Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை. அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்தனர். கடந்த காலங்களில் மாகாண மற்றும் மத்திய அரசால் வழங்கப்பட்ட நியமனங்களை பெற்ற பலரும் வெளிமாவட…

    • 0 replies
    • 576 views
  2. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன. இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அபகரிப்பு நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று நேரில் சென்று பார்வையிட்டார். குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சரணாலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களுடைய அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான கோட்டைக்கேணி, குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், அம்பட்டன் வாய்க்கால், பணம்போட்ட கேணி, வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்கள் பார்வையிடப்பட்டன. அதேபோல் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்க…

    • 0 replies
    • 389 views
  3. சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் சமூகத்திற்கு விடிவு – அமீர் அலி In இலங்கை August 1, 2019 10:27 am GMT 0 Comments 1121 by : Benitlas தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விடிவு கிடைக்குமாகவிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே அது முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்டதாரிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முன்கொண…

  4. இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியானது போலியான ஆவணம் உண்மையான ஆவணம் என்னிடம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை உண்மையான ஆவணத்தை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை அதற்கான தேவையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையகம் கேட்கும்போது அவர்களிடம் அதனை கையளிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் தற்போது இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருக்கவில்லை இதன் காரணமாக முன்னைய கடவுச்சீட்டை …

  5. யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை July 29, 2019 யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும். இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன…

  6. சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே. குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ். சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் என நம்பப்படும் நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்…

    • 0 replies
    • 275 views
  7. சிவில் சமூகம் வியூகம் வகுக்க வேண்டும்! [Thursday 2019-08-01 07:00] ஜனாதிபதி தோ்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டு, சகல தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சாா்பில் எமது நிலைப்பாட்டை தீா்மானமாக எடுத்து, அதனை சா்வதேச சமூகத்திற்கு வழங்க வேண்டும். அதற்கு இணங்கும் தரப்புக்களையே ஆதாிக்க வேண்டும் என ஈ.பி.ஆா்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 'இலங்கையில் ஜனாதிபதி த…

    • 1 reply
    • 500 views
  8. மஹிந்த அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் கூறுவது வேடிக்கையானது – மாவை In இலங்கை August 1, 2019 11:00 am GMT 0 Comments 1057 by : vithushan வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படும் என நாமல் ராஜபக்ஷ கூறுவது வேடிக்கையானது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விலகியது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரி…

    • 1 reply
    • 452 views
  9. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் In இலங்கை August 1, 2019 10:00 am GMT 0 Comments 1175 by : Benitlas வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இணைத்தலைவர்களான அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சி.சிவமோகன், அரசாங்க அதிபர் எம்.கனீபா ஆகியோரின் பங்குபற்றலில் இந்த கூட்டம் இடம்பெற்றது. நீண்ட இடைவெளியின் பின்னர் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதேவ…

  10. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு குறித்து ஐ.தே.க. முக்கிய தகவல்! In இலங்கை August 1, 2019 9:42 am GMT 0 Comments 1210 by : Dhackshala ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹெஷான் ஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் 5ஆம் திகதி சுகததாஸ விளையாட்டரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு …

  11. அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் - யாழ்.மாவட்ட செயலர் அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை. அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன்…

  12. வவுனியாவில் வறட்சியால் 607 குடும்பங்கள் பாதிப்பு வவுனியாவில் இன்று வரையான காலப்பகுதியில் 607 குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று மாலை வரையான காலப்பகுதியில் 607குடும்பங்களைச் சேர்ந்த 2013பேர் குடிநீர் இன்றி பாதிப்படைந்துள்ளதாக கிராம அலுவலகரினால் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கையிடப்பட்டு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு புள்ளிவிபரத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வவனியா வெங்கலச் செட்டிகு…

  13. பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? ;வடிவேல் சுரேஷ் (ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பெரும்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இள…

  14. அம்பாறையில் கைக்குண்டுகள் மீட்பு! அம்பாறை – சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, மீட்கப்பட்ட கைக்குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (புதன்கிழமை) பொலித்தீன் பையில் சுற்றப்பட்டிருந்த கைக்குண்டுகளை எடுத்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதை அவதானித்த பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பாக சவளக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். அத்தோடு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கும் இந்த விடயம் தொடர்பாக அறிவித…

  15. இரு ஜனாதிபதிகளும் சந்தித்துப் பேசியதன் பின்னர் இறுதித் தீர்மானம்- டளஸ் எம்.பி. ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய வில்லையெனவும் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கடந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர், இறுதி முடிவுக்கு வருவது என ஸ்ரீ ல.சு.கட்சியின் மத்திய செயற்குழ…

    • 0 replies
    • 309 views
  16. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு- ஐ.தே.க. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரேயே அறிவிக்கப்படுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முகம்கொடுப்பதற்கு தேவையான பலத்தை திரட்டுவதற்கான கூட்டணி எதிர்வரும் ஐந்தாம் திகதி அமைக்கப்படவுள்ளது. இக்கூட்டணியில் பங்குகொள்ளும் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என்பவற்றின் கருத்துக்களுக்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளக் கூடிய பொருத்தமான ஒரு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார். http://www.dailyceylo…

    • 0 replies
    • 286 views
  17. அல்குர்ஆனிலுள்ள சில வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்- கலாநிதி ஓமல்பே தேரர் இஸ்லாமியர்களின் புனித நூலான அல்குர்ஆனில் இருப்பதாக கூறப்படும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ராமங்ஞா பீடம் சார்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வேண்டுகோள் விடுத்தார். நேற்று முன்தினம் (30) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே தேரர் இதனைத் தெரிவித்தார். தான் குர்ஆனை விமர்சிக்கவில்லை. இருப்பினும், என்னிடம் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்த விடயங்கள் தொடர்பில் விடையளிக்குமாறு கேட்…

    • 0 replies
    • 709 views
  18. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை (ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான இடம்பெற்ற வாக்கெடுப்பில் 40 வாக்குகள் ஆதரவாகவும் 2எதிராவும் அளிக்கப்பட்டன. அதன் மூலம் அவசரகால சட்டம் மீதான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதம் இன்று மாலை 6.30 மணிவரை இடம்பெற்ற பின்னர் இறுதியில் சபாநாயகர் கருஜயசூரிய பிரேரணைக்கு எதிர்ப்பு இருக்கின்றதா என வினவியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரினார். அதன் பிரகாரம் சபாநாயகர் பிரேரணை மீது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்த…

    • 3 replies
    • 459 views
  19. பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு செப்ரெம்பரில் முதல் விமான சேவை பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். ‘ சுமார் 70 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களைத் தரையிறக்கும் வகையில், பலாலி விமான நிலைய ஓடுபாதை தரமுயர்த்தப்படும். இங்கிருந்து முதலாவது விமானம் செப்ரெம்பர் மாதம் சேவையை ஆரம்பிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளோம். தென்னிந்தியாவில் சென்னை போன்ற இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்காக நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.” என்றும் அவ…

    • 0 replies
    • 302 views
  20. ஆடி அமாவாசை விரதமான இன்று திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது. இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரிகை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது. இப்பகுதியில் ஏட்டிக்கு போட…

    • 1 reply
    • 506 views
  21. July 31, 2019 மத போதனைகளை நடத்துகின்ற இடம் தொடர்பாக உரிய வகையில் அனுமதி பெறப்பட்டு அந்த நிலையத்தை பதிவு செய்த பின்னரே அங்கு மதக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை நடத்த முடியும் என வட்டுக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும், அவர்கள் தொடர்ந்தும் …

    • 2 replies
    • 955 views
  22. தீவிரவாதிகளைப் பாதுகாத்தவர்கள் எவரும் பதவிகளில் இருக்கக்கூடாது. ; அத்துரலிய ரத்தன தேரர் "கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால் அதை அவர் உடனே மறக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம்."என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் இன்று தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நேற்றுத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அத்துரலிய ரத்தன தேரர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை மீளப்பொறுப்பேற்று விட்டார…

  23. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினார். இன்று காலை 7.30 அளவில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது. இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்தார். இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இதற்கான நிதியை தனது அமைச்சிலிருந்து வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்குட்பட்ட நிதியிலிருந்து அதனை வழங்குமாறு கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனி திகாம்பரம், அப்படியான ஒரு ஏற்பாட்டை உடனடிய…

    • 2 replies
    • 549 views
  24. வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் ஒரே குரலாகவே தமிழ் மக்கள் பேரவையினால் 'எழுக தமிழ்' பேரணி நடாத்தப்படவுள்ளது. இந்த பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள் என ஈ.பி.ஆர்.எல.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கான விசாரணைகள், காணமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்காக தமிழர் தாயக பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்…

    • 0 replies
    • 424 views
  25. கிளிநொச்சியில் தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு – கொலையா என சந்தேகம்! கிளிநொச்சி – ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இருவரின் சடலங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 70 வயது மதிக்கத்தக்க விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான 35 வயது மதிக்கத்தக்க லிங்கேஷ்வரன் ஆகியோரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த இருவரின் சடலங்களும் காயங்களுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.