Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும் August 17, 2019 யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யில், குறிப்­பிட்ட தொகை வாக்­கா­ளர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல்­களை நீக்­கா­த­வாறு ஏற்­க­னவே உள்ள அரச தீர்­மா­னத்­தைத் தொட­ரு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் வேண்­டு­கோள் முன்­வைக்க முடி­யும் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யின் 21 கிராம அலு­வ­லர் பிரிவு நிலம் இது­வரை விடு­விக்­கப்­ப­டாத வி…

  2. ஒக்டோபரில் பலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஆரம்பம் Aug 17, 20190 பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிக்கையில், “மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் தரமுயர்த்தப்பட்டுள்ளது.அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கடந்த …

  3. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக்க நடவடிக்கை Aug 17, 20190 யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் நாட்டிவைத்தார். இக்கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். …

  4. ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் ஆரம்பம். ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது மற்றும் புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகின்றது! புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இ…

  5. இலங்கையின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகள் குப்பைகளால் நிறைந்து கிடக்கிறது. அது போதாதென்று வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் வேறு சுங்க திணைக்களத்தில் நிறைந்து கிடக்கிறது. இன்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை முகாமைத்துவம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாந்தீவு பகுதிகளில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகளை திடீரென செங்கலடி வேப்பவெட்டுவான் பகுதியில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கழிவுகளை புதைக்கச் சென்ற இடத்தில் பெரும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதுடன் பொதுமக்கள் செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் வைத்திய சாலை…

  6. காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உட்பட மேலும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சில முஸ்லிம் வர்த்தகர்கள் 7.5 ஏக்கர் காணிகளை வழங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான வீட…

    • 0 replies
    • 504 views
  7. ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் இலக்கு 65 லட்சம் வாக்குகள் நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி இலக்கு 65 லட்சம் வாக்குகள் ஆகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஆயிரம் சிறைச்சாலைகளில் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துச் சுதந்திரத்தை ஜனநாயக வாக்கைப் பயன்படுத்தி மக்களுக்கு தீர்மானிப்பதற்கான ஆயுதம் கிடைத்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/187951/

    • 0 replies
    • 220 views
  8. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/222311/ஜனாதிபதி-தேர்தலில்-போட்டியிடுமாறு-கோரிக்கை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்…

    • 6 replies
    • 1.3k views
  9. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி ச…

  10. படத்தின் காப்புரிமை GOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE Image caption கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. இந்த ந…

    • 3 replies
    • 712 views
  11. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார். ஜனநாயக்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதுடன், புதிய கருத்துகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் இன்று கூட்டணி அரசியல் தோற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக மூன்று கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவளை, இன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி வெள்ளை வான் கலாசாரத்த…

    • 6 replies
    • 634 views
  12. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்ட 63 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். குறித்த குண்டு தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ…

  13. -எஸ்.நிதர்ஷன் எங்களுடைய சொந்த காணிகளுக்காக நாங்கள் வழக்கு தொடர்ந்த பின்னர் எங்களுடைய வீடுகள் இடித்து அழிக்கப்பட்டதெனத் தெரிவித்த வலி,வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம், அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கமே மீள வழங்க வேண்டுமெனவும் கூறினார். மயிலிட்டி மக்கள் புறா கூடுகளைபோன்ற வீடுகளுக்குள் வாழ்ந்தவர்கள் அல்லவெனவும் வசதியான பாரிய வீடுகளில் வாழ்ந்தவர்களெனவும், அவர் கூறினார். மயிலிட்டி மீன்பிடிதுறைமுகம் 1ஆம் கட்ட புனரமைப்பின் பின்னர் நேற்றய தினம் மயிலிட்டி மக்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி நாங்கள் மயிலிட்ட…

    • 0 replies
    • 310 views
  14. Editorial / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை -எஸ்.நிதர்ஷன் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை தங்களிடம் வழங்கப்பட வேண்டுமென்பதற்காகவே, இந்த அரசாங்கத்துகு கடந்த நான்கு வருடங்களாக தங்கள் ஆதரவைக் கொடுத்தோமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆனால் அவ்வாறான தீர்வுக்கு பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலையில் நீங்கள் ஒரு பிரதமராக அல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவராக எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சி நிலைப்பாடு என்னவெனவும் வினவினார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

    • 0 replies
    • 546 views
  15. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள்! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆலய திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திறகு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்கு செல்கின்ற அடியவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வடக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனையடுத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக புதிய ஸ்கானர் இயந்திரங்களை ஆலய சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியிர…

    • 2 replies
    • 864 views
  16. தீவிரவாதத்தை தடுக்க 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் தொடர்பில் கிரமமாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு நாட்டிற்குள் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதன் ஊடாக அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும…

  17. சாவகச்சேரியில் பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் – கொலையா தற்கொலையா? August 16, 2019 யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் நேற்று (15.08.19) மீட்டுள்ளனர். சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சாரம் மற்றும் சேர்ட் ஆகியன கழற்றப்பட்ட நிலையில் உள்ளாடையுடன் சிறிய பூவரச மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்ல என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறிடத்தில் இர…

  18. நாடுகடத்தப்பட்டனர் ஆஸிக்கு சட்டவிரோதமாக சென்ற 13 இலங்கையர் சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய …

  19. இலங்கையில் தடைச்செய்யப்பட்ட அமைப்பான ஜமாஅத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/62702

  20. யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பிரதமர் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்.வந்துள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார் அந்தவகையில் அவரது விஜத்தின் மூன்றாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை குறித்து ஆராய்ந்துள்ளார். மேலும் புனரமைப்புடன் தொடர்புடைய இந்த…

  21. கூட்டமைப்பின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார் விஜயகலா! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கிவரும் ஆதரவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வலி வடக்கில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் மக்களிடம் கையளித்திருக்கின்றார்கள். அதற்…

  22. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு புறம்பாக ஆரம்பிக்கப்பட்டதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ள போதிலும், அந்த நிறுவனம் மீது அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகவே உடனடியாக இந்த தனியார் பல்கலைகழகத்தை அரசுடமையாக்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 19 ஆம் திகதி மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். இந்த மாபெரும் மக்கள் பேரணிக்கு ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்களை மட்டக்களப்பு கிரான் சந்தியில் அணித்திரளுமாறு அழைப்பதாகவும் இந்த பேரணியில் புதிய 'நாட்டை பாதுகாக்கும் அமைப்பை' மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்து…

    • 0 replies
    • 378 views
  23. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html

    • 4 replies
    • 1.3k views
  24. சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தீர்மானத்தினால் அமெரிக்க அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்…

  25. பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவு…

    • 10 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.