Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை – கூட்டமைப்பு! ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ட்டுவிட்டரில் அதிகளவில் பிரபல்யமடைந்த பதிவொன்றுக்கு பதில் வழங்கும் வகையில், கூட்டமைப்பு இந்த கருத்தை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்ற பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்…

  2. குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் மைத்திரிக்கு ஜே.வி.பி எச்சரிக்கை! ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாக அவரது குடியுரிமை பறிபோகும் நிலை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல முறை அரசமைப்பை மீறியிருக்கின்றார். தொடர்ந்தும் அத்தகைய மீறல்களில் அவர் ஈடுபட்டு வருகின்றார். ரணில் விக்கிரமசிங்கவை அவர் பதவி நீக்கம் செய்தது அரசமைப்புக்கு எதிரானது. …

  3. மஹிந்தவை சிறையில் அடைக்காமையால் ரணிலுக்கு நேர்ந்த கதி – விபரிக்கின்றார் யோகேஸ்வரன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நாட்டு நிலைமை தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அன்று மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை சிறையில் அடைந்திருந்தால் இன்று நாடும் நாட்டின் அரசியலும் நிலையாக இருக்கும். இவற்றை செய்யாதமையின் காரணமாகவே அவர்கள் தற்போது எவ்வித கட்டளைகளையும் பின்பற்றாமல் செயற்பட்டுக்கொண்டிருக்க…

  4. கிளிநொச்சி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் இன்று காலை 7 மணியளவில் 35.4 அடியாக காணப்படுகின்றது. இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக நீர் ஏந்து பரப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி இராணுவத் தலமையகத்தின் சில பகுதிகள் இரணைமடு குளத்தின் கீழ் சென்றுள்ளது. குறித்த குளத்தின் நீர் முகாமிற்குள் வராது படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com…

  5. "வவுணதீவு சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியவர்களே உள்ளனர்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினர். பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பான கொண்டுவரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன் , யோகேஸ்வரன் மற்றும் கோடீஸ்வரன் எம்.பிக்கள் இ…

  6. தனிப்பட்ட கொள்கைக்காக பெருந்தோட்ட மக்களை பணயம் வைக்க வேண்டம் - தமிழ் முற்போக்கு கூட்டணி (நா.தினுஷா) சம்பள உயர்வை வலியுறுத்தி தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்பாட்டங்கள் அடிப்படையற்றதும் அரசியல் நோக்கமுடையதுமாகும். ஆகவே அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி, நிலையான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் நிச்சயம் 1000 ரூபா சம்பள உயர்வு வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2010 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காகவே 1000 ரூபா சம்பள உயர்வு சம்பந்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை மையமாக கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களின் சுமையை தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது. தனிப்பட்ட கொள்கைக…

  7. தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் கூட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இரா. சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் கட்சி சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.ராகவன், ரெலோ அமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆ…

  8. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் ஆகியோர் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்ய வேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதி போல் செயற்பட்டிருக்க மாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டேன். ர…

  9. ஒரு விடயத்தை முஸ்லிம் தலைமைகள் அணுகும் விதத்திற்கும் தமிழ் தலைமைகள் அணுகும் விதத்திற்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.தமிழ் தலைமைகள் தங்களது சுக போகங்களைத் துறந்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன.முஸ்லிம் தலைமைகள் தங்கது சுக போகங்களை மையப்படுத்தியே தங்களது அரசியல் பயணப் பாதைகளை அமைத்துக்கொள்கிறார்கள் என்று கூறினாலும் பிழையாகாது.அதிகமான தமிழ் தலைமைகள் மத்திய அரசிடமிருந்து எதுவிதமான பதவிகளையும் பெறாததன் காரணமாக அரசின் பிழையான செயற்பாடுளை தைரியமாக கண்டிப்பதோடு அதனை உரிய இடத்திற்கும் கொண்டு சேர்க்கின்றனர்.முஸ்லிம் தலைமைகள் சிறிய விடயங்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத நிலையில் தான் உள்ளன.கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு இடமாற்றப…

  10. 1 Min Read December 5, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித…

  11. December 5, 2018 போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மட்டக்களப்பு தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த வைரமுத்து திசவீரசிங்கம் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயத்தின் முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் போரின்போது காயங்களுக்கு உள்ளானவர். இவரது உடலில்யுத்த துகள்கள் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறுகின்…

  12. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். 11 இளைஞர்களைக் கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை கைது செய்தது. இதனையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/105717/

  13. December 5, 2018 கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 11 இளைஞர்களைக் கடத்திய சந்தேகநபர்கள் ”அண்ணாச்சி” எனப்படும் பாதாளக்குழு உறுப்பினர் என கூறி அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே நீதிமன்றத்தில…

  14. குளோபல் தமிழ்ச் செய்திகள்.. எழுத்து மூல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க கூடாது என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோ வலியுறுத்தி உள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , கொழும்பில் நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கூட்டமைப்பின் பங்காளி கட்சியின் பிரதிந…

  15. December 5, 2018 மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியிலிருந்து 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 111ஆவது நாளாக மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும…

  16. நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துக்கொண்டனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். இதற்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தில் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற…

  17. தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது ; தர்மலிங்கம் சுரேஷ் தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளந்தண்டற்ற எங்களுடைய தமிழ் தலைவர்கள் இருப்பதுதான் வேதனையானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதியோர்களின் நல திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ்ட பிரஜைகள் சபை முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது அதில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

  18. மட்டக்களப்பில்.... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக…

    • 31 replies
    • 3.9k views
  19. சிறிலங்கா அதிபருக்கு ரணில் எச்சரிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலமைப்பை மீறுவாரேயானால், அவரால் தொடர்ந்தும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அலரி மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். “அரசியலமைப்புச் சட்டம் தான் மேலானது. அதற்கு மேல் எதுவுமில்லை. அதனை யாரும் மீற முடியாது. அரசியலமைப்பை பாதுகாப்பதாகவே, அதிபர் உள்ளிட்ட எல்லோரும் உறுதி எடுத்துக் கொள்கிறோம். ஒக்ரோபர் 26ஆம் நாளில் இருந்து அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக அரசியலமைப்பை மீறி வருகிறா…

    • 1 reply
    • 492 views
  20. (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் அமைப்பின் முகவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறுகிய நோங்களை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றால் நிச்சயம் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்படும். பெரும்பான்மை மக்கள் ஒன்றினைந்து யுத்தத்தை வெற்றிக் கொண்டதை போல தற்போதைய அரசியல் நெருக்கடிகளையும் தேர்தலினால் ஒன்றிணைந்து வெற்றிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். பொதுஜன பெ…

    • 5 replies
    • 956 views
  21. கூட்டரசால் கைவிடப்பட்டுள்ளோம்!: செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் விசேட செவ்வி இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்கு மைத்திரிபால-ரணில் விக்கிரமசிங்க கூட்டரசாங்கம் தீர்வு வழங்குமெனத் தமிழ்த்தலைவர்கள், தமிழ்மக்கள் நம்பியதுடன் மாத்திரமல்லாமல் உலக அரங்கிலும் நம்பப்பட்டது. ஆனால், தற்போது இவையனைத்தும் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இதுவரை அதிகாரத்திலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வந்திருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். பல இலட்சம் தமிழர்கள் போரில் இறந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் அவயவங்களை இழந்துள்ளனர். எத்தனையோ பேர் ஆதரவற்ற நிலையிலும், தவித்த நிலையிலும் இன்னும் தென்னி…

    • 3 replies
    • 1.5k views
  22. அரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என முன்னாள் இராணுவதளபதி தயா ரட்ணாயக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வவுணதீவு சம்பவம் தனித்தவொரு சம்பவமாகயிருக்கலாம் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவதளபதி புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் குறித்த மறுஆய்வுகள…

    • 1 reply
    • 493 views
  23. நல்லாட்சியின் கொள்கையையும் சீரழித்து ஐக்கிய தேசியக் கட்சியையும் சீரழித்தது என்னையும் சீரழித்தமையால் நான் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை விரட்டியடித்தேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “நான் கடந்த 26 ஆம் திகதி எடுத்த தீர்மானமானது அன்றைய விட இன்றும் சரியானது. ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து ந…

    • 6 replies
    • 923 views
  24. பாடசாலை உபகரணங்கள் தருவதாக்கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கப்பட்ட சிறுவர்கள் வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினரால் அழைத்துவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜன பெரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பெரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் பங்கு கொண்டதை அடுத்து, அச் சிறுவர்…

  25. வைத்தியர் வேடமிட்டு கொள்ளையிலீடுபட்ட இரு பெண்கள் ; யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம் வைத்தியர்கள் போன்று ஆடையணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து , இதய துடிப்பு காட்டியுடன் (டேடஸ் கோப்) இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதனை மறைகாணிகளின் (சி.சி.ரி.வி) உதவியுடன் கண்காணித்தோம். அதன் போது அவர்கள் இருவரும் சத்திரசிகிச்சை கூடத்திற்கு சென்று , அதில் ஒருவர் சத்திர சிகிச்சை கூடத்தினுள் செல்வதற்கு வைத்தியர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.