ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். ஏற்கனவே, சரத் பொன்சேகாவிடமும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், சரத் பொன்சேகாவிடம் மீண்டும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. …
-
- 0 replies
- 486 views
-
-
சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும். தற்போது சிறிலங்காவில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சிறிலங்கா மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகிறது. இந்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை…
-
- 0 replies
- 434 views
-
-
குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது. கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகிய நீர்க்காகம் -9 கூட்டுப் பயிற்சி நாளை நிறைவடையவுள்ளது. நாளை குச்சவெளியில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகையில், சிறிலங்காவின் 2500 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும், பங்களாதேஷ். சீனா, இந்தோனேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துருக்கி, சாம்பியா, ஆகிய நாடுகளின் படையினரும் பங்கேற்கவுள்ளனர். சிறப்பு நடவடிக்கைப் படைகளின் போரிடு…
-
- 0 replies
- 485 views
-
-
யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காது – ரெலோ யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை எனவும், இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தமிழீழ விடுதலை இயக்கம் அனுமதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கை ஜனாதிபதியோ, பிரதமரோ யுத்த குற்றம் புரிந்த இராணு…
-
- 3 replies
- 618 views
-
-
உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!! தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் எமக்கேன் இந்த வம்பு? என்று ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிப்பிக்குள் முத்து நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, இரண்டு நாள்களுக்கு மு…
-
- 5 replies
- 801 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் நேற்றுக் காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று பகல் அவரது சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண்ணான விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 1.4k views
-
-
நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் : ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை – 24.09.2018 அனைவருக்கும் வணக்கம். மதிப்புக்குரிய அவையினரே, நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டை ஐநா சபை நடத்த தீர்மானித்த்தையிட்டு அதன் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு இலங்கை அரசினதும் மக்களினதும் மதிப்புக்குரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெல்சன் மண்டேலா போன்ற சிரேஷ்ட மனிதநேயம் மிக்க, உலகிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயன்ற தலைவர்கள், உ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஓமந்தை ரயில் விபத்து ; படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்கு சுவீடனுக்கு கொண்டு செல்லப்பட்டார் ஓமந்தை ரயில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது ரயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் ப…
-
- 2 replies
- 2.7k views
-
-
இலங்கைக்கு கொண்டுவரும் பொருள்களுக்கு நற்சான்றிதழ் அவசியம் உணவுக்கான தாவரங்கள், விலங்குகளின் இறைச்சி சதை மற்றும் பழங்கள் என்பவற்றை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரும் போது, பயன்படுத்துவதற்குப் பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்ளத்தக்க நற்சான்றிதழ் அவசியம் என கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தின் சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. அவ்வாறு நற்சான்றிதழ் இல்லாத இந்த வகைப் பொருள்கள் அனைத்தும் வானூர்தி நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் எனவும் சுங்க ஊடகப் பிரிவின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். https://newuthayan.com/story/18/இலங்கைக்கு-கொண்டுவரும்-பொருள்களுக்கு-நற்சான்றிதழ்-அவசியம்.html
-
- 0 replies
- 285 views
-
-
விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!! காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். க…
-
- 2 replies
- 3.7k views
-
-
இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று (ரொபட் அன்டனி) ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்கட்கிழமை "பசுமைத்தாயகம்" அமைப்பினால் உபகுழுக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை மனித உரிமை தொடர்பான இந்த உபகுழுக் கூட்டம் மனித உரிமைப்பேரவை வளாகத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த உபகுழுக் கூட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் பிர…
-
- 1 reply
- 503 views
-
-
பிரபாகரனுடன் கிளிநொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயாராக இருந்தார் ஆனால் பிரபாகரன் சுயநலமாகவே செயற்பட்டார் - நாமல் ராஜபக் ஷ தெரிவிப்பு புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கிளிநொச்சிக்கு சென்று பேச்சு நடத் தவும் மஹிந்த ராஜபக் ஷ தயாராக இருந்தார். ஆனால் இந்த விடயத் தில் பிரபாகரன் சுயநலமாகவே இருந்தார். அவர் பிடிவாதமாகவே இருந்தார். அவருக்கு யுத்தம் தேவைப்பட்டது. எனவே எனது தந்தைக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதே புலிகள் இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்தினர் என்று மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக் ஷ தெரிவித்திருக்கின்றார். …
-
- 1 reply
- 1.4k views
-
-
திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் – முன்னாள் மூத்த போராளி மனோகரின் (காக்கா) அறிவுறுத்தல்… தியாகி திலீபனின் 31 ஆவது நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழர்களுக்கான கடமையை நிறைவேற்றாதவிடத்து எஞ்சியிருப்பவர்களும் புலம்பெயர்ந்து விடுவர் (எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு தமிழ் மக்களுக்கான கடமைகளை உரிய வகையில் செய்யாதவிடத்து நாட்டில் எஞ்சியிருக்கின்ற தமிழ் மக்களும் வெளிநாடு செல்வதற்கு இடமுண்டு. மேலும் நாம் எமது கடமைகளைச் செய்வதற்கு எதிர்பார்க்கின்ற போதும் அதற்கு அரசியலில் இடமளிப்பதாக இல்லை என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக வந்துள்ள அமரர் கி.லக்ஷ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “சிப்பிக்குள் முத்து” நூல் வெளியீட்டு விழா நேற…
-
- 1 reply
- 441 views
-
-
‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’ மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிட்ட எந்தக் கொள்கைகளும் இல்லை. அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அதனிடம் பொதுவான சின்னமும் இல்லை. முறைப்படி, கிரமமான கூட்டங்களை நடத்துவதும் இல்லை. எமது மக்களின் தேவைகள், அபிலாசைகளை பிரதிபலிப்பதை கைவிட்ட ஒரு குழுவினால் இயக்கப்படுகிறது. மக்க…
-
- 5 replies
- 700 views
-
-
குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது. https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணம்-போதனா-மருத்துவமனையில்-பதற்றம்.html
-
- 2 replies
- 614 views
-
-
சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சியின் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தது. தமிழீழம் என்ற விடய…
-
- 0 replies
- 1.7k views
-
-
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 21 பேரை வெளியேறுமாறு அறிவுறுத்தல் வவுனியா இராசேந்திரன்குளம் வன இலகாப்பகுதியில் சட்டவிரோதமாக காணி அபகரித்து குடியேறியுள்ளவர்களில் 21 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மத்திய கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் அவசரக்கலந்துரையாடல் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வனத்திணைக்களத்திற்கு உரித்தான ஒதுக்குகாடு 1921ஆம் ஆண்டு ஓதுக்கி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 3500 ஏக்கர் விக்ஸ்காடு, பாவற்குளம் போன்ற பகுதிகளில் வன இலகா பகுதிகள் விடுவிக்கப்பட்…
-
- 0 replies
- 311 views
-
-
ரவீந்திரவைக் கைது செய்ய முயன்ற – விசாரணையை அதிகாரியை பதவி நீக்க அழுத்தம்!! கொழும்பில் மாணவர்கள் உள்ளிட்ட 11பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரைத் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கூட்டுப் படைகளின் பிரதானி ரவீந்திரவைக் கைது செய்வதற்கு முயன்ற, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை, பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசியல் உயர் மட்டங்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கு, கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றின் விசாரணை அதிகாரியாகவும் நிசாந்த சில்வாவே செயற்படுவதால், மேற்படி வழக்கு…
-
- 0 replies
- 631 views
-
-
முதலமைச்சர்க்கு தைரியம் இருந்தால் கட்சியை விட்டு வெளியேறி விமர்சிக்கட்டும்
-
- 1 reply
- 503 views
-
-
பிரபாகரன் மகிந்தவிடம் பணம் பெற்றுக்கொண்டது உண்மை! டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தோல்வியடைய செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில காணிகள் விடுவிக்க வேண்டியுள்ளது. யுத்தம் முடிவுக்கொண்டு வரப்பட்ட பின்னர் இன்று வடக்கு கிழக்கில் பல மாற…
-
- 5 replies
- 927 views
-
-
கைதிகள் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் (ரொபட் அன்டனி) தீர்வு விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்கிறார் சம்பந்தன் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரை வில் சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன். அவை தொடர்பில் நாங்கள் செய்யவேண்டியவற்றை செய்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும் அரசியல் தீர்வுத்திட்டத்தை அடைவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது. நாம் அதற்கான கருமங்களை செய்வோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குற…
-
- 0 replies
- 366 views
-
-
கொழும்பை பாதுகாக்கும் திட்டம் – கொமாண்டோ படைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவு நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ பிரிகேட்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்று ‘றிவிர’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றம், அதிபரின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். ‘நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி’யின் ஒரு கட்டம…
-
- 1 reply
- 427 views
-
-
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதை எவராலும் முடியாது- யாழ். மாநகர மேயர்!! எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. நினைவு கூருவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆனல்ட், அதிகாரிகளை இலக்கு வைத்து வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக பொலிஸார் சதியில் ஈடுபட முயற்சிக்கின்றனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், யாழ்ப்பாணப் பொலி…
-
- 0 replies
- 323 views
-
-
வீதியில் சென்ற இளைஞன் மீது- வாள்வெட்டு!! வீதியில் நடந்து சென்ற இளைஞன் இனந் தெரியாதவர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் சிகிச்சைக்காக யாழ்ப் பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொடிகாமம் – கச்சாய் வீதியில் நேற்று நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் காயமடைந்துள்ளார். அவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் …
-
- 0 replies
- 335 views
-