Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமராட்சியில் மீன்பிடி படகு – கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிப்பு April 14, 2019 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் மீன்பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிதாக கரை வலையை கொள்வனவு செய்திருந்த அம்பன் கொட்டோடை பகுதியைச் சேர்ந்த கந்தன் சுரேந்திர ராசா என்பவர் நேற்றைய தினம் முதல் முதலாக தொழிலை மேற்கொண்டுவிட்டு படகு மற்றும் வலைகளை கடற்கரையில் வைத்து விட்டு வீடு சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இவ்வாறு அவரது பிடி படகு மற்றும் கடற்றொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்து நாசமாகிய…

  2. கிளிநொச்சி வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தை முடக்கியதான செய்தியில் உண்மையில்லை April 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோயாளர் நலன்புரிச் சங்கத்திற்கும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் அச்சங்கத்தின் நடவடிக்கைகளை வைத்தியசாலை நிர்வாகம் முடக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்துத் தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ‘வடமாகாணத்தில் 2016ம் ஆண்டிலிருந்து மாகாண அமைச்சர்கள் வாரியத்தினால் அமைச்சர் சபைப்பத்திர அறிவுறுத்தல்களுக்கு அமைய நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொ…

  3. சிறிலங்காவுடன் பலமான கூட்டை எதிர்பார்க்கும் அமெரிக்கா சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான கூட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிங்கள- தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறிலங்கா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறிலங்காவும் அமெரிக்காவும் மக்களுக்கிடையிலான பரந்துபட்ட கூட்டு, ஜனநாயக கொள்கைகள் மீதான அர்ப்பணிப்பு, நிலையான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் அடிப்படையில் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டு மேலு…

    • 0 replies
    • 481 views
  4. ஐதேகவை உடைத்து மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு? – தயாராகிறார் மைத்திரி வரும் நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா முஸ்லிம் …

    • 0 replies
    • 545 views
  5. அவர்கள் தாக்கட்டும். தயாராகவே இருக்கிறேன் - கோத்தா தன் மீது வழக்கு தாக்கல் செய்தவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளார்கள். நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன் என்கிறார் கோத்தா. இலங்கையில் அரசியல் மாறுதலை உருவாக்கும் தனது உன்னத நோக்கத்தினை அவர்களால் குழப்ப முடியாது. ஜனாதிபதி தேர்தலில் தான் ஒரு முன்னனி வெற்றி போட்டியாளர் என்பதால், இலங்கைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் அதை தடுக்கும் நோக்கில் இந்த வேலையினை செய்கிறார்கள். இது தோற்கடிக்கப்படும். லாஸ் ஏஞ்சலின் வட கிழக்கில் 10 மைல் தொலைவில் உள்ள பசடேனா பகுதியில் இலங்கையர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் தனது மகனை பார்க்கவும், ஒரு திருமணத்துக்கும் வந்திருக்கும் கோத்தா தங்கி இருக்கிறார். அவரது வக்கீல்கள்,…

    • 8 replies
    • 1.2k views
  6. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://glo…

  7. முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் ; விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்தனர். தண்ணீர் , கல்வி , மற்றும் எனைய பொது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பல மைல் தூரம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை…

  8. தூக்கிலிடும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை ஜனாதிபதிக்கு மகஜர் April 12, 2019 போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் கைதிகளை விரைவில் தூக்கிலிடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வேண்டுகோள் விடுக்கும் மகஜரை இணையத்தினூடாக அனுப்பும் நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச்சபை முன்னெடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை , அவசர நடவடிக்கை என்ற தலைப்பில் இது தொடர்பான அறிக்கையினை தமது இணையத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 13 மரணதண்டனைக் கைதிகள் விரைவில் தூக்கிலிடப்படும் ஆபத்திலிருக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 43 வர…

  9. 57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன April 12, 2019 57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்க அவர்களின்தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் நன்னீர்மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2019/118187/

    • 1 reply
    • 870 views
  10. நேற்று வவுணியாவில் 38 பாகை செ போட்டு தாக்கிய வெய்யில் இன்று 37.5 பாகை செ ஆக இருந்தது. 140 வருடங்களின் பின்னர் நாட்டில் அதி கூடிய வெப்பநிலை நிலவுவதாக பேராதனை பல்கலைகழக சூழலியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

  11. திருப்பதி பயணத்தை ரத்துச் செய்தார் மைத்திரி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார். சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் சிறிலங்காவிலேயே தங்கியிருப்பார் என்றும் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.puthinappalakai.net/2019/04/13/news/37354

    • 0 replies
    • 554 views
  12. காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சகம் – அரசிதழ் வெளியீடு அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரசாங்க அச்சக திணைக்களத்தைக் கொண்டு வந்திருந்தார். கடந்த கடந்த ஆறு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த அரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐதேகவ…

    • 0 replies
    • 411 views
  13. அமெரிக்க குடியுரிமையை துறக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி – என்கிறார் கோத்தா தமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரே அவர் இவ்வாறு கூறினார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோத்தாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர். அதையடுத்து, விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அறையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு மதத் தலைவர்களின் ஆசி வழங்கும் நிகழ்வும்…

    • 0 replies
    • 570 views
  14. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று -10- மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டிட அபிவிருத்திப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_684.html

    • 8 replies
    • 1.8k views
  15. கோத்தாவை வெட்டியாட, பொன்னருக்கு கொம்பு சீவப்படுகிறதா? தன்னை சிறையில் தூக்கி போட்ட கோத்தா மேல் பயங்கர கடுப்பில் இருப்பவர் சரத் பொன்சேகா. இவரை உள்நாட்டலுவல்கள் அமைச்சராக்க ஜதேக, பரிந்துரை செய்துள்ளது. மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் குதிக்க விரும்பும் மைத்திரி, தனக்கு கோத்தாவிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்பை, பொன்னர் மூலம் தடுக்க விரும்பலாம் என கருதப்படுவதால், இது சாத்தியமாகலாம். உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு வழங்கப்பட்ட, இலங்கை குடியுரிமையை எந்நேரமும் ரத்து செய்யமுடியும் என்ற வகையில், அமெரிக்க குடியுரிமை நீக்க மனுவை கொடுத்துவிட்டு வந்துள்ள, கோத்தாவுக்கு, கடுக்காய் (சிங்களத்தில், கினிகெடி) கொடுக்க பொன்னரே சரியான ஆள் என கருதப்படுகின்றா…

    • 0 replies
    • 693 views
  16. (எம்.ஆர்.எம்.வஸீம்) நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனையை எதிர்வரும் மே மாதத்துக்குள் நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பிரகாரம் போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கே ஆரம்பமாக தூக்குத்தண்டனை நிறைவேற்றப்போவதாகவும் தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/53922

  17. கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை அது அபிவிருத்திக்காக தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் ரவிப்பிரிய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (11.04.19) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலகத்திற்குரிய காணியும் அதனோடினைந்த விளையாட்டு மைதானத்தையும் பாடசாலைக்கு கையளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனினால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது இதற்கு பதிலளிக்கும் போதே கிளிநொச்சி இராணுவத்தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். …

  18. April 12, 2019 நோர்வூட் காவல்துறைப்பிரிவில் அமைந்துள்ள வெஞ்சர் தோட்டத்தில் நேற்று (11.04.2019 )மாலை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 10ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சில இடங்களில் வீசிய கடும் காற்றுக்காரணமாக வீடுகளின் கூரைகள் மழையுடன் கூடிய காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீடுகளில் காணப்பட்ட அத்தியவசிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாடசாலை புத்தகங்கள் என அனைத்தும் நீரில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் கடும் காற்றினால்…

  19. நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை… மகிந்த April 12, 2019 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த காரணத்தால், புதிய கட்சி ஒன்றை உருவாக்க வேண்டி ஏற்பட்டதாகவும், எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.. தங்கால்லைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் வரிச் சுமையை மக்கள் மீது அதிகமாக சுமத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ இங்கு உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார். http://…

  20. ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு April 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தனது வாகனத்தை விட்டு இறங்காது பதிலளித்தமைக்கு எதிராகவும் , பேச்சு நடத்த அழைத்த போது அதற்கு வராது சென்றமைக்கு எதிராகவும் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் முறையிட்டுள்ளார். மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்கு காணி சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு செய்யும் பணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு காணி உரிமையாளர்கள் , பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டு எதிர்…

  21. தனக்கெதிரான வழக்கு - அமெரிக்கா பிரஜாவுரிமை ; நாடு திரும்பிய கோத்த தெரிவித்தது என்ன? அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச எனினும் எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார். பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்…

  22. புதுவருடத்தில் பாரிய அரசியல் மாற்றம்- ஆரம்பித்து வைப்பார் சிறிசேன புதுவருடப்பிறப்பினை தொடர்ந்து இலங்கையின் அரசியல்வானில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் அரசவட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிகமுக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம் அது தற்போதைய அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை கொடுக்கலாம் என ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை வெளியிடுவார் அத்துடன் சில அரசியல் முடிவுகளையும் வெளியிடுவார் என குறிப்பிட்ட ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்த விசாரணைகள் முடிவடைந்ததும் இந்த கொலை சதிச்செய்தி முயற்சி குறித்…

  23. “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் நிறைவு விழாவும் முன்னேற்ற மீளாய்வு கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நாளை இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்களினால் முன்னெடுக்கப்படும் தேசிய அபிவிருத்தி செயற்திட்டங்களையும் சமூக நலன்புரி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனாகவும் பயனுறுதி வாய்ந்த முறையிலும் நடைமுறைப்படுத்தி கிராமிய மட்டம் முதல் ம…

  24. சற்று நேரத்தில் கொழும்பு திரும்புகிறார் கோத்தா – கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளார். டுபாய் வழியாக இன்று காலை 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் கோத்தாபய ராஜபக்சவுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கடந்த மாதம் 26ஆம் நாள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு, எதிராக கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக அவரது மகளும், ச…

  25. வடக்கில் தொடரும் காணி சுவீகரிப்பு – பாதுகாப்பு செயலாளரை சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு வடக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதன்படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. வடக்கில் பொதுமக்களின் காணிகளை பாதுகாப்பு படைவசமாக்க மீண்டும் காணி அளவீடுகள் இடம்பெறுகின்ற விடயம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணம் மண்டைத்தீவில் நேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.