ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம். ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டிய…
-
- 2 replies
- 722 views
-
-
நீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு : January 23, 2019 முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பௌத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற குறித்த பகுதியில், அமைக்கப்பட்டு வந்த விகாரை தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தீர்ப்பினை மக்கள் எதிர்பார்திருந்…
-
- 4 replies
- 563 views
-
-
தமிழ் பழமொழி ஒன்று உண்டு.... கலியாண வீட்டிலேயே கப்பை கட்டிக் கொண்டு அழுறவன், செத்தவீடு என்றால் சும்மாவா இருப்பான். இந்த படங்களை பார்க்க அதுதான் நினைவுக்கு வருகிறது. கிழக்கில், அரபி கல்லூரி கட்டி, அதில் அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பொறித்த நம்ம ஆளு, இப்ப ஆளுநர்.... அப்பறம் என்ன!!! கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாவின் அழைப்பில் பேரில், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, சவுதி அரேபிய நாட்டுத் தூதுவர் குழு, மட்டக்களப்புக்கு இன்று (22) விஜயம் மேற்கொண்டது. இலங்கைக்கான சவுதி அரபியத் தூதுவர் அப்துல் நாஸிர் உவைல் அல் ஹாரிதி தலைமையிலான உயர் மட்டக் குழுவினரே, விசேட விமானம் மூலம் மட்டக்களப்புக்கு வருகை தந்தனர். கிழக்கு மாகாணத்திலுள்ள கணவ…
-
- 3 replies
- 1k views
-
-
ஒருவார காலப்பகுதியில், கேப்பாபுலவு காணிகள் குறித்து, தீர்க்கமான முடிவு? January 23, 2019 இன்னும் ஒருவார காலப்பகுதியில் படையினர் வசமுள்ள கேப்பாபுலவு காணிகள் குறித்து, தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இராணுவத்திடம் இருந்து அறிக்கையொன்றைப் பெற்று அதன் பின்னர் இவ்வாறு தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முல்லைத்தீவு மாவட்டப் பிரதிச் செயலாளர் வழங்கிய உறுதிமொழிக்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதியன்று, கேப்பாபுலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்காவிடின் மக்கள் தமது சுயவிருப்பத்தின் பே…
-
- 1 reply
- 328 views
-
-
நீண்டநாள் பதவியில் இருக்கமாட்டேன் - மகிந்த January 23, 2019 நீண்டநாள் பதவியில் இருக்கமாட்டேன் எனவும் மிக விரைவில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேறிச் செல்வேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடத்திலிருந்து மிக விரைவில் செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு சென்ற அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை அங்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் படம் ஒரு இடத்திலும் ரணில் விக்கிரமசிங்கவின் படம் நான்கு இடங்களிலும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய விமல்வீரவன்ஸ ரணில…
-
- 3 replies
- 1.1k views
-
-
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதியான சரத் என் சில்வாவும் மன்றில் முன்னிலையாகியிருந்தார். ஊடகங்களினூடாக வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டே சரத் என் சில்வா மன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும், அவருக்கு அழைப்பாணை எதுவும் விடுக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 240 views
-
-
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவத்தினர் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. ஒட்டகப்புலம் ஜே/252 பலாலி தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 23.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலக த்தில் வைத்து பிரதேச செயலர் சி சிவசிறியிடம் 515 பிரிகேடியப்பிரிவு இராணுவ அதிகாரிகள் விடுகைப் பத்திரத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். இதேவேளை வலி வடக்கில் ஜே/249 தையிட்டி வடக்கு, ஜே/ 250 தையிட்டி தெற்கு ஆகிய கிராமஅலுவலகப் பிரிவுகளில் 19.63 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 256 views
-
-
இரணைமடுகுளத்தின் நீர் அக்குளத்தினை நம்பி வாழ்கின்ற மக்களுக்குரியதே. அப்பகுதி மக்களது தேவையை பூர்த்தி செய்துவிட்டு மிகுதியான நீரினை ஏனையோருக்கு வழங்குவதே சர்வதேச நியதியும் நியாயமாகும் என வடக்குமாகாண ஆளுநனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இரணைமடுக் குள கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் வட மாகாண ஆளுநரை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் சந்தித்துக் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை கையளித்திருந்தது. இச் சந்திப்புத் தொடர்பாக ஆளுநர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரணைமடு குளத்தின் நீரானது அக்குளத்தினை நம்பி விவசாயம் செய்கின்ற, அங்கு வா…
-
- 0 replies
- 246 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியல் நெருக்கடியின் பொழுது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முரண்பாடுகளின் மூல காரணமாகவும், முன்னிலை வகித்தவருமாகவே பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் காணப்படுகின்றார். அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இன்று கூட்டமைப்பினர் வசமே காணப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சிமாற்ற…
-
- 0 replies
- 241 views
-
-
(எம்.மனோசித்ரா) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி ' 1000 ரூபா இயக்கம்" இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. இந்த இயக்கத்தின் கோரிக்கைக்கு இணங்க நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் பல்வேறு சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், …
-
- 0 replies
- 257 views
-
-
January 23, 2019 தமிழ் கூட்டமைப்பு எதிர்கட்சியின் கடமையை சரியாக நிறைவேற்றியிருந்தால் இன்று அவர்களின் கோரிக்கைகளுக்கு தெற்கு செவி சாய்த்திருக்கும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். நேற்று விஜேராமயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாட்டின் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சி பதவி வழங்கப்பட்டிருந்தது.நாட்டில் அனைத்து மக்கள் மீதும் தாக்கம் செலுத்தும் பல்வேறு பிரச்சினை…
-
- 0 replies
- 250 views
-
-
January 23, 2019 பிரித்தானிய வெளிவிவகார பிரிவின் தெற்காசிய திணைக்களத்தின் தலைவரும் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளருமான பர்கஸ் ஓல்ட் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ஆகியோரை சந்தித்து கலந்துரையடினார். இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (22.01.19) கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 2015 ஜனவரி மற்றும் ஆகஸ்ட் தேர்தல்களில் மக்கள் கொடுத்த ஆணையை சுட்டிக்காட்டிய, அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் மக…
-
- 0 replies
- 178 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை முழுவதும் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று பழமை வாய்ந்த இந்து ஆலயங்கள் சில வற்றை புனித ஸ்தலங்களாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்திற்கு இன்று (23) புதன் கிழமை காலை சென்ற அமைச்சர் அங்கு இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, திருக்கேதிஸ்வர பகுதிக்கு சொந்தமான , இன்னும் வழங்கப்படாத காணிகள் அனைத்தையும் மக்களின் பாவனைக்கும் ஆலய பாவனைக்கும…
-
- 0 replies
- 207 views
-
-
இலங்கை தொடர்பான கோவைகளை அழித்துவிட்டதை ஒப்புக்கொள்கிறது பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு தமிழர்களின் ஆயுதக்கிளர்ச்சியின் ஆரம்பக்கட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டன் செய்த உதவிகள் தொடர்பான சுமார் 400 கோவைகளை நிர்மூலஞ்செய்துவிட்டதை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சு ஒத்துக்கொண்டதையடுத்து “வரலாற்றை நிர்மூலஞ்செய்தாக” அதன் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழ் விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு எதிராக அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு பிரிட்டனின் தட்சர் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. போராட்டத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் எந்தளவு தூரத்துக்கு உடந்தையாக இருந்தது என்பது என்றென்றைக்குமே முழுமைாகத் தெரியாமல் போகலாம் என்று தமிழ் அரசியல் செயற்ப…
-
- 1 reply
- 387 views
-
-
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீடுகளில், சிங்கள மன்னர்களின் சிற்பங்கள்! யாழ். வலி.வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட வீடுகளில் சிங்கள மன்னர்களைக் குறிக்கும் சிற்பங்கள் பல காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டன. எனினும் குறித்த காணிகள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்ட போதும் இன்று காலையே காணி உரிமையாளர்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் j/249, j/250 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள அனேகமான வீடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தியதால் நல…
-
- 0 replies
- 337 views
-
-
கச்சதீவு திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பு: ஜெபரட்ணம் அடிகளார் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்கான ஏற்பாட்டுக் கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதெ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இலங்க…
-
- 0 replies
- 180 views
-
-
அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மோசமாகப் பாதிப்பு – பொதுமக்கள் கோரிக்கை அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இதனைத் திருத்தித்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவுமின்றி காணப்படும் இவ்வீதியை கடந்த மழைகாலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீதி முற்றாக சேதமைடந்துள்ளது. தற்போதும் தொண்டைமானாறு நன்னீர் தேக்கத்திற்கு அருகில் நீர் வீதியின் மேலாக ஓடுகின்றது. இதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் இவ்வழியூடான பயணிகள் பேருந்துக்களும் ஆபத்தான நிலையில் அவ்வீதியூடான பயணத்தினை மேற்கொண்டுவருகின்றன. குறித்த…
-
- 0 replies
- 473 views
-
-
ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், கொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள …
-
- 0 replies
- 295 views
-
-
யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. குறித்த வெடிகுண்டுகள் பல வருடங்கள் பழமை வாய்ந்தவையென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/4850…
-
- 0 replies
- 245 views
-
-
1 Min Read January 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏ…
-
- 2 replies
- 743 views
-
-
தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. வேலைவாய்ப்பு விடயங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, “ஆணைக்குழுக்களால் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். அதன்படி இன, மொழி பாகுபாடின்றி பெரும்பான்மையினருடன் கைகோர்த்து பயணிக்கவும் சிறுபான்மையினர் காத்த…
-
- 0 replies
- 333 views
-
-
விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள சேனா படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு யுத்தத்திற்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஒரு காலவரையறையை நிர்ணயித்து தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் பூச்சிக்கொல்லி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சேனா படைப்புழு பரவி வருவதன் காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய …
-
- 0 replies
- 388 views
-
-
January 22, 2019 மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதற்காக நாளை புதன் கிழமை காலை கொழும்பிற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை(22) காலை 134 ஆவது தடவையாக இடம் பெற்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து நாளை கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு…
-
- 0 replies
- 233 views
-
-
கேர்ணல் ஜயந்த சுரவீர கொலை – ஐயனுக்கும், இளையனுக்கும் 25 வருட கடூழிய சிறை… January 22, 2019 J இலங்கை இராணுவப்படையின் கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 இராணுவத்தினர் மீது வில்பத்து வனப்பகுதில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு வடத்திய மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. சூரியகாந்தன்…
-
- 0 replies
- 231 views
-
-
January 22, 2019 கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள காவற்துறையினரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்க…
-
- 0 replies
- 279 views
-