ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
யாழ்.ஆங்கிலிக்க திருச்சபையுடன் சுமந்திரன் சந்திப்பு புதிய சாசன வரைவு பற்றி சுமந்திரன் விளக்கம் முன்மொழியப்பட்டிருக்கும் புதிய அரசியல் சாசனம் குறித்த தெளிவற்ற தன்மையையும், ஐயப்பாடுகளையும், அது தமழருக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது பற்றி அறிவதற்காகவும் ஒரு ஐயம் தெளிதல் நிகழ்வை அங்கிளிக்கன் தேவாலயத்தின் சமுதாயப் பொறுப்புணர்வுக்கான பிராந்திய சபையின் சார்பில் யாழ்ப்பாணத்தின் (அங்கிளிக்கன்) உதவி குருவானவர் வணக்கத்துக்குரிய அருட் தந்தை சாம் பொன்னையா சமீபத்தில் ஒழுங்கு செய்திருந்தார். குருவானவர்கள், தேவாலய அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த சமூகத் தலைவர்களும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அரசி…
-
- 2 replies
- 666 views
-
-
February 19, 2019 யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவற்துறையினர் தாக்கியுள்ளனர். யாழில் உள்ள தொலைக்காட்சி நிறுவனமொன்றில் பணியாற்றும் 32 வயதுடைய நடராஜா குகராஜ் எனும் ஊடகவியலாளரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவிக்கையில், “சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தபோது அங்கே காவற்துறையினரும் நின்றிருந்தனர். வழக்கம்போல் நான் சற்று தூரமாக நின்று…
-
- 5 replies
- 727 views
-
-
சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க சிறிலங்கா படையினரைத் தண்டிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது, அவ்வாறு செய்வதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தால், அது வெற்றி பெறாது, என்றும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். “போரின் போது, ஆயுதப்படையினர் செய்த தியாகங்கள் புறக்கணிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.சட்டத்தை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போரின் போது, பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைக்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்…
-
- 1 reply
- 207 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழியின் கார்பன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதி மன்றத்தினூடாக இன்று புதன் கிழமை வெளி வரும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப் படவில்லை. பரிசோதனைக்கான அறிக்கை உத்தியோக பூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையினை வெளியிட முடியாது எனவும், பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் ந…
-
- 1 reply
- 199 views
-
-
சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் மீதும் படையினர் போர்க்குற்றங்களைப் புரிந்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனவே, பிரதமரின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிப்பதாகவும் சர்வதேச பொறிமுறை ஊடாக உண்மைகள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போரின்போது இடம்பெற்ற சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறியிருந்தார். இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியின் தலைவரிட…
-
- 1 reply
- 226 views
-
-
ராணுவத்தைக் காட்டிக் கொடுத்த ரணிலை சிங்களவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் -கொக்கரிக்கிறார் கோத்தா பதிவேற்றிய காலம்: Feb 21, 2019 எமது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இறுதிப் போரில் அவர்கள் மனிதத் தன்மையுடன் நடந்தார்கள். தமது உயிரை அர்ப்பணித்து தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள். இராணுவத்தினரும் போர்க்குற்றம் புரிந்தனர் என்று வடக்கில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மாபெரும் பொய் ஒன்றைச் சொல்லியுள்ளார். எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளை தம் வசப்படுத்தவே இந்தப் பொய்யை தலைமை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், தெற்கில் உள்ள மக்கள் அவரை மன்னிக்…
-
- 2 replies
- 633 views
-
-
வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை February 20, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஒரு நாடு பொருளாதார ரீதியில் சுதந்திரமடையாவிடின் அரசியல் சுதந்திரத்தினை அடையமுடியாது.வடமாகாணத்திற்கு பொருளாதார சுதந்திரம் தேவை என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் தெரிவித்தார். வடமாகாணத்தில் முன்னேடுக்கப்படுகின்ற மக்கள் பணிகள் தொடர்பாக ஊடக சந்திப்பு இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது, இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , வடமாகாணத்தில் 25 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கபெறுகின்றது. இதில் சுமார் நான்கு சதவீதமான வருமானத்தினை எமது மாகாணத்திற்கு எடுத…
-
- 1 reply
- 581 views
-
-
'மாணிக்கநகர்' வீட்டுத்திட்டம் பொது மக்களிடம் கையளிப்பு மட்டக்களப்பு, போரதீவுப்பற்றில் நிர்மாணிக்கப்பட்ட 'மாணிக்கநகர்' வீட்டுத் திட்டம் நாளை காலை 10.00 மணிக்கு பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மற்றும் ஆசீர்வாதத்துடனும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கம்உதாவ திட்டத்தன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் திட்டத்தில் 25 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50389
-
- 0 replies
- 549 views
-
-
பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது – வாள் – கூரிய ஆயுதங்கள் மீட்பு February 21, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடமிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் கொழும்புக்குத் தப்பிச் சென்று விட்டார் எனவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணம் கொக்க…
-
- 0 replies
- 303 views
-
-
இந்தியாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சிறிலங்கா தடை இந்தியாவில் இருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது, கடைப்பிடிக்க வேண்டிய தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே, இந்த தடையை விதிக்க முடிவு செய்திருப்பதாக தேசிய தாவர நோய்த்தடுப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த தடை கடந்த டிசெம்பர் 28ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வந்திருப்பதாக, தேசிய தாவர நோய்த்தடுப்பு சேவை மேலதிக பணிப்பாளர் விக்ரமஆராச்சி தெரிவித்தார். இந்த தடை தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின…
-
- 2 replies
- 356 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக மற்றுமொரு அடிப்படை உரிமை மனுத் தாக்கல்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என குற்றம் சுமத்தியே இந்த மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. 14 நாட்கள் வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்…
-
- 0 replies
- 238 views
-
-
ரஞ்ஜன் , பத்திரன ஆகியோரின் அமைச்சுப் பதவிகளை நீக்க கோரிக்கை? இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன ஆகியோரிடமிருந்து அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒழுக்காற்றுக் குழுவின் அறிக்கை வரும் வரையில் எதிர்பார்த்திருக்காமல் அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கொக்கேன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் தெரிவித்திருந்தார். இதேவேளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாக பிரதி அமைச்சர் பத்திரன குற்றம்சாட்டியிருந்…
-
- 0 replies
- 196 views
-
-
2015இற்குப் பின் அதிகாரிகள் 67 உள்ளிட்ட 637 சிறிலங்கா படையினரிடம் விசாரணை 2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், 67 அதிகாரிகளும், 637 படையினரும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் றொஷான் குணதிலக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்க ஆகியோர் கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, 2015 ஜனவரியில் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிறிலங்கா படையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 143 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி யாழ்,முல்லைத்தீவு வவுனியா மாவட்ட மக்கள் சிலர் இணைந்து இன்று கிளிநொச்சியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. நாட்டில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் கண்டித்து குறித்த போராட்டம்…
-
- 1 reply
- 451 views
-
-
மிகவும் நூதனமான முறையில் இலஞ்சம் வாங்கும் இலங்கை போக்குவரத்து போலீஸ்!
-
- 0 replies
- 512 views
-
-
தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து கலந்துகொண்ட அதிகளவான இளைஞர்கள் மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாலிபர் முன்னணியின் தலைவராக லோ.தீபாகரன் தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் செயலாளராக க.சசீந்திரன், பொருளாளர் ம.நிலக்சன், உபதலைவர் து.மதன், உபசெயலாளர் பாலசிங்கம் முரளிதரன், கல்வி தே.மயூரன், விளையாட்டு துறை த.கிருஷ்ணகாந், சுகாதாரம் தே…
-
- 0 replies
- 235 views
-
-
அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் பகுதியில் 126 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வைகோல் சூட்டில் போடப்பட்டு தீவைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் ஆத்ம சாத்தி வேண்டி உறவுகளால் நேற்று நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் தங்கவேலாயுதபரம் மலையடிப் பிள்ளையார் கோவிலில் நிகழ்வு நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தீபங்களை வரிசையாக எற்றி, அதனை மலையில் மேல் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டடனர். இறந்தவர்கள…
-
- 1 reply
- 953 views
-
-
(ஆர்.யசி , எம்.ஆர்.எம்.வசீம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச முதலீடுகள் வரவில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் செய்துகொண்ட சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றதே தவிர இந்த ஆட்சியில் எவரும் முன்வரவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ,இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் முதலீடுகள் குறித்து இன்…
-
- 0 replies
- 180 views
-
-
February 20, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ் குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்க…
-
- 0 replies
- 177 views
-
-
February 20, 2019 மறைப்போம் அழிப்போம் என கட்சி நலன் சார்ந்து செயற்படுபவர்களின் மத்தியில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் இடம்பெற்றிருந்ததன் அடையாளமாக காணப்படும் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு சூட்டப்பட்ட மைதானத்தின் பெயரை மறைக்கும் அல்லது மாற்றும் கங்கணம் ஏற்புடையது அல்ல என முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஒரு வார்த்தைக்குள் சிந்திக்க தோன்றியும், மக்களை நேசித்து சுயநலன்களை முன்னெடுக்காமல் மக்களின் நலனுக்காக அபிவிருத்திகளை முன்னிறுத்தி செயற்பட்டவரின் பெயரை மூன்று தசாப்தங்களின் பின்பாக, மாற்…
-
- 0 replies
- 264 views
-
-
ஐநாவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தை ஆரம்பம் February 20, 2019 எதிர்வரும் பெப்ரவரி 25 ம் திகதி ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா , கனடா , ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ ஆகிய நாடுகளுடனேயே இலங்கை அரசாங்கம் இவ்வாறு மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்று க…
-
- 2 replies
- 438 views
-
-
ஒட்டுசுட்டானில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வீதியை மறித்து டயர்களை தீயை மூட்டி போக்குவரத்தை தடை செய்து மக்கள் பொரிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். முதையன்கட்டில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கசார்பாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவில்லை எனவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை முத்தையன்கட்டு வலது கரை பகுதியில் பெண்ணொருவரை உந்துரு…
-
- 1 reply
- 390 views
-
-
மாணவன் மீது அதிபர் தாக்குதல் – மிரட்டும் அதிகாரிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 20, 2019 பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக பாடசாலை மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாத என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்ர். தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகசவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக…
-
- 1 reply
- 479 views
-
-
ஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்து பயணம் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலம் சென்னைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையில், ஒரே பயணச் சீட்டின் மூலம் தொடருந்துப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடருந்து சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும், இது சிறிலங்காவின் பௌத்த யாத்திரிகர்கள் குறைந்த கட்டணங்களில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா போக்குவரத்து அமைச்சு, நம்புவதாக பிரதமர் செயலக அறிக்கை கூறுகிறது. அதேவேளை, தென்னிந்தியாவுக்கும், கா…
-
- 1 reply
- 331 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும், தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பத்தாம் ஆண்டு நினைவு ஆண்டு ஆ\ரம்பித்திருக்கின்ற நிலையில் முதன்முதலாக இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும்…
-
- 0 replies
- 215 views
-