Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னணியின் கோரிக்கை பேரவையால் நிராகரிப்பு December 10, 2018 தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சீ.வீ. விக்கினேஸ்வரன் இவ்விடயத்தினைக் கு…

  2. ரணில் – மகிந்த – இரண்டு மனுக்கள் ஜனவரியில் விசாரணை – தம்பர அமில தேரரின் மனு ஒத்திவைப்பு…. December 10, 2018 ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமைக்கெதிராக தம்பர அமில ரேரர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/106206/

  3. அன்று கூறியது இன்று நடக்கிறது என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க…. December 10, 2018 தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் தொடர்பில் தான் 4 வருடங்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தான் கருத்து ஒன்றை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அன்றி, இன்னொருவரை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டாம் எனக் கூறியிருந்ததாகவும், இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு பலனும்…

  4. தற்போது அரசியலில் தொடர்புபட்டுள்ள புலி உறுப்பினரின் கொலை முயற்சி தொடர்பில் 48 மணித்தியாலத்துள் அறிவிப்பு December 10, 2018 முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். குறித்த கொலை சதித்திட்டம் தொடர்பான குரல் பதிவை 12ஆம் திகதி காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதி காவல்துறைமா அதிபராக நாலக சில்வா பதவி வகித்த போது இந்த விடயம் தொடர்பான குரல் பதிவை அவரிடம் தான் வழங்கிய போதும் , அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் முன்னெட…

  5. புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம் December 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கிராமசேவகருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற அப்பகுதிமக்கள் இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் 208 கிராம சேவகருக்கு கடந்த சில தினங்களிற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராக அப் பகுதிமக்கள் கடுமையான எதிர்ப்பைவெளியிட்டு வந்திருந்தனர். இந் நிலையில் அந்தஇடமாற்றத்தைக் கண்டித்தும் இடமாற்றத்தை இரத்துச்செய்ய வலியுறுத்தி…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை, கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மேற்கொண்டிருந்தனர். துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாள்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி…

  7. இரணைமடு குளத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு கல்லினை மீளவும் நிறுவ நடவடிக்கை இரணைமடு குளத்தில் 1954ம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவு கல்லினை மீளவும் அதே இடத்தில் நிறுவுமாறு இரணைமடு நீர்பாசனத்திட்டத்தின் பொறியியலாளர் எஸ்.சுதாகரனுக்கு வடமாகாண ஆளுனர் பணித்துள்ளார். 1954ம் ஆண்டு இரணைமடு புனரமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரின் பெயர் பதிக்கப்பட்ட நினைவுக்கல் நிறுவப்பட்டடிருந்தது. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்றுவந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் பக்குவமாக அகற்றப்பட்டு அந்த ப…

  8. யாழ்ப்பாணம் காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.இவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன.77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உழைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.ஆறுமுகம் விஜயலட்சுமி மன உறுதி தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. https://www.madawalaenews.com/2018/12/77.html

  9. வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்? நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட…

  10. மைத்திரிக்கு உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுக்கும் பாதுகாப்புப் பிரிவுகள்? நாடு தற்போது அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த அணி வலியுறுத்தியுள்ளது. முப்படைகளினதும் தலைமை தளபதி என்ற வகையில், சிறிலங்கா அதிபரிடம், மகிந்த அணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். பாதுகாப்புத் துறையின் சில பிரிவுகள், சிறிலங்கா அதிபரின் கட்டளைகளுக்கு எதிராக செயற்படுவதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிடின் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சி…

  11. ரணிலுக்கோ, கட்சிக்கோ துரோகம் செய்யமாட்டேன் – சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்காக தான், ரணில் விக்கிரமசிங்கவையோ, கட்சியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மத்துகமவில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், ‘ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன். சிறிலங்கா அதிபர், ஒக்ரோபர் 26ஆம் நாளுக்குப் பின்னர் எடுத்த அனைத்து முடிவுகளும் சட்டத்துக்கு விரோதமானவை. அவரது இந்த முடிவுகள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. பிரதமராக பதவியேற்கும்படி, இருமுறை நான் கேட்கப்பட்டேன். ஆனால் நான் அதனை மறுத…

  12. நீதிமன்றத் தலையீடுகளால் அதிருப்தியில் மகிந்த இப்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை இலகுவாக தீர்க்க முடியும் என்றும், இந்த விவகாரம் நீதிமன்றங்களிடம் இருப்பதால் பொறுமையாக செயற்பட வேண்டியிருப்பதாகவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கண்டி, தலதா மாளிகையில் நேற்று வழிபாடு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். “நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவினால், மக்களுக்கு எனது பணியை நிறைவேற்ற முடியாதுள்ளது. உலகில் எங்குமே, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றம் இப்படிச் செயற்பட்டதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/12/10/new…

  13. அரசியல் நெருக்கடிக்கு அனைத்துலக தலையீடுகளே காரணம் – கோத்தா உள்நாட்டுப் படைகள் வலுவாகவும், நாட்டைப் பாதுகாக்கும் ஆற்றலுடனும் இருப்பதால், வடக்கிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புத் தேவையில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்றுமாலை ஊடகங்களைச் சந்தித்த கோத்தாபய ராஜபக்சவிடம், வடக்கிற்கு ஐ.நாவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “எமது படைகளின் துணையுடன், அந்த விவகாரங்களை எங்களால் தீர்த்துக் கொள்ள முடியும். இறைமையுள்ள நாடு …

  14. மைத்திரியை இன்று சந்திக்கிறது மகிந்த அணி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று தமது அணியினருடன் முக்கியமான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் எந்த நேரத்திலும் அறிவிக்கலாம் என்ற நிலையிலேயே சிறிலங்கா அதிபர் தமது அணியினரை சந்திக்கவுள்ளார். உச்ச…

  15. ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு? – இன்று முடிவு ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மாவை சேனாதிராசா, ‘கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற…

  16. டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளான நிலையில் பரீட்சை எழுதிய மாணவி டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியொருவர், க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதிவருகிறார். குறித்த மாணவி நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு வந்து, பரீட்சை எழுதி வருகிறார். யாழ் நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவர் திடீரென டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரீட்சைக்கு தயாராகியிருந்த அந்த மாணவி, டெங்கு தொற்றால் பரீட்சை எழுதும் வாய்ப்பை கைவிட தயாராக இருக்கவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலையை ஆராய்ந்த வைத்தியர்கள், வைத்தியசாலையில் தங்கியிருந்தபடியே பரீ…

  17. அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும், தனிப்பட்ட நிர்வாகத்தினருக்கு வழங்கப்படும் வேதனமும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமைச்சர்களின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக அன…

  18. காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் தாய் உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகையே (83வயது) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் உயிரிழந்து ஒரு மாதமே ஆன நிலையில் இன்று தாயாரும் உயிரிழந்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயக…

  19. வடமாகாணத்தின் குடிநீர்பிரச்சினையை தீர்ப்பதற்கான கூட்டம் December 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாணத்தில் குடிநீர்பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு நிரந்தர தீர்வொன்றினை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநர் தலைமையில் கூட்டமொன்று நேற்று (08.12.2018) நடைபெற்றது. இதில் வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் பிறேம்குமார், வடமாகாண விவசாய அமைச்சின் செயலர் தெய்வேந்திரன், பிரதி பிரதம செயலாளர் பொறியியல் சேவை சண்முகாணந்தன் திட்டப்பணிப்பாளர் பொறியியலாளர் சுதாகரன் உதவி கமநலசேவைகள் பணிப்பாளர் சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் மக்களின் நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் ஆளுநர…

  20. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்தமைக்கு தமிழர் தரப்பிலிருந்து தொடர்ந்தும் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதன் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் மேலும் இனவாதத்தை தூண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவகரன் அச்சம் வெளியிட்டுள்ளார். இராஜதந்திர ரீதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகள் தான்தோன்றி…

  21. தமிழ் மக்கள் மஹிந்தவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சித்தார்த்தன் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதன் காரணமாகவே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவினைத் தெரிவித்தோம் என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிலர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பாக நடுநிலை வகிக்குமாறு கூறுகின்ற போதிலும் அவ்வாறு நடுநிலை வகிப்பதானது மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு சமமாகவே பார்க்கப…

  22. ரணிலுக்கு ஆதரவாக சீனிதம்பி யோகேஸ்வரன்!!

    • 0 replies
    • 111 views
  23. நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (09) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், வலுவான ஜனநாயக முறைமையுள்ள நாட்டில் அவ்வாறு இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த ஜனாதிபதி, வெகுவிரைவில் இந்த நிலைமை மாற்றமடைந…

  24. தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித் (நா.தினுஷா) அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும். என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம், பிள்ளைகளின் எதிகாலம் என சகல துறைகளையும் பாதுகாப்பதற்காக அரசியல் சதிகாரர்களுக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டு மக்கள் அனைவரும் அணித்திரள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஜனாதிபதியின் யாப்புக்கு முரணான செயற்பாட்டினை எதிர்த்து 'நீதிக்கான போராட்டம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி மக்களை அணித்திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையிலேயே இன்று அவிசாவ…

  25. ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்தை மைத்திரியிடம் கையளிக்கத் திட்டம் : December 9, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வை, அரசியல் நெருக்கடியின் பின்னராக நாட்களில் புறக்கணித்தமை போலவே இம்முறையும் மகிந்த அணி புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ஸ தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.