ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் ; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல்போனோர் விடயத்திற்கு இன்றுவரை தீர்வு கிட்டாத நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட ஓ.எம்.பி நிறுவனம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல்போன உறவின் தாயார் கந்தசாமி தவமலர் தெரிவித்தார். நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல்கள்'என்னும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் வடக்கு கிழக்கு மாவட்டப் பெண்கள் சமாசங்கள் இணைந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளினைப் பகிர்தல் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போத…
-
- 2 replies
- 320 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் போட்டியிட்டால் கூட்டமைப்பிற்கு கிடைக்கும் வாக்குகள் குறிப்பிடத்தக்களவு குறைவடையும். விக்னேஸ்வரன் எம்முடன் போட்டியிட்டால் பொதுஜன முன்னணியின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் வினேஸ்வரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது சமூகத்தில் கதையொன்று மாத்திரமே நிலவுவதாகவும் அ…
-
- 2 replies
- 543 views
-
-
ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்…
-
- 1 reply
- 269 views
-
-
மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்! மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளை நிறத்தினாலான மர்மப்பொருள் வானில் பறப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட பல பிரதேசங்களிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வான்பரப்பில் மர்மப்பொருள் பறந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வெள்ளை நிறத்தினாலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்மப்பொருள் வான்பரப்பில் பறப்பதோடு, சிலரது வீடுகள் மற்றும் மரங்களின் மேல் அவை காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்மப்பொருளை அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ப…
-
- 1 reply
- 562 views
-
-
3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள் மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இது வரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவ…
-
- 2 replies
- 441 views
-
-
நாளை மீண்டும் புரட்சி ஆரம்பம் -அத்துரலிய தேரர் அறிவிப்பு மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (19) மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டமொன்றை நடாத்தப் போவதாக அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்துள்ளார். நாளை பிற்பல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டம், இந்நாட்டிலுள்ள ஹிந்து, பௌத்த மக்கள் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை அழித்த, தற்கொலை குண்டுதாரிகளை உர…
-
- 1 reply
- 427 views
-
-
ஐ.தே.க.யின் மூன்று சக்திகள் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க கருத்து ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ரணில், சஜித், கரு ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வர வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதனை கட்சியின் தலைமைகள் ஏற்றுக் கொள்வது போன்று தெரியவில்லை எனவும்…
-
- 0 replies
- 399 views
-
-
வரவு செலவுத் திட்டம் இன்மை நாட்டுக்குப் பாதிப்பா? – அரசாங்கம் கருத்து இடைக்கால கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு எந்தவித லாபமோ, நட்டமோ ஏற்பட மாட்டாது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் புது வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வருடம் டிசம்பரில் ஜனாதிபதித் தேர்தல் வருவதனால், வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படாமல் இடைக்கால கணக்கு அறிக்கையொன்று மாத்திரம் முன்வைக்கப்படவுள்ளது. இது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞானத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் பிரியங்க துநுசிங்க அண்மையில் வெளியிட்டிருந்த…
-
- 0 replies
- 228 views
-
-
இணக்கப்பாட்டின்றி முடிந்தது ஐதேமு பங்காளிகளின் கூட்டம் புதிய கூட்டணியை அறிவிப்பது மற்றும் அதிபர் வேட்பாளரைத் தெரிவு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆராய, நேற்று நடந்த ஐதேமு பங்காளிக் கட்சிகளின் கூட்டம், முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது. தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்கான யாப்பு விடயத்தில் பங்காளிக் கட்சிகளுக்குள் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதனால், இந்தக் கூட்டணியை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுக்காலை 9 மணியளவில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், ஜனநாயக தேசிய முன்னணியில் போட்டியிட பங்காளிக்…
-
- 0 replies
- 268 views
-
-
கோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அதிபர் செயலகத்தில் மேல் மாடியில் உள்ள அதிபரின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். அமைச்சர்களில் ஒருவர், “அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா?” என கேட்டார். அந்தக் கேள்வியால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோபமடைந்தார். அவரது கோபம், அவர் அளித்த பதிலிலும் பிரதிபலித்தது. “…
-
- 0 replies
- 270 views
-
-
இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா? யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன. இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சவேந்திர டி சில்வா மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்…
-
- 2 replies
- 677 views
-
-
2019 ஓகஸ்ட் 17 சனிக்கிழமை, பி.ப. 01:17 அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை தரவைக் கோவில் வீதி எனும் பெயரை கடற்கரைப் பள்ளி வீதி எனும் பெயராக மாற்றும் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதால், பழைய பெயர் செல்லுபடியற்றதாகி விட்டது என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் (15) மாலை மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேற்படி சர்ச்சைக்குரிய வீதியின் பெயர் தொடர்பில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போதே மேயர் றகீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்மில் பெரும்பாலானோர் தத்த…
-
- 0 replies
- 604 views
-
-
-எஸ்.நிதர்ஷன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்காக் பயனாளிகளும் பொது மக்களும் ஐந்து மணித்தியாலங்கள் காத்திருந்த நிலையில், பிரதமர் உள்ளிட்ட அதிதிகள், ஐந்து நிமிடங்களில் நிகழ்வை முடித்துக் கொண்டு சென்றதால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலரும் விசனம் வெளியிட்டுள்ள சம்பவமொன்று, வடமராட்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில், அமைக்கப் பெற்ற புதிய வீடுகள் கையளிப்பு, காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்றுக் காலை 11 மணிக்கு இடம்பெறுமென பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பயனாளிகள் மற்றும் பொது மக்களை காலை 8.30 மணி முதல் 9 மணிக்கு முன்னதாக வருமாறும் அழைப்பு விடப்பட்…
-
- 1 reply
- 493 views
-
-
தன்னுடன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகப் பெண் முறைப்பாடு தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை மாலை (16) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்படுத்து வதாகவும் கூறி தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரியப் பாதுகாப்பை வழங்குமாறு கோரி குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் ஒரு நாள் நள்ளிரவு அவசர முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்ற போது வா…
-
- 2 replies
- 578 views
-
-
யாழில் இராணுவத்தினா் மீது, இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல். யாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு பகுதியிலுள்ள இராணுவத்தின் கடையொன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழில்-இராணுவத்தினா்-மீத/
-
- 1 reply
- 798 views
-
-
யாழில். 25 வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை; அங்கலாய்க்கும் பிராந்திய வைத்தியர் “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் தற்போதுவரை வைத்தியர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் யாழ்ப்பாணப் பிராந்திய வைத்திய அதிகாரி. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடையத்தை அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 25 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் இல்லை. 5 ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வைத்த…
-
- 0 replies
- 456 views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 24 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ள இந்த அலுவலகம் காணாமல்போனோர் அலுவலகத்தின் மூன்றாவது பிராந்திய அலுவலகமாகும். ஏற்கெனவே மாத்தறையிலும், மன்னாரிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது. எமது அலுவலகத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம் இலக்கம் 124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் எதிர்வரும் 24 ஆம் திகதி சபாநாயகர் கரூ ஜயசூரியவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. அத்தோடு த…
-
- 1 reply
- 245 views
-
-
பிள்ளையான் கட்டிய கிணற்றை காணவில்லை! தேடி அலையும் மக்கள்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாக அரசியல் கைதிகளில் அரைவாசிப் பேருக்கு மேற்பட்டவர்களை விடுவித்து விட்டோம் என குண்டைப் போட்டுள்ளார் தமிழ் அரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம். முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் காலத்தில் கிணறுகள் கட்டப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தபோதும், அங்கு சென்ற பார்த்தபோது கிணற்றை காணவில்லையென்றும் தெரிவித்துள்ளார். கம்பெரலிய திட்டத்தின் ஊடாக வந்தாறுமூலை விஸ்ணு ஆலய புனரமைப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதிஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்படும் வேலைப்பாடுகளைப் பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்த வே…
-
- 1 reply
- 593 views
-
-
வவுனியாவில் கடும் மழை ; வெள்ளத்தில் முழ்கியது பஸ் தரிப்பிடம் வவுனியாவில் இன்று (17.08) காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. நீர் வழிந்தோடி செல்லும் வடிகானில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய் பைப்பினுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பஸ் தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது. அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதியினை சேர்ந்த வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வரட்சியா…
-
- 0 replies
- 309 views
-
-
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும் August 17, 2019 யாழ்ப்பாணம், காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில், குறிப்பிட்ட தொகை வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல்களை நீக்காதவாறு ஏற்கனவே உள்ள அரச தீர்மானத்தைத் தொடருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் முன்வைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியின் 21 கிராம அலுவலர் பிரிவு நிலம் இதுவரை விடுவிக்கப்படாத வி…
-
- 0 replies
- 221 views
-
-
ஒக்டோபரில் பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஆரம்பம் Aug 17, 20190 பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிக்கையில், “மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்பட்டுள்ளது.அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கடந்த …
-
- 0 replies
- 304 views
-
-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக்க நடவடிக்கை Aug 17, 20190 யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டிவைத்தார். இக்கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 266 views
-
-
ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் ஆரம்பம். ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது மற்றும் புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகின்றது! புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இ…
-
- 0 replies
- 189 views
-
-
இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகள் குப்பைகளால் நிறைந்து கிடக்கிறது. அது போதாதென்று வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் வேறு சுங்க திணைக்களத்தில் நிறைந்து கிடக்கிறது. இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாந்தீவு பகுதிகளில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகளை திடீரென செங்கலடி வேப்பவெட்டுவான் பகுதியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கழிவுகளை புதைக்கச் சென்ற இடத்தில் பெரும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதுடன் பொதுமக்கள் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் வைத்திய சாலை…
-
- 0 replies
- 579 views
-
-
காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உட்பட மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான வீட…
-
- 0 replies
- 503 views
-