Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) களுத்துறை முதல் கதிர்காமம் வரையிலான தெற்கின் முன்னணி அரச நிறுவங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் அப் பிரதேசங்களில் பரவியுள்ளதால் அனைத்து அரச நிறுவங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத்துறைகள் எதுவும் உறுதி செய்யாத , மாத்தறை பொலிஸ் அத்தியட்சருக்கு கிடைத்த தகவலை மையப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து பொது மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர குறிப்பிட்டார். இந் நிலையில் இந்த தகவலை மையப்படுத்தி, தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் …

    • 1 reply
    • 355 views
  2. காத்தான்குடியில் 20 பேர் கொலை;ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் ஷரியா சட்டத்திற்கு ஏற்ப காத்தான்குடியில் இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்,இதற்கான ஆதாரங்களும் தரவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். வகாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மாநாடு ஒன்று நுகேகொடையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தபோதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் விசேட தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தேன். அதாவது, காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். அ…

    • 2 replies
    • 753 views
  3. வவுனியாவில் இன்று மாலை 5மணியளவில் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் மாடு மோதியதில் பாரிய விபத்துச்சம்பவம் ஒன்று ரயில் சாரதியின் சாதுரியத்தினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5மணியளவில் தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவமுகாமிற்கு முன்பாகவுள்ள ரயில்க்கடவையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளுடன் புகையிரதம் மோதியுள்ளது. இதன்போது பல மாடுகள் உயிரிழந்து துண்டுகளாகின. இந்நிலையில் மாடு ஒன்று ரயிலின் பிரதான கட்டுப்பாட்டு இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளது. தண்டவாளத்திற்கு பொருத்தப்பட்டிருந்த தடுக்கைகள் ரயில்ப்பாதையில் காணப்பட்டன.…

  4. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான தரவுகளை, தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பீ.நிரோஷ் குமார் கோரியிருந்து நிலையிலேயே, இலங்கை ராணுவம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் தகவலை, அதிகாரியும், ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடையவில்லை என தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர…

    • 0 replies
    • 354 views
  5. July 8, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn புலம்பெயர் நாட்டில் இருந்து சென்றவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி சென்றுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  6. July 8, 2019 நபர் ஒருவருடன் முரண்பட்டவரை கைது செய்ய பெருமளவான காவற்துறையினர் சாவகச்சேரி சந்தைக்குள் குவிந்ததால் சந்தைக்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.சாவகச்சேரி சந்தையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இரு நபர்கள் முரண்பட்டுள்ளனர். முரண்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்து சென்று சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதனை அடுத்து மூன்று வாகனங்களில் வந்த பெருமளவான காவற்துறையினர் சந்தைக்குள் புகுந்து தேடுதல் நடாத்தி முரண்பாட…

  7. July 8, 2019 அரசாங்கத்தை இலகுவில் கையளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்னும் 6 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே வைத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் 6 வருடங்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, 6 ராஜபக்ஸக்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறானதொரு குடும்ப ஆதிக்கம் இல்லை என்றும் தெரிவித்தார். வெற்றிப்பெறும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்…

  8. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதற்கு, பிரதம நீதியரசரால், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எழுவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/219917/நீதியரசர்கள்-எழுவர்-அடங்கிய-குழு-நியமனம்

    • 0 replies
    • 310 views
  9. மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ஒன்றினை முன்னெடுத்து சென்றதன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலேயே இவர்கள் 8 ப…

    • 1 reply
    • 1k views
  10. தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – கே. மஸ்தான் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு கொள்ளர் புளியங்குளத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எனது நிதியொதுக்கீட்டில் நடைபெற்ற வேலைத்திட்டங்களுக்கு வேலை முடிந்ததன் பின்னரும் அதற்கான பணத்தை வழங்காமல் உள்ளதாக அறிகின்றேன். இவ்வாறு பணத்தை வழங்க முடியாத நிலையில்தான் இந்த அரசாங்கம் இருக்கின்றது. எந்த செயற்பாட்டையும் அரசியல் ரீதியாக பார்ப…

    • 2 replies
    • 520 views
  11. யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்…

    • 0 replies
    • 338 views
  12. ஜனாதிபதி லண்டனிற்கு விஜயம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்க மூன்று நாட்கள் தங்கியிருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தனது லண்டன் விஜயம் காரணமாக நாளை கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்தினை நேற்று கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதி-லண்டனிற்கு-விஜய/

    • 1 reply
    • 823 views
  13. அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.கட்டப்பிராயிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்று நாடாளுமன்றத்தில் வர இருக்கின்றது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வருகின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடா…

  14. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவுசெய்யாதிருக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்! இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான கட்சிகள் உருவாக்கப்படுவதால், அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதன்காரணமாகவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வாறான கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். …

  15. 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமை! நாடளாவிய ரீதியில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 115,000 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபையின் ஆலோசகர், டொக்டர் சமந்த கிதலவாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிஸாரினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெரோயின், கஞ்சா, சிகரெட் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கே இவர்கள் அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நாடளா…

  16. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில் அதன் தலைவி சறோசா சிவச்சந்திரன் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற நிலைமாறுகால நீதி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பல்வேறு பட்ட இன்னல்களை சந்தித்து உயிர் இழப்புகளை சந்தித்து உடமை இழப்புக்களை சந்தித்து இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து மீண்டும் வந்திருக்கின்றோம் இந்த நிலையில் எங்களுடைய…

  17. மாறி வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பிலான ஐனநாயக போராளிகள் கட்சிக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஏப்ரல் 21 தாக்குதல்கள், தெற்கின் சமகால அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்புப் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுகள் சம்பந்தமான ஜனநாயகப் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்புப் பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்களை அமெரிக்கத் தூதுக்குழுவிடம் எடுத்துரைத்த ஜனநாய…

    • 2 replies
    • 688 views
  18. முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது : ஹரீஸ் எம்.பி !! ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கல்முனை பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளுக்கு உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான தயா கமகே கலந்துக…

    • 2 replies
    • 956 views
  19. நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது! வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே கடான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் நீர்கொழும்பு பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஜயவீர ஆரச்சிகே ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர், நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், கடான பொலிஸார் மேலதிக வி…

    • 1 reply
    • 444 views
  20. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை நிராகரித்தது கனடா? இலங்கைக்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கனேடிய பிரதமரிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அவரின் அழைப்பினை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நாட்டின் அரச தலைவர், மற்றுமொரு நாட்டுடன் நெருங்கிய உறவுகளை பேணும் நோக்கில், மற்றைய நாட்டின் அரச தலைவருக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கான அழைப்பை விடுப்பதே வழமை. இதற்கான தகவல் பரிமாற்றங்கள் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது திகதிகள…

    • 1 reply
    • 867 views
  21. இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்கிய தேசியக் கட்சியின் அடிமைகளாகவே இருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று(06) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கோவில்வயல் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி வேலைத்திட்ட முன்னேற்ற மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை கிட்டும், தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதனை கருத்தில் எடுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இல்லை. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இனி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜக்…

    • 1 reply
    • 1.1k views
  22. பொதுபல சேனாவின் கண்டி மாநாட்டில், 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்! கண்டி இன்று இடம்பெற்ற மாநாட்டில் பொதுபலசேனாவால் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை தாய்நாட்டை ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்லும் தொனிப் பொருளுடனான இந்த மாநாடு கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இம்மாநாட்டில், பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதமின்றி அரசு தடைச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்து 9 தீர்…

  23. பிறந்தவுடனேயே அடையாள அட்டை இலக்கம் – வருகிறது புதிய நடைமுறை அனைத்து பிரஜைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக, பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/குழந்தை-பிறந்தவுடனேயே-அட/

  24. "சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை" : விளக்குகிறார் மஹிந்த (எம்.மனோ­சித்ரா) சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ கேள்வி எழுப்­பி­யுள்ளார். அத்­தோடு சுக­வீ­ன­முற்ற பிள்­ளையை பார்க்கச் சென்ற தந்­தையை சுட்டுக் கொல்­வது தான் இரா­ணுவம் பொது மக்­களை பாது­காக்கும் முறையா? நாட்டில் இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெறும் போது பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகக் கூற முடி­யாது என்றும் அவர் விசனம் தெரி­வித்­துள்ளார். …

  25. இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும் வசந்த கரன்னகொட… July 7, 2019 தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. அத்துடன், கடத்தப்பட்ட இளைஞர்களைப் பற்றி முதன்முதலில் 2009 மே மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போதும் கிழக்கு கடற்படைத் தலைமையகத்தில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.