ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
வவுணதீவு காவல்துறையினர் கொலை – சந்தேக நபரின் தடுப்புக்காவல் நீடிப்பு… March 8, 2019 மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்து 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரது தடுப்புக்காவல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 120 பேரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் கொலை செய…
-
- 0 replies
- 265 views
-
-
மட்டக்களப்பில் எலும்புக் கூடுகள் மீட்பு – இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு உத்தரவு March 8, 2019 மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது மீட்கப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகளை இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கிணறு வெட்டுவதற்காக குழி தோண்டும் போது குழியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புகளும் வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற…
-
- 0 replies
- 241 views
-
-
பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி! நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், ”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும். எனது பெற்றோர், அப்போது…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
கடந்த ஞாயிறு (Mar 03) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் எழுச்சி மகாநாட்டில் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை : அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் : கடந்த 70 வருடங்களாக இலங்கையிலே மூன்று அரசியல் அமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த 3ம் ஒற்றையாட்சி அரசமைப்பாகத்தான் அமைந்திருந்தன. அந்த மூன்றையும் சிங்கள அரசுகள் நிறைவேற்றுகின்றபோது அந்த மூன்றையும் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தார்கள். எம்முடைய மக்களையும் அதனை நிராகரிக்கச் சொல்லிக் கேட்டார்கள். ஆனால் இந்த முறை தமிழ்ச் சரித்திரத்திலே முதற்தடவையாக அதே ஒற்றையாட்சி அரசமைப்பை நாம் ஆதரிக்க வேண்டுமென்று எம்மால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கேட்டுக…
-
- 0 replies
- 181 views
-
-
பெரும்பாலும் நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம் * 1983 ஆம் ஆண்டுதான் லயன் கூரைகள் சீரமைக்கப்பட்டன * 75 வீதமானோர் சிங்கள மொழியைப் பேசுகிறார்கள் * பெரும்பாலான சிறுவர்கள் சிங்கள பாடசாலைக்குச் செல்கிறார்கள் “நாம காலம் முழுக்க கம்பனிக்கும் நாட்டுக்கும் உழைச்சுக் கொடுத்திட்டு, தலைவர்களுக்கு அடிமையாக இருக்கனும்னு தான் எல்லாரும் நெனைக்கிறாங்க. இந்த இறப்பர் மரங்கள எங்க சொந்தங்களா நெனச்சு எல்லா சோகங்களையும் மரங்களுக்குத் தான் சொல்றோம். எங்க உசுரு போகும் வரைக்கும் ஏழையாவே வாழனும்னுதான் கடவுளுக்கும் ஆசை போல” - இப்படிப் பேசுகிறார் வேரகொல தோட்டத்தில் 17 வயதிலிருந்து இறப்பர் பால்வெட்டுத் தொழிலில் ஈடுபட்டுவரும் என். கலைச்செல்வராணி (37). கொழும்…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
இலங்கை மீது பன்னாட்டுச் சமூகத்தின் மேற்பார்வை அவசியம். போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும். கால அவகாசத்தை வழங்காது ஐ.நா. தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் போட்டுவிட முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுப் பகல் 11 மணிக்கு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலை…
-
- 0 replies
- 520 views
-
-
இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடவில்லை. போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பழைய வடுக்களை கிளறாமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். இந்தக் கோரிக்கையை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் முன்வைப்ப தற்கு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூவர் தமது பிரதிநிதிகளாக அனுப்பப்படவுள்ளனர். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரச தலைவர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்…
-
- 0 replies
- 355 views
-
-
அமெரிக்கா மற்றும் சீன நாட்டுத் தூதுவர்கள் ஒரே நேரத்தில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், வடபகுதி மற்றும் குடாநாடு என்பனவற்றின் நிலமையை ஆராயும் நோக்கிலேயே இந்தப் பயணங்கள் அமைந்துள்ளன என்று சுட்டிக் காட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ், ஜெனீவா தீர்மான வரைவு குறித்து நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். மேலும்,…
-
- 0 replies
- 272 views
-
-
இலங்கையில் சீன மக்கள் குடியரசின் தூதர் சேன்க் சுயுவான் (Cheng Xueyuan) உட்பட பிரதிநிதி குழு நேற்று வட மத்திய கடற்படை கட்டளையின் விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்களை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி ரியர் அட்மிரல் முதித கமகே வரவேற்ப்பளித்தார். அதன் பின் இவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. http://www.virakesari.lk/article/51426
-
- 0 replies
- 245 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாறு செல்லும் பலர் இலங்கையில் கைது செய்யப்படுவது மட்டுமன்றி, இலங்கை கடல் எல்லையை தாண்டி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றடைந்த பலரும் நாடு கடத்தப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில், சட்ட விரோதமான முறையில் அகதிகளாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 30 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 224 views
-
-
1 Min Read March 7, 2019 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனைஆளுநர் செயலகத்தில் இன்று (07) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்க…
-
- 0 replies
- 173 views
-
-
March 7, 2019 அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு இலங்கை காவற்துறையினருக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளதுடன் இரண்டு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். அத்துடன் இதற்காக “இன்டர்போல்” சர்வதேச காவற்துறை உதவியையும் தாம் நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதை குறிப்பிட்டார். http://globalt…
-
- 0 replies
- 401 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைதுசெய்வதற்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், தன்னை கைதுசெய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, எதிர்வரும் 11 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு கடற்படையின் முன்…
-
- 0 replies
- 173 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் முடிந்ததை செய்வோம் : அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் March 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசுடன் பேசி எம்மால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வோம் என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர் அமெரிக்கன் கோணரில் யூடிப் கலையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கு கொண்டார். இந்நிகழ்வினை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தமக்கான நீதியினை அமெரிக்க அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்த…
-
- 1 reply
- 412 views
- 1 follower
-
-
மகிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால், கைவிலங்குடன் மின்சாரக் கதிரையில் அமர்ந்திருப்பார்… March 7, 2019 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தளர்வை ஏற்படுத்துதற்கு சர்வதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து, தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர் முன்னைய ஆட்சி தொடர்ந்திருந்தால், மகிந்த ராஜபக்ஸவுக்கு கைவிலங்கு மாட்டி மின்சாரக்கதிரைக்குக் கொண்டுபோயிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்றையதினம் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ஜெனீவாவில் தற்போது இலங்கையை பலவீனபடுத்தும் நடவடிக…
-
- 2 replies
- 339 views
- 1 follower
-
-
திருக்கேதீஸ்வரம் வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சர்வமதப் பேரவை March 7, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வரம் – மாந்தைச் சந்தி வளைவு தொடர்பாக அண்மையில் தீவிரமடைந்த பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சர்வ மதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் தலைமையில் மன்னார் சிறிய குருமடத்தில் இடம் பெற்ற சர்வமதப் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதன்படி பிரச்சினையில் உள்ள இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக முதலில் சந்திப்பதென்றும் பின்னர் அனைத்துத் தரப்பினரையும் ஒரு தளத்திற்குக் கொண்டு வந்து …
-
- 0 replies
- 653 views
-
-
போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம் – ஏஎவ்பி போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது. பழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை என்று சிறிலங்கா அதிபர் நேற்று தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஏஎவ்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் முடிவுக்கு வந்த, சிறிலங்காவின் 37 ஆண்டுகால கரந்தடிப் போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரி, 2015ஆம் ஆண்டு நிற…
-
- 1 reply
- 388 views
- 1 follower
-
-
மன்னார் புதைக்குழி மர்மம் இன்று வெளியாகும்! மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கை பெரும்பாலும் இன்று வெளியாகும் என்று சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்று மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ, “…
-
- 0 replies
- 385 views
-
-
கிழக்கில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கோரிக்கை இறுதிக்கட்டத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடகிழக்கெங்கும் இடம்பெறும் போராட்டங்கள் இரண்டு வருடத்தை கடந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணையுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள…
-
- 0 replies
- 684 views
-
-
வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு மாய மான் - டக்ளஸ் சுட்டிக்காட்டு! உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக தொலைத்துவிட்டு அவர்களுக்காக தெருக்களில் அமர்ந்து நீதிகேட்டுப் போராடிக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவித் தொiகையாக மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தால் குறைந்தது 25,000 ரூபா மாதக் கொடுப்பனவாக வழங்கப்படவேண்டும். அத்துடன் இந்த 25,000 கொடுப்பனவானது உறவுகளை தொலைத்தகாலப் பகுதியை இன்றுவரை கணக்கிட்டு பயன்பெறக்கூடிய தொகையாக வழங்கப்படவேண்டும் என்று ஈ.பிடி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில் தெரி…
-
- 0 replies
- 326 views
-
-
வடக்கு ஆளுநர் கால அவகாசம் கோர ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது ; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஆளுநர் ஜெனீவா செல்வதற்கு முன்னர் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களது உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு அப்பால் அவர் ஜெனீவா சென்று நியாயத்தை பேசவேண்டும். நீதியை பேசவேண்டும். எனவும் கேட்டுள்ளனர். வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்த…
-
- 0 replies
- 276 views
-
-
‘இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது’ சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, பி.ப. 04:53 Comments - 0 கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர் வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்ற இரணைமடுக்குளம் கடந்த 2015ஆம் ஆண்டு மீள் புனரமைக்கப்பட்டுள்ளது. 34 அடியாக காணப்பட்ட குளம் அபிவிருத்திக்கு பின் தற்போது 36 அடியாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு பெருந்தொகை நிதியில் பு…
-
- 0 replies
- 275 views
-
-
‘செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றனர்’ தாம் செய்த பாவங்களுக்கு இந்தியாவுக்குச் சென்று ஆலயங்களில் பிராயச்சித்தம் தேடுவதாக பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாயகத்தில் ஆலயங்கள் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் பௌத்தமயமாக்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு இங்குள்ள ஆலயங்களைப் புனரமைப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்காகவோ எதனையும் செய்யவில்லை. அவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்த யாரும் தயாராகவும் இல்லை. யுத்தத்தால் எல்லாவற்றையும் மக்கள் இழந்து மிகதுன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அ…
-
- 3 replies
- 803 views
-
-
கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான நீதி கிடைக்கும் என்பதை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நினைவூட்டியுள்ளார்
-
- 0 replies
- 156 views
-
-
மன்னாரில் கிளைமோர் குண்டு ஒன்று மீட்பு! மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன்சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதைக்கு அருகிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மன்னார் நகர சபை ஊழியர்களால் துப்பரவுப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், குப்பைக்குள் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு சுமார் 3 கிலோ கிராம் நிறை கொண்டதெனவும், குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு கடைகள் காணப்படுகின்றதால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து இந்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறித்த வெடிபொருள் தொடர்பான மேல…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-