ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது எவ்பிஐ Sep 05, 2019 | 2:31by கார்வண்ணன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் சமர்ப்பித்த பி அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபேசிகள் அமெரிக்காவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, எவ்பிஐ அதிகாரிகளால் அவற்றின் உள்ளக தரவுகள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 4 replies
- 768 views
-
-
2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, பி.ப. 09:13 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஸ்ரீ-லங்கா-சுதந்திரக்-கட்சி-தனித்து-போட்டி/150-237961
-
- 1 reply
- 483 views
-
-
அமெரிக்கர்கள் கொண்டு வந்த 6 பைகளில் என்ன இருந்தது? – விமல் வீரவன்ச Sep 05, 2019 | 2:24by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் அதனைச் சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், அமெரிக்க தூதரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் விமானத்தில் வந்த ஆறு அமெரிக்கர்கள், ஹில்டன் விடுதியில் தங்கச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற ஆறு பைகளையும், விடுதியின் பாதுகாவலர்கள் சோதனையிட முன…
-
- 3 replies
- 482 views
-
-
யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்த…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
கோட்டா.. தேர்தலில் போட்டியிட, கூட்டமைப்பே காரணம் – கஜேந்திரன். இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இறுதி யுத்தத்தின்போது யுத்த முடிவிலே இடைவிடாது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை நெரிப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்ஷவே. அவர் தற்போது சுதந்திரமாக ஜனாதிபதி …
-
- 1 reply
- 357 views
-
-
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் இருகின்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்னமும் பலம் பொறுந்தியதாகவே விளங்குகின்றது என்றும் அதன் அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி நாட்டுக்கு வழிமையான தலைமைத்துவத்தை வழங்க கூடிய ஒருவரையே தாங்கள் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தேயிலை , இறப்பர் சிறு பயிர்ச்செய்கையாளர்கள், ஏற்றுமதியாளர்களுடனான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு கொழும்பு இலங்கை கண்காட்சி மகாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற போது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய இதனை தெரிவித்தார். அரசியலமைப்…
-
- 0 replies
- 398 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தாபய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தாபய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம், பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தாபய ராஜபக்சவின் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர். இலங்கையின் தேர்தலில் நீ…
-
- 0 replies
- 242 views
-
-
ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை – கபீர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். நேற்று கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிகமானவர்கள் ஊடகங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியீடுவதாகவும் தமது எதிராளிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி ஒற்றுமையாகவும் ஜனநாயக முறையிலும் தீர்மானம் மேற்கொள்ளும் கட்சி என தெரிவித்த அமைச்சர் கபீர் ஹஷீம், கட்ச…
-
- 2 replies
- 478 views
-
-
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் வாள் வெட்டு – இருவர் படுகாயம்… September 5, 2019 கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண…
-
- 1 reply
- 399 views
-
-
குண்டுதாரிகளை விட்டு விட்டு கோத்தாவை குடைகிறது சிஐடி – மகிந்த குற்றச்சாட்டு Sep 05, 2019 | 2:22by கி.தவசீலன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தாமல், கோத்தாபய ராஜபக்சவின் மீதே குற்ற விசாரணைத் திணைக்களம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். “கோத்தாபய ராஜபக்சவின் கடவுச்சீட்டு தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் கவனம் செலுத்தவில்லை. முன்னைய அ…
-
- 0 replies
- 325 views
-
-
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்ற கலைப்பு குறித்து முடிவு Sep 05, 2019 | 2:27by கி.தவசீலன் in செய்திகள் 19 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தல்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எந்த முடிவும் சபை உறுப்பினர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார். இன்று நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது. கடந்த காலங…
-
- 0 replies
- 329 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 293 பேர் கைது ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188895/
-
- 0 replies
- 439 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) சஜித் பிரேமதாச தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும்வகையில் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாடு பல்லின மக்கள் வாழும் நாடு என்பதால் பல கலாசாரங்களை பின்பற்றக்கூடியவர்கள் இருக்கின்றனர். அதனால் நாட்டில் இர…
-
- 7 replies
- 1.1k views
-
-
நன்மைகளை செய்யக்கூடிய ஒருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் – சங்க ரத்ன தேரர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்க ரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனையில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையின மக்கள் தற்போதும் பெரும் கஷ்டத்துடன் வாழ்கின்றனர். சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கு மக்கள் தமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் வ…
-
- 0 replies
- 296 views
-
-
நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைக் கொடுத்து, தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது நோக்கப்படுகின்றது. இது ஒரு உண்மையாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மா…
-
- 3 replies
- 905 views
-
-
மாவை முன்பாக சுகாதார தொண்டர் தற்கொலை முயற்சி…. September 5, 2019 யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளேசெல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. …
-
- 0 replies
- 392 views
-
-
முறிகண்டி விபத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி செயற்பாட்டாளர் உயிரிழப்பு! முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொதுஜன பெரமுனவின் நேரடி செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பொதுஜன பெரமுனவினதும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி செயற்பாட்டாளரான தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார். தீபன் செலுத்திச் சென்ற கார் பேருந்து ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலத…
-
- 3 replies
- 1k views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகளுக்காக மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அத்துடன், இதற்கான அனுமதி, நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த இழப்பீட்டு பணத்தை வைப்பீடு செய்யப்படவுள்ளது. இதேவேளை, காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு, அழுத்தத்துக்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கிகா…
-
- 0 replies
- 352 views
-
-
September 4, 2019 ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெற உள்ள கலந்துரையாடலில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளரை வெளியிடாமல் இருப்பது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/129982/
-
- 0 replies
- 526 views
-
-
70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைப்பு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய மூவருமே தான் காரணமாகின்றார்கள். இதில் ஒருவரைக் பிணையெடுத்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட…
-
- 0 replies
- 251 views
-
-
கொழும்பு மாநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே வெடித்தது மோதல் Sep 04, 2019 | 2:34by கார்வண்ணன் in செய்திகள் இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்த காரசாரமான வாக்குவாதங்களை அடுத்து, கொழும்பில் நடந்த சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வை சுருக்கமாக முடிக்கும் நிலை ஏற்பட்டது. கொழும்பு ஹில்டன் விடுதியில், சிறுவர்களுக்கான தெற்காசியா நாடாளுமன்ற தளத்தின், அமர்வு நேற்று இடம்பெற்றது. இதில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு நிலையை இந்தியா ஏன் ரத்து செய்தது என்று இந்திய நாடாளுமன்ற…
-
- 1 reply
- 748 views
-
-
தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய, கொமன்வெல்த் பிரதிநிதிகள் சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கொமன்வெல்த் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதத்தில், அதிபர் தேர்தலைக் கண்காணிப்பதற்கு கொமன்வெல்த் கண்காணிப்புக்குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கண்காணிப்பாளர்களை அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, உள்ளூர் கண்காணிப்பு அமைப்புகளான, பவ்ரல், தேர்தல…
-
- 1 reply
- 401 views
-
-
போர்க்குற்ற விசாரணையை நடத்துவது அவசியம் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் தளபதியாகப் பணியாற்றியவரும், தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளருமான மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். …
-
- 1 reply
- 509 views
-
-
தேர்தல் அறிவிப்பினால் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடு Sep 04, 2019 | 10:47by கார்வண்ணன் in செய்திகள் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்தப்படும் என காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நேற்று அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நடத்தப்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதில் பக்கசார்…
-
- 0 replies
- 393 views
-
-
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டாபய கருத்து கடந்த அரசாங்கத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஆட்சியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தூரநோக்கு இல்லாததன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் அடிப்படைவாத பயங்கரவாதம் தலைதூக்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பிய தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைய இதுவே காரணமாகியது. நாம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிறந்த விளக்கத்துடன் இருந்தோம். இதனால்தான், 30 வருட யுத்தத்தை இரண்டரை வருடங்களில் ம…
-
- 0 replies
- 395 views
-