Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ வசமுள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி, செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் இராமியன்குளம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமன்னார், மதவாச்சி முதன்மை வீதியில் இராமியன்குளம் பகுதியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”இராணுவம் நாட்டை பாதுகாப்பதற்கா எமது காணியில் விவசாயம் செய்வதற்கா, அகதிகளிற்கு இடம்கொடுத்தோம் நாம் அகதிகளாகினோம், சொந்தநிலத்தில் வாழவிடு, ராணுவமே வெளியேறு போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர் இறுதியில் செட்டிகுளம் பிரதேச செயலார் க.சிவகரனிடம் மனுக் கையளித்தனர். …

  2. ‘தமிழரசுக்கட்சியிலுள்ள பலருக்கு விடுதலைப்புலிகளை பற்றி தெரியாது’: சீ.வீ.கே.சிவஞானம்! January 4, 2019 “விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்கள்“ வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இப்படி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இவ்வாறு தெரிவித்தார். “தமிழரசுக்கட்சியிலுள்ள அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானர்கள் அல்ல“ என்றும்…

  3. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அரசாங்கம் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அவரது தரப்பினருக்கும் முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். அரசியலமைப்பு விடயத்தில் இனவாதத்தை பரப்பி மக்கள் மத்தியில் பிழையான பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றனர் என அமைச்சர் அஜித். பி. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் மாறுப்பட்ட கருத்துக்ளை குறிப்பிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அ…

  4. எதிர்க்கட்சி அலுவலகமும், இல்லமும் மஹிந்தவுக்கு இல்லை… January 4, 2019 சேர் மார்க்ஸ் பெர்ணான்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் என்பவற்றை, எவரிடமும் ஒப்படைக்கப் போவதில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், குறித்த அலுவலகமும் இல்லமும், எதிர்க் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு கிடைக்காத நிலைமை தோன்றியுள்ளதாக, மஹிந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில், தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைமை, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடமே காணப்படுகின்றதெனும் நிலைப்பாட்டுக்கு அமைய, கூட்டமைப்பு, இந்தத்…

  5. (இராஜதுரை ஹஷான்) எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன முன்னணியில் இன்று வெள்ளிக்கிழமை உடற்கட்டமைப்பு போட்டியில் சர்வதேச ரீதியில் முதலிடம் பெற்ற இலங்கையரான லுஷன் புஷ்பராஜை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், …

  6. பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் நிவாரண பணியில்.. இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற செய்த ஜன சேத பெரமுன கட்சியின் முன்னள் ஜனாதிபதி வேட்பாளரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் அறுபது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார் இதன் போது கருத்து தெரிவித்த தேரர் இங்கு இவளவு கஷ்டத்தில் மக்கள் இருக்கிறார்கள் மக்களின் வாக்குகளில் தெரியான தமிழ் பிரதி நிதிகள் என்ன செய்கின்றார்கள் வடக்கு கிழக்கு ,மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களின் பிள்ளைகள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நல்ல கல்லூர…

  7. ஒட்டுசுட்டானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு… நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்துள்ளார். இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை வழங்கிவைத்துள்ளார். மக்களின் வீட்டுப்பாவனைக்கு தேவையான அத்தியவசியபொருட்கள் ம…

  8. January 4, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசாத் சாலி – மேல் மாகாணம் மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம் சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம் பேஷல ஜயரத்ன பண்டார – வட மேல் மாகாணம் http://globaltamilnews.net/2019/108902/

  9. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்துகொண்டுள்ளார். அவருடைய வெற்றிடத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹிஸ்புல்லா-ராஜினாமா/175-227512

    • 0 replies
    • 484 views
  10. சுதந்திரக் கட்சி பொதுச்செயலராக தயாசிறி – மைத்திரி அதிரடி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள், அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான அணி ஒன்று வலுவடைந்து வரும் சூழலில், கட்சியின் பொதுச்செயலராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த கூட்டத்தில், தற்போதைய பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்குப் பதிலாக, தயாசிறி ஜெயசேகரவை பொதுச்செயலராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தயாசிறி ஜெயசேகர, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவு…

  11. பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்? பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர் ஜயந் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார் இந்திய விமானநிலைய அதிகாரசபை வெளிநாடுகளில் விமானநிலைய நிர்மாணிக்க விரும்புகின்றது எனினும் பலாலி தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் அனுமதிவழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார் பலாலியில் விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட அறிக்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் இந்திய விமானநிலைய அதிகாரசபை இந்திய வெளிவிவகார அமைச்சுடன்…

  12. இரா. சம்பந்தன் - 'கடும்போக்கு புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம் செல்வாக்கு செலுத்தாது' ISHARA KODIKARA கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று, புதன்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டி…

  13. ஐக்கிய தேசிய கட்சியின், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க….. January 4, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார். அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார். http://globaltamilnews.net/2019/108862/

  14. ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டறிந்துகொள்ளவுள்ளதுடன் அரசியல் கட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகளையும் அரசியல் அமைப்பு சபையில் முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், நாட்டின் செயற்பாடுகள…

  15. வடக்கு ஆளுநராக மார்ஷல் பெரேரா? அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில் இன்று புதிய நியமனங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வட. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வடக்கு-ஆள…

  16. மைத்திரிக்கு நெருக்கடி – இன்று காலை உருவாகிறது சுதந்திரக் கட்சி மாற்று அணி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மாற்றுக் குழு என்ற பெயரில் செயற்படத் திட்டமிட்டுள்ள இந்த அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக கொழும்பு பொது நூலகத்தில் இன்று காலை நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ள இந்தக் குழுவினர், இன்று காலை தமது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து வெளிப்படுத்தவுள்ளனர். அதேவேளை, சிறிலங்கா சுதந்திர…

  17. புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி…

  18. வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் தற்போது பெரும் மனமாற்றத்தில் இருப்பதாகவும் படையினர் தமது பிரதேசத்தில் தொடர்ந்து கடமை புரிய வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர் ஆமி எங்களுக்கு வேண்டும்!! கூறுவது யார்?கூறவைப்பது யார்? வன்னியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குக்கில் அகப்பட்ட பொதுமக்களை உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கி காப்பாற்றிய படையினருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. படையினர் தொடர்பாக மக்கள் …

  19. 1948 ஆம் ஆண்டிற்கு பின் கிடைத்த பேரம்பேசும் சக்தியை TNA பயன்படுத்தவில்லை என்கிறார் தவராசா… தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவாக கூறிவிட்டனர் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சமஷ்டி குணாம்சங்களுடனான தீர்வு என்று கூட்டமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது…

  20. சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை சுமார் 17 மணிநேரம் தடுத்துவைத்திருந்துவிட்டு விடுவித்தனர் எனவும் இந்தச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் உறவினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை வடக்கைச் சேர்ந்த மன்னார் பகுதியில் விவசாயப் போதனா ஆசிரியராகக் கட…

  21. வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படு…

  22. (எம்.மனோசித்ரா) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது. அதற்கென சில படிமுறைகள் காணப்படுகின்றன. அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தாலும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதும் இலகுவானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர…

  23. சவால்களை தாண்டி தலைநகரில் அரசியல்பணி தொடரும் – சண். குகவரதன் சபதம்! வர்த்தக முரண்பாடுளை அரசியல் பழிவாங்கலுக்கான காரணமாக பயன்படுத்தி தன்மீது சேறுபூசியவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் மக்கள் ஜனநாயக ரீதியாக பதில் அளிப்பார்கள் என்றும் எத்தகைய சவால்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தலைநகரில் தன்னுடைய அரசியல் பணி தொடரும் என்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார். அண்மையில் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொட…

  24. January 3, 2019 கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை சட்டத்தரணி ஒருவர் நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் போது , குறித்த சந்தேக நபரை காவற்துறையினர் கைது செய்ய முயன்ற போது சட்டத்தரணிக்கும் காவற்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டமையால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் காவற்துறையினால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தை சேர்ந்த …

  25. மன்னார் நகர மத்திய பகுதியில் சதோச கட்டிடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகமானது அகழப்பட்டு வருகின்றது. அகழ்வுப்பணிகளின் போதும் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையினால் குறித்த அகழ்வுப்பணியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் நேற்றும் ,இன்றும் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று புதன் கிழமை 122 ஆவது நாளாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.