும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்கப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகள் தீ…
-
- 1 reply
- 343 views
-
-
புலிகளுடன் தொடர்பு – ராமசாமியை கைது செய்ய வலியுறுத்தல் – தமிழ் சினிமா பிரபலத்துக்கு தடை? October 12, 2019 விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டி பினாங்கு துணை முதல்வர் ராமசாமியை கைது செய்ய மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் சினிமா பிரபலத்துக்கும் மலேசிய அரசு தடை விதிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் எனக் கூறி 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பினாங்கு துணை முதல்…
-
- 0 replies
- 585 views
-
-
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய முன்னணியின் சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஏற்கனவே கலந்துரையாடியதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். தேசிய பிரச்சினை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுமாறு இதன்போது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். http://valampurii.lk/valampurii/content.php…
-
- 1 reply
- 469 views
-
-
கோத்தாவுக்கு ஆதரவா? – மறுக்கிறது இதொகா Oct 10, 2019 | 5:27by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர அறிவித்தது அடிப்படையற்றது என்று இதொகா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இதொகாவின் மூத்த உதவித் தலைவரும், பொருளாளருமான எம்.ராமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொனஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக மகிந்த அமரவீர கூறியுள்ளது அடிப்படையற்றது. அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லை. அதேவேளை, சஜித் பிரேமதாசவை இதொகா ஆதரிக்கவுள்ளதாக அந்தக் கட்…
-
- 2 replies
- 432 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த…
-
- 5 replies
- 1k views
-
-
கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. டீ.ஏ ராஜபக்ஷ அருங்காட்சியக அமைப்பின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு தினமும் விசாரணைக்கு …
-
- 7 replies
- 1.3k views
-
-
(நா.தனுஜா) எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம் என்பதும் அறிந்த விடயமே. எனினும் சிறியளவிலான இந்தத் தேர்தலை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதித் தேர்த…
-
- 1 reply
- 839 views
-
-
(செ.தேன்மொழி) தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும். இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் தியதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் எமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார். அதேவேளை 50 பேரணிகளையும், 250 கூட்டங்களையும் 3500 மக்கள் சந்திப்புகளையும் மேற்கொள்வதற்கான தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பு - பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/66694 மஹிந்த, ரணிலால் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மு…
-
- 2 replies
- 658 views
-
-
-மு.தமிழ்ச் செல்வன், எஸ்.என்.நிபோஜன் “ஜனாதிபதித் தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஓர் அபாயகரமான நிலையாகும்” என, சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். இது குறித்து, அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை …
-
- 3 replies
- 1k views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு, இன்று, கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் நினைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சமகால அரசியல் நிலை தொடர்பிலும், கோட்டாபய ராயபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோர் குறித்தும் கருத்துத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/நினைவேந்தல்-நிகழ்வு/72-239833
-
- 0 replies
- 358 views
-
-
உலகின் வறுமையான நாடுகளின் பட்டியல் போகஸ் எகனொமிக்ஸ் (Focus Economics) என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது. 126 நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய உலகின் வறுமையான நாடுகளின் பட்டியலில் கொங்கோ குடியரசு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதேவேளை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா ஆகிய நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன. இந்தப்பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் காணப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படியும், இலங்கை 36 ஆவது இடத்தையே பெற்றிருந்தமை குறிப்பி…
-
- 0 replies
- 431 views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/66620 ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்ப…
-
- 17 replies
- 1.6k views
-
-
ஹிஸ்புல்லா நியமனம் | முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி- துஷார இந்துணில் October 10, 2019 marumoli 0 Comments துஷார இந்துணில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேட்பாளர் நியமனம் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சிறீலங்கா பொதுஜன பெரமுன வின் தந்திரோபாயச் சூழ்ச்சி என ஐ.தே.கட்சி யின் பா.உ. துஷாரா இந்துணில் குற்றஞ்சாட்டியுள்ளார். “ஐ.தே.கட்சியும், சஜித் பிரேமதாசா போன்றோரும் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர் என்று கூறுவதன் மூலம் பெளத்த சிங்கள மக்களைக் கோதபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வைப்பதற்கு ரத்தன தேரர் முயல்கின்றார். அதே போல ஹிஸ்புல்லா சுதந்திரமான வேட்பாளராகக் களமிறங்குவதன் மூலம் முஸ்லிம் மக்கள் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிக்…
-
- 1 reply
- 979 views
-