ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
(நா.தனுஜா) இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும் என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் இலங்கை இராணுவப் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளது. பாரதூரமான யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இராணுவமும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீள்பரிசீலனை செய்வது அவசியமாகும். …
-
- 0 replies
- 444 views
-
-
ஆர்.யசி) மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எ…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற மூன்று காரணிகளின் விளைவாக புதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பில் அரசியல் கருத்தொருமிப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. முதலாவது காரணி கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கு ( அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் நிபுணர்களின் அறிக்கை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவும் காட்டுகின்ற எதிர்ப்பு. ராஜபக்ச மாத்திரமே இதுவரையில் தனது எதிர்ப்பை பகிரங்கமாக வெளிக்காட்டி கருத்து வெளியிட்டிருக்கிறார். சிறிசேனவும் ராஜபக்சவும் நிறைவ…
-
- 0 replies
- 352 views
-
-
முல்லை – செம்மலை நீராவியடி பிள்ளையாரின், பொங்கலைக் குழப்ப முயற்சி! January 14, 2019 முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள சென்ற கிராம மக்களுக்கு தென்பகுதி பெரும்பான்மையினரால் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலமையை கட்டுப்படுத்த இராணுவம், காவற்துறை தலையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் விழா இடம்பெறும் என்று ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இந்த கோவிலின் வளாகத்தைபலவந்தமாக கைப்பற்றி விகாரை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த ஆலயத்தின் பெயரை “கணதேவி தேவாலய“ என்று…
-
- 2 replies
- 1.3k views
-
-
புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது சபையில் சமர்ப்பிப்பார். அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும். சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்…
-
- 15 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் -சிறிநேசன் பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சூழலையே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டானில், வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அபிவிருத்திகள் அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது. மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்…
-
- 32 replies
- 3.8k views
-
-
மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன் kugan — January 5, 2019 in கட்டுரைகள் • comments off பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார். இந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்ட…
-
- 1 reply
- 650 views
-
-
புதிய அரசியல் திருத்தத்தின் மூலம் வடக்கையும் கிழக்கையும் மிக இலகுவாக இணைக்க முடியும் என்பதால் அங்குள்ள சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள் என முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார். புதிய யாப்பு சம்பந்தமாக கட்சி உயர் பீட உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, சுமந்திரனால் முன் வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் யாப்பு நகலின் படி இரு மாகாணங்களின் முதலமைச்சர்கள் விரும்பினால் இரு மாகாணங்களையும் இணைக்க முடியும் என்பதாகும். இது பாராளுமன்றில் ஏற்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்ப…
-
- 0 replies
- 696 views
-
-
‘வடக்குக்கு சட்ட அதிகாரம் வழங்கப்படமாட்டாது’ - ஜே.வி.பி Editorial / 2019 ஜனவரி 14 திங்கட்கிழமை, மு.ப. 09:14 Comments - 0 புதிய அரசமைப்பினூடாக, வடக்கு மாகாணத்துக்கு, பொலிஸ், சட்ட அதிகாரம் கோரப்படுவதாகவும், இதற்கு, தமது கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறிய ஜே.வி.பி, கடந்த 3 வருடங்களில் நிறைவேற்ற முடியாதுபோன அரசமைப்பை, அடுத்த ஒன்றரை வருடங்களுக்குள் நிறைவேற்றக்கூடிய இயலுமை, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு இல்லையென்றும் கூறியது. தற்போது நடைமுறையிலிருக்கும் 1978ஆம் ஆண்டு அரசமைப்பு, நடைமுறையில் இந்த நாட்டுக்குப் பொருத்தமற்றுள்ளதால், புதிய அரசமைப்பொன்றின் தேவை அவசியமாகியுள்ளதென, கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், …
-
- 0 replies
- 903 views
-
-
ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு' என்ற சொற்பதம் ஒரு கண்துடைப்பு நாடகமா ; தவராசா கேள்வி 'ஏக்கிய இராச்சிய / ஒருமித்த நாடு' என்ற சொற்பதமும் அதற்கான பொருள் கோடலும் அடங்கிய ஓர் அரசியல் அமைப்பு வரைபு ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாம் நம்பிக்கை கொள்ள முடியுமாவென வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய அரசியல் அமைப்பின் (1978 ஆம் ஆண்டின்) சரத்து 2 மற்றும் சரத்து 9 என்பவற்றை பாதுகாத்துத் தான் அரசியல் அமைப்பு மாற்றத்தை கொண்டுவரும். இதற்கு முரணான கருத்துக்கள் அடங்கிய யோசனைத் திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம் என்பதற்கா…
-
- 0 replies
- 369 views
-
-
திருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம் 2006 ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். திருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரiணைகளையோ அல்லது ஏனைய முக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையோ அரசாங்கம் அலட்சியம் செய்யவோ கைவிடவோயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில விசாரணைகள் பல காலம் நீடிக்ககூடியவை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் குறிப்பாக படையினர் தொடர்பான விசாரணைகள் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார் இவ்வாறான விடயங்கள் காரணமாக குழப்பங்கள் ஏற்படுகின்றன,நாங்கள் அவற்றின் ஊடாக விசாரணைகளை …
-
- 0 replies
- 319 views
-
-
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய தைபொங்கல் பண்டிகை : January 14, 2019 பிரமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடாத்திய தேசிய தைபொங்கல் பண்டிகை அலரி மாளிகையில் 13.01.2018 மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறப்பு அதிதிகளாக சமய மத குருவானவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகள்¸ தேசிய நல்லிணக்கம்¸ அரச கருமமொழிகள்¸ சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன்¸ முன்னாள் எதிர்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பனருமான இரா.சம்பந்தன்¸ பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்¸ அமைச்சர்களான அர்ஜூனா ரணத…
-
- 0 replies
- 515 views
-
-
மன்னார் மறைமாவட்டத்தில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும் : January 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நாளைய தினம் (15) பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார். தைப் பொங்கல் தினமான நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெறும். குறிப்பாக இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்…
-
- 0 replies
- 875 views
-
-
நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு கிளிநொச்சி – கிராஞ்சி கடற்பரப்பில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த கடற் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 11 தமிழக மீனவர்கள் பயணித்த படகுகள், இயந்திரக்கோளாறு காரணமாக தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பதினொரு பேரையும் மீட்ட கடற்படையினர், அவர்களை கிளிநாச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் கிளிநாச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த மீனவர்களை நேற்று முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதிவரை அவர்களை விளக்க…
-
- 0 replies
- 365 views
-
-
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், “வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தனது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர். அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது ம…
-
- 0 replies
- 354 views
-
-
அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். இது தனிப்பட்ட விடயம் …
-
- 0 replies
- 627 views
-
-
மொட்டு கட்சியில் இருந்தே அடுத்த அதிபர் – பசில் திட்டவட்டம் சிறிலங்காவின் அடுத்த அதிபர் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு முடிவுக்குள், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையிலான புதிய கூட்டணியில் இருந்து அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் சில மாவட்டங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளை விட, சிறிலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிரூபித்திருக்கிறது, என்றும், எதிர்காலத் தேர்தல்களில் அதனை விடப் பெரிய பலத்தைப் பெறும் என்றும் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார…
-
- 0 replies
- 400 views
-
-
முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நேற்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் கூறினார். ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்ற…
-
- 0 replies
- 468 views
-
-
அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – கோத்தா சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவர், வியத்மக அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அதில் அவர், இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், மக்கள் விரும்பினால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/01/14/news/3582…
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழ்நாடு மீனவர்களின் சுமார் 500 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் விரட்டியடித்தனர். இதன்போது, இரண்டு பிரிவுகளாக, மூன்று படகுகளுடன் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படையினால் அறிவிக்கப்பட்டது. நாச்சிக்குடா கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்கள் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஏனைய 9 மீனவர்களும் காரைநகர் கடற்படைத…
-
- 0 replies
- 431 views
-
-
சம்பந்தனை முதலில் சந்தித்தது ஏன்? – வடக்கு ஆளுனர் விளக்கம் வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டவுடன், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்தமைக்கான காரணத்தை, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் வெளிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி செவ்வி ஒன்றிலேயே அவர் இதற்குப் பதிலளித்துள்ளார். “நான் ஆளுனர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு மூத்த, கெளரவமான அரசியல்வாதியாகவே இரா.சம்பந்தனைப் பார்க்கின்றேன். நாடாளுமன்றத்தில் மூத்த உறுப்பினராகப் பல ஆண்டுகளாக பதவி வகிக்கிறார். சமநிலைக்கான அரசியலைக் கொண்டு வருவதற்காக ஜன நாயக ரீதியில் பேச்சுகளை நடத்துவதிலும் அவர் முன்னின்று செயற்படுகிறார். …
-
- 3 replies
- 773 views
-
-
யாழில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி – சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் கைது January 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; நேற்று இரவு கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. இவ்வழிப்பறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கொள்ளையர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதன்போது வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்ச் சைக்கிள் ஒன்றையும் உருக…
-
- 1 reply
- 335 views
-
-
முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு January 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முறிப்பு பிரதேசத்தில் இடம்பெற்றது. தேசிய வீடமைப்புக்கான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் 11 வீடுகள் மற்றும் 15 வீடுகளை கொண்ட இரு மாதிரி வீட்டு திட்டங்களை அமைக்கும் வகையில் குறித்த வீடுகளிற்கான அடிக்கல நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிக…
-
- 0 replies
- 361 views
-
-
கடல் கண்காணிப்புக்கான அணிக்கு மீண்டும் உயிர் கொடுத்தது சிறிலங்கா விமானப்படை சிறிலங்கா விமானப்படை 25 ஆண்டுகளுக்கு முன்னதாக, கைவிடப்பட்ட கடல்சார் கண்காணிப்பு அணியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. 1971இல் டி ஹவிலன்ட் டோவ் விமானங்களுடன் சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, விமானப்படையின் கடல்சார் கண்காணிப்பு அணி செயற்பட்டு வந்தது. 1971 கிளர்ச்சியின் போது, பருத்தித்துறை தொடக்கம் காலி வரையான கிழக்கு கடல் பிராந்தியத்தின் ஊடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதைக் கண்டுபிடிப்பதற்காக- இரவு பகலாக இந்த அணி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் இந்த அணி செஸ்னா-337 விமானங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இ…
-
- 0 replies
- 796 views
-