Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்யுமாறு பணிப்புரை! வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும் கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி/இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான மா…

    • 1 reply
    • 222 views
  2. வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோமென தெரிவித்து இரு நாட்களுக்குள் மீண்டும் அட்டகாசம் February 5, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என காவல்துறையினர் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு , வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு , வீட்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்க…

    • 1 reply
    • 477 views
  3. தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் SLFPகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. February 5, 2019 புதிய தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான யோசனையும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏற்கனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அழைப்பு விடத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http…

    • 1 reply
    • 434 views
  4. வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. February 5, 2019 இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது. இதேவேளை வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 13 ஆம் திகதி முதல் நடத்தப்பட்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு…

  5. என்னதான் துள்ளினாலும், இறுதியில் தீர்மானம் எடுப்பவர் ஜனாதிபதி- எஸ்.பீ. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். உத்தேச தேசிய அரசாங்க பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலுள்ள ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்த அமைக்க தயாராகின்றது. இதன் மூலம் அமைச்சரவையின் உறுப்பினர்களை 48 ஆக அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளோம். இது பண்பாடற்ற…

    • 0 replies
    • 223 views
  6. தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பிரேரணைக்கு ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு! தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என நேற்றைய சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஜனாதிபதியின் குறித்த கூற்று தொடர்பாக தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை ஆதவன் செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியது. இதற்கு பதிலளித்த அவர், தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் முக்க…

  7. சுதந்திர சதுக்கத்திலும் அமைதிவழி எதிர்ப்புப் போராட்டம் சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அமைதி வழி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் பங்கேற்றிருந்தவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரும் அட்டைகளைத் தாங்கியிருந்தனர். அத்துடன், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஊதியம் வழங்க…

  8. நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி அரசாங்கத்தின் மொத்த செலவினம் ,2312 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பாதுகாப்பு அமைச்சுக்கு, 390.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, உள்நாட்டு விவகார மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு, 290.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 13.55 பில்லியன் ரூபா, அதிபர் செயலகத்துக்கும், 1.62 பில்லியன் ரூபா பிரதமர் செயலகத்துக்கும், 950 மில்லியன் ரூபா எதிர்க்கட்சித் …

    • 0 replies
    • 188 views
  9. தமிழர்களுக்கு எப்போது சுந்திரம்? கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்… February 4, 2019 இலங்கையின் 71 சுதந்திர தினமான இன்று கிளிநொச்சிக் கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலைச் செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும் கொலையாளிகளை நீதிபதியாக்கும் 30/1 தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து நீதியை இழுத…

  10. அடுத்தவாரம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் 16 அகதி குடும்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகத்தின்(யூ.என்.எச்.ஆர்.சி.) அனுசரணையுடன் தமிழகத்தின் மதுரை, திருச்சிராப்பள்ளி, சென்னையில் இருந்து பெப்ரவரி 14 ஆம் திகதி 16 அகதிக்குடும்பங்கள் இலங்கை திரும்பவிருக்கின்றன. நாடுதிரும்பும் இந்த முதல் தொகுதி குடும்பங்களில் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்திருக்கிறார். இலங்கை அகதிகளை திருப்பியழைத்துவருவதற்கான செயன்முறைகளில் கடுமையான விதிமுறைகளை யூ.என்.எச்.ஆர்.சி. பின்பற்றுகிறது. 30 வரடகால உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்து இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய அ…

  11. யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி! இலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாள் எனக் குறிப்பிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் கட்டத்திற்குள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லாத இன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன், இன்றைய தினத்தில் போராட்டங்களை நடத்துமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில், காணாமல் ஆ…

  12. சுதந்திரதினத்தில் கேப்பாபுலவு மக்களுடன் இணைந்து தென்பகுதிமக்களும் போராட்டம்! சுதந்திரத்தினமான இன்று கேப்பாபுலவு மக்கள் கறுப்பு நாளாக கடைப்பிடித்து படையினர் அபகரித்துள்ள தமது காணிகளை கோரி பாரிய போராடடம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் . 705ஆவது நாளாக இன்றையதினம் தொடர் போராடடத்தை நடத்திவரும் மக்களுடன் இன்றையதினம் தென்பகுதியை சேர்ந்த சம உரிமை இயக்கத்தினரும் சிங்கள மக்களும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்து இராணுவ முகாம் முன்பாக கோசங்களை எழுப்பி கேப்பாபுலவு மக்களின் காணிகளை விட்டு இராணுவம் வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் . சம உரிமை இயக்கத்தினை சேர்ந்த சத்தானந்த தேரர் மற்றும் சஞ்சீவ பண்டார ,உள்ளிட்டவர்கள் இ…

  13. (எம்.எப்.எம்.பஸீர்) போதைப் பொருள் தடுப்பு மற்றும் பாதாள உலக குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றம், திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லதீப் நாளையுடன் தனது 41 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். நாளை 5 ஆம் திகதியுடன் தனது 60 வயதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் பூர்த்தி செய்யும் நிலையிலேயே அவர் ஓய்வுபெறவுள்ளார். http://www.virakesari.lk/article/49335

  14. காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்துங்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்… February 4, 2019 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்த கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது சமவுரிமை இயக்கம் மற்றும் வட பகுதியில். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தெற்கை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/112…

  15. தேசிய அரசாங்க யோசனைக்கு நான் எதிர்ப்பு- சுதந்திர தின உரையில் ஜனாதிபதி தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை தான் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனிக் கட்சியொன்றுடன் ஒரு உறுப்பினரை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப் போவதாக தேசியப் பத்திரிகையொன்றில் பார்த்தேன். அமைச்சர்களுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகத் தான் அவ்வாறு செய்கின்றார்கள் என்று எண்ணுகின்றேன். ஆனால், அதற்கு நான் முற்றுமுழுதாக எனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன் எனவும் தற்பொழு காலிமுகத்திடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். http://www.dailyceylon.com/177…

  16. தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் இன்று: February 4, 2019 தியாகி திருமலை நடராஜனின் நினைவு தினம் இன்றாகும். இவர் 1957ஆம் ஆண்டு இதுபோன்ற சுதந்திர தினத்தின்போது, இலங்கை தேசிய கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இலங்கையில் சிங்களக் கொடியை தமிழ் மக்கள் நெடுங்காலமாக புறக்கணித்து வந்துள்ளனர். தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறை மற்றும் உரிமை மறுப்பு என்பவற்றால் இல்கை தேசியக் கொடி எதிர்ப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளானது. இலங்கை தமிழரசுக் கட்சி கடந்த காலத்தில் தேசியக் கொடியை புறக்கணித்து வந்தது. அத்துடன் வடக்கு கிழக்கில் நடந்த தமிழர்களின் நிகழ்வுகளில் சிங்கக் கொடிக்குப் பதிலாக நந்திக் கொடிய…

  17. ஒப்பரேசன் கஞ்சா நடவடிக்கை ஆரம்பம்! | யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் தொடா்ச்சியாக அதிகளவான கஞ்சா மீட்கப்பட்டுவரும் நி லையில் அவற்றை பூரணமாக கட்டுப்படுத்தும் நோக்கில் ?ஒப்பரேசன் கஞ்சா? என்ற பெயரில் பொலிஸார் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதற்காக வடக்கு மாகாணத்தின் வேறு மாவட்டங்களிலிருந்து 100 பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர் யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வே…

    • 2 replies
    • 473 views
  18. சம்பளப் பிரச்சினைக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டத்துக்கு ஆதரவு – ஹக்கீம் February 3, 2019 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இங்கு தெரிவித்திருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தேவையை வென்றெடுக்கும் நோக்கில் நாங்களும் அவருடன் கைகோர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பற தேர்தல் தொகுதியின் பன்வில பிரதேசத்தில் கல்வல வீதி, விக்னேஸ்வரா வீதி, ஆயுர்வேத வீதி, ராக்ஷாவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு ஆகியவற்றில் 6 மில்…

  19. மடவளை பசார் ரேசிங் பிஜன் கிளப் (MRPC) ஏற்பாட்டில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட புறா பந்தயம் இம்முறை திருகோணமலையில் ஆரம்பமானது.சுமார் 143 புறாக்கள் திருகோணமலையில் இருந்து திறந்து விடப்பட்டு வான் வழி தூரம் 150 கிலோமீட்டரை இரண்டே மனித்தியலங்களில் கடந்து மடவளை வந்தடைந்தது.இந்நிலையில் இப்போட்டியில் கலந்து கொண்ட ( இலங்கையின் பல ஊர்களை சேர்ந்த ) புறா உரிமையாளர்களுக்கு இன்று பாராட்டும், சான்றிதல்கள் , கிண்ணங்கள் மற்றும் பண அன்பளிப்புகள் மடவளை பசார் சண் ஷைன் மண்டபத்தில் நடைபெற்றது.ஊரின் முக்கிய உறுப்பினர்கள் , பிரதேசசபை அங்கத்தவர்கள், போலிஸ் அதிகாரிகள் உற்பட பலர் இதில் கலந்து பரிசில்களை வழங்கியதுடன் ஏராளமான போட்டி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.புறாக்கள் திரும்பிய நே…

    • 0 replies
    • 555 views
  20. ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் போட்டி! ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியும் வேட்பாளரை நிறுத்தும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ?எமது கட்சி எப்போதும் எந்தத் தேர்தல்களுக்குத் தயாராகவே உள்ளது. எமது கட்சி தேர்தல் நெருங்கும்போது மாத்திரம் அரசியல் செய்யும் கட்சியல்ல. அரசுக்கு தேர்தலை ஒத்திவைக்க எந்த உரிமையும் இல்லை என்றார். http://www.elukathir.lk/NewsMain.php?san=23372

    • 0 replies
    • 359 views
  21. சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த விரும்பும் அமெரிக்கா சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, இணைந்து பணியாற்றுவதற்கு விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய நாளைக் கொண்டாடும், சிறிலங்காவுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவான ஜனநாயக பெறுமானங்களின் அடிப்படையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கு, சிறிலங்காவுடனான கூட்டை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. சிறிலங்காவின் ஜனநாயக நிறுவனங்க…

    • 0 replies
    • 217 views
  22. மாகாண சபைகளை, ‘மாகாண அரசு’ என அழைக்கக்கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பு மாகாண சபைகளை, மாகாண அரசுகள் என்று அழைக்கக் கூடாது என்று நிதி ஆணைக்குழுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 1ஆம் நாள் நிதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை எழுப்பினார். அரசியலமைப்பில் மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்று கூறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட முறைமையை ஆய்வு செய்வதற்கான தேவையை முன்னைய அரசாங்கங்கள் புறக்கணித்து வந்துள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டினார். இதுபற்றிய ஆய்வு நடத்த இரண்ட…

    • 0 replies
    • 270 views
  23. கீரிமலை ஆடம்பர மாளிகை – வடக்கு மாகாணசபைக்கு கைவிரித்தார் சிறிசேன காங்கேசன்துறை, கீரிமலையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை, சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். உயர்பாதுகாப்பு வலயத்தில் சிறிலங்கா கடற்படையின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்றில் சிறிலங்கா கடற்படையினர் வசம் உள்ள இந்த ஆடம்பர மாளிகை மற்றும் 100 ஏக்கர் காணிகளை சுற்றுலா சபையிடம் கையளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்குமாறு, 2015ஆம் ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் வடழக்கு மா…

    • 0 replies
    • 260 views
  24. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றம் யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பிராந்திய மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை புறக்கணித்து செயற்படுகின்ற நிலையில், தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உறுதியான ஒரு மாற்று அணி தேவை என்பதோடு இக்கொள்கையுடைய அரசியல் சக்திகளை ஒன்றிணைய வேண்டும் என்று கோரியுள்ளது. அத்துடன் இலங்கையில் நடைபெற்ற யுத்தக்குற்ற விசாரணைப் பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், தனது தீர்மானத்தின்படி இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விட…

  25. ‘தமிழ் மக்களின் அழுகுரலை சொந்த குரலில் கேட்கின்றேன்’ – சுரேன் ராகவன் தமிழ் மக்களின் அழுகுரலை தனது சொந்த குரலில் கேட்பதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 32 வருட வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் மொழி ஆளுநர் நான். அதனால், தமிழ் மக்களின் அழுகுரலை எனது சொந்தக் குரலில் கேட்கக்கூடியவாறு உள்ளது. இந்த நியமனத்தில் ஜனாதிபதியின் ஒரு அரசியல் சமிக்ஞை உள்ளது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக இலங்கை பல கலாசார மற்றும் பல மொழியியல் சமுதாயத்துடனான ஒரு நாடாகும். மேலும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை ஒரு பிரிக்க முட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.