Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுணதீவு பொலிஸார் படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுபோட முயற்சி!- அரியநேத்திரன் சாடல் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடுவதை ஏற்க முடியாது என த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர்…

  2. கிழக்கில் மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும்: வியாழேந்திரன் நம்பிக்கை கிழக்கில் படையினர் வசமுள்ள மேலும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் வேண்டுகோளுக்கமைய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து உள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்பட…

  3. கோப்பாய் காவல் நிலையத்தின் கடுமையான சித்திரவதைகளும் இளைஞர்களின் தற்கொலை முயற்சிகளும் December 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதை உள்ளாகியதாகவும், அதனை தாங்க முடியாது தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இளைஞன் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இரு இளைஞர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளைஞர்கள் இருவரையும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் நீதிவானின் முன்னிலையில் முற்படுத்தாது, 72 மணி நேரம் தடுத்து வைத்து சித்த…

  4. இரணைமடு குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றன December 29, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் வான் பாயும் பகுதியில் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு உள்ளனர். அதில் தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிபடுவதாகவும், அதனை குளத்தினை பார்வையிட வரும் மக்கள் மற்றும் வியாபாரிகள் என பலரும் கொள்வனவு செய்வதனால் அந்த மீன்கள் பல ஆயிரக்கணாக்கான விலைக்கு விற்கப்படுவதாக அங்கு மீன்பிடியில் ஈடுபட்டு இருந்தவர்கள் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2018/108216/

  5. தற்கொலைக்கு முயற்சித்த யாழ். பல்கலைக்கழக மாணவன்! | யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார். பின்ன…

  6. எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் எதிர்வரும் வருடம் தேர்தல்களுக்கான வருடம் என எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிலர் தேர்தலுக்கு பயப்படும் காரணத்தினால் தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=109975

  7. பொலிஸ் திணைக்களம் ஜனாதிபதிக்கு - அரச ஊடகங்கள் மங்களவிற்கு இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை, லேக்ஹவுஸ் நிறுவனம் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய அரச ஊடகங்கள் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் பொலிஸ் திணைக்களம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற இலக்கத்தின் கீழ் வர்த்தமானி வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஊடகத்துறை சார்ந்…

  8. மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன் இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட…

  9. வெள்ள அனர்த்தம் -பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் சேர்ந்த 70650 பேர் பாதிக்கப…

  10. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலீசார் குறித்து மிகமோசமான பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. என்னதான் பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கடத்தல் கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது இதற்கு பெலீஸ் திணைக்களத்தில் உள்ள சிலரது மோசமான நடவடிக்கைகளே காரணம். பொலிஸாருக்கு எதிராக தினமும் சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 600ற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…

  11. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இரண்டு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10‍ ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிதி போதாது எனவும் அந்நிதியை 25ஆயிரம் ரூபாவாக அதிகரித்து பாதிக்கப்பட…

  12. தமிழ் மக்களின் நலன்களை நிறைவேற்ற கூட்டமைப்பு தவறியுள்ளது: நாமல் சாடல் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவமொன்றில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவை நாமல் நேற்று (வியாழக்கிழமை) சிறைக்கு சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அங்கு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை கருத்திற் கொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கு அரச சார்பற்ற அமைப்புகளின் நலன்களை நிறைவேற்று…

  13. 1 Min Read December 28, 2018 கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரு மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளது அந்தவகையில் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 28-12-2018 பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான, ரஞ்சித் மத்தும பண்டார, றிசாட…

  14. 1 Min Read December 28, 2018 Add Comment Share This! கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று 28-12-2018 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வா…

  15. மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாக கனவிலும் நினைக்கவே கூடாது! December 28, 2018 மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவிலும் நினைக்கக்கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளித் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்றும் மீண்டும் பதவிக்கு ஆசைப்பட்டமையினாலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இறுதியில் தோல்வியே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாக உருவாக்கப்படும் என்றும் ஜனநாயக தேசிய முன்னணிய…

  16. எந்தவொரு அரசமைப்பு வந்தாலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பது மாத்திரம் மாறாது! December 28, 2018 நாட்டில் எந்தவொரு அரசமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அரசமைப்பின் 9 ஆவது உறுப்புரிமைக்கு இணங்க, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மாத்திரம் மாற்றப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். மேலும், எந்தவொரு அரசமைப்புத் திருத்தத்தின்போது பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மாத்திரம் மாற்றப்போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறுவதாகவும் இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா…

  17. யாழ்.மாநகர சபை எல்லைக்குள், 672 இடங்களில் டெங்கு பரவும் அபாயம்… December 28, 2018 யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு , சுகாதார திணைக்களம், காவற்துறையினர் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அத…

  18. யாழில், இரவு வேளைகளில் வீதிகளில் கழிவுகளை வீசிய 22 பேர் பிடிக்கப்பட்டனர்… December 28, 2018 யாழ்.பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் கழிவுகளை வீசிய 22 பேரை பிரதேச செயலக ஊழியர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீதிகளில் இரவு வேளைகளில் குப்பைகள், கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள், இறைச்சி கழிவுகளை வீசி வருவதனால் வீதியால் செல்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அது தொடர்பில் முறைபாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் பிரதேச செயலக ஊழியர்கள் இரவு விசேட வீதி சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது சைக்கிளில், மோட்டார்சைக்கிள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் கழிவுகளை எடுத்து…

  19. மரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை ஆதரவு… December 28, 2018 மரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 83 நாடுகளின் ஆதரவுடன் பிரேஸிலால் குறித்த யோசனை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 121 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டிருந்ததுடன் 35 நாடுகள் இந்த யோசனைக்கு எதிராகவும், 31 நாடுகள் வாக்களிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள் மீண்டும் போதைப்பொருள…

  20. ஜனவரி முதல் சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டு மாத்திரம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழங்கும் கடவுச் சீட்டு முறைமையில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி முதல் சகல நாடுகளுக்கான கடவுச் சீட்டு மாத்திரமே வழங்கப்படும் என்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் இதுவரை விநியோகித்து வந்த கடவுச்சீட்டு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வழங்கப்படமாட்டாது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், திணைக்களம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் வஜிர லியனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார். http://…

  21. வன்னி நிலப்பரப்பில் வெள்ளத்தால் பாதிப்புற்றவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணியில் கடந்த நான்கு நாட்களாக மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் களத்தில் இறங்கி பாடுபட்டுவருகின்றனர். இதுவரை பல இலட்சம் பெறுமதியான பொருட்களை மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சேகரித்துள்ளனர் இதற்காக கடந்த நான்கு நாட்களாக வீடு வீடாகச் சென்றும் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் வடக்குமகாணத்தில் வன்னி பெருநிலப்பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளப்பெருக்கால் நிற்கதியாகியுள்ள எமது உறவுகளுக்கு உதவும் பொருட்டு மட்டக்களப்பு மாநகர சபையும், மாவட்ட செயலகமும், மட்டக்களப்பு மட்டு தமிழ் இளைஞர் அமைப்பு மூலமாக மட்டுநகர் பகுதிகளில…

  22. அமைச்சரவை பதவி வழங்கப்படாவிடின் கடும் நடவடிக்கை: ரங்கே பண்டார அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவை பதவி வழங்கப்படாவிடின் கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிடும் என, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார எச்சரித்துள்ளார். அத்துடன் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகவும் உந்துதலாக தான் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பெரலிய திட்டத்தின் கீழ் சியம்பலாவெல பகுதி மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமர் நீக்கப்பட்டபோது, 500 மில்லியன் ரூபாய் பணத்துட…

  23. பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும் அதனை பூர்த்தி செய்து தருமாறும் பொறுப்பற்று பதிலளித்துள்ளனர். தெஹிவளை பொலிஸாரின் இச்செயற்பாட்டினால் தமிழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். http://athavannews.com/தெஹிவளையில்-மீண்டும்-பொல/

  24. வட மாகாணத்தில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் இதுவரை 36594 குடும்பங்களை சேர்ந்த 1,14,458 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையில் வெளியிட்ட இன்று (வியாழக்கிழமை) 6 மணி வரையான நிலவரப்படி, இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 36,594 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், 11,4458 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 143 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 3291 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் கிளிநொச்சியில் மட்டும் 22569 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்…

  25. கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் ஏற்­பட்ட வெள்­ளப் பேரி­டர் குறித்­துப் பார்­வை­யி­டு­வ­தற்­காக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை வருகை தர­வுள்­ளார். இத­னால் வெள்ள இட­ரால் ஏற்­பட்ட சேத விவ­ரங்­கள் தற்­போது தீவிர கதி­யில் திரட்­டப்­பட்டு வரு­கின்­றன என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் கடந்த 21ஆம் திகதி முதல் கன­மழை பெய்து வரு­கி­றது. இதன் கார­ண­மாக அந்­தப் பகு­தி­க­ளில் வெள்­ளப் பெருக்கு ஏற்­பட்­டது. மக்­கள் இடம்­பெ­யர்ந்­த­னர். வீடு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­தது. வீட்­டி­லி­ருந்த உட­மை­க­ளைக் கைவிட்டு மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளைத் தேடி ஓடி­னார்­கள். இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.