Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு, கிழக்கில் படைக்குறைப்பு தொடர்பில் அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவின் கருத்திற்கு ரெலோ கண்டனம் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருக்கும் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் மிதமிஞ்சியதாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், யதார்த்த ரீதியாக அது குறைக்கப்படவேண்டும் என்று கடந்த பத்து (10) வருடங்களாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கருத்து வெளியிட்டுள்ள கருத்திற்கு ரெலோ தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. ரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந. சிறிகாந்தா விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரமும் பின்வருமாறு, …

  2. பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு April 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சப…

  3. ரெலோவிற்குள் பெரும் களேபரம்; அவசரமாக கூடுகிறது தலைமைக்குழு! April 15, 2019 ரெலோ அமைப்பின் அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தீர்மானத்தை மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்தது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மாற்று அணியொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் யாழில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை போன்ற சூடான சம்பவங்களின் பின்னணியில், அவசரகதியில் இந்த கூட்டம் ஏற்பாடாகியுள்ளது. இதில், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் பிரேரணையை சிறிகாந்தா தரப்பு முன்வைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து தனித்து செல்லும் நோக்கத்து…

  4. முல்லைத்தீவில் விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு முல்லைத்தீவு, 03 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கிப் பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோத முற்பட்ட வேளை வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் …

  5. (நா.தினுஷா) பல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியுரிமை வழங்கி இரட்டை குடியுரிமைக்கான வாய்ப்புகள் காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைமையை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீக்கப்பட்டது என அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் தான் சிக்கியது போல் இரட்டை குடியுரிமை நெருக்கடியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தற்போது சிக்கிக்கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். இதுக்குறித்து அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில் , …

  6. யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடி நின்ற நால்வரை சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவர்களிடம் , 3 கத்தி, கைக்கோடரி , சுத்தியல் , ஸ்கூருட் ரைவர் என்பவற்றுடன் 19ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். வழக்கினை …

  7. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் பொருத்தப்பட்டுள்ள விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனால் இதுவரை அனுமதி பெறாத விளம்பரதாரர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். சபையின் ஆளுகைக்கு உட்பட்ட , பொது இடங்கள், வீதியோரங்கள் என்பவற்றில் தனியார் பலர் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் பல விளம்பர தட்டிகள் சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டு உள்ளன. அதேவேள…

  8. 1 Min Read April 13, 2019 பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும்…

    • 1 reply
    • 987 views
  9. இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியாக தற்போதைய மத்திய செயற்குழுவின் இறுதிக் கூட்டம் இம்மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 04.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலத்தில் இடம்பெறுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் செயலாளர் அடங்கிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றும் கட்சியின் புதிய பதவிவழி உத்தியோகத்தர்கள…

  10. ஆனல்ட் – கேசவனுக்கு பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல் இல்லை April 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கும் காவல்து…

  11. April 15, 2019 யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில , 8 பேரை மானிப்பாய் காவற்துறையினர் கைது செய்தனர். …

  12. இன்று திருப்பதி செல்கிறார் சிறிலங்கா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். குடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இறங்கும் சிறிலங்கா அதிபர், அங்கிருந்து திருமலைக்குச் செல்லவுள்ளார். நாளை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் நடைபெறும், சுப்ரபாத சேவையில் சிறிலங்கா அதிபர் குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்யவுள்ளார். அதன் பின்னர், திருமலையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்படுவார். நாளை இரவு பெங்களூரு வழியாக சிறிலங்கா திரு…

  13. திருகோணமலையில் பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர விசாரணை திருகோணமலையில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடந்திய சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் உட்பட இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கந்தளாய் வாவியில், பொலிஸ் பரிசோதகர்களின் குடும்பத்தினர் நேற்று நீராடி கொண்டிருந்த வேளையில், அவ்விடத்திற்கு வந்த சந்தேகநபர்கள் இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடயத்திற்கு சென்ற பொலிஸ் ப…

  14. அனைத்துலக சட்டங்களின்படி கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – ஸ்கொட் கில்மோர் அனைத்துலக சட்டங்களின்படி, சிறிலங்கா படைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு கட்டளை வழங்கியவர் என்ற வகையில், கோத்தாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டியவர் என்று அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில், றோய் சமாதானம் என்ற கனடாவைச் சேர்ந்த தமிழரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ளார். இவர், ஊடகவியலாளர் மேரி கொல்வின் 2012ஆம் ஆண்டு சிரியாவில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக , சிரிய ஆட்சியாளர்களுக்கு…

    • 0 replies
    • 818 views
  15. அதிபர் தேர்தலில் ‘மொட்டு’ வேட்பாளராக குமார வெல்கம? அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், சிறிலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சியின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். பொதுவேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டும் என்றுபொதுஜன பெரமுன தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். விரைவில் கூட்டு எதிரணி தலைவர்கள் இதுபற்றி சிறிலங்கா அதி…

    • 0 replies
    • 462 views
  16. போர்க் காலத்­தில் இலங்­கை­யின் கல்­வி­யில் முதற்­த­ர­மாக இருந்த யாழ்ப்­பாண மாவட்­டம், தற்­போது கல்­வியை விட போதைப் பொரு­ள் பாவ­னை­யில் முதற்­தர மாவட்­ட­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் சபா.குக­தாஸ் தெரி­வித்­தார். அச்­சு­வேலி– தம்­பாலை இளை­ஞர் கழ­கத்­தின் அபி­வி­ருத்தி சார் கூட்­டம் நேற்­று­ முன்­தி­னம் நிலை­யத் தலை­வர் இ.தனு­சன் தலை­மை­யில் நடை­பெற்­றது. அதில் சிறப்பு விருந்­தி­னர் உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது: இன்­றைய சூழ­லில் பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர்­தான் நூறு­வீத பாது­காப்பு, பிள்­ளை­க­ளைக் கண்­கா­ணிக்­கத் தவ­று­வீர்­க­ளாக இருந்­தால்…

  17. கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து …

  18. சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள் சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வ…

  19. -வை எல் எஸ் ஹமீட் -ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார். அப்பொழுதுஅவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது. 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது.அரசியலமைப்பு சட்டம் எப்போதும் prospective -முன்னோக்கியது; அதாவது அது அமுலுக்கு வந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கே பொருந்தும்; அது retrospective- அது பின்னோக்கியதல்ல; என்பது பொதுவான கோட்பாடு.இதனடிப்படையில் 19 அமுலுக்கு வரமுன் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். மக்களும் ஆறு வருடங்களுக்கு ஆணை வழங்கிவிட்டனர். எனவே, புதிய திருத்தம் இந்த ஜனாதிபதிக்குப் பொருந்துமா? என அறிவதற்காக ஜனாதிபதி உயர்நீதிமன்றை நாடினார்.உயர்நீதிமன்றம் “ஆம், பொருந்தும். பதவிக்காலம் ஐந்து வருடமே” என பதிலளித்தது. உயர்நீதி…

    • 0 replies
    • 634 views
  20. பூநகரி விபத்தில் சிக்கிய, கனடா பிரஜை பலியானார்.. April 15, 2019 பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடா வாசி சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கனடா பிரஜாவுரிமை பெற்ற, 66 வயதுடைய செல்லப்பா சுந்தரேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பி வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அந்நிலையில் கடந்த 28ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்கவென மோட்டார் சைக்கிளில் விசுவமடு சென்று திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்கு…

  21. மன்னாரில் கடும் வறட்சி – மக்கள் – கால்நடைகள் பாதிப்பு : April 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு, மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மன்னாரில் காணாப்படும் அதிகலவான குளங்கள் மற்…

  22. சாத்வீக வழியில் உரிமைப் போராட்டம் தொடரும் – மாவை தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம். தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரி…

    • 1 reply
    • 664 views
  23. இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை) மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து இலங்கையர்களும் மரக்கன்றொன்றை நாட்டுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் …

  24. யாழ்.மக்கள் போரின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை: தர்ஷன ஹெட்டியாராச்சி போர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமக்கும் குடும்பம் என்றதொன்று உள்ளமையால்தான், அம்மக்களின் துயரங்களை உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆகையால்தான் அவர்கள் இழந்த அனைத்தையும் வழங்க முடியாதபோதும் எம்மால் முடிந்த மனிதநேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்…

  25. கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்! பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமிக்கக்கூடும் எனவும், அதேபோல் ஐ.தே.க. மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியுடன் கைகோர்க்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களின்போது இதற்கான அடித்தளத்தை அரசியல் பிரமுகர்கள் இடக்கூடும் என எதிர்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.