Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார! ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் கூறினார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜேர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1432994 @குமாரசாமி , @Kand…

    • 2 replies
    • 314 views
  2. 7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம்…

    • 5 replies
    • 415 views
  3. Published By: VISHNU 23 MAY, 2025 | 07:09 PM வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளுக்கான ரவைகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடைகளுடன் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரை கைது செய்தனர். அவரது வீட்டை மேலும் சோதனை செய்தபோது, பாவனைக்கு உதவக்கூடிய ரவைகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை சீருடைகளும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட ரவைகள் T-56 வகை …

  4. Published By: DIGITAL DESK 2 23 MAY, 2025 | 04:29 PM (எம்.ஆர். எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளும் போது அதிலும் மோசடி செய்யும் கலாசாரம் தான் கடந்த காலங்களில் காணப்பட்டன. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களில் சுமார் 20ரில்லியன் ரூபா வரையான நிதி நேர்ந்ததென்ன என்பதற்கு முறையான ஆவணங்கள், குறிப்புகள் ஏதும் இல்லை. கணக்காய்வு திணைக்களத்தின் ஊடாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு …

  5. Published By: DIGITAL DESK 2 23 MAY, 2025 | 12:39 PM ஜனாதிபதியின் அனுமதி மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலின் பேரில், இலங்கை பொலிஸ் திணைக்களம் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் வருமாறு: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார, நலன்புரி பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜி.யூ.சி. ஹேரத், குருநாகல் பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இடமாற்றம் செ…

  6. இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை - உணவுகள் என்னை நோயாளியாக்குகின்றன,- போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண் Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 12:38 PM போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளதுடன், அந்த பெண்ணை சிறைச்சாலை விதிமுறைகளின் படி நடத்துவதாகவும் அவருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த சார்லட்டே மே லீகடந்த வாரம் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். குஷ் எனப்படும் போதைப்பொருளை கடத்தியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என சுங்க அதிகாரிகள்…

  7. Published By: VISHNU 23 MAY, 2025 | 03:14 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணத்தில் உறுதிப்பத்திரங்கள் இல்லாத காணிகள் இருப்பதை போன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்களை கொண்ட காணிகளும் உள்ளன. ஒருசில சட்டத்தரணிகள் நுட்பமான முறையில் அவ்வாறாக உறுதிப்பத்திரங்களை தயாரித்துள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமாரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்றது. இந்த மாவட்…

  8. ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு Posted on May 23, 2025 by தென்னவள் 7 0 ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் நான்கு பேர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து முறைப்பாட்டை பதிவு செய்…

    • 0 replies
    • 224 views
  9. கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு May 23, 2025 10:44 am கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் படையை ஆதரிக்க அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. நேற்று (22) கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்ததாக கட்சித் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதியும் தனது கட்சியினரை அழைத்ததாகக் கூறினார். இருப்பினும், தனது கட்சி கொழும்பு மாநகர சபை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், எனவே தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். …

  10. Published By: VISHNU 23 MAY, 2025 | 03:06 AM (எம்.வை.எம்.சியாம்) ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கை கருத்திற்கொண்ட கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/215461

  11. Published By: VISHNU 23 MAY, 2025 | 02:56 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷண ராஜகருணா எம்பி தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் …

  12. Published By: VISHNU 21 MAY, 2025 | 09:50 PM வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் புதன்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை புதன்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது…. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்றையதினம் பூவரசங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஜந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது கைதுசெய்துள்ளனர். காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் ப…

  13. இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை - IMF அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்கு இணைந்ததாக, IMF இன் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கை IMF இன் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் சுட்டிக்காட்டியுள்ளார். இவர் இதனை, வாராந்திர IMF தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் குறிப்பி…

  14. நாட்டில் உப்பு தட்டுப்பாடு! நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாகவும் இதனால் சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உப்பு …

  15. சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு adminMay 22, 2025 மன்னார் – நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இன்று காலை 10. மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. முதல் கட்ட விசாரணைகளுக்காக சம்பவ இடத்திற்கு சென்ற முருங்கன் காவல்துறையினா் , தடயவியல் நிபுணர்கள் பார்வையிட்ட பின்னர் மன்னார் …

  16. 72வது உலக அழகிப் போட்டி – இறுதிச் சுற்றில் அனுதி குணசேகர இந்தியாவின் தெலங்கானாவில் நடைபெற்று வரும் 72வது ‘உலக அழகி போட்டியில்’ Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார். அனுதி இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தெரிவாகியுள்ளார். இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார். மேலும், அனு…

  17. வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்! வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வரை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1432875

  18. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்…

      • Thanks
      • Haha
    • 5 replies
    • 327 views
  19. இந்த அரசாங்கம் எமக்கு என்ன செய்துச்சு? | கூர்மையான கேள்வியுடன் சத்தியலிங்கம் அவர்கள் ஜே வி பியும் இனவாதம் பேசி நாட்டை ஆட்சி செய்தால் நாடு ஒரு போதும் முன்னேறாது.

    • 0 replies
    • 189 views
  20. 22 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (22) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கு அமைய, இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத்தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்…

  21. Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 04:55 PM வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய மற்றும் குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகள் விடுதலை, தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்பி தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். தென்னாபிரிக்க தூதுவருக்கும் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன…

  22. Published By: DIGITAL DESK 2 22 MAY, 2025 | 04:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் ம…

  23. Published By: VISHNU 16 MAY, 2025 | 03:18 AM இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார். புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்…

  24. 22 MAY, 2025 | 03:51 PM நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட கூற்றொன்றை முன்வைத்து …

  25. NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.