Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு கடிதம் December 31, 2018 வெடுக்கு நாறி ஆதிசிவன் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு கடிதம் கோரி தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்கு வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் எழுதியுள்ளார். அதில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெடுக்குநாறி மலையில் அமைந்தள்ள ஆதி சிவன் ஆலயம் மேற்படி விடயம் தொடர்பாக அதி உத்தம ஐனாதிபதி மற்றும் கௌரவ பிரதம மந்திரி ஆகியோருக்கு எம்மால் எழுதப்பட்ட 19.10.2018 ஆம் திகதிய கடிதத்தின் நிழற்பிரதியும் வட மாகாண கௌரவ ஆளுநருக்கு ந…

  2. அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கிய தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் விரட்டியடிப்பு December 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனுமதியின்றி கற்றாழைகளை பிடுங்கியவர்களை இளைஞர்கள் ஒன்றிணைந்து விரட்டியடித்துள்ளனர். யாழ்.பொன்னாலை கடற்கரை பகுதிகளில் காணப்பட்ட கற்றாழைகளை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பிடுங்கி தமது பட்டா ரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர். அதனை அவதானித்த சில இளைஞர்கள் அது தொடர்பில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்ராசாவுக்கு அறியப்படுத்தினர்கள். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மேலும் சில இளைஞர்கள் , கற்றாழைகளை பிடுங்கியவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போது தாம் …

    • 2 replies
    • 539 views
  3. ஒற்றையாட்சி, பௌத்தத்துக்கு முன்னுரிமை – ஐக்கிய தேசிய முன்னணி முடிவு புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியலமைப்பில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய, 9 ஆவது பிரிவில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, …

  4. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் இன்று முதல் விநியோகம் புத்தாண்டு தினமான இன்று முதல் இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதனை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தாரிகள் புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு அனுமதிப்பெற்ற ஒளிபடப்பிடிப்பு நிலையங்களிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்படவேண்டுமெனவும், ஒளிப்படத்திற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்றும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதிலும் 2100 ஒளிப்பட நிலையங்கள், இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன என ஆட்பதிவுத…

  5. சில ஆளுனர்களே பதவி விலகினர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய சில மாகாண ஆளுனர்கள் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை டிசெம்பர் 31ஆம் நாளுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது செயலர் மூலம் அறிவித்திருந்தார். இதற்கமைய, வடக்கு மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, தமது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளார். அனைத்து ஆளுனர்களையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கேட்டிருப்பதாகவும், அவர் கூறியிருந்தார். எனினும், கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகம, பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவ…

  6. ‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’ - எம்.சுமந்திரன் Editorial / 2018 டிசெம்பர் 29 சனிக்கிழமை, பி.ப. 01:13 Comments - 0 -டி.விஜிதா அரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (29) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். …

  7. கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை தீவிரம் December 30, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மைய நாட்களாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மக்களின் குடியிருப்புகள், சொத்துக்கள் மற்றும் கால்நடைகள் என்பன வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது இந்நிலையில் குறித்த பகுதிகளில் கிணறுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தமையால் குடிநீருக்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையில் பல்வேருதரப்புக்களும் கிணறுகள் சுத்தப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன அந்தவகையில் மாங்குளம் பகுதியில் இராணுவத்தினரும் கடற…

  8. December 31, 2018 Add Comment Share This! இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இளைஞர் அணி தெரிவு யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டத் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் கடந்த சனிக்கிழமை(29) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தொடர்பான வரலாறு தொடர்பில் உரையாற்றிய பெ.கனகசபாபதி, தொடர்ந்து இளைஞர் அணி புனரமைப்புக்காக புதிய நிர்வாகத் தெரிவை ஆரம்பித்துவைத்தார். தமிழரசுக் கட்சி இளைஞர் அணி தலைவராக கந்தசாமி பிருந்தாபனை, வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவுசெய்ய அந…

  9. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 671 ஆவது நாளாக இன்றும் கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 க்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் இன்றைய தினம் மக்கள் தமது காணிக்குள் தாமாக செல்வதாக தெரிவித்து உடமைகளுடன் சென்றபோது இராணுவ வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர் இதனை தொடர்ந்து குறித்த முகாம…

  10. முறிகண்டியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழப்பு! முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த கால்நடைகள் மோதியதால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://athavannews.com/முறிகண்டியில்-ரயிலுடன்-ம/

  11. 23ஆவது கடற்படை தளபதியாக அட்மிரல் பியல் டி சில்வா நியமனம் இலங்கை கடற்படையின் புதிய தலைவராக றியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கடற்படையின் 23ஆவது கடற்படை தளபதியாவார். இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் நாளை புதுவருட தினத்தில் இலங்கை கடற்படையின் புதிய தலைவர் பியல் டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.வி. செனவிரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/23ஆவது-கடற்படை-த…

  12. அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இது தொடர்பான அறிவுறுத்தல வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று – டிசெம்பர் 31ஆம் நாளுக்கு முன்னதாக, பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு ஆளுனர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, தாய்லாந்துக்கு ஒரு வாரகால தனிப்பட்ட விடுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளார். இதனை அடுத்து. புதிய ஆளுனர் நியமனம் உள்ளிட்ட …

  13. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இது தொடர்பாக, சட்டமாஅதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். எக்னெலிகொட காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னர், இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதுடன், காவல்துறையின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக, காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களாக, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருக்கும் நிலையில், விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணு…

  14. ஊழல் அற்ற ஆண்டாக 2019 பிரகாடனப்படுத்தப்படும் : ஜனாதிபதி ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க தலாதா மாளிகைக்குச் சென்று பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (31) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலாதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பிறக்கவிருக்கும் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்தை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மல்வத்தை மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார். தேரர் அவர்கள் பிரித் பாராயணம் செய்து பிறக்கும் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் அளித்தார். அ…

  15. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் அங்குரார்ப்பணம்… December 31, 2018 மாவட்டங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள், கூட்டங்களுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களையும் இணைத்துக் கலந்துரையாடவேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களும் இணைத்தலைவர்களும் ஏற்பாடு செய்யவேண்டும். என வடமாகாண முன்னாள் உறுப்பினர்கள் அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் நேற்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த அமையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ம…

  16. கிளிநொச்சிக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்றார் அமைச்சர் திகாம்பரம் December 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு மலையகத்திலில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் அமைச்சர் திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோர் சென்றிருந்தனர் அமைச்சர் திகாம்பரம் இன்று 31-12-2018 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக கிளிநாச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் மற்றும் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் ஆகியோரை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம…

  17. கிளிநொச்சி இலங்கை வங்கி கிளையில் தீவிபத்து : December 31, 2018 கிளிநொச்சியில் உள்ள இலங்கை வங்கியின் கிளை அலுவலகம் ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விசுவமடுப் பகுதியில் உள்ள கிளை அலுவலகத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணிளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/108481/

  18. அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சி சென்றார்.. December 31, 2018 இன்று 31-12-2018 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வெள்ளம் அனர்த்தம் தொடர்பாக நிலைமைகளை கேட்டறிந்துகொண்டதோடு, ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியில் கொண்டுசெல்லப்பட்ட நிவாரணப்பொருட்களை மாவட்டச் செயலகத்திடம் கையளித்துள்ளார் அத்தோடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ள மக்களையும் சென்று பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள மக்களுக்கு தான் கொண்டு சென்ற அரிசி பொதிகளையும் வழங்கி வைத்தார். http://globaltamilnews.net/2018/108446/

  19. வவுனியாவில் பொலிஸாருக்கு பயந்து ஓடிய நபர் குளத்திற்குள் குதித்து மாயம். வவுனியாவில் பொலிஸாருக்கு பயந்து ஓடிய நபர் ஒருவர் குடியிருப்பு குளத்திற்குள் குதித்து காணாமல் போயுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியால் உந்துருளியில் சென்ற இருவரை போலிஸார் தடுத்து நிறுத்தியபோது, குறித்த இருவரும் மதுபானம் அருந்தியிருந்தமையால் பொலிஸாரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இந்நிலையில் அவர்களை பொலிஸார் துரத்திச்சென்ற வேளை, குறித்த இருவரில் ஒருவர் குடியிருப்பு குளத்திற்குள் குதித்து காணாமல் போயுள்ள அதேவேளை, மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா ஊடகவியலாளர்கள் வெளியிட்ட தகவலின…

  20. வடமாராட்சி கிழக்கு ஆலியவளை கடற்கரையில் இன்று அதிகாலை மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த பொருள் தொடர்பில் கடற்படை தற்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றனர் அதே வேளை மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று குறித்த பொருளை பார்வையிட்டு வருகின்றனர் குறித்த மர்ம பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த மீனவர்கள் அந்த பொருள் ஏதாவது உடைந்த கப்பல் பாகமாக இருக்கக் கூடும் என நம்புவதாகத் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/47194

  21. சிங்கள இராணுவத்தினரின் நல்லிணக்க ராகம் நிகழ்வில் மதுப்போத்தல்கள்! தமிழீழத்தில் திட்டமிட்டு இளம் சமூதாயத்தை மது மற்றும் போதைக்கு அடிமையாக்கும் நடவடிக்கைகள் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரால் தொடரப்பட்டு வருகிறது. அவ்வகையில் யாழ்.கோட்டை பண்ணைப்பகுதியில் இனப்படுகொலை சிங்கள இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘நல்லிணக்க ராகம்’ எனும் நிகழ்வில் இளம் சமூகத்தினரிற்கான பரிசுகளாக மதுபானங்கள் வழங்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. காட்சிக்கூடமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மதுபான போத்தல்கள் மீது அங்கு வைக்கப்பட்டுள்ள வளையங்களை இலக்கு வைத்து எறிவதன் மூலம் பரிசில்களை பெற்றுக்கொள்ளும் போட்டியே இனப்படுகொலை சிங்கள படையினரால் நடத்தப்பட…

    • 3 replies
    • 801 views
  22. ஒற்றையாட்சியே நீடிக்கும் – அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல உறுதி கூட்டமைப்பினர் கோரும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தினை ஏற்கவில்லை என்றும், ஒற்றையாட்சியே நீடிக்கும் என்றும், அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசமைப்பு அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அவை முடிவடைந்தப் பின்னர் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்பி…

  23. கூட்டமைப்பின் திட்டத்தை தோற்கடிப்போம் – மஹிந்த அமரவீர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடிக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ள போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரையில் எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்விடும் எந்த திட்டமும் நாடாளுமன்றத்தில் தடுக்கப்படுமென்றும் ஐக்கிய மக்கள் சு…

  24. நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி – பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பாரா? தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தினுாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஜனாதிபதி மைத்திபால சிறிசேன நேரில் பார்வையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதன்படி நாளை புதுவருடமும் பிறக்கவுள்ள நிலையில், கிளிநொச…

  25. ஆளுனர்கள் இடமாற்றம்: வடக்கு ஆளுனரும் விடைபெறுகிறார்! December 30, 2018 புதிய வருடத்தில் ஆளுனர்கள் பலர் மாற்றப்படவுள்ளனர். இதில் வடக்கு ஆளுனரும் உள்ளடங்குகிறார். மாகாண ஆளுனர்களை முழுமையாக மாற்றம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக நாடு முழுவதுமுள்ள ஆளுனர்களிடம் பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி கோரியதாக தமிழ் பக்கம் அறிந்துள்ளது. வடக்கு ஆளுனரும் தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இன்று அவர் கொழும்பிற்கு புறப்பட்டு செல்வதாக தெரிகிறது. இதே ஆளுனர்கள் வேறு மாகாணங்களிற்கு நியமிக்கப்படவோ, புதியவர்கள் நியமிக்கப்படவோ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும், ரோகித போகொல்லாகமவை கிழக்கு மாகாண ஆளுனராக மீள நியமிக்கப்படக் கூடாதென தமிழ் தேச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.