Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்: சுமணரத்ன தேரர் தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுமணரத்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களினால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் இன்று பாதிப்படைந்துள்ளது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் …

  2. தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையே ஆகும். ஆனாலும் அவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம…

  3. ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மௌலவி விமான நிலையத்தில் கைது ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் காணொளி வெளியிட்ட வவுனியாவைச் சேர்ந்த மௌலவியை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வவுனியா- செட்டிகுளம், முதலியார் குளத்தை பிறப்பிடமாக கொண்ட முனாஜிப் மௌலவி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (சனிக்கிழமை) காலை அவர் வந்தடைந்தபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். முனாஜிப் மௌலவி, கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து தனது முகநூலில் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்குஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். குறித்த…

  4. வதிவிட நுழைவிசைவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம் வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழைவிசைவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வதிவிட நுழைவிசைவுகளை, பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் பெறப்படும் நடைமுறைக்கு மாறாக, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதியும் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் நுழைவிசைவு காலாவதியான நிலையில் தங்கியிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து, குடிவரவுத் திணைக்களம் கடுமையான நுழைவிசைவு நடைமுறைகளை கடைப்பிடிக்கவுள்ளது. அனைத்துலக காவல்து…

    • 1 reply
    • 477 views
  5. (ஆர்.யசி ) 21 ஆம் திகதி தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களில் எட்டுப்பேர் தம்மை தற்கொலை தரிகளாக அடையாளப்படுத்தியுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்தார். வடக்கு கிழக்கில் மீண்டும் இராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர் என்றால் இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டு பொய் என்பது உறுதியாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதன…

    • 2 replies
    • 874 views
  6. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி , ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைககள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், அரசுக்கு இரண்டு கிழமை அவகாசம் தருகின்றோம் அதனை அரசு உறுதிப்படுத்தவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும். என மட்டக்களப்பு மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக புத்திஜீவிகள், இந்துகுருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சனிக்கிழமை (11) மங்களராமய விகாரை விகாராதிபதி சுமணரத்ன தேரரைச் சந்தித்து தற்போதைய நிலமை தொடர்பாக கலந்துரையடிய பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடக சந்திப்பு இ…

  7. கடந்த சனிக்கிழமை அமைச்சர் மனோகணேசன் கலந்துகொண்ட பதிவு நிகழ்ச்சி

    • 0 replies
    • 937 views
  8. 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி – நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவல் சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாள்கள் சிறிலங்கா முழுவதும் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளிவாசல்களில் வாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வாள்களை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தவறான கருத்து சமூகத்தில் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்து…

    • 6 replies
    • 1.2k views
  9. கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன. இலங்கைக் கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/119776

    • 0 replies
    • 779 views
  10. தமிழர்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் May 11, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி கவனயீர்ப்பு போர…

    • 1 reply
    • 308 views
  11. அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்கவில்லை – மனோ கணேசன் அபாயா அணிந்த ஆசிரியைகள் உடற்பரிசோதனைக்கு இடமளிக்காமையே புவக்பிட்டிய அமைதியின்மைக்கு காரணம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவிசாவளை புவக்பிட்டிய சிசிடிஎம் தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த விடயம் இது தொடர்பான பொலிஸ் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு சோதனைக்…

    • 6 replies
    • 1.4k views
  12. சஹரான் குழுவினரின் காணொளியை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அனுப்பியவர் அதிரடியாக கைது! பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹரான் தலைமையிலான தற்கொலை கும்பல் கடந்த 21 ஆம் திகதி தககுதலுக்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து எடுத்த உறுதி மொழி அடங்கிய காணொளியை, ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மாத்தளை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந் நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த நபர் கட்டாரிலிருந்து கட…

  13. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியங்குளம் விநாயகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தை இயேசு தேவாலயம் யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயரால் ஆர். ரெஸ். ஜஸ்டின் ஞானப்பிரகாசம் திறந்து வைக்கப்பட்டு வழிபாடுகளும் இடம்பெற்றது வழிபாட்டின் பின்னர் யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயரால் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருக்கின்ற தேவாலயங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு ஞாயிறு வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றதாக தெரிவித்துள்ளார் http://globaltamilnews.net/2019/121517/

    • 1 reply
    • 508 views
  14. ஐ.எஸ் தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலமைகள் காரணமாக தமிழ் – முஸ்லீம் மக்கள் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ள நிலையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையினமான பௌத்தர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வாழ வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அறிவுறுத்தியுள்ளார். சிங்கள பௌத்த கடும்போக்குவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இந்தக் கோரிக்கையை கர்தினால் முன்வைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களை அட…

    • 11 replies
    • 1.5k views
  15. (எம்.மனோசித்ரா) கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை ஆளுனர் பதவியிருந்து நீக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன…

  16. நாளைய தினம் கொழும்பின் வெள்ளவத்தை, நாவலை, பஞ்சிக்காவத்தை, கோட்டை ஆகிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடைபெற போவதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கொழும்பு மாவட்டம் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருப்பதுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம் பெற்றோர்கள் கொதிநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், அனைத்து தரப்பினரும், நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவிசாவளை தமிழ் பாடசாலையில் அபாயா அணிந்த ஆசிரியைகளை சேலை அணிந்து வருமாறு பெற்றோர் வலியுறுத்தும் காணொளியை வைத்து கொண்டு எவரும் வாத பிரதிவாதங்கள் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந…

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குற்பட்ட 04 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் குறித்த வீட்டுத்திட்ட பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாதிரிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் க…

  18. இலங்கையில் மீண்டும் தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மற்றுமொரு குழு தயாராக இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரியின் தகவலின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்படுவதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது. மரபுவழி பயங்கரவாத கோட்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு தற்கொலை குண்டுதாரியும் தாக்குதல் நடத்துவதற்கு குறைந்து 5 பேரின் உதவி தேவை. அந்த வகையில் இரண்டாம் தடவையும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இன்னும் 45 பேர் இலங்கையில் பதுங்கியுள்ளனர். அதனடிப்படையில் 9 தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டதாக பிபிசி சுட்டிக்…

  19. சிரியாவில் பயன்படுத்தும் மிகவும் அபாயகரமான இரசாயனம் உயிர்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து தற்கொலை தாக்குதலின் போதும் ஐஸ் பயங்கரவாதிகள் இந்த இரசாயனத்தை பயன்படுத்தியே வெடிகுண்டை பயன்படுத்தியுள்ளனர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகள் கூட, பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான மோசமான இரசாயங்களை பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம்ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிக சக்திவாய்ந்த சீ4 போன்ற இரசாயனம் இந்த குண்டுக்காக பயன்படுத்தியிருந்தால் வெடிப்பில் ஏற்படும் அழுத்தத்தை அதிகரிப்பதற்கு அதில் 20 கிலோக்குவும் அதி…

  20. அச்சத்திற்கு இடமில்லாமல் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாப்பு நிலைவரம் - விசாரணைகளுக்கு 8 நாடுகள் உதவுகின்றன - இராணுவத் தளபதி இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டாவது சுற்றுத் தாக்குதலொன்றை நடத்துகின்ற ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்புப்படைகள் நிர்மூலம் செய்துவிட்டதாகவும் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இலங்கைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்குத் தொடர்பிருந்ததை விசாரணையாளர்கள் நிறுவியுள்ளார்கள். ஆனால் அந்தத் தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானவை என்பதை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்…

  21. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார். குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழு ஏற்கெனவே இரு இடைக்கால அறிக்கைகளை தன்னிடம் கையளித்திருப்பதாகவும் மூன்றாவது அறிக்கை இவ்வாரம் கையளிக்கப்படும் என்றும் அம்பாறையில் கூறிய ஜனாதிபதி சிறிசேன, அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ( குண்டுத்தாக்குதல்களை தடுக்கத்தவறியதாக குற்றஞ்…

  22. சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு தினத்த…

  23. 74 கிலோ கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவர் கைது May 12, 2019 யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்னும் குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வடமராட்சி கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதனை தொடர்ந்து அவர்கள் மாவட்ட போதைப் பொருள் குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்ப…

  24. ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு May 11, 2019 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #eastersundaylk #governor #vickneswaran #surenragavan http://globaltamilnews.net/2019/121392/

  25. கிளிநொச்சியில் மூன்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 101 குடும்பங்களுக்கு நிரந்த வீடு May 11, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு, கல்மடுநகர், உரியான், பரந்தன் பகுதியில் உள்ள 63 குடும்பங்களுக்கும் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட செலவாநகர், அம்பாள்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 23 குடும்பங்களுக்கும், பச்சலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட தம்பகாமம் கிராமத்தின் 15 குடும்பங்களுக்களுக்களுக்கு நிரந்த வீட்டுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் (நாடுபூராகவும் 187 அடிக்கல் நாட்டுவோம் எனும் தொனிப்பொருளில்) இன்று (10.05.2019) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.