ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
1983 ஆண்டு யூலை மாதம் 25,27ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)ஸ்தாபக தலைவர்களான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி,முன்னணி போராளிகள் உட்பட 53போராளிகளின் நினைவாக நடைபெறும் தமிழ் தேசிய வீரர்கள் தினத்தை வடக்கு,கிழக்கில் டெலோ இயக்கம் அனுஷ்டித்து வருகின்றது. நாளை 25ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 5 .00 மணிக்கு திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் நினைவரங்கில் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார். இந் நிகழ்விற்கு ரெலோவின் தவிசாளரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளன…
-
- 1 reply
- 437 views
-
-
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60850
-
- 12 replies
- 1.9k views
-
-
சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக இலங்கையின் வரைபடம், 1995ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதாக, அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வரைபடத்தில், கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரைபட தயாரிப்பு பணி மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. தற்போது அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய வரைபடத்தில், …
-
- 4 replies
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை SRI LANKA CUSTOMS பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது. குறித்த கொள்கலன்களில் பெரும்பாலும் மெத்தைகள் காணப்படுகின்றதுடன், மெத்தைகளுக்குள் மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் அதிக…
-
- 0 replies
- 407 views
-
-
திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர…
-
- 5 replies
- 1.2k views
-
-
நாட்டில் நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக அவசியம் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கென நாணய சட்டம் திருத்தியமைக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரம் வரலாற்று ரீதியாக குறைத்து மதிப்பிடப்பட்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/61001
-
- 1 reply
- 303 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கதிரவெளி கிராமத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் மக்கள் சந்திப்பு பாலர் பாடசாலைக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற போது மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் சென்ற இடங்கள் எல்லாம் காணிகள், பெண்கள், உரித்துக்கள் பறிபோகின்றது. இதற்கு காரணமாக முஸ்லிம்கள் இருப்பதாக கூறப்பட்டது. அதாவது குறைந்த விலையில் உள்ள காணிகளை கூடிய விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகின்றது. எமது மக்கள் ஏதோவொரு …
-
- 2 replies
- 587 views
-
-
‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ Editorial / 2019 ஜூலை 22 திங்கட்கிழமை, மு.ப. 09:58 Comments - 0 ‘கோட்டாவே வேட்பாளரென நான் கூறவில்லை’ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம்…
-
- 15 replies
- 1.7k views
-
-
பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு சிறிலங்கா அதிபர் பதிலடி சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். குண்டுத் தாக்குதலுக்குள்ளான கடுவாப்பிட்டிய தேவாலயத்தை நேற்றுமுன்தினம் மீளத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், தற்போதைய ஆட்சியாளர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்ற நேரம் வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன், குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும், அரச…
-
- 0 replies
- 598 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை. அதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வ…
-
- 2 replies
- 669 views
-
-
ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்? ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் வெளியிடவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று மாலை அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவின…
-
- 1 reply
- 581 views
-
-
"உண்ணாவிரதம் இருக்கும் கைதி தொடர்பில் அமைச்சர் மனோவை தலையிடுமாறும் கோரிக்கை" மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்படுகினறது. முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் எனபரே இவ்வாறு நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். கோட்டை புகையிரத நிலையம் குண்டுவெடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றொரு வழக்கில் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குறித்த இரு வழக…
-
- 3 replies
- 1k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கின்றேன் - ஜனாதிபதி ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி ஸ்ரீ தெரிவித்தார். இத…
-
- 1 reply
- 456 views
-
-
தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் - விக்னேஸ்வரன் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்பதும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்படுத்துவதுமே எமது குறிக்கோளாக இரு க்க வேண்டும். அத்துடன் கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணியிலும் கொள்கை ஒருமைப்பாடு கொண்ட அனைவரையும் எம்மோடு பயணிக்க அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன். தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன்…
-
- 0 replies
- 409 views
-
-
பிரதமருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கினர் முஸ்லிம் தலைமைகள்! இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று (திங்கட்கிழமை) முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், வாழைச்சேனை பி…
-
- 0 replies
- 294 views
-
-
கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர். ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. …
-
- 1 reply
- 820 views
-
-
பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நட…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உ…
-
- 1 reply
- 409 views
-
-
Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospital Jaffna குவைத் நாட்டினது செம்பிறைச் சங்கத்தின் நன்கொடையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை (Kuwait Red Crescent Rehabilitation Centre Teaching Hospitl Jaffna) பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம் 25.07.2019 அன்று காலை 10.00 மணியளவில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது. சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னவுடன் இணைந்து குவைத் செம்பிறைச் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ஹி…
-
- 2 replies
- 845 views
-
-
அவசர காலச் சட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/அவசர-காலச்-சட்டம்-மீண்டு-2.html
-
- 3 replies
- 762 views
- 1 follower
-
-
இலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தொடர்பில் சீனா அதிருப்தியடைந்திருப்பதாக தெரிவித்த சீனத் தூதுவர் செங் சீயுவான், அது இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகின்ற சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடாந்தம் சுமார் 3 இலட்சத்தை எட்டியிருக்கிறது. இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானவர்கள் சீனர்களே. ஆனால் தாய்லாந்தினால் கவரப்படும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வந்திருக்கக்கூடிய சீன சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சொற்பமே. எனவே தாய்லாந்து போன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான சௌகரியங்களை வழங்குவதில் இலங்கை கவனத்தைக் குவிக்க வே…
-
- 3 replies
- 990 views
-
-
கந்தப்பளை கோர்ட்லோஜ் முனுசாமி ஆலயம் முன்னால் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான எழுத்துமூல கோரிக்கையினை தான் முன்வைத்ததாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் எந்தவித அகழ்வு பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்து இன்று திருகோணமலை மேல் நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாரியம்மன் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரான கோகிலரமணி அம்மையாரால்…
-
- 0 replies
- 429 views
-
-
சர்வதேச இராஜதந்திரிகளூடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (21) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆட்சியில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேரோடே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல் குழப்பம் வரும்போது எமது அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் இரவு பகலாக நீதிமன்றத்திலே போராடி தற்போதுள்ள பிரதமரின் பதிவ…
-
- 0 replies
- 380 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறினால், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், கந்தபளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/220828/50-ரூபாய்-கொடுப்பனவு-தீர்க்கப்படாவிட்டால்-ஐ-தே-கட்சியின்-புதிய-கூட்டணியில்-இணையப்போவதில்லை-ராதாகிருஷ்ணன்-அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் அமைச்சுப் பதவியை துறப்பேன் - திகா நாட்டு மக்கள் எதி…
-
- 0 replies
- 334 views
-
-
July 22, 2019 இலங்கையின் உடவளவை தேசிய வனத்தை பார்வையிட வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் பயணித்த சபாரி வாகனத்தின் மீது, மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். தமது 12 வயது குழந்தையுடன்;, பிரான்ஸைச் சேர்ந்த தம்பதியினர், உடவளவ வனத்தைப் பார்வையிட்டதுடன் கல்அமுன வனத்தில் ஓய்வெடுத்த போது, மிருக வேட்டையில் ஈடுபட்ட மூவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இதன்பின்னர், அவர்கள் வனத்திலிருந்து வாகனம் மூலம் வெளியேறும் போது, குறித்த வேட்டைக்கார…
-
- 1 reply
- 339 views
-