Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை இலங்கை தடுக்கவில்லை.. May 15, 2019 இலங்கை அரசாங்கம் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆய்வாளர் தயாகி ருவன்பத்திரன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். குரோதம் வெறுப்புணர்வு அச்சம் வன்முகைளை தூண்டுபவர்கள் சமூகங்களிற்கு இடையில் மோதல்களை உருவாக்குபவர்களிற்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கும்போது மனித உரிமையை மனதில் கொண்டு செயற்படவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான ஆய்வாள…

  2. வைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன் May 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த பத்தாம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஆசிரியையான தனது மனைவியை பிரசவத்திற்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அன்றைய தினமே மனைவிக்கு வயிற…

  3. முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் – 18 ஆம் திகதி அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு May 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த அறிவிப்பினை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு வெளியிட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தினம் வருடா வருடம் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்தில…

  4. விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள் எவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு இயல்பு நிலை மீளக் கொண்டு வரப்படும். தேர்தல்களைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல்களுக்கு முன்னதாக, உறுதியான நிலையை நான் ஏற்படுத்துவேன். தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிப்பேன். தீவிரவாத அமைப்புகளின் செயற்பாட்டு நிலைய…

  5. சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன், ஜேர்மன் பெண் யாழில் கைது. சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை விசாரணை செய்ததுடன், அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன்போது அவரிடமிருந்து சில இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழில்-சந்தேகத்திற்கிட-2/

  6. யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு – பொலிஸார் விசாரணை! யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று (புதன்கிழமை) காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், அடையாள அட்டைகளை மீட்டுள்ளனர். மேலும் அந்த அடையாள அட்டைகள் கிழக்கைச் சேர்தவர்களுடையதென தெரியவந்துள்ளது. இந்நிலையில் அடையாள அட்டைக்கு சொந்தமானவர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். …

  7. குண்டுதாரியின் தலையை அடையாளம் காட்டினர் பெற்றோர்! உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது. அலவுதீன் அஹமட் முவாத்தின் என்ற குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் அடையாளங்கண்டுள்ளனர். குறித்த நபரின் மரண விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறித்த தற்கொலை குண்டுதாரி மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்தோடு உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் என தற்கொலை குண்டுதாரியின்…

  8. தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர் சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் நேற்று பீஜிங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். சீன மக்கள் அரசியல் ஆலோசனை கலந்துரையாடல் தேசிய குழுவின் தலைவரான வாங், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவை வழங்கும் என்று இந்தச் சந்திப்பின் போது, தெரிவித்தார். சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனா தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் நட்புறவு ஒத்துழைப்பை மேலும் வலுப்படு…

    • 0 replies
    • 595 views
  9. யாழ்,வட்டுக்கோட்டை பகுதியில் வெடித்த இரண்டு குண்டுகள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. மதியம் ஒரு மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் கொத்ததுறையை அண்மித்த பகுதிகளான வட்டுக்கோட்டை, மூளாய், பொன்னாலை, அராலி ஆகியவற்றில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாடசாலையிலிருந்து மாணவர்கள் வெளியேறுகின்ற நேரத்தை அண்மித்த பொழுதில் இந்த குண்டுச் சத்தங்கள் கேட்டதனால் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிய பெற்றோர் மத்தியில் சற்று கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. …

    • 0 replies
    • 662 views
  10. ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று சிறிலங்காவின் சிங்கள பௌத்த தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சில பொலிஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பாதுகாத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள மல்வது பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்பரே விமலதம்ம தேரர், இந்த நிலமைகள் தொடர்ந்தால் சிங்கள மக்கள் கிளர்தெழுந்து சட்டத்தை கையில் எடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த …

    • 14 replies
    • 1.4k views
  11. உயிர்த்தஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் பாதுகாப்பு துறையின் செயற்பாடுகளுக்காக 2.6 பில்லியன்(260 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ள சீனா இலங்கை பொலிஸ்துறைக்கு 1.5 பில்லியன் பெறுமதியான 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் முன்வந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் கோ…

    • 0 replies
    • 809 views
  12. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் றமழான் மொகமட் இர்பான் என்பவரிடமி ருந்து கைப்பற்றப்பட்ட 27 அரச முத்திரைகளில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செய…

    • 0 replies
    • 450 views
  13. 30 வருட யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாட்டில் எமது பாதுகாப்பு படையினர் எமது தமிழ் சகோதர்கள் பலரும் தமது உயிரினை இழந்து யுத்தத்தினை முடிவுறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தனர். ஆனால் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இவர்களை கைது செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என மட்டக்களப்பு மங்களராமா விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை கண்டித்து அண்மையில் விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விகாராதிபதி சுமணரட்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற மதவழிபாட்டு தலங்கள் உல்லாச விடுதிகளில் மீது தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றிருந்தது ,இருந்த…

    • 0 replies
    • 633 views
  14. ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து இன மற்றும் மத குழுக்களின் நலனுக்காகவும் எதிர்த்தரப்பு, சிவில் சமுதாயம் மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை இணைந்து சரியான நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்புடன் செயற்பட்டு உடனடியாக இந்த தாக்குதல்களை நிறுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்காவிற்கான ஐ.நா. சபையின் கூட்டு அறிக்கையில், ஐ.நா விசேட ஆலோசகர்கள் கரேன் மற்றும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் தாக்குதல்களானது இனவாத யுத்த மோதலின் பேரில் ஒரு அதிர்ச்சிகரமான காலகட்டத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முற்படுகிறது, இந்த தாக்குதல்கள் ஸ்ரீலங்காவை பின்னோக்கி தள்ளி வருகின்றன. இதனை சரியான முறையில் கையாளவில்லையெனில் சமீபத்திய வன்முறை இன்னும் அதிகரிக்க சாத்தியம் உள்ளது, "என அவர்கள் அறிக…

    • 0 replies
    • 528 views
  15. வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது. யார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன. அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர் அணியும் சீருடைகளை அணியாமல், வித்தியாசமான சீருடைகளை அணிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தோடு, வித்தியாசமான சீருடையுடன் முகத்தை மறைத்தபடி காணப்படும் இரண்டு படைவீரர்கள் மேற்கத்தேய தேக நிறத்தை உடையர்களாக காட்சி தருகின்றார்கள். இவர்கள் யார்? …

    • 0 replies
    • 635 views
  16. தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது! பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேசி தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த இரு அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தபோதும், அதற்கான வர்த்தமானி வெளியிடப்படாமல் காணப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொடவின் ஒப்புதலுடன் தற்போது இவற்றிற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹரான் தௌஹீத் ஜமாத் அமைப்புட…

    • 2 replies
    • 524 views
  17. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். அதன்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தபடும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை வட மேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று மாலை நான்கு மணிக்கு தளர்த்தபட்டு மீண்டும் ஆறுமணியிலிருந்து அமுலுக்கு வருகிறது. நேறைய தினம் இலங்கையின் வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சகல சமூகத் தளங்களும் முடக்கப்பட்டுள்ளமை …

    • 0 replies
    • 394 views
  18. May 14, 2019 சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 5 ஆவது கட்ட கடன் தொகையாக இது அமைந்துள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிருப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது இலங்கை மத்திய வங்கியின் அந்நிய ச…

  19. May 14, 2019 முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்களது வீட்டுத்திடட பிரச்சினைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மாவடட முகாமையாளர் மேலதிக மாவடட செயலாளர் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் காணி உத்தியோகத்தர் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு மாவடட செயலாளர் குறித்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்டு குறித்த பகுதியில் உள்ள காணிகளை அடையாளப்படுத்தி குறித்த இடத்தில் அமைந்துள்ள பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க மக்களது சம்மதத்துடன் அன…

  20. தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்து வைப்பு May 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான உறவுகள் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் நினைவு வார ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது *ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை ஆயுதப் படைகளினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் *தமிழ் இனப் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நாள் 18 5 2019 *தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும் * கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைப் பற்ற…

    • 5 replies
    • 1.8k views
  21. இனவாத தாக்குதல் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்களுக்கு இனவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. முஸ்லிகளின் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாயல்கள் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் கவலையளிப்பதாகவும் ஊரடங்கு சட்ட நேரத்திலும் பாதுகாப்பு தரப்பினர் வன்செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.dailyceylon.com/182696/

    • 1 reply
    • 585 views
  22. வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் 1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்) 2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா) 3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன…

    • 17 replies
    • 2.6k views
  23. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா? ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்தப்பின் போது, சிறிலங்காவில் ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்த ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த தீவிரவாத செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார். 1990களில் ரஷ்யாவில் தொண்டர் நிறுவனங்களின் மூலம…

    • 0 replies
    • 592 views
  24. "ஆன்மீகமே எனது உயிர் அரசியல் வேண்டாம்" என்மீது அரசியல் பொறுப்புக்களை சுமத்துவது தகுதியாக இருக்கும் என்று சிலர் முன் வைக்கும் கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதுடன் கவலையையும் ஏற்படுத்தியிக்கின்றது. என்னுடைய ஒரேயொரு அரசியலானது இறைவன் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும். அதற்காக அரசியல் கோட்பாடுகளை அதனூடாக முன்னிறுத்துவதோ எந்தவொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அரசியல் பதவிக்காக முன்வருவதோ எந்தவகையிலும் எனது நோக்கமல்ல என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் கொழும்பு பேராயரின் ஊடக மற்றும் கலாசார நிலையம் விடுத்துள்ள அறிக்கைய…

    • 2 replies
    • 764 views
  25. வன்முறைகளைத் தூண்டி விட்ட நாமல் குமார, அமித் வீரசிங்க கைது கொழும்புச் செய்தியாளர்May 14, 2019 | 8:06 by in செய்திகள் குளியாப்பிட்டிய, மினுவாங்கொட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் என கூறிக் கொள்ளும் நாமல் குமாரவும், மகாசோன் படையணியின் தலைவர் என கூறிக் கொள்ளும் அமித் வீரசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இவர்களை சிறப்பு காவல்துறை குழுவினர் கைது செய்துள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக தகவல்களை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார, வரகாபொலவில் இன்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.